மூன்று பிரதம மந்திரிகள் உருவாக்கிய குடும்பத்தின் சொத்து …..

மூன்று பிரதம மந்திரிகள் உருவாக்கிய
குடும்பத்தின் சொத்து …..

மூன்று பிரதம மந்திரிகளை உருவாக்கிய
குடும்பம். 4வது பிரதமரும் தயார் ஆகிக்
கொண்டிருக்கும் குடும்பம்.

மோதிலால் நேரு – இந்தியாவின் முதல்
பாரிஸ்டர். இங்கிலாந்தில் கேம்ப்ரிட்ஜில்
சட்டம் படித்தவர். மிகப்பெரிய செல்வந்தர்.
அலாகாபாதில் மிகப்பெரிய வக்கீல்.
பிரிட்டிஷ்  அரசாங்கத்திலும்
மிகவும் செல்வாக்குடன் இருந்தவர்.
இவர் பிரிட்டிஷ் இந்தியாவில் தொழில்
முறையில் சேர்த்து வைத்த
சொத்துக்கள் ஏராளம் -ஏராளம்.

இவரது ஒரே மகன் ஜவஹர்லால் நேரு.
(மற்ற இருவரும் பெண்கள்) தந்தையின்
அத்தனை சொத்துக்கும் ஒரே வாரிசு.
இவரும் வழக்கறிஞர்.
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர்.
1947 லிருந்து 1964 வரை
17 வருடங்கள் பிரதமராக இருந்தவர்.
தன் பங்குக்கு இவர் சேர்த்த செல்வங்களும்
ஏராளம் – ஏராளம்.

அடுத்து இந்திரா காந்தி –அதே குடும்பத்தில்
இரண்டாவது பிரதமர்.1966 முதல் 77 வரை,
மீண்டும்1980 முதல் 84 வரை ஆக மொத்தம்
15 வருடங்கள் பிரதமர் பதவி. தன் பங்குக்கு –
(எல்லா வகையிலும்)-இவர் சேர்த்த
செல்வங்களும் ஏராளம் -ஏராளம்.

அடுத்து அதே குடும்பத்தில் 3வது பிரதமர் –
ராஜீவ் காந்தி.1984 முதல் 89 வரை
5 வருடங்கள் பிரதமராக இருந்தவர். முதலில்
மிஸ்டர் க்ளீன் ஆக இருந்தாலும், பதவியின்
கடைசி கட்டங்களில் போபர்ஸ் உட்பட ஊழல்
புகார்களுக்கு ஆளானார். இவர் சேர்த்த
சொத்துக்களும் ஏராளம் – ஏராளம்.

ராஜீவ் காந்தியின் சகோதரர் சஞ்சய் காந்தி
இளம் வயதிலேயே இறந்து விட்டார்.அவரது
சார்பில்,குடும்ப சொத்தில் பங்கு கேட்கக்கூடிய
நிலையில் இருந்த மேனகா காந்தியும்,
(அவரது மகன் வருண் காந்தியும்)
இந்திரா இருந்த போதே –
செட்டில்மெண்ட் செய்யப்பட்டு,
வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டு விட்டனர் !

ஆக –  மொத்த சொத்துக்கும்
ஒரே வாரிசு ஆனார் “அன்னை”
சோனியா காந்தி !
(ஒரு நிமிடம் படிப்பதை நிறுத்தி விட்டு
கற்பனை பண்ணிப்பாருங்கள் –
எவ்வளவு சொத்து தேரும் ? )

இத்தாலியில் உதித்து,
சிறு வயதிலேயே வேலை தேடி இங்கிலாந்து
சென்று, அங்கு ஒரு ரெஸ்டாரண்டில்
பணிபுரிந்து கொண்டு இருந்தபோது –

ராஜீவ் காந்தியை சந்தித்த அந்த நொடி
கொண்டு வந்தது அத்தனை
அதிருஷ்டங்களையும். அத்தனை செல்வங்களும்
இறுதியில்  இவரிடம் வந்து சேர்ந்தது
தான் வியப்பு. கதைகளில் வருமே –
தெருவோரம் தூங்கிக்கொண்டிருந்த
ஏழைப் பெண்ணின் கழுத்தில் யானை மாலை
போட்டு மகாராணி ஆக்குவது போல் –
அந்த மாதிரி ஒரு அதிருஷ்டத்தை
கொண்டு வந்தது அந்த சந்தர்ப்பம். ஆனால் –
அந்த சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்திக்
கொண்டது – முழுக்க முழுக்க  அவரது
சொந்த சாமர்த்தியம் தான்.

மன்னிக்கவும் – இன்னும் முடியவில்லை !

குடும்பத்தில் சேர்ந்த சொத்துக்கள் போதாது
என்று, ராஜீவ் இறந்த பிறகு அவர் பெயரில்
சோனியா காந்தியால் -ராஜீவ் காந்தி பவுண்டேஷன்
என்று அறக்கட்டளை ஒன்று துவங்கப்பட்டு,
அதற்கு  மத்திய அரசும், பல மாநில அரசுகளும்
பல தனியார் நிறுவனங்களும் பெரிய அளவில்
“கொடை”கள்( அதிகார பூர்வமாகவே) அளித்தன.
இந்த அறக்கட்டளை பல சமுதாய முன்னேற்ற
பணிகளில் (?)   ஈடுபடுவதற்காக உருவாக்கப்பட்டது.
இதன் முழு அதிகாரமும் இதன் தலைவர்
என்கிற முறையில் அன்னையிடம் தான்
இருக்கிறது.

இத்தனை சொத்துக்களையும் இன்றைய தினம்
நிர்வகிப்பது யார் ?

பட்டத்து இளவரசரா ? அய்யோ – ஒன்றும்
தெரியாத பிள்ளை அவர்.இந்த நாட்டை
நிர்வாகம் செய்யும் பிரதமர் பொறுப்பை
வேண்டுமானால்  அவரிடம் கொடுத்து விடலாம்.
கஷ்டப்படப்போவது
மக்கள் தான் – கவலை இல்லை.

ஆனால் அரும்பாடு பட்டு சேர்த்த
பெரும் சொத்தை பிள்ளையின்  பொறுப்பில்
விடக்கூடாது என்று அன்னைக்கு
தெரியாதா என்ன ?

அப்படியானால் …… ?

(இன்னும் கொஞ்சம் யோசிப்போம் –
மீண்டும் சந்திப்போம் )

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to மூன்று பிரதம மந்திரிகள் உருவாக்கிய குடும்பத்தின் சொத்து …..

  1. எழில் சொல்கிறார்:

    கவிரிமைந்தன் ஐயா அவர்களே, ஒரு ஏகாதிபத்திய சக்தி, சோஷலிச கொள்கை அடிபடையில் ஆனால் அணி சேராமல் – பின்னாளில் அதீத வளர்ச்சி அடைந்து நமக்கே சவாலாக அமையலாம் என ஒரு நாட்டினை இனம் காண்கிறது. இந்த நாட்டினை எப்படி வழிக்கு கொண்டு வரலாம் என்று யோசிக்கும் போது, இந்த நாடே ஒரு குடும்பத்திடம் தான் கட்டுண்டு கிடப்பது அவர்களுக்கு வசதியாக போய் விடுகிறது. எனவே நம்மாள் ஒருவரை தயார் செய்து அந்த குடும்பத்தில் செலுத்தினால் நாடே நம் கைக்குள் வந்து விடும் என்று கணக்கு போட்டு செயல் படுத்த படுத்துகிறது. அன்று முதல் இன்று வரை அவர்களுக்கு எது நடக்க வேண்டுமோ அது நன்றாகவே நடக்கிறது; நடத்த படுகிறது என்று ஒரு கற்பனை கதையை நான் உங்களுக்கு சொன்னால் என்னை லூசு என்பீர்களா?

  2. vadivukkarasi சொல்கிறார்:

    awaiting the end of this story

  3. rajasekhar.p சொல்கிறார்:

    Board of Trustees
    Smt. Sonia Gandhi, Chairperson
    Dr. Manmohan Singh, Member
    Dr. Montek Singh Ahluwalia, Member
    Mr. P. Chidambaram, Member
    Dr. Y. K. Alagh, Member
    Mr. Suman Dubey, Member
    Mr. Rahul Gandhi, Member
    Mr. R. P. Goenka, Member
    Dr. V. Krishnamurthy, Member
    Dr. Sekhar Raha, Member
    Sir Shridath Ramphal, Member
    Prof. M S Swaminathan, Member
    Dr. Ashok Ganguly, Member
    Ms. Priyanka Gandhi Vadra, Executive Trustee
    Executive Committee
    Smt. Sonia Gandhi, Chairperson
    Shri P. Chidambaram, Member
    Shri Suman Dubey, Member
    Dr. V. Krishnamurthy, Member
    Shri Rahul Gandhi, Member
    Smt. Priyanka Gandhi Vadra, Executive Trustee
    Investment Committee
    Shri P. Chidambaram, Member
    Dr. V. Krishnamurthy, Member
    Shri R.P. Goenka, Member
    Executive Trustee
    Ms. Priyanka Gandhi Vadra

  4. rajasekhar.p சொல்கிறார்:

    ராகுல் காந்தியின்
    தகுதியை மேலே காணலாம்…….
    இவருக்கு-
    “பிரதமராகும் தகுதி உள்ளது ”
    என்று சொல்லும்
    தலைவர்களை என்னவென்று சொல்வது….
    இவங்கபோடுறது தப்பு கணக்கு…
    மக்கள்தான் போடணும் சரியான கணக்கு……??!!!!!!!!!!!!!!!!!!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.