என்ன நடந்தது ஏலகிரியில் ?

என்ன நடந்தது ஏலகிரியில் ?

கலைஞர் ஓய்வெடுப்பதற்காக ஏலகிரி
போயிருக்கிறார் என்று சொன்னார்கள்.

திங்கள் காலையில் சென்னையிலிருந்து கிளம்பி
240 கிலோமீட்டர் காரில் பயணம் செய்து ஏலகிரி
மலையில் ஒரு தனியார் பங்களாவில் தங்கியிருந்து
விட்டு – மறுநாள் செவ்வாய் மாலையே மீண்டும்
காரில் 240 கிமீ பயணம் செய்து
சென்னை திரும்பி வருவது
என்றால் இது ஓய்வா ?

சாதாரணமாக கலைஞர் சிறிது ரிலாக்ஸ்டாக இருக்க
விரும்பினால் மாமல்லபுரம் போய் அவருக்குப்
பழக்கமான ஓட்டலில் தங்குவது உண்டு.
அமைச்சரவை சகாக்களுடன்
டென்ஷன் இல்லாமல் பேசிக்கொண்டிருந்து விட்டு
மாலையில் திரும்பி விடுவது வழக்கம்.

அவர் மாமல்லபுரம் சென்று தங்கும்போது கூட
எந்த கெடுபிடியும் இருக்காது.  சுற்றுலாத் தலமான
மாமல்லபுரத்தில், சுற்றுலா பயணிகள் சர்வ சகஜமாக
நடமாட அனுமதிக்கப்படுவது வழக்கம்.

இதைவிட ஓய்வு தேவை என்றால் – வீட்டிலேயே
தங்கி ஓய்வெடுக்கலாம்.யாரையும் சந்திப்பதற்கில்லை
என்று கூறி விட்டால் பிரச்சினை தீர்ந்தது.

எனவே திடீரென்று  ஓய்வுக்காக ஏலகிரி என்கிற
இந்த விஷயமே
ஏதோ மர்மக்கதை மாதிரி இல்லை ?

பொதுவாக கலைஞர் எங்கு சென்றாலும், பொதுமக்களை
போலீசார் அதிகம் தொந்திரவு செய்வது வழக்கமில்லை.
சாலையில் கூட, அவரது கார் வருவதற்கு 5 நிமிடம்
முன்னதாகத்தான் போக்குவரத்து நிறுத்தப்படும்.
அவர் கார் கடந்துசென்ற இரண்டு நிமிடங்கள் கழித்து
உடனே போக்குவரத்தை அனுமதிப்பது வழக்கம்.

வழக்கம் இப்படி இருக்க –
அவரது வருகையை முன்னிட்டு ஏலகிரி எப்படி ஆனது
என்று ஒரு தினத்தாளில் வந்திருக்கும் கீழ்க்கண்ட செய்தி
ஆச்சரியம் அளிக்கிறது.செய்தியைக் கீழே பாருங்கள் –

—————————————-

ஏலகிரி மலையில் அத்தனாவூரில் இருந்து 7 கிமீ
தூரத்தில் உள்ள நிலாவூர் போகும் வழியில்
கத்தாழைமேடு என்கிற இடத்தில்,
ஆம்பூரைச் சேர்ந்த தோல் தொழிற்சாலை
அதிபரான அல்டாப் என்பவரது பங்களாவில்
முதல்வர் தங்கினார்.

அல்டாப் பங்களாவுக்கு 200 அடி தூரம் வரை
பொதுமக்கள்  யாரும் அனுமதிக்கப்படவில்லை.

மலையில் உள்ள ஓட்டல்களில் தங்கி இருந்த
நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளும் வெளியேற்றப்பட்டனர்.
வாணியம்பாடி, திருப்பத்தூரில் இருந்து ஏலகிரிக்கு வரும்
அரசு மற்றும் தனியார் பஸ்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன.
இதனால் ஏலகிரி மலை வெறிச்சோடிக் காணப்படுகிறது.
சாலைகளில் ஆள் நடமாட்டம் இல்லை.
டீ கடைகள், வியாபார நிறுவனங்கள், ஓட்டல்கள் யாவும்
போலீசாரின் அறிவுரைப்படி மூடப்பட்டுள்ளன.
முக்கிய இடங்களான – அத்தனாவூர் ஏரி, நிலாவூர் ஏரி,
முருகன் கோவில், பார்க் ஆகிய இடங்களில் வேலை பார்க்கும்
ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர்.

ஏலகிரி மலையில் வசிக்கும் மக்கள் சுதந்திரமாக நடமாடவும்
தடை விதிக்கப்பட்டதால், உள்ளூர் வாசிகள் கூட
வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றனர்.
அந்தனாவூர் சந்திப்பில் போலீஸ் செக் போஸ்ட் அமைத்து,
புதிய நபர்கள் ஏலகிரி மலைக்கு செல்வது தடுத்து
நிறுத்தப்பட்டது.

ஏலகிரி மலையில், வேலூர் மாவட்ட எஸ்.பி.
தலைமையில் 400 ரிசர்வு போலீசார், 100 சிறப்பு அதிரடி
போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அமைச்சர் துரை முருகன், அவர் தம்பி துரை சிங்காரம்,
மத்திய இணை அமைச்சர் ஜெகத்ரட்சகன் ஆகியோர்
மட்டும் அருகில் தங்கியுள்ளனர்.

அல்டாப் பங்களா முன் டாக்டர்களைக் கொண்ட ஆம்புலன்ஸ்
வாகனம், தீ அணைப்பு  வண்டி, தயார் நிலையில்
நிறுத்தப்பட்டு உள்ளன.

24 மணி நேரமும் மின்வசதிக்காக, பெரிய ஜெனரேட்டர்
ஒன்று வேலூரில் இருந்து கொண்டு செல்லப்பட்டுள்ளது.

நேற்று முன் தினம் செய்தி சேகரிக்கச்சென்ற
பத்திரிகையாளர்களை
போலீசார் விரட்டி அடித்தனர்.

————————————————–

இந்த நிலையில் தான் இன்று -புதன்கிழமை –
சிபிஐ ரெய்டு நடைபெறுகிறது !

இன்று மாலை டெல்லி ஆங்கில செய்தித்தளம்
ஒன்று கூறுகிறது -(Headlines today )

“Had DMK anticipated CBI raids?

Did the DMK get an inkling of
Wednesday’s CBI raids?

The DMK, it appears, could have
got prior information about the raids.”

இதைத் தொடர்ந்து இந்த தளம்  கலைஞருக்கு
இந்த ரெய்டு குறித்து முன்கூட்டி தெரிந்திருக்க வாய்ப்பு
இருக்கிறது என்றும் –  அதையொட்டியே
ஏலகிரி மலையில் ஒரு ரகசிய கலந்தாய்வு
நடைபெற்றது என்றும் கூறுகிறது !

எது உண்மை ?
எவ்வளவு தூரம் உண்மை ?
என்பது நமக்கு – இப்போதைக்கு – தெரியவில்லை !

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசு, இணைய தளம், ஓய்வு, கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, சோனியா காந்தி, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, மிரட்டல், Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Responses to என்ன நடந்தது ஏலகிரியில் ?

  1. மகேஷ் சொல்கிறார்:

    உண்மைதான். நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் தலைவருக்கு தெரியாமல் நடக்காது. பார்ப்போம், என்ன நடக்கிறது என்று?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.