குறுகிய காலத்தில் மிகப்பெரிய பணக்காரர் ஆன ஜெகதலப்பிரதாபன் ……

குறுகிய காலத்தில் மிகப்பெரிய
பணக்காரர் ஆன ஜெகதலப்பிரதாபன் ……

( மேலே இருப்பது – எப்போதாவது உதவக்கூடும் என்கிற எண்ணத்தில் எதிர்கால  பிரதமருக்கு (?) நிகழ்கால பிரதமர் கும்பிடு போட்டு வைக்கும்  காணக்

கிடைக்காத அரிய காட்சி )

குறைந்த காலத்தில் – மிகப்பெரிய செல்வந்தர்
ஆகி விட்டவர். “அன்னை”யின் மருமகன் –
ஒரே மகள் பிரியங்காவின் கரம் பிடித்த கணவன்
மனதுக்கு இனிய மணாளன் –
ராபர்ட் வாத்ரா.

அரசியலில் அடுத்த பிரதமராக பட்டம் சூட்ட
ராகுலை  தயார் செய்து வந்தாலும், மகனுக்கு
அவ்வளவாக சாமர்த்தியம் போதாது என்பது –

நமது எண்ணம் மட்டுமல்ல

அன்னையின் கணிப்பும் அதுவே ! எனவே –
பண விஷயங்களுக்கு, வியாபார காரியங்களுக்கு,
அவர் முற்றும்  நம்புவது மருமகனைத்தான்.

விளைவு –
அன்னையின்  செல்வங்கள்  அனைத்தும்
மருமகனின் கண்ட்ரோலில்  தான் இருக்கிறது.

ராபர்ட் வாத்ரா  இந்தியத் தந்தைக்கும்,
ஸ்பானிஷ் தாய்க்கும் மகனாகப் பிறந்தவர்.
அவரது தாய், “அன்னை” யின் நெருங்கிய
தோழி.  திருமண பந்தம் ஏற்பட்டதும்
அந்த முறையில் தான்.

திருமண சமயத்தில், ராபர்ட் வாத்ராவின்
குடும்பத்தில் அவரது அன்னை, தந்தை,
ஒரு சகோதரர், ஒரு சகோதரி – இவ்வளவு
பேர் இருந்தனர். மருமகன், அவரது தாய்
இருவரைத் தவிர வேறு யாருடனும்
“அன்னை”க்கு சுமுகமான உறவு இருந்ததில்லை.

அதிருஷ்டவசமாகவோ, துரதிருஷ்டவசமாகவோ,
மீதி அனைவரும் போய்ச்சேர்ந்து விட,
இப்போது அந்த குடும்பத்தில் மிஞ்சி  இருப்பது
ஸ்பானிஷ் தாயும், அவரது செல்லப்பிள்ளையும்
மட்டும் தான்.எனவே “குடும்பத் தொல்லை”கள்
எதுவும் இல்லை !

குடும்பச்சொத்துகள், புதிய வருமானங்கள் –
அனைத்தையும் நிர்வகித்து வருவது மருமகன் தான்.
இதில் பிரச்சினை ஏதும் இல்லை.
மகனுக்கும் இந்த ஏற்பாடு சம்மதம் தான்.
(அவருக்கே தெரியும் தன்னால் இது முடியாதென்று !)

மருமகன் பணத்தை பாதுகாக்க.
மகன்  பதவியை பத்திரப்படுத்திக்கொள்ள.

வட இந்தியாவில் நடப்பவை பற்றியும்,
டெல்லி அதிகார மையங்கள் பற்றியும்,
இங்கே நம்மிடையே சரியான தகவல்கள்
வருவதில்லை. பொதுவாக மக்களுக்கும்
அவற்றில் ஆர்வம் இருப்பது இல்லை.

வடக்கே பத்திரிக்கையாளர்களிடையே
இந்த விஷயங்கள் எல்லாம் சர்வ சகஜமாக
பரிமாறப்பட்டுக் கொள்ளப்படுகின்றன.

அவர்களிடையே நிலவும் ஒரு பேச்சு –
“ராகுல் அதிக பட்சம் பிரதம மந்திரி தான் ஆக
முடியும்.  ஆனால் ராபர்ட் ஏற்கெனவே
ராஜாவாகவே ஆகி விட்டாரே” !

(the son rises and son-in-law
shines – !)

தேவைப்பட்டால் “நான் என்று வேண்டுமானாலும்,
எங்கு வேண்டுமானாலும், தேர்தலில் நின்று
ஜெயிக்க முடியும்” என்று ராபர்ட் வாத்ரா
ஒரு பத்திரிகைப் பேட்டியில் சொல்லி
இருந்ததை ஏற்கெனவே எழுதி இருந்தேன்.

எனவே – ஒரு வேளை மகனால் அரசியலில்
பிரகாசிக்க முடியவில்லை என்றால் –
மருமகன் அதற்கும் தயார் தான்.

இந்தியில் ஒரு அருமையான
தேசபக்தி பாடல் உண்டு –

“சாரே ஜஹான் சே அச்சா –
இந்துஸ்தான் ஹமாரா ஹமாரா” – என்று.

தமிழில் பாரதி பாடினானே அதே தான் –

“பாருக்குள்ளே நல்ல நாடு –
எங்கள் பாரத நாடு “

எல்லாம் சரி தான்.

ஆனால் -நிஜத்தில் என்ன நடக்கிறது ?

400 ஆண்டுகளாக அடிமைகளாகவே
இருந்து பழகி விட்டோம்.
எனவே சுதந்திரம் கிடைத்து விட்டாலும்,
பழக்கத்திலிருந்து நம்மால்
விடுபட முடியவில்லை –
அடிமையின் மோகம் நமக்கு தேவைப்படுகிறது !

யாருக்காவது அடிமையாக இருக்கவே
விரும்புகிறோம்.

முதலில் –முகலாயர்கள்,
பின் – போர்த்துகீசியர்,
பின் – டச்சுக்காரர்கள்,
பின் – பிரெஞ்சுக்காரர்கள்,
பின் நீண்ட நாட்களுக்கு -ஆங்கிலேயர்கள்

பின்னர் …….

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in 00, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to குறுகிய காலத்தில் மிகப்பெரிய பணக்காரர் ஆன ஜெகதலப்பிரதாபன் ……

  1. kadirmadi சொல்கிறார்:

    முதலில் ஆரியர்..என்றல்லவா சொல்வீர் என் நினைத்தேன். ஆரியரின் பாலுள்ள அடிமைத்தனமே போகவில்லையே!

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      வருக நண்பரே,

      இந்த ஆரியர் – திராவிடர் விஷயங்களில்
      எனக்கு நம்பிக்கை இல்லை.

      வெளிநாட்டில் இருக்கும்போது –
      நான் ஒரு இந்தியன்.

      இந்தியாவில் இருக்கும்போது –
      நான் ஒரு தமிழன்.

      தமிழன் என்பதில் –
      பெருமை கொள்பவன்,
      கர்வம் கொள்பவன்.

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  2. shiva சொல்கிறார்:

    நல்ல்ல குடும்பம் , நல்ல மக்கள்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.