ஒவ்வொரு இந்திய குடும்பத்துக்கும் 2.5 லட்சம் ! 30 வருடங்களுக்கு வரியே போட வேண்டாம் !! ஆனால் சோனியாவை மீறி மன்மோஹன் சிங் செயல் படமுடியுமா ?

ஒவ்வொரு இந்திய குடும்பத்துக்கும் 2.5 லட்சம் !
30 வருடங்களுக்கு வரியே போட வேண்டாம் !!
ஆனால் சோனியாவை மீறி மன்மோஹன் சிங்
செயல் படமுடியுமா ?

சென்ற வாரம் டில்லியில்  நடைபெற்ற கருப்புப்
பணத்தை வெளிக்கொண்டு வருவது பற்றிய
கருத்தரங்கம் ஒன்றில்  பல  விவரங்கள்
வெளி வந்தன.

அதில் மூத்த வழக்கறிஞரும், முன்னாள்
பாராளுமன்ற உறுப்பினருமான
ராம் ஜெத்மலானி பேசும்போது –


சுவிட்சர்லாந்து வங்கியிடமிருந்து கணக்கு
வைத்திருப்போர் பட்டியல் அரசிற்கு கிடைத்து
விட்டதாகவும் ஆனால்
மத்திய அரசு அதை வெளியிடவோ,
மேல் நடவடிக்கை
எடுக்கவோ தயாராக இல்லை என்றும் கூறினார்.

சுவிஸ் வங்கிகளிடமுள்ள கருப்புப்பணத்தை
இந்தியாவுக்கு கொண்டு வரும் முயற்சி
வெற்றி பெற்றால்,
இந்திய நாடு பட்டிருக்கும் அனதது கடன்களையும்
உடனடியாக திரும்பக் கொடுக்க முடிவதோடு,
இந்தியர் அனைவருக்கும் ஒரு குடும்பத்திற்கு
2.5 லட்சம் வீதம் கொடுக்கவும்,
அடுத்த 30 ஆண்டுகளுக்கு புதிதாக
வரியே போடாமல்  அரசு நடத்த முடியும்
என்றும் கூறினார்.

இவர் கூறியதில் பாதி அளவு உண்மை என்று
வைத்துக்  கொண்டால் கூட என்னென்னவோ
செய்து விடலாமே !

இன்றைய தினத்தில் சுவிஸ் வங்கிகளிடமிருந்து
கருப்புப்  பணத்தை மீட்பது மத்திய அரசில் உள்ள
கீழ்க்கண்ட 3 பேர்களால்
மட்டுமே சாத்தியம் –

ப.சிதம்பரம்
பிரனாப் முகர்ஜி
மன்மோஹன் சிங்

அன்னை சோனியா காந்திக்கு இதில் விருப்பமில்லை –
ஏன் விருப்பமில்லை என்பது அனைவரும் அறிந்ததே !
அன்னையை மீறி இதில் யார் செயல்பட்டாலும்
அவர் தலை உருளுவது நிச்சயம் !

சோனியா காந்திக்கு நெருக்கமானவர் ப.சிதம்பரம்
என்பதால் – அவர் இதில் ஈடுபட விருப்பம் காட்ட
மாட்டார் என்பது உறுதி.

அடுத்தது – பிரனாப் முகர்ஜி – அவர் நம்ப ஊர்
அன்பழகன் மாதிரி. எப்போதும் 2ம் நம்பராக
இருப்பதிலேயே திருப்தி அடைபவர். சோனியா
காந்தியை விரோதித்துக்கொண்டு தன் இருப்பைக்
கெடுத்துக்கொள்ள அவர் தயாராக இருக்க மாட்டார்.

கடைசியாக மிஞ்சி இருப்பது மன்மோஹன் சிங்
மட்டுமே. இவர் ஓரளவுக்கு நேர்மையானவர் தான்.
ஆனால் சோனியாவை மீறி செயல்பட்டு தன்னைத்
தானே  காவு கொடுத்துக் கொள்ளும் அளவிற்கு
பொது நலனில் அக்கரை கொண்ட ஏமாளியும் அல்ல.

எனவே கருப்புப் பணத்தை சுவிஸ் வங்கிகளிடமிருந்து
வெளிக்கொண்டு வருவது பற்றி அடுத்த தேர்தல்
வரும் வரை (இன்னும் 4 வருடங்கள்) தீவிரமாகப்
பேசிக்கொண்டே இருப்பார்கள் என்று நம்பலாம்.

அடுத்த தேர்தலில் ஆட்சி மாறினால் ?

(ஒன்றுமே தெரியாத கத்துக்குட்டி அரசியல்வாதிக்கு
கூட இந்த 4 வருடங்கள் என்பது தடயங்களை
மறைக்க  தாராளமாகப் போதுமே !)

வாழ்க ஜனநாயகம் – வாழ்க நம் நாடு !

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், அரசு, அறிவியல், இந்தியன், இன்றைய வரலாறு, கட்டுரை, சிதம்பரம், சுவிஸ் வங்கி, சோனியா காந்தி, தமிழ், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, பொருளாதாரம், மன்மோகன் சிங், Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Responses to ஒவ்வொரு இந்திய குடும்பத்துக்கும் 2.5 லட்சம் ! 30 வருடங்களுக்கு வரியே போட வேண்டாம் !! ஆனால் சோனியாவை மீறி மன்மோஹன் சிங் செயல் படமுடியுமா ?

  1. dharma சொல்கிறார்:

    in the list of swill bank acc holder may be no1 will be TN….

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.