சபலத்தில் சிக்காத விஜய்காந்த் !

சபலத்தில் சிக்காத விஜய்காந்த் !


கூட்டணி கட்சிகளை கலந்து ஆலோசிக்காமல்,
அவசர அவசரமாக, தன்னிச்சையாக அதிமுக
வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு,
தன் முதிர்ச்சியின்மையை
நிரூபித்தார் அம்மா.

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த
அத்தனை கட்சிகளும் கடும் கோபம் கொண்டு
நேற்று மதியம் விஜய்காந்தை உடனடியாக
மூன்றாம் அணியைத் துவக்கி தலைமையை
ஏற்றுக்கொள்ளும்படி கேட்ட போது
இருந்த சூழ்நிலை மிகவும் இக்கட்டானது.

விஜயகாந்த் அலுவலக முன் நடந்த காட்சிகளை
தொலைக்காட்சிகள் தெளிவாகவே காட்டின.
மீண்டும் மீண்டும் காட்டின.
பெருந்திரளான உணர்ச்சிவசப்பட்ட கூட்டம்.
எள்ளும் கொள்ளும் வெடிக்கும் முகத்துடன்
கூட்டணித் தலைவர்கள் – அம்மாவின்
கொடும்பாவி எரிப்பு -கொந்தளிப்பு !

உண்மையில் விஜய்காந்த்தும் பாதிக்கப்பட்டு
இருந்தார். அவர் கட்சிக்கும் சேர்த்து தான்
அவமானம் இழைக்கப்பட்டது.

ஆனால் – எதிர்பாராத விதமாக,
அமைதியையும், பெருந்தன்மையையும்,
பக்குவத்தையும் வெளிப்படுத்தினார் விஜய்காந்த்.

உணர்ச்சி வசப்பட்டு எதையும் செய்ய வேண்டாம்.
உட்கார்ந்து யோசிப்போம் என்று மீடியா
முன்னிலையிலேயே கூறினார்.

மூன்றாவது அணியைத் துவக்கினால்,
ஓட்டுக்கள் பிளவு படும் –
முக்கியமான லட்சியமாகிய
திமுகவைத் தோற்படிப்பது  நடக்காது.

எனவே அதிமுக தலைமையிடம் பேசி
தீர்வு காண முயற்சிக்கலாம்
என்று பக்குவமாகக் கூறியது
பாராட்டத்தகுந்த விஷயம்.

இரண்டு கழகங்களுக்கும் மாற்றாக
ஒரு கூட்டணியைத் துவக்கி,
தலைமை தாங்கி நடத்தக் கூடிய அருமையான
வாய்ப்பு எதிர்பாராமல் அவரைத் தேடி வந்தபோது,

அந்த சபலத்திற்கு உட்படாமல்,
ஓட்டுக்கள் பிரியக்கூடாது என்று
வற்புறுத்திய பக்குவம் –
விஜய்காந்த்திடம் எதிர்பாராதது.
வாழ்த்துக்கள் விஜய்காந்த் !

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அம்மா, அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, கருணாநிதி, சன் டிவி, தமிழீழம், தமிழ், தேர்தல், பொது, பொதுவானவை, மனதைக் கவர்ந்தது, Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

8 Responses to சபலத்தில் சிக்காத விஜய்காந்த் !

  1. RAJASEKHAR.P சொல்கிறார்:

    முதிர்ந்த
    அரசியல் பக்குவம் ..!
    நீடித்த வாக்குறுதி..
    கொண்ட -கடமையில்
    நெளிவுசுளிவு
    இல்லாத நேர்த்தி ….
    எதற்கும் சபலமில்லாத நெஞ்சுரம் !
    இதுவே போதுமானது !!
    ஒரு நல்லதலைவருக்கு….!!!!
    ஒரு -வேண்டுகோள்
    விஜயகாந்திற்கு….
    உங்களை நம்பி நாளை தமிழகம் இருக்கிறது
    நீடுழிவாழவேண்டும் !
    உடல் நலத்தில் கவனம்….தேவை?

    THANKIG U
    RAJASEKHAR.P

  2. ramalingam சொல்கிறார்:

    hats off to captain.

  3. VijayFan சொல்கிறார்:

    Dear Friend,

    Really I like this article, Please write some more article like this so that people can read this and understand what should do what should not do..But what poor people and those who are not using internet will do … Some thing we need do…. appreciating your post…..

    மாற்றத்தை எதிர் பார்த்து காத்து இருக்கும் ஒரு உண்மையான விஜய் ரசிகன்

  4. இனியவன் சொல்கிறார்:

    “தெலுங்கு நாயக்கர்” விஜயகாந்தை ரொம்பவும் தலையில் தூக்கி வைத்து ஆடுவது தேவையற்றது. இந்தத் தெலுங்கனை ஆதரிப்பது முழுக்க முழுக்க ஏனைய பதினாறு வகைத் தெலுங்குக் கூட்டமே. மற்றும் இவனைத் தெலுங்கனாக அறியாத, ஆட்சி மாற்றத்தினை விரும்பும் தமிழினத்தைச் சேர்ந்த நடுநிலையாளர்கள் தான். இன்னும் முழுமையாக ஒரு ஆணியையும் புடுங்க வில்லை. அதற்குள் வாங்கிய பெட்டிகளின்/கோடிகளின் கணக்கென்ன? அதைக் கொண்டு அடிக்கும் கூத்துக்களென்ன?

    எதற்கு பெட்டி வாங்கினார் எனத் தெரியும் அனைவருக்கும். திருட்டு முன்னேற்ற கழகம் வெற்றி பெற, அ.தி.மு.க தோல்வி அடைய. வாக்குகளைச் சிதறடிக்க. “தெலுங்கு நாயுடு” வைக்கோவை நம்பாத வந்தேறித் தெலுகு இன மக்கள் இவனை நம்புவதிலிருந்தே இவன் எவ்வளவு கேடு கேட்டவன் என்று தெரிய வில்லையா? இன்னும் அரசியலின் அடிச்சுவடியைக் கூடத் தொடாத இந்த “வந்தேறி தெலுங்கு” விஜயகாந்த் இதற்குள் அடித்திருக்கும் குட்டி கரணங்கள் தான் எத்தனை எத்தனை?

    நிறைய பெட்டிகள்/கொடிகள் வாங்கிக் குவித்திருக்கும் இவர் தான் ஊழலை ஒழிக்கப் போகிறாராம். நல்ல நகைச் சுவை. இது வரை அ.தி.மு.க விற்கு veliyil irunthu seythathai ullaye irunthu seyvatharku kodigalaich churuttiyirppaan.

    நல்ல குடிகாரர் என்பது அவர் கண்களைப் பார்த்தாலே தெரிந்து விடும். “குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு”.

    ஒரு முடிவே பண்ணி விட்டீர்கள் போல் தெரிகிறது, தமிழனை தமிழனே ஆளத் தகுதியற்றவன் என்று.

    இன்னுமொரு வந்தேறித் தலைமை தேவையில்லை. தமிழ்த் தலைவர்களை உருவாக்குவோம்.
    “தியாகத்திரு. முத்துக்குமார்” கூறியதைப் போல தமிழ்த் தலைமை இல்லாததால் தான் தமிழினம் இன்றைக்கு இத்தனை இடர்பாடுகளைச் சந்தித்து வருகிறது. நம்மைச் சூழ்ந்து நிற்கும் தலைமைகள் அனைத்தும் வந்தேறிக் கூட்டத்திலிருந்து வந்தவர்களே. இருக்கும் தமிழ்த் தலைமைகளான மருத்துவர், தெருமா போன்றோர் கிடைக்கும் பதவி, பணத்திற்காக எதையும் செய்யத் துணிந்து விட்டார்கள். குலத்தின் கோடரிக் காம்பாக ஆகி விட்டனர். இனி மேல் நம்மிடமிருந்து தான் புதியதொரு தலைமை வர வேண்டும். அன்புடன், இனியவன்

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      வருக நண்பர் இனியவன்

      விஜய்காந்த் தான் அந்த மாற்றுத் தலைவர்
      என்று நான் சொல்லவே இல்லையே !

      விஜய்காந்த் எடுத்த ஒரு குறிப்பிட்ட
      நிலையை பாராட்ட வேண்டும் என்று
      தோன்றியது. பாராட்டினேன் – அவ்வளவே !

      காலம் நமக்கு ஒரு நல்ல தலைவனை
      காட்டிக் கொடுக்கும் – நம்பிக்கையோடு
      காத்திருப்போம் !

      -வாழ்த்துக்களுடன்
      காவிரிமைந்தன்

  5. metro boy சொல்கிறார்:

    //இனி மேல் நம்மிடமிருந்து தான் புதியதொரு தலைமை வர வேண்டும். அன்புடன், இனியவன்//
    Bible, I am told, calls christians to procreate and beget children like sands on the beach. Let Iniyavan and his comrades come with hundreds of True Tamil children who will become leaders of the Tamil community one day.

  6. c.selvam சொல்கிறார்:

    Are you still believe that Thuglak Cho Ramaswamy a neutral political observer?

  7. c.selvam சொல்கிறார்:

    Vijaykant not a good actor..
    Vijaykant not a good administrator..
    As the vaccum in the political space for the place of Rajinikant – used by vijaykant and people who want to earn money in politics has following Vijaykant..
    Dont promote vijaykant much…

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.