28,000 ரூபாய்க்கு குடித்து விட்டு பணம் கொடுக்காமல் ரகளை செய்த பெரிய வீட்டுப் பிள்ளை …..
இவர்கள் காதலர்களாம் – பாவத்தின் சம்பளம் !!
( அவி முகர்ஜியும், அஷ்வின் ஸ்ரீனிவாசனும் )
உண்மையில் இந்த செய்திக்கு அந்த ஆங்கில செய்தித்தளம் கொடுத்த தலைப்பையே போட்டிருந்தால் மிகக்கேவலமாக இருந்திருக்கும்.. எனவே வீரியம் குறைந்த தலைப்பையே கொடுத்திருக்கிறேன்.
சில நாட்களுக்கு முன்னர் ஒரு வரிச்செய்தியாக எங்கோ பார்த்தேன். ” குடித்து விட்டு பில் கொடுக்காமல் ரகளை செய்ததால் பி.சி.சி.ஐ தலைவர் ஸ்ரீனிவாசன் மகன் அஷ்வின் மும்பையில் கைது” - என்று.
சரி விவரமாக செய்தித்தாளில் வரும் – அப்போது பார்த்துக் கொள்வோம் என்று விட்டு விட்டேன். காத்திருந்தேன் – காத்திருந்தேன் – பின்னர் எந்த பத்திரிகையிலும் (குறிப்பாக – தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் எந்த பத்திரிகையிலும் ) இது பற்றிய விவரங்கள் வெளிவரவில்லை !
எப்படி வரும் ? வந்திருந்தால் தான் அதிசயம் ! செல்வமும் செல்வாக்கும் சேர்ந்து அந்த செய்தியை அப்போதைக்கு அதற்கு மேல் வெளிவராமல் அமுக்கி விட்டன.
பின்னர் நான் வலையில் நீண்ட நேரம் தேடிய பிறகு, இது குறித்த செய்தி விவரங்கள் கிடைத்தன. ஆனால் அந்த தளம்
கொடுத்திருந்த தலைப்பு என்ன தெரியுமா ?
” பணக்கார ஓரின சேர்க்கையாளர்களுக்கு சென்னை சௌகரியமான இடம் இல்லை “
இந்த ஆங்கில செய்தித் தளத்தில் வந்திருக்கும் செய்தியை சுருக்கமாக கீழே தமிழில் தந்திருக்கிறேன் -
ஏப்ரல் 30ந்தேதி அன்று பி.சி.சி.ஐ தலைவர் ஸ்ரீனிவாசன் மகன் அஷ்வின் தன் பார்ட்னர் அவி முகர்ஜி என்பவருடன் மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள ஒரு பப் / பார் க்கு சென்று மது அருந்தி இருக்கிறார். நள்ளிரவை கடந்து அதிகாலை 1.30 am ஆன பிறகும், பார் நேரம் முடிந்து விட்டது – பில்லுக்கு உண்டான பணத்தை கொடுத்து விட்டு வெளியே கிளம்புங்கள் என்று திரும்ப திரும்ப கூறப்பட்டபோதும், வெளியேற மறுத்திருக்கிறார்கள். பில் பணம் 28,000 ரூபாயையும் கொடுக்க மறுத்து ரகளை செய்திருக்கிறார்கள். பின்னர் பார் மேனேஜர் போலீசுக்கு புகார் கூற – நள்ளிரவில் போலீஸ் வந்து அவர்களை கொண்டுபோய் “லாக்-அப்” பில் வைத்திருக்கிறது.
இதன் பின்னர் மறுநாள் ஜாமீனில் வெளியே வந்த – 43 வயது அஷ்வின் ஸ்ரீனிவாசன் அந்த செய்தி தளத்திற்கு கொடுத்த பேட்டியின் சுருக்கம் -
“நான் ஓரின சேர்க்கையாளன். என்னை என் தந்தை இதற்காக மிரட்டியும், இருட்டறையில் அடைத்து வைத்து, வலுக்கட்டாயமாக மருந்துகள் கொடுத்தும் கொடுமைகள் செய்ததன் காரணமாக நான் 1998-லேயே வீட்டை விட்டு வெளியே வந்து விட்டேன்.
நானும் அவி முகர்ஜியும் காதலர்கள். (காதலர்கள் படம் தான் மேலே இருப்பது ! ) எங்கள் காதலை சகித்துக்கொள்ள முடியாத ( ?) என் தந்தை எங்கள் இருவரையும் படாதபாடு படுத்தினார். பயமுறுத்தினார். ஆட்களை விட்டு துன்புறுத்தினார். என்னிடமிருந்து பணம் பறிப்பதற்காகவே அவி முகர்ஜி காதலனாக நடிப்பதாகவும் அவன் தொடர்பை நான் அறுத்தெறிய வேண்டும் என்றும் கட்டாயப்படுத்தினார்.
2002- ஆம் ஆண்டு அஷ்வினையும், அவி முகர்ஜியையும் அவரது தந்தை கடுமையாகத் தாக்கி தனியே ஒரு இடத்தில் அடைத்து வைத்திருந்ததாகவும் – ஓரின சேர்க்கையாளர்களுக்கு உதவுவதற்காக செயல்படும் அமைப்பை சேர்ந்த அசோக் ராவ் கவி என்பவரின் உதவியால் தாங்கள் வெளிநாட்டுக்கு தப்பி ஓடியதாகவும் கூறுகிறார் அஷ்வின்.
அஷ்வினின் இந்த கூற்றை அந்த அசோக் ராவ் கவி என்பவரும் அந்த செய்தித் தளத்தில் உறுதி செய்திருக்கிறார். அஷ்வினின் தந்தையால் அவர்கள் இருவரின் உயிருக்கும் ஆபத்து நேரக்கூடும் என்பதால் அவர்கள் தப்ப நான் உதவி செய்தது உண்மை தான் என்கிறார் அசோக் ராவ் கவி !
இதற்கு மேலும் அஷ்வின் கூறுவது – என் தந்தை என்னுடைய என்.ஆர்.ஐ அந்தஸ்தைப் பயன்படுத்தி ஏகப்பட்ட நிதி முறைகேடுகளை செய்துள்ளார். அவற்றிற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. எங்களது உயிருக்கு என் தந்தையால் அச்சுறுத்தல் உள்ளது” .
இது குறித்து அந்த வலைத்தளம் திரு ஸ்ரீனிவாசனிடம் கேட்டதற்கு -” இது என் குடும்ப விவகாரம் – இதைப்பற்றி உங்களுடன் விவாதிக்க நான் விரும்பவில்லை ” என்று கூறி இருக்கிறார்.
பின் குறிப்பு - இந்த குடும்பத்தின் இன்றைய வருத்தங்கள் குறித்து நான் மகிழ்ச்சி அடையவில்லை. எந்த குடும்பத்திற்கும் இது நிம்மதியை குலைக்கும் செயல்தான். அவர்களின் இந்த நிலைக்காக நான் வருந்துகிறேன்.
ஆனால் மக்கள் கற்றுக்கொள்ள வேண்டும். மனசாட்சி என்கிற ஒன்று அனைவருக்கும் உயிர்ப்புடன் செயல்பட வேண்டும்.
வெறும் பணத்தை மட்டும் வைத்துக் கொண்டு மனிதன் நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் வாழ்ந்து விட முடியாது.
நியாயமான வழியில் வரும் செல்வமே – நிம்மதியையும், சந்தோஷத்தையும் கொடுக்கும்.
அடுத்தவரை வருத்தியும், ஏமாற்றியும் நாம் சேர்க்கும் செல்வம் நிலைக்காது. அதன் மூலம் இறுதியில் விளைவது நிம்மதியின்மையும், துயரமும், அவமானமுமே என்பதை உணர வேண்டும்.
இது ஒரு பாடம் ! இவர்களுக்கு மட்டும் என்றில்லை – இன்று ஆயிரக்கணக்கான கோடிகளை குவித்துக் கொண்டிருக்கும் மற்ற அரசியல்வாதிகளுக்கும், தொழிலதிபர்களுக்கும் கூடத்தான் – ? இதைக் கண்ட பிறகாவது, தமிழ்நாட்டில் யாராவது – குறைந்த பட்சம் ஒரே ஒருவராவது - திருந்துவாரா ?



