இந்திய தத்துவங்களுடன் ஒன்றிப்போன ஆப்பிள் கம்ப்யூட்டரின் – ஸ்டீவ் ஜாப்ஸ் –

இந்திய தத்துவங்களுடன் ஒன்றிப்போன
ஆப்பிள் கம்ப்யூட்டரின் – ஸ்டீவ் ஜாப்ஸ் –

உலகில் கம்ப்யூட்டர் தெரிந்த அத்தனை
மனிதர்களையும் ஏங்க வைத்து விட்டு
56 வயதிலேயே மறைந்த ஆப்பிள் கம்ப்யூட்டர்
மேதை ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்களுக்கு அஞ்சலியாக
சில வார்த்தைகள் –

ஸ்டீவ் ஜாப்ஸ்-
ஜூன் 12, 2005  அன்று ஸ்டான்போர்டு
பல்கலைக்கழக  மாணவர்களிடையே  ஆற்றிய
உரை பிரமிப்பை ஏற்படுத்துகிறது.

இந்தியாவில் இத்தகைய சிந்தனைகள் சகஜம்.
ஆனால்  ஒரு அமெரிக்கராக, அதுவும் புகழ்பெற்ற
ஒரு கம்ப்யூட்டர்  மேதையாக, ஒரு பெரிய
செல்வந்தராக –  இருந்த நிலையில் அவரது
சிந்தனைகள் வியப்பூட்டுகின்றன.

அவரது மனித நேயத்தையும்,
சிந்திக்கும் ஆற்றலையும்,
தத்துவ ஈடுபாடுகளையும் –
வெளிப்படுத்தும் உரையிலிருந்து
சில கருத்துக்கள் –

“எனக்கு 20 வயதிருக்கும்போது,
என் பெற்றோர்களின் கேரெஜிலிருந்து
எந்த வித முதலீடும் இல்லாமல், நான்
இன்னொரு நண்பருடன் சேர்ந்து உருவாக்கியது
தான் ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனம்.
10 வருடங்களில், 2 மில்லியன் டாலர்
பெறுமானமுள்ள, 4000 பேர் வேலை
செய்யக்கூடிய நிறுவனமாக
அது வளர்ந்த சமயத்தில் –

நான் உருவாக்கிய ஆப்பிள் கம்ப்யூட்டர்
நிறுவனத்திலிருந்தே  நான் வெளியேற்றப்பட்டேன்.
30 வயதில், ஒரு தோல்வியுற்ற மனிதனாக
சமுதாயத்தில் நான் சித்தரிக்கப்பட்டேன்.முதலில்
சில மாதங்கள் என்ன செய்வது என்றே தெரியாமல்
அலைந்தேன்.

நான் ஆப்பிளில் செய்த வேலையை மிகவும்
விரும்பிச் செய்தேன். என் வேலையை நான் மிகவும்
நேசித்தேன். எனவே என் மனதிற்குப் பிடித்த அதே
வேலையையே மீண்டும் துவக்கினேன்.

ஆப்பிளில் வெற்றி பெற்ற மனிதனாக எனக்கு
தோன்றாத  எண்ணங்களும்,யோசனைகளும்
புதிய மனிதனாக,
புதிதாகத் தொழிலை துவக்கும்போது தோன்றின.

ஆப்பிளிலிருந்து நான் வெளியேற்றப்பட்டதே –
எனக்குள் ஒரு புதிய வேகத்தையும்,
புதிய சிந்தனைகளையும் ஏற்படுத்தின.
ஒரு விதத்தில் ஆப்பிளிலிருந்து நான்
வெளியேற்றப்பட்டதே ஒரு வரப்பிரசாதம் ஆயிற்று.

அடுத்த ஐந்து வருடங்களுக்குள் நெக்ஸ்ட், பிக்ஸர்
ஆகிய இரண்டு பிரமாதமான புதிய நிறுவனங்களை
உருவாக்கினேன்.பிக்ஸர் உலகின் முதல் அனிமேஷன்
சித்திரத்தை உருவாக்கியது( டாய் ஸ்டோரி ).
உலகிலேயே மிகச்சிறந்த அனிமேஷன் நிறுவனமாக
அது உருவாகியது.

அடுத்து, நெக்ஸ்ட் நிறுவனத்தை –
ஆப்பிள் நிறுவனம்  வாங்கியது.
எங்கிருந்து வெளியேற்றப்பட்டேனோ –
அதே ஆப்பிள் நிறுவனத்தில் சகல பெருமைகளுடனும்,
மரியாதைகளுடனும் மீண்டும் உள்ளே  நுழைந்தேன்.

பின்னால்  யோசிக்கும்போது தான் தெரிகிறது.
நடந்ததெல்லாம் நல்லதற்காகவே நடந்திருக்கிறது.
நான் ஆப்பிளிலிருந்து வெளியேற்றப்படாமல்
இருந்திருந்தால் – இந்த அளவு வெற்றிகரமான
மனிதனாக உருவாகி இருக்க முடியாமல்
போயிருக்கலாம்.என் வாழ்க்கையில், அது ஒரு
கசப்பான மருந்தாக எனக்கு உதவி இருக்கிறது.

சில சமயம் புள்ளிகள் தான் நமக்குத் தெரிகின்றன.
புள்ளிகள் காட்டும் வழியில் பயணம் செய்ய வேண்டி
இருக்கிறது. புள்ளிகள் முடிந்து உருவம் உண்டான
பிறகு தான் நமக்கு தெரிகிறது – நாம் எங்கே
வந்திருக்கிறொம் – என்ன செய்திருக்கிறோம் என்பது !

வாழ்க்கை காட்டும் பாதையில்
வழி நடக்க வேண்டியது தான்.  
எல்லாம் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டிருக்கின்றன –
அது விதியாக இருக்கலாம். கர்மாவாக இருக்கலாம்.
அதை நீங்கள் நம்ப வேண்டும். நான் நம்புகிறேன்.
என் வாழ்க்கையில் இது நடந்திருக்கிறது !

வாழ்க்கை  சில சமயம் உங்களை சம்மட்டியால்
ஓங்கி அடிக்கிறது. பொறுமை மிகவும் தேவைப்
படுகிறது. நம்பிக்கை இழக்காமல் தொடர்ந்து
பணியாற்ற வேண்டி இருக்கிறது.

நம் வேலையை நாம் நேசித்தால் மட்டுமே
அது சாத்தியம். நம் வேலையை நம் உயிரினும்
மேலாக நாம் நேசிக்க வேண்டும். பிடிக்காத
வேலையை செய்யவே கூடாது. நமக்கு பிடித்த
வேலை எது என்பதை முதலில் நாம் தீர்மானித்துக்
கொள்ள வேண்டும். நம் மனதிற்கு அது தெரியும்.

நமக்குப் பிடித்த அந்த மாதிரி வேலை
அமையும் வரை தொடர்ந்து
தேடிக்கொண்டே இருக்க வேண்டும்.
கிடைத்த பிறகு அதை  நேசிக்க வேண்டும்.
நம் வேலையை ரசித்து, ஈடுபாட்டுடன்
செய்ய வேண்டும்.

எதுவும் நிரந்தரம் இல்லை.
இன்றோடு என் வாழ்வு முடியப்போகிறது –
நான் வாழப்போகும் கடைசி நாள்  இது என்று
நினைத்து செயல்பட்டால் – எதுவும் பெரிதாகத்
தோன்றாது. ஆத்திரம், கோபம், அகங்காரம்
போன்றவை காரணமாக நாம் செய்யும்
பல செயல்கள் அப்போது நிகழவே நிகழாது.
நாம் செய்யும் பல காரியங்களுக்கு
தோல்வி பற்றிய  பயமே  காரணம்.
இறப்பிற்கு பின்னர் இவை எதுவும் நம்மைத்
தொடரப்போவதில்லை என்று தெரிந்தால் –
இவற்றைக்கண்டு நாம் எங்கே அஞ்சப்போகிறோம் ?

யாரும் சாவதற்கு விரும்புவதில்லை.

சொர்க்கத்திற்கு போக வேண்டும் என்று சொல்பவன்
கூட  சாக விரும்புவதில்லை.

இருந்தாலும் – நம் எல்லாருக்கும் பொதுவான
ஒரே விஷயம்  சாவு தான் !
சாவைத் தவிர்த்தவர்  உலகில் யாராவது உண்டா ?
சாவைக் கண்டு பயந்து தான் என்ன பயன் ?
வந்தவர் எல்லாரும் இங்கேயே தங்கி விட்டால் –
புதியவர்கள் எப்படி வர முடியும் ?

எனவே இருப்பவர் போவதும் –
புதியவர் வருவதும் இந்த உலகத்தின் நியதி !

நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது குறைந்த பட்ச
கால அவகாசமே !

எனவே  நமக்கு என்று  கொடுக்கப்பட்டிருக்கும்
இந்த நேரத்தை பயனுள்ளதாக செலவழிக்க வேண்டும்.

அடுத்தவர் எண்ணங்களிலும், வாழ்க்கையிலும்
புகுந்து புறப்படாமல், நமக்காக வாழ வேண்டும்.
அடுத்தவர் எண்ணங்கள் நம் எண்ணங்களை
அழுத்த அனுமதிக்க கூடாது. அவர்கள் போடும்
இரைச்சலில் நம் இதயத்தின் குரல் நமக்கு
கேட்காமல் போய் விடக்கூடாது.

நம் மனது சொல்வதைக் கேட்க வேண்டும்.
அதையே செய்யக்கூடிய
அளவிற்கு நமக்கு தைரியம் வேண்டும்.
அதுவே சரியாக இருக்கும்.”

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to இந்திய தத்துவங்களுடன் ஒன்றிப்போன ஆப்பிள் கம்ப்யூட்டரின் – ஸ்டீவ் ஜாப்ஸ் –

  1. மாணவன் சொல்கிறார்:

    ஸ்டீவ் ஜாப்ஸ் பற்றிய நினைவு பகிர்வை அருமையாக பகிர்ந்துகொண்டுள்ளீர்கள் நண்பரே நன்றி!

  2. Ravindran சொல்கிறார்:

    As he says everything is predetermined–A slight push in the form of human effort is all that is needed to achieve–

  3. vignesh சொல்கிறார்:

    அருமையான பதிவு

  4. Ahmad சொல்கிறார்:

    what his speech has got to do with India?
    he hated india ever since he visited it.
    don’t be illusioned.
    Steve Jobs hated india(his thinking about india is toiletless country)

  5. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    my dear friend,

    I am sorry that you have not appreciated
    the contents of the article in right spirit.

    It will not be appealing to you
    if you are already biassed.

    You have your own views – I am nobody
    to comment on that !

    -with all best wishes
    kavirimainthan

  6. Raja சொல்கிறார்:

    Like that

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.