வசிய எண்ணெய் -இந்த எண்ணெயுடன் உங்களது ரத்தம்/ சிறுநீர் சிறிது கலந்து…..

வசிய எண்ணெய் -இந்த எண்ணெயுடன்
உங்களது ரத்தம்/ சிறுநீர் சிறிது கலந்து…..

“வசிய எண்ணெய் – ரூ.5000/-
இந்த எண்ணெயுடன் உங்களது ரத்தம்/ சிறுநீர்
சிறிது கலந்து ஒரு வாரம் வைத்திருந்து –  
விரும்பியவருக்கு தலையில் சிறிது தடவவும்.  
இரண்டு, மூன்று முறை வைத்தால்
போதும். மேலும் அவர்கள் உபயோகிக்கும்
தேங்காய் எண்ணெயில் கலந்து விடவும்.
எதிரிகள் காலம் முழுவதும் வசியமாவார்கள்.”

பயங்கரமாக இருக்கிறதே – இது என்ன
என்று கேட்கிறீர்களா ?

இந்த வாரம் துக்ளக் இதழில் வெளிவந்திருக்கும்
ஒரு முழு பக்க விளம்பரத்தின் ஒரு பகுதி.
(முழுவதும் படித்தால் அரண்டு விடுவீர்கள் !)

துக்ளக்  வார இதழில் எப்படி இத்தகைய
விளம்பரம் வந்தது ?

1) துக்ளக் வாசகர்களை வாத்து மடையர்கள்
என்று எண்ணி விட்டார்களா ?  இல்லை –

2) மந்திர தந்திரம் என்று சொன்னால், துக்ளக்
வாசகர்களை நம்ப  வைப்பது சுலபம் என்று
நினைத்துக் கொண்டார்களா ?  இல்லை –

3) துக்ளக் கில்  விளம்பரம் செய்வது
மலிவானதா ? எளிதானதா ?   இல்லை –

4) ஆசிரியர் “சோ” துக்ளக்கின் தரத்தை
பாதுகாப்பதில் அக்கரை இழந்து விட்டாரா ?

வார இதழ் தானே – நாளிதழ் இல்லையே !
அச்சுக்குப் போகும் முன்னர்  ஆசிரியர்
அனைத்தையும் படித்து, பார்த்து –
ஒப்புதல் கொடுக்க வேண்டாமா ?

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to வசிய எண்ணெய் -இந்த எண்ணெயுடன் உங்களது ரத்தம்/ சிறுநீர் சிறிது கலந்து…..

  1. Ganpat சொல்கிறார்:

    பிச்சுட்டீங்க, கா.மை.
    சோவின் போறாத காலம் ஆரம்பித்து விட்டது என நினைக்கிறேன்.
    Knowing Cho as a disciple of another obstinate personality
    மொரார்ஜி தேசாய் (ஆம் மூத்திரம் குடிக்கிறேன் அதில் என்ன தப்பு என பிதற்றியவர்),என் பத்திரிகையில் வரும் விளம்பரங்களின் உண்மைத்தன்மைக்கு நான் எப்படி பொறுப்பேற்க முடியும் என இவர் கூறப் போவது நிச்சயம்.

  2. ஸ்ரீதர் சொல்கிறார்:

    //விளம்பரங்களின் உண்மைத்தன்மைக்கு நான் எப்படி பொறுப்பேற்க முடியும் என இவர் கூறப் போவது நிச்சயம்.//

    அப்படி முன்னமே ஒரு முறை கூறிவிட்டார் என்பது நினைவு.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.