பெரம்பலூர் ஆ.ராஜா வுக்கும் -திரிச்சூர் ஸ்ரீநிஜ் க்கும் என்ன சம்பந்தம் ? ஸ்பெக்டரம் பணம் எது வரை போகும் ?

பெரம்பலூர் ஆ.ராஜா வுக்கும் -திரிச்சூர்  ஸ்ரீநிஜ் க்கும்
என்ன சம்பந்தம் ? ஸ்பெக்டரம் பணம் எது வரை போகும் ?

கடந்த வாரம் மலையாள  தேச  தொலைக்காட்சிகளில்
ஒரே பரபரப்பு !
சூடான செய்திகள் – விவாதங்கள் !
சரி – விஷயம் உறுதியாகட்டும் – நம்பகத்தன்மை
தெரிந்த  பிறகு நாம் எழுதுவோம்
என்றிருந்தேன். (இல்லையென்றால் – நண்பர் கண்பத்
மறுமொழி போட்டு மிரட்டுவாரே !)

நேற்று சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி ஈ.ஆர்.கிருஷ்ணைய்யர்
மத்திய சட்ட அமைச்சருக்கு இந்த விஷயம் குறித்து திறந்த மடல்
எழுதியது உறுதியான  பிறகு –
இதை எழுதுகிறேன்.

ஸ்ரீநிஜ் என்பவர் கேரளாவில் வழக்குரைஞராக பணி புரிகிறார்.
கடந்த 2006 ல் நடந்த  கேரள சட்டசபை  தேர்தலில்
இவர்  காங்கிரஸ் வேட்பாளராகப்
போட்டி இட்டார். தோல்வியுற்றார் !
இது விஷயம் அல்ல.  பின்னணி மட்டுமே !

இந்த தேர்தலில் அவர் போட்டியிட்டபோது தேர்தல் கமிஷனிடம்
அளித்த  சொத்து விவரங்களில்  தன் மொத்த சொத்து மதிப்பு
வெறும் 25 லட்சம் மட்டுமே என்று குறிப்பிட்டுள்ளார்.

அதன் பிறகு 2007 லிருந்து 2010 க்குள்ளாக அவர்
பலகோடி  ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை
வாங்கி குவித்திருப்பதாக மலையாள சானல்கள் இப்போது
பல  சான்றுகளைக் காட்டி குற்றம் சுமத்தியுள்ளன.

திருச்சூர் உயர் நீதிமன்றம் அருகேயுள்ள முக்கியமான
குடியிருப்பு பகுதி அன்னமடா என்ற இடத்தில்
பலகோடி ரூபாய் மதிப்புள்ள இரண்டரை ஏக்கர் நிலமும்,

கொச்சி அருகே எலமகக்கரா என்கிற இடத்தில்
மிக விலை மதிப்பு மிக்க இடத்தில் 25 செண்ட் நிலமும்,

இவற்றைத்தவிர பங்களூரிலும்,சென்னையிலும்
பல சொத்துக்களையும்
இவர் இந்த 3 வருடங்களுக்குள் வாங்கிக் குவித்து
இருப்பதாக  புகார்கள் எழுப்பப்பட்டுள்ளன.

சரி –  இப்படி எத்தனையோ குவிப்புகள் நாடு முழுவதும்
நடந்து கொண்டே தான் இருக்கின்றன.  இதில் மட்டும்
என்ன விசேஷம் என்று கேட்கலாம்  !

விசேஷம்  என்ன என்றால் – அண்மையில் ஓய்வு பெற்ற
உச்ச  நீதிமன்ற  தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனின்
மகள் சோனி என்கிற மங்கையை  மணந்த மணாளன்
இந்த ஸ்ரீநிஜ்  என்பது தான்  !

திருவாளர் ஸ்ரீனிஜ் சொந்தமாக சம்பாதித்து
இந்த சொத்துக்களை
வாங்கி இருந்தால்  அது செய்தியே இல்லையே !

தன்  மாமனாரின் பினாமியாகச் செயல்பட்டு –
அவர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பதவி
வகித்திருந்த காலத்தில் இவர்  வாங்கிக் குவித்தவை தான்
கோடிக்கணக்கான ரூபாய் பெறுமானமுள்ள
இந்த சொத்துக்கள்
என்பது தான் தொலைக்காட்சிகளின் குற்றச்சாட்டு !

சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதியும், புகழ் பெற்ற
சமூக நீதி போராளியுமான 97 வயது கிருஷ்ணையர்  தான் –
இப்போது  மத்திய சட்ட அமைச்சருக்கு இது குறித்து
உடனடியாக  விசாரணை நடத்தும்படி கோரி
கடிதம் எழுதி உள்ளார்.
அந்த கடிதத்தின் நகலை பத்திரிகைகளுக்கும்
அனுப்பி இருக்கிறார்.     எல்லாம் சரி –
இதில் ஸ்பெக்ட்றம் ராஜா எங்கிருந்து
வந்தார் என்கிறீர்களா ?

(நீதிபதி ரகுபதியை ராஜா மிரட்டியது,
அது குறித்து சென்னை உயர்நீதி மன்ற
தலைமை நீதிபதி கோகலே அவர்கள்
உச்ச நீதி மன்றத்திற்கு  புகார் அனுப்பியது –
அப்போது பதவியில் இருந்த பாலகிருஷ்ணன்
முதலில் அத்தகைய ரிப்போர்ட் எதுவும்
வரவில்லை என்றது –
பின்னர்  ரிப்போர்ட் வந்தது  ஆனால் அதில்
அமைச்சர் ராஜாவின்  பெயர் குறிப்பிட்டிருக்கவில்லை
என்று மழுப்பியது –
நீதிபதி  கோகலே தன் ரிப்போர்ட்டில்
அமைச்சர்  ராஜாவின் பெயர் நிச்சயமாக
கடிதத்தின் இரண்டாவது பாராவில்
குறிப்பிடப்பட்டிருந்ததை மீண்டும் உறுதி செய்தது –
பின்னர்  மத்திய சட்ட  அமைச்சர் வீரப்ப மொய்லியிடம்
பத்திரிகையாளர்கள்  வினவியபோது –
இதில் அடுத்த நடவடிக்கையை எடுக்க வேண்டியது
உச்ச நீதி மன்றம் தான் என்று கை காட்டியது –
பாலகிருஷ்ணன் ஓய்வு பெற்றதோடு
இந்த விஷயத்தையும்  “குளோஸ்” பண்ணியது – )

அப்பாடா –
இப்போது புரிந்திருக்குமே-
ராஜாவுக்கும்  -பாலகிருஷ்ணனுக்கும் – (அதாவது
அவர் மாப்பிள்ளை ஸ்ரீநிஜ்  க்கும் -)
என்ன நெருக்கம் இருந்திருக்க  முடியும் என்பது !!!

ராஜாவின்   கொடை உள்ளம் தான் தெரியுமே !
சம்பாதித்ததை  தான் மட்டுமே அனுபவிக்க வேண்டும்
என்கிற குறுகிய எண்ணம் இல்லாதவர்.
தலைவரையும் அவர் குடும்பத்தையும் மறவாதவர் !

பரந்து, விரிந்த சாம்ராஜ்ஜியம்  அவருடையது.
மலேசியா, சிங்கப்பூர், துபாய் ஆஸ்திரேலியா என்று
பல இடங்களுக்கு  விரிந்த அவர்  ஆளுகை
தன்  நண்பரின் பொருட்டு
திரிச்சூர் சென்றது  பெரிய  விஷயமா என்ன ? )

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, குடும்பம், தமிழீழம், தமிழ், நீதிபதிகள், நீதிமன்றங்கள், பொது, பொதுவானவை, மகா கேவலம், ராஜாத்தி அம்மையார், ஸ்பெக்ட்ரம், Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

5 Responses to பெரம்பலூர் ஆ.ராஜா வுக்கும் -திரிச்சூர் ஸ்ரீநிஜ் க்கும் என்ன சம்பந்தம் ? ஸ்பெக்டரம் பணம் எது வரை போகும் ?

  1. கணையாழி சொல்கிறார்:

    அரசியல் முடிச்சுக்கள் ஒரு சுவாரசியமே!
    அதுவும் “மகாகனம் பொருந்திய ஸ்ரீமன் பொதுஜனம்” வர்கத்தில் இருந்து வரி கட்டிவிட்டு இந்த முடிச்சுக்களை பார்க்கும் பொது நம் வரி பணம் போயிட்டதே என்றதைவிட இந்த ஊழல் நடந்தேறிய கதையே அவசியதுவம் பெறுகிறது!

  2. Ganpat சொல்கிறார்:

    1970 களில் அரசியல் துறை ஊழலாயிற்று!
    1980களில்போலீஸ்துறை ஊழலாயிற்று!
    1990 களில் நீதித்துறை ஊழலாயிற்று !
    2000களின் முற்பகுதியில் ஆன்மீக, கலாச்சாரங்கள் ஊழலாயின ! 2000களின் பி ற்பகுதியில்ஊடகத்துறை ஊழலாயிற்று!
    இன்னும் பாரதத்தில் மிச்சம் இருப்பது என்ன?

  3. ramji சொல்கிறார்:

    It is clear that Mr.K.G.Balakrishnan is a lier. If we say something about him immediately he wear the DALIT mask. Everybody Knows about the Justice Dinakaran’s alication, he is also wear the DALIT mask. If you want to do wrong things you must be a DALIT, then all politicians will safe Guard you.

  4. seeniinn சொல்கிறார்:

    The slavery and craving mentality of our Indian people are the route cause for all the miseries that we encounter during this current saga.Self esteem,selfconfidence and the courage cupled with righteousness shoul be our primary qualifications.tose days the elderly people use to guide and rectify our mistakes then and there because those days Joint family culture was prevalent .if parents are not there to rear the children the grand parents will rear them effectively.Now the joint family system is out.Within the same family people use to live in different parts of t India( i am not talking about those who migrated from India)The schools have utterly failed because they are in search of money only and fail to teach social values to the young children in their earlier stagesitself.The society which is pursuing the globalisation has got caught with the fire of competition in all the spheres including education.So everyone wants to conquer the otherman and the way is immaterial for them.So the social peroils have come to stay in our system.The government occupied by the greedy politicians does not want ot do anything for upliftment of the nation all front.It talks interms of GDP only and to ensure that it pretends to act,thereby swindling large sums of money meant for social upliftment.It is for the people to organize ourselves to combat this ugly governments through socio-cutural-economic agenda with sacrificing mentality.Let us begin it today.Even the big walls of China’s big wall sarted with thelaying of single stone only initially which was followed up by otherstones to constitute the structure to claim itself to be a wodder of world.

  5. k.ganesan சொல்கிறார்:

    Good projection

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.