தபால் தலைகளில் பிறந்த தமிழ் ஈழம் – வாழ்த்துக்கள் .. !!

தபால் தலைகளில்
பிறந்த தமிழ் ஈழம் –
வாழ்த்துக்கள் .. !!

இலங்கை அரசை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி
இருக்கிறது வெளிநாடுகளில் வசிக்கும்
ஈழத்தமிழர்கள் செய்த புத்திசாலித்தனமான
ஒரு செயல்.

தமிழ் ஈழத்தை சிறப்பித்து பிரான்ஸ்,
ஸ்விட்சர்லாந்து, கனடா, அமெரிக்கா
ஆகிய நாடுகளில் இருந்து – கிட்டத்தட்ட
ஒரே நேரத்தில் –தபால் தலைகளை
வெளியிட மிக புத்திசாலித்தனமாக
செயல்பட்டிருக்கும் புலம் பெயர்ந்த
ஈழத்தமிழ் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் –

தபால் தலைகளில்   சில –

பிரான்ஸ் நாட்டிலிருந்து

சுவிட்சர்லாந்து  நாட்டிலிருந்து

பிரான்ஸ் நாட்டிலிருந்து

சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்து

கனடா  நாட்டிலிருந்து

அமெரிக்கா விலிருந்து

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

10 Responses to தபால் தலைகளில் பிறந்த தமிழ் ஈழம் – வாழ்த்துக்கள் .. !!

  1. எழில் சொல்கிறார்:

    மனமார்ந்த வாழ்த்துக்கள்! ஈழம் நம் வாழ்நாளில் மெய் பட வேண்டும்!

  2. BC சொல்கிறார்:

    பிரான்ஸ் சுவிட்சர்லாந்தில் கருணாநிதி ஜெயலலிதாவுக்கும் விரும்பினால் முத்திரை அடிக்கலாம் என்பதே உண்மை நிலை. இப்படியான சின்ன விடயங்களுக்கு சந்தோசபடும் நிலை ஆச்சரியமாக இருக்கிறது. இனியும் உயிர்களைப் பலி கொடுக்க இலங்கையில் வாழும் தமிழர்கள் தயாராக இல்லை.

  3. ராஜநடராஜன் சொல்கிறார்:

    BC!மேலை நாடுகளில் இப்படி தனிமனித உரிமையாக முத்திரை அடிக்கலாமென்பதே இந்த முத்திரைகள் கண்டுதானே அனைவருக்கும் தெரிகிறது.இவை சின்ன விடய சந்தோசங்களாக இருக்கலாம்.ஆனால் ஒரு அநீதி அரசை ஆட்டிப்பார்க்கும் வல்லமை கொண்டதென்பதை இலங்கை அரசின் முத்திரை மறுப்பு நீருபணம் செய்கிறது.

  4. BC சொல்கிறார்:

    ராஜநடராஜன்! உதாரணமாக நான் தமிழ்நாடடிற்க்கு வந்து நடிகர் விஜய்யுடன் ஒரு படம் எடுத்து அந்த படத்தை முத்திரையாக வடிவமைத்து பணம் செலுத்தி பெற்று கொள்ளலாம் அந்த முத்திரையில் உங்களுக்கு கடிதமும் போடலாம். இலங்கை அரசின் முத்திரை மறுப்பு என்பது பதில் நாடகம்.

  5. surendran சொல்கிறார்:

    eezhaththamizhrgalukku vaazhththukkal thabaal thalai veliittamaikkaga
    nandri sondhangale

  6. யாழ் சொல்கிறார்:

    இலங்கையில் இப்போது மட்டும் என்ன தமிழர்கள் சாகாமல் சந்தோசமாகவா வாழ்கிறார்கள். உணர்ச்சியற்ற அசிங்கத் தமிழராலே உண்ணத உயிர்களை இழந்தோம். இனியும் காட்டிக் கொடுப்பதும் இனத்திற்கு துரோகம் நினைப்பதையும் மறந்து விடுங்கள். முத்திரைகளின் பலம் கொலைவெறியரின் தவிப்பில் தெரிகின்றது.

  7. எழில் சொல்கிறார்:

    விடுதலை புலிகள் ‘அழிக்கப்பட்டதாக’ இலங்கை அரசு அறிவித்து 3 ஆண்டுகள் ஆகியும், இன்னும் தமிழர்களுக்கு தீர்வு இல்லை. அகதிகள் சொந்த இடத்துக்கு முற்றாக திரும்பவில்லை. நமது அரசு கட்டி கொடுக்க இருந்த 50 ஆயிரம் வீடுகள் என்ன ஆனது என்று தெரியவில்லை. ஆகவே தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு ஈழம் மட்டுமே. இந்த தபால் தலைகள் அதை நோக்கி நகரும் நம்பிக்கை துளிகள். …..நல்லதாகவே நடக்கிறது.

  8. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    வருக நண்பர்களே,

    நம்பிக்கை கொடுக்கின்ற நிகழ்வுகள்
    நிறையவே நடக்கின்றன.

    வெளியே நம் பார்வைக்கு தெரிபவை
    இந்த தபால் தலைகள் போன்றவை மட்டுமே.

    அங்கீகாரம் கிடைக்கத் துவங்கி விட்டது.
    முதலில் சூடான். இப்போது
    தென் ஆப்பிரிக்கா. இந்த வரிசை
    நிச்ச்யம் தொடரும்.

    இன்றில்லா விட்டாலும் – நாளை
    நிச்சயம் நிலைமை மாறும்.

    இந்தியாவிலும், மத்தியில் ஆட்சி
    மாறினால் – கொள்கை நிலை மாறக்கூடும்.
    நம்பிக்கையுடன் இருப்போம்.

    -வாழ்த்துக்களுடன்
    காவிரிமைந்தன்

  9. BC சொல்கிறார்:

    ராஜநடராஜன்!
    சவுதியில் ஓடும் பாலாறும் தேனாறும் பதிவில் உங்கள் பின்னோட்ட விளக்கம் அருமையானது.

  10. Ponraj Mathialagan சொல்கிறார்:

    இலங்கை தமிழனுக்கு ஒட்டு மொத்த விடிவு ஈழம். இந்திய தமிழனுக்கு ஒட்டு மொத்த விடிவு தனி தமிழ்நாடு. ஒட்டு மொத்த தமிழனுக்கு ஒரே விடிவு ‘ஈழமும்,தமிழ் நாடும் சேர்ந்த சாதி சமயமற்ற சோஷலிச தமிழ் நாடு’ மட்டுமே… என்னால் முடியாவிட்டாலும் என் பேரனாவது ‘யாழில்’ படிக்க வேண்டும். கிளி நொச்சியில் விளையாட வேண்டும். வன்னியில் பெண் எடுக்க வேண்டும். உறங்கும் தெய்வங்களின் இருப்பிடத்தில் கசப்பு மருந்துடன் ஈழ வரலாற்றின் கருப்பு பக்கங்களை நினைவு கூற வேண்டும். தேசிய தலைவரின் கை சொடுக்கில்,சாதனை பல சேர்த்திட வேண்டும்…!!! வேண்டும்… வேண்டும்… தனி தமிழ் தேசியம் வேண்டும்….!!!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.