வித்தியாசமான வைகோ ….

வித்தியாசமான வைகோ ….

நேற்றிரவு இமயம் தொலைக்காட்சியில்
வைகோவின்  நீண்ட பேட்டியைக் கண்டேன்.

வைகோ தமிழ் நாட்டின்  தனி அடையாளம் !

அரசியல்வாதிகளில் முற்றிலும் மாறுபட்ட
ஒரு மனிதர்.

தானாகவே சென்று மாட்டிக்கொண்ட அதிமுக
கூட்டணி என்கிற சிறையிலிருந்து வெளிப்பட்டு
வந்த சுதந்திர மனிதராக –
வைகோவை பார்க்க, கேட்க
மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

இனி – திமுக, அதிமுக என்கிற இரண்டு
பந்தங்களுக்கும் அவர் கட்டுப்பட மாட்டார்
என்கிற நிலை வரவேற்கத்தகுந்தது.

இவரைக் காண்கையில், துரியோதனனுக்காக,
அவனிடம் பட்ட நன்றிக்கடனுக்காக –
தன் வாழ்க்கையையே தியாகம் செய்த
மகாபாரதக் கர்ணன் தான் நினைவிற்கு
வருகிறான்.மாற்றி மாற்றி
தகுதியில்லாத தலைவர்களுக்காகவே உழைத்து
வந்திருக்கிறார்.

படித்த மனிதர். இன்னும் படித்துக்கொண்டே
இருப்பவர்.அந்தக்கால MABL.
40 வருடங்களாக  அரசியலில் இருந்தாலும்,
அத்தனை தகுதிகள் இருந்தாலும்,
இதுவரை அரசாங்க  பதவி   எதையும்
வகிக்காதவர்.

இரண்டு முறை மத்திய அமைச்சராகும்
வாய்ப்பு அவருக்கு  கிடைத்தபோதும் அவற்றை – தன் கட்சி
உடன்பிறப்புக்களுக்கு
பெற்றுக்கொடுத்தவர். எந்தவித
ஊழல்  குற்றச்சாட்டுக்கும் உள்ளாகாதவர்.

நமது நாடு சுதந்திரம் பெற்ற பிறகு– 1947க்குப்
பிறகு, அதிக  நாட்கள்    அரசியல்
காரணங்களுக்காக சிறையில் இருந்த   ஒரே தலைவர் !
எல்லாருடனும் அருமையாகப்  பழகும் பண்பு.

அணுகுவதற்கும், பழகுவதற்கும்
எளிமையானவர் – இனிமையானவர் .
நிறைய தடவை அவருடன் பேசி இருக்கிறேன்.
அவரை எனக்கு நன்றாகத் தெரியும்.
(ஆனால் அவருக்கு என்னைத் தெரியாது !)

பகுத்தறிவாளர் என்றாலும், யார் மனதையும்
புண்படுத்தும் விதத்தில் அவர் பேசி
இதுவரை நான் பார்த்ததில்லை.
மிகச்சிறந்த இலக்கியவாதி.
இன்றைய தினத்தில் தமிழ்நாட்டில்
உள்ள தலைசிறந்த  பேச்சாளர்.
தமிழ் மொழியிலும்,இலக்கியத்திலும்,
மிகச்சிறந்த ஆளுமை உடையவர்.
— ——————

நேற்றிரவு – சென்னை விமான
நிலையத்தில் – எங்கே போகிறீர்கள்
என்று கேட்ட பத்திரிகையாளர்களிடம்
சொன்னாராம் – என் தாயிடம் போகிறேன்.
ஊருக்கு – கலிங்கப்பட்டிக்கு என்று.

சென்று வாருங்கள்  வைகோ.
இரண்டு மாதங்கள் ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள்.
உங்களை புதுப்பித்துக் கொள்ளுங்கள்.
புதிய சக்தியுடன், புதிய தெம்புடன்
மீண்டும் வாருங்கள்.

தமிழ் மக்களுக்கு நீங்கள் தேவை.
உங்களைப் போன்ற சுயநலம் இல்லாத
தலைவர்கள் தான் இன்றைய  தேவை.

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அம்மா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இன்றைய வரலாறு, ஓய்வு, கட்டுரை, சரித்திர நிகழ்வுகள், தமிழீழம், தமிழ், தேர்தல், பொது, பொதுவானவை, மதிமுக, மனதைக் கவர்ந்தது, வைகோ, Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

10 Responses to வித்தியாசமான வைகோ ….

  1. RAJASEKHAR.P சொல்கிறார்:

    காயமான இதயத்துடன் …………………………….

    Rajasekhar.p

  2. Ganpat சொல்கிறார்:

    தமிழக மக்களாகிய நாம்,வயதான தனது தாய்க்குக்கூட ஒரு சலுகையும் காண்பிக்க கூடாது என்பதில் உறுதியாக இருந்த ஒரு நேர்மைமிக்க கர்மவீரரை தோற்கடித்து அவர் மனதை புண்ணாக்கி சம்பாதித்த கர்மவினையை,, தனது குடும்பத்தினருக்கு மட்டும் கோடி கோடியாக கொள்ளைடித்துகொடுக்கும் ஒரு முதல்வரால் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம்.

    தனக்கு ஐந்து வருடங்களாக உறுதுணையாக இருந்து ஆதரித்த ஒரு நல்ல இதயத்தை புண்ணாக்கி சம்பாதித்த கர்மவினையை,
    ஜெயா, 13-5-2011 அன்று அனுபவிப்பது திண்ணம்.

  3. yatrigan சொல்கிறார்:

    பெரியவர் ப.நெடுமாறன்,
    வைகோ,
    தமிழருவி மணியன்,
    சீமான் -என்று நம்பிக்கை தரக்கூடியவர்கள்
    இருக்கத்தான் செய்கிறார்கள்.

    அதிகார அரசியலைப் பற்றியும்,
    தேர்தலைப் பற்றியும், கவலைபடாமல்
    இவர்கள் எல்லாரும்
    இணைந்து முயற்சித்தால் –
    2 -3 வருடங்களில் சொரணையுள்ள,
    மனசாட்சியுள்ள,
    ஒரு தமிழ்ச் சமுதாயத்தை நிச்சயம்
    உருவாக்கலாம்.

    நிறைய இளைஞர்கள் இவர்கள்
    பின்னால் வரத்தயாராக இருக்கிறார்கள்.
    முதலில் ஒரு நல்ல சமுதாயத்தை,
    ஒழுக்கமுள்ள, தன்னம்பிக்கை உள்ள
    சமுதாயத்தை உருவாக்க வேண்டும்.

    தேர்தலில் வென்று ஆட்சிக்கு வருவதை
    இரண்டாம்பட்சமாக
    வைத்துக் கொள்ளலாம்.

  4. pichaikaaran சொல்கிறார்:

    அருமையான இடுகை.. நன்றி

  5. Arivunithi சொல்கிறார்:

    ஐயா, உண்மையை சொல்வதானால் தற்போது தமிழக அரசியல் பற்றி பேசவோ படிக்கவோ பிடிக்கவில்லை. பதவிகளை விடுத்து, தமிழையும் தமிழர்களையும் நேசித்து, செஞ்சோற்று கடன் போல் தான் இருக்கும் கூட்டணிக்கு ஓடாய் உழைத்த ஒரு மாமனிதரை கறிவேப்பிலை போல் கூட இல்லாமல் அவமதித்து, அவமான படுத்தி அனுப்பி வைத்த அம்மையாரை என்னவென்று சொல்வது. நெஞ்சு பொறுக்குதில்லையே. யாரவது இந்த மாநிலத்தை ஆண்டு எக்கேடு கேட்டாவது போகட்டும். நமது சாபக்கேடு நல்லவனுக்கு காலமில்லை.

  6. நித்தில் சொல்கிறார்:

    இப்போது எடுத்த முடிவை 2006ல் எடுத்திருந்தால் இந்நேரம் தமிழகத் தில் பெரும் சக்தியாக இருந்திருப்பார் என நினைக்கின்றேன்.

  7. chollukireen சொல்கிறார்:

    அரசியல் எல்லாம் தெறியாது எனக்கு. எலெக்க்ஷன் என்று தெறிந்தவுடனே வை.கோ வெளியில் வந்து மற்றவர்களை கூட்டு சேர்த்திருக்க வேண்டும். வாவா என்று வருந்தி இருப்பார்கள். பொருத்திருப்பது பலனில்லாத ஒன்றாக ஆகிவிட்டது .நல்லதுக்கு காலமில்லைஇது சொந்த கமென்ட்.டூப்ளிகேட் எது

  8. t.s.muthu சொல்கிறார்:

    பொது வாழ்வில் மிகசிறந்த நேர்மையாளர் அதிக முறை துரோகங்களால் பாதிக்கப்பட்டவர். வடநாட்டு தலைவர்கள் எல்லோருமே வியக்கும் மதிக்கும் மாமனிதர் தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் யாருமே அவருக்கு நிகரானவர்கள் அல்லர். கட்சி சாரா மக்கள் மனதில் என்றுமே இடம் உள்ள ஒரே ஒப்பற்ற தலைவர்

    T .S .முத்து
    திருப்பூர்

  9. muthu சொல்கிறார்:

    we should support straight forward politician as like vaiko.we should never support both of them.

  10. VAIRA சொல்கிறார்:

    வைகோ

    தமிழர்களின் எழுச்சிநாயகன்.தமிழுக்காகவும்,தமிழர்களுக்கு ஏற்படும் அடிப்படை பிரச்சனைகளுக்காகவும் போராடும் போராளி.நேர்மையான,நம்பிக்கைக்கு பாத்திரமானவர்.அவரை நம்பி எத்தகைய களத்திலும் நிற்கலாம்.
    நல்ல நினைவாற்றல் கொண்டவர்.தனது கட்சியின் அடிமட்ட தொண்டரை கூட பெயரை சொல்லி அழைக்கும் அளவிற்கு அவரது நினைவாற்றல் இருக்கும்.இன்றைய சூழ்நிலையில் அவரை போன்ற ஒரு தகுதியான அரசியல்வாதியை பார்க்க முடியாது. காலம் செய்த கோலம்,அவரால் அரசியல்வாழ்வில் பெரிய அளவில் முத்திரை பதிக்க முடியவில்லை.
    ஒட்டுமொத்த தமிழனும் அவரோடு இணைந்து செயல்பட்டால்,தமிழன் தண்ணீருக்காக மட்டுமின்றி எந்த ஒரு விசயத்திற்காகவும்,அந்நியனிடம் மண்டியிட வேண்டியது இருக்காது.தமிழனின் மானம்,கெளரவம் உயர்த்தப்பட்டிருக்கும்.உலக அளவில் தமிழன் மதிக்கப்படுவான்.

    வைரா
    ஆலங்குளம்
    திருநெல்வேலி

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.