மதுரைக்கு மந்திரி வந்தது உங்கள் பணத்தில் – என் பணத்தில் !

மதுரைக்கு மந்திரி வந்தது
உங்கள் பணத்தில் – என் பணத்தில் !

நேற்று கடையில், வீட்டிற்காக மளிகை சாமான்
வாங்கி வந்தேன். மொத்த பில் ரூபாய் 1900/-
இதில்  வரி ( வாட்) மட்டும் ரூபாய் 120/-
கம்ப்யூட்டர் பில் ஆதலால் வரி தனியே
காட்டப்பட்டிருக்கிறது.(சில 4.5 %,
சில 12 % )

நம் மக்கள்  நிறைய பேர் நினைத்துக்
கொண்டிருக்கிறார்கள் – வருமான வரி
(இன்கம் டாக்ஸ்)மட்டும் தான்  வரி என்று.
ஆகையால்  வருமான வரி கட்டுபவர் மட்டும்
தான் அரசுக்கு வரி கட்டுகிறார்கள் என்று
நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தியக் குடிமகன் ஒவ்வொருவனும் –
ஒவ்வொரு நாளும் எதாவது ஒரு விதத்தில்
அரசாங்கத்துக்கு வரி கட்டிக்கொண்டிருக்கிறான்.

சும்மா ஓட்டலுக்குப் போய்  காப்பி குடித்தால் கூட,
(பில் போடும் ஓட்டலாக இருந்தால் )
நீங்களும் நானும் வரி கட்டுகிறோம்.

இந்த  வரிப் பணத்தில் தான் –

நேற்று டஜன் கணக்கில் மாநில மந்திரிகளும்,
4 மத்திய மந்திரிகளும்
(சிலர் ரயிலிலும்,
சிலர் காரிலும்,
ஒரு சிலர் விமானத்தில்
டெல்லியிலிருந்தும் )
ஒரு திருமணத்தில்
கலந்து கொண்டு பிரியாணி சாப்பிட்டு விட்டுப்
போயிருக்கிறார்கள்.

இது யாருக்கும் உறுத்தலாக இல்லை !

ரொம்ப நாள் முன்னதாக ஒரு நாடகம்
வந்தது –

தலைப்பு “யாருக்கும் வெட்கமில்லை!”

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், ஊரான் வீட்டு நெய்யே, கடைத்தேங்காய், கருணாநிதி, கலைஞர் வழிகாட்டுதல், குடும்பம், தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, வருமான வரி, விருந்தோ விருந்து, Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Responses to மதுரைக்கு மந்திரி வந்தது உங்கள் பணத்தில் – என் பணத்தில் !

  1. aravarasan சொல்கிறார்:

    இதையெல்லாம் யார் மைந்தா யோசிக்கிறோம்.குவார்ட்டரும்,பணமும்,இலவசமும் இருந்தா போதும் என எண்ணும் போக்கு மாறவேண்டும்.
    அரவரசன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.