“சேர்ந்து இருப்பது தீது என்றால் சொல்லுங்கள், யோசிக்கிறோம்”- சொல்வது கலைஞர் தான் !

“சேர்ந்து இருப்பது தீது என்றால் சொல்லுங்கள்,
யோசிக்கிறோம்”- சொல்வது கலைஞர் தான் !

கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாத ஒரு இடத்தில்
கலைஞர் இப்படிப் பேசுகிறார் என்றால் அதற்கு
என்ன அர்த்தம் ? யாருக்கு இதைச் சொல்கிறார்
புரிகிறதா ?

தமிழக வேளாண்துறை சார்பில் வேளாண்
கருத்தரங்கம் மற்றும் அலுவலர்கள் மாநாடு
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 24/11/2010
அன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு
முதல்வர் கருணாநிதி பேசியவை இவை:

“மக்களுக்காகச் சாதனை செய்கிறோம், முடிக்கிறோம்
என்றால், அது மத்திய அரசை விட்டுவிட்டு
செய்வதில்லை. நீங்கள் 8 அடி பாய்ந்தால்,
நாங்கள் 16 அடி பாய்வோம். அந்த 8-ஐ கூட்டித்தான்
சொன்னேன். நான் கணக்கில் ஒன்றும் முட்டாள் அல்ல.
தனியாக 16 அடி பாய வேண்டுமென அவர்கள்
சொன்னாலும், சேர்ந்தே இருக்க வேண்டும் என்று
நினைக்கிறோம்.(?)

யார் திட்டத்தைப் போட்டால் என்ன?
யார் வீடு கட்டினால் என்ன?
யார் ரோடு போட்டால் என்ன?
யார் 108 வண்டி ஓட்டினால் என்ன?
போடுகிற திட்டங்கள் மக்களுக்குப் பயன்பட்டால் போதும்(!).

முன்பு நாங்கள்  தனியாக இருக்கத்தான் எண்ணினோம்.(?)
நீங்கள் தான் சேர்ந்திருக்க வேண்டும் என்று
சொன்னீர்கள்.(!)

…….நாங்களும் யோசித்து நம்பித்தான் சேர்ந்தோம்.

இப்போது சேர்ந்து இருப்பது தீது என்றால் சொல்லுங்கள்,
யோசிக்கிறோம். அவ்வளவுதான் சொல்ல முடியும்”.

———————————————

கலைஞர்  இப்படிப் பேசுவதற்கு –
ஒரு கிலோ மீட்டர் தூரத்தில்,
யுவராஜா  தலைமையில்,
இளைஞர் காங்கிரசார் கன்னியாகுமரியில்
தொடங்கி சென்னையில் முடிக்கும்
பாத யாத்திரையை காமராஜ் அரங்கில் முடிக்க
ஊர்வலமாக
வந்து கொண்டிருந்ததும்
காரணமாக இருந்திருக்குமோ ?

(அநேகமாக  இதற்குள் – நான் சொன்னதை
ஊடகங்கள்  திரித்துப் போட்டு விட்டன
என்று கூறி – பின் வாங்கி இருக்கலாம் !
நாளைக் காலை செய்தித் தாள்களில் அது
வரக்கூடும் !)

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, தமிழீழம், தமிழ், திமுக, நாளைய செய்தி, பொது, பொதுவானவை, முன்னணி நடிகர்கள், Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.