தந்தையை அவமதிக்கும் வகையில் கவிஞர் கனிமொழி பேசலாமா ?

தந்தையை  அவமதிக்கும் வகையில்
கவிஞர் கனிமொழி  பேசலாமா ?

இன்றைய செய்தியில் வெளியாகியுள்ள
கனிமொழி அவர்களின்  பேச்சு –

————————————–

“இலக்கியவாதி முதல் சினிமா ஆண்
எழுத்தாளர்கள் வரை : கனிமொழி பேச்சு

கோவையில் கடந்த 23ம் தேதி முதல்
உலகத்தமிழ் செம்மொழி மாநாடு

நடந்துவருகிறது.இன்றுடன் மாநாடு
நிறைவுபெருகிறது.

மாநாட்டில் 21 ஆய்வரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள இளங்கோ அரங்கில் இலக்கியத்தில்
நோக்கும், போக்கும்
என்ற தலைப்பில்
கலந்துரையாடல் நடந்தது.

இதில் கனிமொழி எம்.பி. பேசினார்.

அப்போது அவர்,  ’’பெரும்பாலான
இலக்கியங்களில் பெண்கள் பற்றி குறிப்பிடும்
கவிஞர்கள் ஆண்களை பற்றி குறிப்பிடுவதில்லை.

சிலப் பதிகாரத்தில் கண்ணகி பற்றியும்
ஆடல் கலை செய்த மாதவி பற்றியும் விரிவாக

குறிப்பிடும் போது கோவலன் பற்றியோ
அவனது செயல் பற்றியோ அதில் பேசுவதில்லை.

அன்றைய இலக்கியஅன்வாதி முதல்

இன்றைய
சினிமா ஆண் எழுத்தாளர்கள் வரை

ஒரு
பெண்ணை எவ்வளவு கேவலமாக, கீழ்த்தரமாக
சித்தரிக்க முடியுமோ அந்த அளவு
தகாத வார்த்தைகளால் – வர்ணிப்பதாக கூறி
பெண்களை ஒரு வியாபார பொருள் ஆக்கி
இருக்கிறார்கள்.”

———————————–

இந்தக் கருத்தை அப்படியே ஏற்றுக்கொள்ளலாமா
என்பதை கனிமொழி அவர்கள் யோசிக்க வேண்டும்.

கனிமொழியின் கருத்து அவரது
தந்தைக்கும்  சேர்த்தா ?

மேடை கிடைத்து விட்ட பெருமையில் –
தந்தையையே  அவமதிக்கும் வகையில்
கனிமொழி  பேசலாமா ?

இன்னும் ஒரு கேள்வியும் கூட –

இத்தகைய ஆபாசப் படங்களில் நடிப்பது
ஆண்களா இல்லை பெண்களா ?

ஆபாச விளம்பரங்களில்  தோன்றுவது
ஆண்களா இல்லை பெண்களா ?

ஆபாசப் படங்களுக்கும், விளம்பரங்களுக்கும்
துணை போவதில்லை என்று பெண்கள்
முடிவெடுத்து விட்டால் – படம் எடுப்பவர்கள்
எங்கே  போவார்கள் ? எப்படி எடுப்பார்கள் ?

இவ்வாறு  ஆபாசத்திற்கு துணைபோகும்
சில  பெண்களையும் சேர்த்து அல்லவா
அவர் சாடி இருக்க வேண்டும் ?

பெண்கள்  இத்தகைய விளம்பரங்களிலும்,
படங்களிலும் தோன்றக்கூடாது என்று
அவர் சொல்லி இருக்க வேண்டாமா ?

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இலக்கிய அமர்வு, உலகத்தமிழ், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, சரித்திர நிகழ்வுகள், சினிமா, சிலப்பதிகாரம், செம்மொழித் தமிழ் மாநாடு, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized and tagged , , , , , , , , , , , , . Bookmark the permalink.