சுப்ரீம் கோர்ட் கருணாநிதி தலையில் வைத்த குட்டு ! சத்தம் போடாமல் மென்று விழுங்கப்பட்டு விட்டது !!

சுப்ரீம் கோர்ட் கருணாநிதி தலையில்
வைத்த குட்டு ! சத்தம் போடாமல்
மென்று விழுங்கப்பட்டு விட்டது !!

சமச்சீர் கல்வி விவகாரத்தில் அவசரப்பட்டு,
தவறான முடிவை எடுத்து -அதன் விளைவாக
தேவை இல்லாமல் அவமானப்பட்டு,
அனைவருக்கும் அசௌகரியத்தையும்
ஏற்படுத்தியது தமிழக  அரசு.
இது ஒரு பக்கம் இருக்க –

அண்மையில் நிகழ்ந்த சட்டமன்ற தேர்தலில்
படுதோல்வியால் தனக்கு கிடைத்த இமேஜை –

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை தனக்கு தனிப்பட
கிடைத்த வெற்றியாக  திசை திருப்பி
கொண்டாடி இமேஜை உயர்த்திக்கொள்ள
முயற்சிக்கிறார் கருணாநிதி.

தீர்ப்பு தமிழக அரசுக்கு தோல்வி –
இதில் சந்தேகமே இல்லை.
ஆனால் அது கருணாநிதிக்கு கிடைத்த
வெற்றி அல்ல.

ஆம்.இது கருணாநிதிக்கும் எதிரானதே !

இந்த தீர்ப்பின் ஊடே –
சுப்ரீம் கோர்ட் கருணாநிதிக்கு
அழுத்தந்திருத்தமாக தலையில் குட்டு
வைத்திருப்பதை –
மேலோட்டமாக தீர்ப்பை படித்ததால் –
பலர் கவனிக்கவில்லை.

சிலர் கவனித்தும் மறைக்கிறார்கள்.
திமுகவிற்கு ஆதரவான  சிலர் –
அரசின் தோல்வியை முன்நிறுத்தி,
கருணாநிதிக்கு கிடைத்த கண்டனத்தை
மறைக்க முயற்சிக்கிறார்கள்.

சுப்ரீம் கோர்ட்டின் முடிவு அனைவருக்கும்
மேலோட்டமாகத் தெரியும்.
அதன் ஊடே – நீதிபதிகள் கருணாநிதிக்கு
குட்டு வைத்திருக்கும்
குறிப்பிட்ட பத்தி (relevant
paragraph)இதோ –

“எந்த வித சந்தேகத்திற்கும்  இடமின்றி –
இதற்கு முன்னால் அதிகாரத்தில் இருந்த
அரசியல் கட்சியின் தலைவரால் (கருணாநிதி)

தன்னை முன்னிலைப்படுத்தி கொண்டும்,

சுய விளம்பரம் செய்து கொண்டும்,

தன்னுடைய பழக்க வழக்கங்களையும்,
கொள்கைகளையும் உயர்த்திக் காட்டியும்,

அதன் மூலம், சின்னஞ்சிறு மாணவர்களை-
முக்கியமாக துவக்கப்பள்ளி வகுப்புகளில்
படிக்கும்  இளஞ்சிறார்களை,
தன் வசப்படுத்த முயற்சி நடந்திருக்கிறது.

(Undoubtedly, there had been
few instances of portraying
the personality – by the
leader of political party
earlier in power
(M.Karunanithi) i.e.

personal glorification,  
self publicity and

promotion of his own cult
and philosophy –

which could build
his political image and

influence the young students,
particularly in the primary
classes )

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கருணாநிதி, கலைஞர் வழிகாட்டுதல், காமெடி, சாட்டையடி, தமிழ்ப் புத்தாண்டு, நீதிமன்றங்கள், பொது, பொதுவானவை, Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

12 Responses to சுப்ரீம் கோர்ட் கருணாநிதி தலையில் வைத்த குட்டு ! சத்தம் போடாமல் மென்று விழுங்கப்பட்டு விட்டது !!

  1. Ganpat சொல்கிறார்:

    நல்ல முடிவை தவறான முறையில் அமல்படுத்தி
    தோல்வி அடைபவர் ஜெயா
    தீய முடிவை சரியான முறையில் அமல்படுத்தி
    வெற்றி அடைபவர் கருணா
    இதற்கு சமீபத்திய உதாரணம்
    “சமச்சீர் கல்வி திட்டம்”

  2. chollukireen சொல்கிறார்:

    சமச்சீராக இ ருவருக்குமே குட்டுதான்.

  3. குருமூர்த்தி சொல்கிறார்:

    உச்சநீதிமன்றம் கலைஞருக்கு வைத்தது குட்டு ஜெயலலிதாவுக்கு வைத்தது ஆப்பு, அவ்வளவு தான் வித்தியாசம்

  4. rajanat சொல்கிறார்:

    ஜெயலலிதாவுக்கு எதிரி ஜெயலலிதாவேதான் எனபதை மீண்டும் ஒரு முறை சமச்சீர் கல்வி மூலம் நிரூபித்திருக்கிறார்.

    கருணாநிதியின் சொறிதல்களை மட்டும் நீக்கி விட்டு பாடத்திட்டங்களை முன்பே நடைமுறைப்படுத்தியிருக்கலாம்.

    Karuna lead a point now.

  5. karthi சொல்கிறார்:

    செயாவை மட்டும் சொன்ன அவாளுக மனசு நோகுன்னுதான் கருணாவையின் திட்டியிருக்காங்கான்னு தெரியாதா என்ன-

  6. ramanans சொல்கிறார்:

    //நல்ல முடிவை தவறான முறையில் அமல்படுத்தி
    தோல்வி அடைபவர் ஜெயா
    தீய முடிவை சரியான முறையில் அமல்படுத்தி
    வெற்றி அடைபவர் கருணா
    இதற்கு சமீபத்திய உதாரணம்
    “சமச்சீர் கல்வி திட்டம்”//

    சொன்ன வாய்க்கு சர்க்கரை.. இல்லை.. இல்லை.. ”லட்டு” ஊட்ட வேண்டும். 100% கரெக்ட்.

  7. ramanans சொல்கிறார்:

    //சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை தனக்கு தனிப்பட
    கிடைத்த வெற்றியாக திசை திருப்பி
    கொண்டாடி இமேஜை உயர்த்திக்கொள்ள
    முயற்சிக்கிறார் கருணாநிதி.//

    இமேஜா… அது இவருக்கு இருக்கிறதா? பாச மகள் சிறையில். மகன் விரைவில்… இன்னும் யாரோ, எவரோ? அவர்களைக் காக்கவோ, கைதாகும் கட்சியினரைக் காக்கவோ முயற்சி எடுக்காமல் இந்த விஷயத்தை என்னவோ மிகப் பெரிய சாதனை செய்த மாதிரி லட்டு ஊட்டியும், இனிப்பு கொடுத்தும், பட்டாசு வெடித்தும் கொண்டாடுவதைப் பார்க்கும் போது, பக்தவச்சலம், காமராஜ், ராஜாஜி, எம்ஜியாரை எல்லாம் அஞ்சாமல் எதிர்த்து அரசியல் செய்த அரசியல் தலைவரா இவர் என்ற சலிப்புதான் ஏற்படுகிறது. கேவலமாகவும் இருக்கிறது.

    பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்..

  8. Kalam சொல்கிறார்:

    How could you findout this?!!!!!!!!!!!!!! What a cleverness??

  9. அருள் சொல்கிறார்:

    சமச்சீர் கல்வி முழுதீர்ப்பு: துகிலுரியப்பட்ட தமிழக அரசு

    http://arulgreen.blogspot.com/2011/08/blog-post_10.html

  10. kathirmuruga சொல்கிறார்:

    இரு பக்க தவறுகளையும் சுட்டி தெளிவாக எழுதியுள்ளீர்கள்.

  11. Ganpat சொல்கிறார்:

    நன்றி திரு.ramanans

  12. Ponraj Mathialagan சொல்கிறார்:

    இப்படி கருணாநிதி ஊளையிடுவதால் அவர் எதிர்பார்ப்பது என்ன? நாளை நிலா அபகரிப்பு வழக்கிலோ, அலைக் கற்றை வழக்கிலோ அவர் உள்ளே போக நேர்ந்தால், மாணவர்கள் எல்லாம் அவருக்காக போராட்டம் நடுத்துவார்கள் என்ற லூசுத்தனமான சிந்தனையோ? நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.