7ஆம் அறிவு போதி தருமனும் – இயக்குநர் A.R.முருகதாஸும் ….

7ஆம் அறிவு போதி தருமனும் –
இயக்குநர் A.R.முருகதாஸும் ….

ஏழாம் அறிவு படத்தில் வரும் போதி தருமன்
கேரக்டர் பற்றி ஆரம்பத்தில் செய்திகள்
வந்த போது, அது படத்தின் விறுவிறுப்புக்காகவும்,
சுவைக்காகவும் உருவாக்கப்பட்ட ஒரு
பாத்திரம் என்று நினைத்தேன்.

ஆனால் ஒரு தடவை இயக்குநர் முருகதாஸ்
போதி தருமன் ஒரு உண்மையான,
ஹிஸ்டாரிகல் கேரக்டர்  என்று
சொன்னபோது கொஞ்சம் சீரியசானேன்.

நான் கொஞ்சம் சரித்திரப் பித்து பிடித்தவன்.
டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பின் போது
மெனக்கெட்டு, உலக சரித்திரத்தை,
ஒரு பாடமாக விரும்பி,
தேர்ந்தெடுத்து படித்தவன்.
பொதுவாகவே சரித்திர சம்பந்தப்பட்ட விஷயங்களை,
அதிலும் தமிழர்கள்  சம்பந்தப்பட்ட சரித்திரங்களை
தேடித் தேடிப் படிப்பேன்.

எனவே இது சம்பந்தமான விஷயங்களைத் தேட
ஆரம்பித்தேன்.  அடேயப்பா – உண்மையில்
ஒரு புதையலே கிடைத்தது ! போதி தருமனைப்
பற்றி சீன வரலாற்றிலும் சரி, ஜப்பானிய
வரலாற்றிலும் சரி – ஏகப்பட்ட செய்திகள்.

பலவித கதைகள் கூறப்படுகின்றன.
அவற்றில் பொதுவான அம்சங்களை
வைத்துப் பார்த்தால் –

போதி தருமன் ஒரு தமிழன்.
கி.பி.5ஆம் நூற்றாண்டில், காஞ்சியைத்
தலநகரமாகக் கொண்டு ஆட்சி புரிந்து வந்த ஒரு
பல்லவ அரசனின் 3வது மகன்.சிறந்த வீரன்.
தற்காப்புக் கலைகளை விசேஷமாக பயின்றவன்.

(7ம் அறிவு திரைப்படத்தில் பல்லவ இளவரசன் )


அரசு, ஆட்சியை விரும்பாமல் – மனம் சொல்லும்
வழியில் செல்கிறான்.பிரஜ்னதரா என்கிற மஹாயான
பௌத்த துறவியை  தன் குருவாகத் தேர்ந்தெடுத்துக்
கொண்டு ஆன்மிகத்தில் தெளிவு பெறுகிறான்.

புத்த மதத்தை கிழக்கு நாடுகளுக்கு கொண்டு செல்ல
விரும்பி, கடல் வழியே – இன்றைய – மலேசியா,
இந்தோனேஷியா, வியட்னாம், தாய்லாந்து வழியாக
3 ஆண்டுகள் பயணத்திற்குப் பிறகு  கி.பி.527ல்
சீனா சென்றடைந்திருக்கிறான்.

சீனாவில் (போதி) தருமன் – தா மோ  என்று
அழைக்கப்பட்டிருக்கிறான். தா மோ வை
தெற்கு சீனாவை ஆண்டுகொண்டிருந்த அப்போதைய
சீன அரசன் வூ வரவேற்று உபசரித்திருக்கிறான்.
அந்த மன்னனின் தற்பெருமை, அகம்பாவம்
ஆகியவற்றை தா மோ வால் ஏற்றுக்கொள்ள
முடியவில்லை.

விளைவு -மன்னனின் கோபம், விரோதம்.
அந்த ராஜ்ஜியத்தை விட்டு வெளியேற உத்திரவு.


பின்னர் வட சீனாவிற்கு சென்ற தா மோ,
யாங்ட்சி ஆற்றின் கரையில் இருந்த ஷாவோலின்
கோயிலை அடைகிறான். கோயிலில் இருந்தவர்களின்
அழைப்பை முதலில் ஏற்காமல் அருகில் இருந்த
மலைக்குகை  ஒன்றில் தவம் இருக்க ஆரம்பிக்கிறான்.
மலைக்குகையில் ஒன்பது ஆண்டுகள்
ஒரு சுவற்றின் முன்னால் உட்கார்ந்து  
கடுமையான தவத்தை மேற்கொள்கிறான்.

தவத்தின் விளைவாக, புதிய உத்வேகத்தைப் பெற்று,
ஷாவோலின் கோயிலில்
தன்னை இணைத்துக் கொள்கிறான்.
ஷாவோலின் பள்ளியில், பிள்ளைகளுக்கு பௌத்தம்,
தியானம் மற்றும் தற்காப்புக் கலைகளைச் சொல்லிக்

கொடுத்திருக்கிறான்.

(சீனாவில்  தா மோ )


சீனாவில் புத்த மதம் பரவ, உறுதிப்பட முக்கிய
காரணமாக இருந்தவன் இங்கிருந்து சென்ற தமிழன்
போதி தருமன்.

போதி தருமன்  என்கிற தமிழனால்  
உருவகம் பெற்றது தான் ஜென் புத்த மதம்.
புத்தரின் 28வது நேரடி சீடராக தருமனை
சீனர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.
பின்னர்  ஜப்பானிலும் -வேறு வடிவங்களில்
தருமன் புகழ் பெற்றான்.ஜப்பானில், அவன்
அதிருஷ்டத்தைத் தருபவனாகக் கொண்டாடப்பட்டான்.

(ஜப்பானில் தருமனின் வடிவம்)
சீனாவிலும், ஜப்பானிலும் இன்றும் தாமோ வுக்கு
ஏகப்பட்ட கோயில்கள் இருக்கின்றன.

(ஜப்பானில் மவுண்ட் சாங்கில்
1500 வருடத்திய தருமன் கோயில்)

தருமனது முடிவு பற்றி வெவ்வேறு கதைகள்
வழங்குகின்றன.அவன் 150 வயது வரை
வாழ்ந்ததாகவும், இறந்த பிறகு  ஜியாங்
மலைச்சரிவில் புதைக்கப்பட்டதாகவும் ஒரு வரலாறு
கூறுகிறது.

ஆனால் அவனைப் புதைத்து 3 ஆண்டுகள் கழித்து,
பாமியன் மலையருகே,கையில் ஒற்றைச் செருப்புடன்
சென்று கொண்டிருந்த தருமாவைக் கண்டதாக,
வெய் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர்
கூறி இருக்கிறார். எங்கே போகிறீர்கள்
என்று அவர் கேட்டதற்கு, தர்மா “என் வீட்டிற்கு
செல்கிறேன்” என்று சொன்னாராம்.

சந்தேகப்பட்ட மற்றவர்கள் தருமனின் கல்லறையை
திறந்து பார்த்தபோது, அங்கே ஒற்றைச் செருப்பு
மட்டுமே இருந்ததாகவும், தர்மாவின் உடலைக்
காணவில்லை என்றும் ஒரு வரலாறு கூறுகிறது.

போதி தருமன் பற்றிய வரலாற்றுக்கு சீனாவிலும்,
ஜப்பானிலும்  பல வடிவங்கள் இருந்தாலும்,
அடிப்படையில் அவன்
தமிழ் நாட்டில் காஞ்சியிலிருந்து சென்றவன் என்பதும்,
சீனாவில் ஜென் புத்த மதமும், தற்காப்புக் கலையை
சொல்லிக் கொடுக்கும் ஷாவோலின் பள்ளியும்
உருவாக அவன் முக்கிய காரணமாக இருந்தான்
என்பதும் வரலாற்றில் ஒரே மாதிரி தான்
கூறப்பட்டுள்ளன.

உண்மையில்  மிகவும் பெருமையாக இருக்கிறது.
அதே சமயம் வருத்தமாகவும் இருக்கிறது.
சீன வரலாற்றில், ஜப்பானிய வரலாற்றில் இடம்
பெற்றிருக்கும் ஒரு தமிழனைப் பற்றிய வரலாறு –
தமிழ் நாட்டின் வரலாற்றில் காணப்படவில்லையே.

பல்லவ அரசர்கள் காலத்தில் கம்போடியா வரை
சர்வ சகஜமாக சென்றதையும் அங்கு அவர்கள்
நிர்மாணித்த “அங்கோர்வாட்” கோயில்கள் இன்றும்
சாட்சியாக நிற்பதையும் காண நேர்கையில்
மகிழ்ச்சியாக இருந்தாலும் -தமிழக வரலாற்றில்,
ஒரே தொகுப்பில் இத்தனை நிகழ்வுகளும்
கொண்டு வரப்பட வேண்டாமா ?

எப்படி இருந்தாலும் சரி –

பெருமைக்குரிய இந்த வரலாற்றுச் செய்தியை
வெளியே கொண்டு வந்த
இயக்குநர் A.R.முருகதாஸ்  பாராட்டுக்கு உரியவர்.

வாழ்த்துக்கள் முருகதாஸ் !

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

26 Responses to 7ஆம் அறிவு போதி தருமனும் – இயக்குநர் A.R.முருகதாஸும் ….

  1. விக்னேஷ் சொல்கிறார்:

    proud to be a tamilan anna .. continue your work..

  2. Siva சொல்கிறார்:

    பெண்களின் சதையை மட்டும் காட்டி பணம் சம்பாதிக்கும் சினிமா மனிதர்கள் மத்தியில் சற்று முற்போக்காக சிந்திக்கும் இந்த மாதிரி வெகுசில மனிதர்களால் மட்டும் தான் சினிமாவிற்கு இன்னும் உயிர் இருக்கிறது

  3. ARUL சொல்கிறார்:

    தியாகத்தின் வேரைத்தேடி: தென் ஆப்பிரிக்காவிலிருந்து மயிலாடுதுறைக்கு ஒரு பயணம்

    http://arulgreen.blogspot.com/2011/10/blog-post_19.html

  4. ARUL சொல்கிறார்:

    மறக்கப்பட்ட மாபெரும் தியாகம்: சாமி நாகப்பன்

    http://arulgreen.blogspot.com/2011/10/blog-post_810.html

  5. ARUL சொல்கிறார்:

    மிக நல்ல ஆய்வு.

    தமிழர்களில் மறைக்கப்பட்ட வரலாறு மிக அதிகம். எடுத்துக்காட்டாக, தாய்லாந்து நாட்டில் இராமாயணம் மிகமுக்கிய இலக்கியமாகவும், பண்பாடாகவும் இருக்கிறது. அது உண்மையில் தமிழனின் கம்பராமாயணம் தான்.

    நானும் சில குறிப்புகளை இணைத்துள்ளேன், காணவும்:
    http://arulgreen.blogspot.com/2011/10/blog-post_810.html

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      வருக நண்பர் அருள்,

      உங்கள் படைப்புக்களைப் பார்த்தேன்.
      நல்ல முயற்சி.
      இதே திசையில் உங்கள் பணியைத்
      தொடருங்கள்.

      -வாழ்த்துக்களுடன்
      காவிரிமைந்தன்

  6. R.Kumaraswamy/Banumathy சொல்கிறார்:

    Your informations regarding Bodi Dharma are splendid indeed.

    regards
    R.Kumaraswamy

  7. Ganpat சொல்கிறார்:

    அன்பின் கா.மை ,

    நான் போட்ட பின்னூட்டம் எங்கே காணோம் ?

    நன்றி,

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      வருக நண்பர் கண்பத்,

      எங்கே உங்களிடம் இருந்து மறுமொழி
      எதையும் காணவில்லையே என்று
      நானே பார்த்துக்கொண்டிருந்தேன்.

      கடைசியாக உங்களிடமிருந்து
      வந்தது 19/10 அன்று.
      (யார் பாதுகாப்பில்….. )
      அதன் பிறகு ஒன்றும் கிடைக்கவில்லையே –
      இ-மெயிலில் -தவறக்கூடிய
      சாத்தியமும் இல்லையே.

      தயவு செய்து மற்றொரு முறை
      அனுப்புங்களேன்.

      -வாழ்த்துக்களுடன்
      காவிரிமைந்தன்

  8. ramanans சொல்கிறார்:

    சார்

    கொஞ்சம் அவசரப்படாதீங்க. படம் வந்தப்புறம் பாராட்டுங்க. இப்படம் பற்றி எனக்கு ஒரு ’சந்தேகம்’ இருக்கிறது. படம் வரட்டும். பார்ப்போம். ’தசாவதாரம்’ மாதிரி இல்லாமல் இருந்தால் சரி.

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      வருக நண்பர் ரமணன்,

      படத்தில் இந்த சப்ஜெக்ட் கமர்ஷியலாகத்தான்
      சேர்க்கப்பட்டிருக்கும் என்பதில்
      சந்தேகம் இல்லை.
      கமர்ஷியல் இல்லாமல் எடுத்தால் படம் வசூலில்
      கப்பலோட்டிய தமிழன் மாதிரி ஆகி விடுமே !

      எதனாலோ – தமிழ் நாட்டின் புகழ் பெற்ற
      சரித்திரக் கதாசிரியர்கள் கவனத்திற்கு கூட
      இந்த விஷயம் வரவில்லை. சாண்டில்யன்
      கண்ணில் பட்டிருந்தால் – பிய்த்து உதறி
      இருப்பாரே. ஒரு கமர்ஷியல் உருவாக்கத்திற்கு
      வேண்டிய சகல விஷயங்களும் “போதி தர்மன்”
      வரலாற்றில் இருக்கிறது.

      நான் பாராட்டியது – யாரும் கவனிக்கத்
      தவறிய ஒரு விஷயத்தை, திரைத்துறையைச்
      சேர்ந்த இயக்குநர் ஒருவர் கவனித்து
      வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தி இருக்கிறாரே
      என்கிற கோணத்தில் தான். சரி தானே !

      “தசாவதாரம்” – என்ன கொடுமை சார் இது !
      கஷ்டப்பட்டு ஒரு விஷயத்தை மறந்திருந்தால் –
      மெனக்கெட்டு நினைவுபடுத்தி
      -மீண்டும் கஷ்டப்படுத்துகிறீர்களே !

      உங்கள் “சந்தேகம்” இந்த விஷயத்தில்
      உண்மை ஆகாமல்
      இருக்க வேண்டுகிறேன் !

      – வாழ்த்துக்களுடன்
      காவிரிமைந்தன்

  9. Ganpat சொல்கிறார்:

    இதோ மீண்டும் அந்த பின்னூட்டம்:
    அன்பின் கா மை,
    மிக அருமையான பதிவு;தகவல்கள்.!
    இவ்வளவும் முருகதாஸிற்கே தெரிந்திருக்குமா
    என்பது என் ஐயம்!
    நான் அவராக இருந்தால் உங்களை இந்த திரைப்படத்தின்
    PR incharge ஆக நியமத்திருப்பேன்!
    வாழ்த்துக்கள்!

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நன்றி கண்பத் –

      இது உங்கள் பெருந்தன்மை !

      -வாழ்த்துக்களுடன்
      காவிரிமைந்தன்

  10. rajasekhar.p சொல்கிறார்:

    dear kavirimainthan….
    and all friends……….
    மேலும் அறிய தகவல்களுக்கு……..
    http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D

  11. Amudhavan சொல்கிறார்:

    சிறப்பான தகவல்களைத் திரட்டித் தந்திருக்கிறீர்கள். ஆகப்பெரும் சரித்திர ஆசிரியர்கள்கூட முக்கியத்துவம் தராமல் விடுபட்டுப்போன மிகப்பெரிய ஒரு ஆளுமையைத் தமிழனுக்கு மறுபடியும் அறிமுகம் செய்யும் ஏ.ஆர்.முருகதாஸ் பாராட்டுகளுக்கும் புகழுக்கும் உரியவர். போதி தருமர் வேடத்தைச் செய்வதற்கு சூர்யா எடுத்துக்கொண்ட சிரமங்களை நான் அறிவேன். படம் ஒரு சரியான இலக்கினைத் தொட்டுவிட்டால் தமிழர்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் முருகதாஸும் சூர்யாவும பெரும் தொண்டாற்றியவர்களாகக் கொண்டாடப்படுவார்கள் என்பது உறுதி.

  12. ம .சௌந்தர பாண்டியன் சொல்கிறார்:

    வாழ்த்துக்கள் திரு முருகதாஸ் ,
    தமிழனாக பிறந்ததற்கு பெருமை படுகிறேன்

  13. Maruthamooran சொல்கிறார்:

    போதிதர்மனாக நடித்தது சூர்யாவிற்கு ஒரு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தக்கூடும். சூர்யாவின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கவும் கூடும். ஆனால் போதிதர்மனின் உருவத் தோற்ற அமைப்புடன் சூர்யா ஒத்துப்போகவில்லை. அந்தப் பாத்திரத்திற்கு சரத்குமார் நடித்திருப்பாரானால் மிகவும் பொருத்தமாக இருந்திருக்கும். போதிதர்மனை கண்முன்னே நிறுத்தியிருக்கும்.

  14. Maruthamooran சொல்கிறார்:

    ஆங்கிலப் பட இயக்குனர்கள் பொதுவாக கதாபாத்திரத்திற்கு பொருத்தமான நடிகர்களையே தேடுவர். பாத்திரங்களும் கதையை கண்முன்னே நிறுத்தும் வகையில் இருக்கும். தமிழ் சினிமா இன்னும் அந்தளவிற்கு வளராதது ஒரு குறைதான். முருகதாஸும் இந்த குறைகளை கலையும் ஒரு இயக்குநராக வளரவேண்டிய தேவையுள்ளது.

  15. M.Mahesh Kumar சொல்கிறார்:

    Present tamil historys are lies.

  16. சண்முகம் சொல்கிறார்:

    எப்பா நீங்களாவது முருகதாஸ பாரட்டுனிங்க…………

  17. தென்காசி சுப்பிரமணியன் சொல்கிறார்:

    போதிதருமரை தமிழர் மறந்து விட்டதாக கூறும் அனைவருக்கும் ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன். அப்போது தமிழகத்தில் களப்பிரரின் இருண்டகால ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது ஆண்ட மூவேந்தர் குறிப்புகளே நமக்கு கிடைக்கவில்லை. இதில் பிற்காலத்தில் வந்த பல்லவர் குறிப்பு மட்டும் எப்படி இருக்கும்.

  18. ravi சொல்கிறார்:

    Thanks f yourinsight i think it is better tolink CUNY Tamilprof talk

    http://www.aaari.info/08-10-24Aranha.htm

  19. Beardbala சொல்கிறார்:

    kurai sollamudiyaathu

  20. Geetha சொல்கிறார்:

    Geetha from Kuala Lumpur, Malaysia
    வாழ்க தமிழ் வளர்க நம் தமிழ் சரித்திரம். உங்கள் அடுத்த படத்தை எதிர்பார்கிறேன். நன்றி

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.