ராஜா கனிமொழிக்கு சித்தப்பா ஆன கதை

ராஜா கனிமொழிக்கு சித்தப்பா ஆன கதை

ஸ்பெக்ட்ரம் ராஜா ஒரு வழியாக ராஜினாமா செய்தது
டெல்லி அரசியலில் நிலவி வந்த கடும் வெப்பத்தை
ஓரளவு தணித்துள்ளது.

டெல்லியிலுள்ள மீடியா நண்பர் ஒருவரிடம்
இதைப்பற்றி  பேசிக்கொண்டிருந்தேன்.

அவர் சொன்ன சில சுவாரஸ்யமான செய்திகளை
இங்கே பகிர்ந்துக் கொள்கிறேன்.

1)ஞாயிற்றுக்கிழமை மதியமே காங்கிரஸ் தலைமை
கலைஞரிடம்  ராஜா ராஜினாமா செய்வதைத் தவிர
வேறு வழி இல்லை என்று சொல்லி விட்டதாம்.

இறுதியாக, கலைஞர், ராஜாவின் மீது கிரிமினல்
நடவடிக்கை எதுவும் எடுக்கக்கூடாது என்கிற
வேண்டுகோளுடன் ராஜினாமாவிற்கு ஒப்புக்கொண்டு
விட்டாராம்.

2) இதைத் தொடர்ந்து டெல்லியில் பிரதமரை
நேரில் சந்தித்து ராஜினாமா கடிதத்தைக் கொடுக்க
இரவு 10 மணிக்கு ராஜாவுக்கு நேரம்
(appointment)கொடுக்கப்பட்டிருந்ததாம்.

3) இரவு எட்டரை மணி சுமாருக்கு
சென்னையிலிருந்து டெல்லி விமான நிலையத்தில்
வந்திறங்கிய  ராஜாவை
சூழ்ந்து கொண்ட மீடியாக்கள் எப்போது ராஜினாமா
செய்யப்போகிறீர்கள் என்று வினவியபோது –
பாக்கெட்டில் ராஜினாமா கடிதத்தை
வைத்துக்கொண்டிருந்த நிலையிலேயே –

ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை
என்றாராம் ராஜா.
சில நிருபர்களுக்கு அப்போதே
பிரதமர் ஆபீசிலிருந்து தகவல் கசிந்திருந்ததால்
அவர்கள் எல்லாம் கடைசி வரை ராஜா செய்த
பந்தாவை  பார்த்து ரசித்தனராம்.

4)  இடையில் தமிழ் நாட்டின் விவரங்கள்
சரியாகத் தெரியாத ஒரு வட இந்திய நிருபர்
ராஜாவை கனிமொழியின் சித்தப்பா என்று கூறி
விட்டாராம்.

கனிமொழியின் சகோதரர்கள் எல்லாம்
சும்மா இருந்த வேளையில்  கனிமொழி மட்டும்
சித்தப்பாவுக்காக மிகவும் வாதாடுகிறாரே என்று
அந்த நிருபர் சொன்னபோது தான் விஷயம்
வெளிவந்திருக்கிறது !

கலைஞர் ஒரு நிருபரிடம்  ராஜா ஈஸ் மை பிரதர்
என்று  கூறி இருந்தாராம் ! கலைஞர்
வழக்கம்போல், சகஜமாக  என் தம்பி ராஜா என்று
சொன்னதை அந்த நிருபர் சீரியஸாக எடுத்துக்கொண்டு,
கலைஞருக்கு தம்பி என்றால் கனிமொழிக்கு
சித்தப்பா  தானே  என்று அடுத்த நிலைக்கு
கொண்டு சென்றிருக்கிறார் !

பாவம்   விவரம்  தெரியாதவர் !

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

7 Responses to ராஜா கனிமொழிக்கு சித்தப்பா ஆன கதை

  1. ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

    ஹி.. ஹி….

    இந்தக் கூத்து வேரையா…

  2. Ganpat சொல்கிறார்:

    விடிய விடிய ஸ்காமாயணம் கேட்டுவிட்டு,
    கனிமொழிக்கு ராஜா சித்தப்பா ன்னு சொன்னானாம்!

  3. RAVICHANDRAN G சொல்கிறார்:

    உலகிலேயே மிகப்பெரிய ஊழல் ஸ்பெக்ரம் ஊழல் தான்.
    ஈடு இணையில்லா தலைவர் கலைஞர்.

  4. ஆனந்தராஜ் சொல்கிறார்:

    தமிழ் நாட்டின் நிலைமை இவ்வளவு கொடுமையாகி விட்டதே?

    என்றென்றும்
    ஆனந்தராஜ்

  5. varshen சொல்கிறார்:

    இப்படி யார் இவனுகள பிழைக்க சொல்லி செருப்புல அடிக்கறாங்க ?

  6. RAJASEKHAR.P சொல்கிறார்:

    கனிமொழி……………………………..சார் தலையை சொரியேறேன்……………எனக்கு ஒன்னும் புரியல ……………………………………………………………………….??????????????????????

  7. nirmala சொல்கிறார்:

    கலைஞரின் சந்தர்ப்பவாதக் கவிதை……

    தோழமை தோள் கொடுக்கும் என்றெண்ணி கை கோர்த்தால் தேள் போல் கொட்டுகிறார் !

    கல்லுடைத்து கள் குடித்தால் அவர் கவுரவம் குறையுமே என்றெண்ணி, மேற்கத்திய மதுவை மலிவாகத் தர மதுக் கடைகளைத் நான் திறந்தால்.

    தேள் கொட்டியது, மருத்துவரை நான் அழைத்தேன் சிகிச்சைக்கு. மதுக்கடைகளை மூடினால் மருந்தளிக்க நான் மறுப்பேனா? – என்கிறார்.

    நாடென்ன ஆனாலென்ன? என் மக்கள்
    நலம்தன்னை கருத்தில் கொண்டு
    ஆட்சியைப் பகிர்ந்தளித்தேன் சொந்தங்களுக்கு !

    சொந்தங்களோ,
    அரியணையை பிடிக்க சதிசெய்தது தெரியவர,
    அவருடன் பகைமை பாராட்டி, போதுமடா உன்பாசம் !
    நேசித்தேன் நான் உன்னை! மோசம் செய்தாய் நீ என்னை !
    கலைந்ததடா உன் வேஷம் !

    கழகத்தின் தோழர்களை நான் அழைத்து அவனது கரை சேவை போதுமென்று கட்சியிலிருந்தும், ஆட்சி கட்டிலிலிருந்தும் துரத்தினால்…..

    அவனோ பகைமையை பழிதீர்க்க நாள் குறித்து, நாளொரு வண்ணம் பொழுதொரு மேனியாக அவனென்னை தோலுரிக்க,

    ”போதுமடா நம் பகைமை ! மக்கள் விழிக்கும் முன் சேர்ந்தெழுவோம்” நேசகரம் நான் நீட்ட, அவனும் கைக்கோர்த்தான்!

    நாடென்ன ஆனாலென்ன ! நம் நலந்தானே முக்கியம் !

    தெளிந்துவிடும் போதை மக்களுக்கு மதுக்கடைகளை மூடினால்,
    மருத்துவருக்கோ கொண்டாட்டம், நம் பாடு திண்டாட்டம் !

    யார் என்ன ஆனால் என்ன? எவர் குடும்பம் அழிந்தாலென்ன !
    நம் குடும்ப நலந்தானே மிக முக்கியம் !

    மூடுவேனா மதுக்கடைகளை, நான் மூடுவேனா !

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.