ஒரு அருமையான அரசியல் “ஜோக்”

 ஒரு அருமையான  அரசியல் “ஜோக்”

“அகட விகட அக்கப்போர்” என்கிற பெயரில்
தமாஷான -மாதம் இருமுறை அரசியல் இதழ்
ஒன்று சென்னையிலிருந்து வெளிவருகிறது.

அதில் படித்த ஒரு அருமையான “ஜோக்” கீழே –

————

ஒருமுறை திருவாளர்கள் கபில் சிபல்,
திக்விஜய் சிங், ப.சிதம்பரம் ஆகிய 3 பேரும்
ஒரு ஹெலிகாப்டர் விமானத்தில் பயணம்
செய்து கொண்டிருக்கிறார்கள்.

கபில் சிபல் ஒரு 100 ரூபாய் நோட்டை
விமானத்திற்கு வெளியே தூக்கிப் போட்டு விட்டு,
குஷியாக “இப்போது நான் ஒரு இந்தியக் குடிமகனை
மகிழ்ச்சியில் ஆழ்த்தி விட்டேன்” என்றாராம்.
(அந்த 100 ரூபாய் நோட்டை பெறப்போகிறவரை
நினைத்து )

விடுவாரா திக் விஜய் சிங் ?
தன் பங்குக்கு இரண்டு 50 ரூபாய் நோட்டுக்களை
தூக்கிப் போட்டு விட்டு  – “நான் இரண்டு
பேருக்கு மகிழ்ச்சி அளிக்கிறேன்” என்றாராம்.

அடுத்த வாய்ப்பு  சிவகங்கைச் செல்வருடையது.
மகா புத்திசாலி ஆயிற்றே – விடுவாரா ?
100  – ஒரு ரூபாய் காசுகளை வெளியே கொட்டி,
“நான் இப்போது 100 இந்தியர்களை
சந்தோஷப்படுத்தி விட்டேன்” என்றாராம்.

இதைக் கேட்டுக்கொண்டிருந்த விமானி
சொன்னாராம் –

“நான் –120 கோடி இந்தியர்களுக்கும் நிரந்தர
சந்தோஷம் கொடுப்பதற்காக உங்கள் 3 பேரையும்
வெளியே தள்ளப் போகிறேன்.
ஜெய் ஹிந்த் – வந்தே மாதரம்” !!!

விமானி இடத்தில் உட்கார்ந்திருந்தவர் –
யாராக இருக்க முடியும் என்கிறீர்கள் ? !

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to ஒரு அருமையான அரசியல் “ஜோக்”

  1. சண்முகம் சொல்கிறார்:

    சத்தியமாக அந்த விமானி நான்தான்

  2. ரிஷி சொல்கிறார்:

    இல்லை இல்லை… அது நான்தான். சண்முகம் சொல்வதை நம்பாதீர்கள்.

  3. pidithavan சொல்கிறார்:

    நானும் இதைப் படித்தேன்.
    ஆங்கிலத்தில் இருந்தது.
    நீங்கள் தமிழில் அழகாக மெருகேற்றி
    கொடுத்திருக்கிறீர்கள். NICE .

  4. vinoth சொல்கிறார்:

    நீங்க இன்னமா அன்னா ஹஷாரேய நம்புறீங்க…?

  5. Ganpat சொல்கிறார்:

    >>இதைக் கேட்டுக்கொண்டிருந்த விமானி
    சொன்னாராம் –

    “நான் -120 கோடி இந்தியர்களுக்கும் நிரந்தர
    சந்தோஷம் கொடுப்பதற்காக உங்கள் 3 பேரையும்
    வெளியே தள்ளப் போகிறேன்.
    ஜெய் ஹிந்த் – வந்தே மாதரம்” !!!<<

    இனி என் கதை…
    இதை கேட்ட திருவாளர்கள் கபில் சிபல்,
    திக்விஜய் சிங், ஆகிய 2 பேரும் நடுநடுங்கிப்போக,
    ப.சிதம்பரம் அவர்களை சமாதானப்படுத்தி சொன்னாராம்:
    "யாரும் அச்சப்பட தேவையில்லை.இந்த விமானி எதுவும் செய்ய மாட்டார்; செய்யவும் முடியாது.அதற்கு ஏற்றால்போல தான் இந்த விமான நிறுவனத்தின் தலைவி இவரை நியமித்துள்ளார்."
    விமானி இடத்தில் உட்கார்ந்திருந்தவர் –
    வேறு யாராக இருக்க முடியும் ? !
    நம்ம சூப்பர் 'சிங்'கர் தான்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.