துக்ளக் விழாவில் “சோ” பேச்சு – நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் ….

துக்ளக் விழாவில் “சோ” பேச்சு –
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் ….


துக்ளக் வார இதழின் ஆண்டு விழா நிகழ்வில்
ஆசிரியர் “சோ” பேசும்போது கூறிய சில
கருத்துக்களைப் பற்றிய இடுகை இது.
அவரது பேச்சு முழுமையாக எந்த நாளிதழ்/
தொலைக்காட்சியிலும் வரவில்லை. அவரவர்
சௌகரியத்திற்கு அவரவருக்குத் தேவையான
பகுதியை மட்டும் போட்டுக் கொண்டார்கள்.

வழக்கமாக அவர் பேசக்கூடிய விஷயங்களான –
திமுக,கலைஞர்,
காங்கிரஸ், சோனியா காந்தி, மன்மோகன் சிங்
ஆகியவை தவிர்த்து –
மற்றபடி அவர் கூறிய முக்கியமான கருத்துக்களின்
தொகுப்பும், அது பற்றி எனக்குத் தோன்றும்
சில எண்ணங்களும் இங்கே –

பழுத்த அறிவாளி, பரந்த அனுபவம்,
நல்ல சிந்தனைத்திறன் – இத்தனையும் இருந்தாலும்
சோ விடம் ஒரு கெட்ட பழக்கம் இருக்கிறது.

தனக்குப் பிடிக்காதவர்களை –
மகா கேவலமாக, இழிவாக, மட்டம் தட்டிப் பேசும்
இந்த வழக்கத்தை அவரால் மாற்றிக் கொள்ள
முடியவில்லை. முடியவில்லை என்பதை விட
மாறுவதற்கு அவரது பிடிவாத  உணர்வு
இடம் கொடுக்கவில்லை என்பது தான்
சரியாக இருக்கும்.

இந்த முறை தேவை இல்லாமல் அவரது
தாக்குதலுக்கு உள்ளானவர்கள் –
பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரும்,
அன்னா ஹஜாரேயும்.

நரேந்திர மோடியின் போட்டியாளர் என்கிற ஒரே
காரணத்தால், நிதிஷ்குமார் திறமை அற்றவர் என்றும்
பீகாரில் அரசு நிர்வாகம் சீர்கெட்டு கிடக்கிறது
என்றும் தேவையே இல்லாமல் நிதிஷ்குமாரை
விமரிசித்து தாக்கினார்.

அதே போல், அன்னா ஹஜாரே யையும்,
கோமாளி என்றும், விளம்பர மோகம் பிடித்தவர்
என்றும் – அவருடன் இயக்கத்தில் உள்ளவர்கள்
அனைவரும் போலி ஆசாமிகள், வெத்துவேட்டுக்கள்
என்றும் மோசமாக கேலி செய்தார்.
“விநாயகா பீடி”க்கும் விநாயகருக்கும் என்ன
சம்பந்தமோ அந்த அளவிற்கு தான்
மகாத்மா காந்திக்கும் – அன்னா ஹஜாரேக்கும்
உள்ள சம்பந்தமும் என்றார்.

இந்த இரண்டு பேரைப் பற்றியும் அவர் தாக்குதல்
தேவையே இல்லாதது. அதுவும் அன்னா ஹஜாரேயை
ஆரம்பத்தில் இருந்தே சோ விற்கு பிடிக்கவில்லை.
எதிர்பார்க்கும் அளவிற்கு அன்னா ஹஜாரே
செயல்படாமல் இருக்கலாம். ஆனால் – 74 வயதில்
ஒருவர்  தேசிய அரசியலில் பிரவேசித்து
பெரிய சாதனைகளை நிகழ்த்தி விட முடியாது  
என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

பெரிய அளவில்  பொது மக்களை ஒன்று திரட்டி
ஊழலுக்கு எதிரான உணர்வுகளை வெளிப்படுத்த
அவரால் முடிந்தது. அதுவே மிகப்பெரிய விஷயம்.
அவரது இயக்கத்தில் வன்முறை
என்பது சிறிதும் இல்லாமல் இருந்தது என்பதையும்,
முக்கியமாக எதிர்மறை விளைவுகள் ஏதும் இல்லை
என்பதையும் சோ ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்.

அதே பிடிவாதத்துடன், சில்லரை வணிகத்தில்
அந்நிய முதலீட்டை முழுமூச்சுடன் எதிர்க்கும் சுதேசி
பொருளாதார நிபுணர் குருமூர்த்தியை எதிரே
வைத்துக்கொண்டே – அந்நிய முதலீடு (FDI) மிகவும்
அவசியம் என்று ராகுல் காந்தி வழியில் பேசினார்.

அவரது தாக்குதலுக்கு உள்ளான இன்னொன்று
“இந்து”ஆங்கில  தின இதழ்.
இது அவசியமான, ஆனால் மிகவும்
தாமதப்பட்ட தாக்குதல் … !
இந்து இதழ் நடுநிலை நாளிதழ் என்கிற பெருமையை
இழந்து நீண்ட நாட்களாகிறது.
ஈழத்தமிழருக்கு எதிராக, ராஜபக்சேயுடன்
சொந்த முறையில் நட்பு கொண்டு ஆசிரியர் ராம்
பல செய்திகளை வேண்டுமென்றே திரித்து
வெளியிடச் செய்தார்.
அதேபோல் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில்,
துவக்க காலத்தில், ராஜா சொல்வது தான் சரி என்கிற
பாணியில் பல செய்திகள் இந்துவில் வெளிவந்தன.
அதே போல் தயாநிதி விவகாரத்திலும் கூட.
ஏன் இப்போது முல்லைப் பெரியாறு அணை
விவகாரத்தில் கூட, இந்து நாளிதழ் கேரளாவிற்கு
சாதகமான முறையில் தான் செய்திகளையும்,
கட்டுரைகளையும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறது.

இவ்வளவு நாட்களாக சோவும் ராமுடன் நட்பு
பாராட்டிக் கொண்டு தான் இருந்தார்.
இப்போது தாக்கக் காரணம் – நக்கீரன் வார இதழில்,
முதலமைச்சர் ஜெயலலிதாவைப் பற்றி
அவதூறான முறையில் வெளியான கட்டுரையின்
உள்ளடக்கங்களை இந்து  நாளிதழ் முதல் பக்கத்தில்
மறுபிரசுரம் செய்து, அவதூறில் பங்கு கொண்டது
தான்.
எப்படியோ – இப்போதாவது சோ அவர்கள்
இந்து நாளிதழை புரிந்து கொண்ட வரை நல்லதே !

இன்னொரு காரியத்தையும் மிக புத்திசாலித்தனமாக
செய்தார் சோ.
அத்வானியுடன் தான் நெருக்கமாக இருந்தாலும்,
அடுத்த பிரதமர் பதவிக்கு நரேந்திர மோடியையே
தாம் ஆதரிப்பதாக அத்வானியிடம் புத்திசாலித்தனமாக
துக்ளக் மேடையின் மூலம் தெரிவித்தார் சோ.

மேடையிலேயே, தன் உரையில் – அத்வானி மிக
மூத்த தலைவர். வாஜ்பாயை பிரதமர் பதவிக்கு
முன் நிறுத்தியவரே அத்வானி தான். எனவே,
அதே போல் – இப்போது அடுத்த பிரதமர் பதவிக்கு
நரேந்திர மோடியை – அத்வானியே முன்மொழிய
வேண்டும் என்றார்.

நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தால்,
அதுவே, வாக்காளர்களுக்கு மிகப் பெரிய உத்வேகத்தை
அளிக்கும் என்றும் கூறினார்.

ஆனால் – நடைமுறையில் எவ்வளவு தூரம்
இது  சாத்தியம் ?

தேர்தலுக்கு முன்னரே மோடியை பிரதமர் வேட்பாளராக
அறிவித்தால், அதன் கூட்டணி கட்சிகளே எதிர்க்குமே !
முதல் எதிர்ப்பு, ஜனதா தளத்திலிருந்தே கிளம்பும்.
சிவ சேனாவும் இதை விரும்பாது. பிஜேபி கூட்டணியில்
சேருவதற்கு வாய்ப்பு உள்ள மம்தா பானர்ஜியும் இதை
ஏற்க வாய்ப்பில்லை. பிஜேபி கட்சிக்கு உள்ளாகவே  
ஏகப்பட்ட குழப்பங்கள்  வரும். எனவே, தேர்தலுக்கு
முன்னர் மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க
நடைமுறை சாத்தியமே இல்லை.

அதற்கான – ப்ளான் -2 ஐயும் சோ வே கொடுத்து
விட்டார்.

மதசார்பு போன்ற காரணங்களால், பாஜக மத்தியில்
ஆட்சி அமைக்க முடியாமல், பாஜக ஆதரவு
ஆட்சிதான் மத்தியில் அமையும் என்றால்,
முதல்வர் ஜெயலலிதாவை பிரதமராக்க பாஜக
ஆதரவு தெரிவிக்க வேண்டும். ஜெயலலிதா
மிக புத்திசாலி. எளிதில் எதையும் புரிந்து கொள்பவர்.
பல மொழிகள் தெரிந்தவர்.  தேசப் பற்றும்,
அர்ப்பணிப்பும்  உள்ளவர் – என்று அடுத்த
ஆலோசனையையும் மேடையிலேயே சொல்லி விட்டார்.

சோ அவர்களின் பேச்சிலிருந்து  ஒரு விஷயம்
தெளிவாகிறது. பிஜேபி யும், அதிமுக வும்
நிச்சயம் கூட்டணி வைக்கப் போகின்றன.
சிறுபான்மையினரின் ஓட்டுக்களை இழக்க ஜெயலலிதா
விரும்ப மாட்டார் என்பதால் தேர்தலுக்கு முந்திய
கூட்டணிக்கான சாத்தியம் குறைவே.
ஆனால் –தேர்தலுக்குப் பிறகு பிஜேபி, அதிமுக
கூட்டணி நிச்சயம் என்பது விளங்குகிறது.

யார் பிரதமர் வேட்பாளர் என்று தேர்தலுக்கு
முன்னதாக அறிவிக்காமல் இருப்பது தான் வெற்றிக்கு
உதவும்  என்பதால் பிரதமர் பதவியைப் பற்றி பிஜேபி
இப்போதைக்கு பேசப்போவதில்லை.  சோ இதை
அறியாதவர் இல்லை. எனவே இப்போதைக்கு
பிரதமர் பற்றிய பேச்சு –

சும்மா பர பரப்பிற்காகத் தான்
என்றே கொள்ள வேண்டும்.

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

25 Responses to துக்ளக் விழாவில் “சோ” பேச்சு – நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் ….

  1. smtvkendra சொல்கிறார்:

    VIMARSAKARIN VIMARSANAM ETRU KOLLA THAKKA THAAKA

    ILLAI.

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      வருக நண்பரே –

      ஏற்றுக் கொள்வதும்,கொள்ளாததும்
      உங்கள் விருப்பம்.

      ஆனால் – என்ன காரணங்களுக்காக என்று
      சொல்லி விட்டால் எனக்கு புரிந்து கொள்ள
      உதவியாக இருக்கும்.

      -வாழ்த்துக்களுடன்
      காவிரிமைந்தன்

  2. Ganpat சொல்கிறார்:

    அன்பின் கா.மை:

    உங்கள் கருத்துக்களுடன் முழுமையாக உடன்படுகிறேன்.

    1.சோ ஓர் நேர்மையான,அறிவாளி ஆனால் ஒரு பத்தாம் பசலி;பிடிவாதக்காரர்;தன்னைத்தவிர மற்றவர்கள் முட்டாள்கள் என நினைப்பவர்.

    2.பிரச்சினையை அக்கு வேறு ஆணிவேராக பிரித்து விளக்கத்தெரியும் இவருக்கு அதை தீர்ப்பது எப்படி என தெரியாது.

    3.நடை முறையில் சோ ராமசாமி சாத்திததை விட traffic ராமசாமி சாத்திதது அதிகம்.அன்னா சாதித்தோ மிக மிக அதிகம்.

    4.இவருக்கு(சோ) ஜெயாவை பிடிக்கும் என்பது எனக்கு ரவை உப்புமா பிடிக்கும் என்பது போன்ற ஒரு பிரத்யேக கருத்து(Personal opinion).காரணம் எதுவும் கிடையாது.

    5.ஒரு மாநில முதலமைச்சர் பதவிக்குகூட முதிர்ச்சி அடையாத ஒருவரை நாட்டின் பிரதமராக ஆக தகுதியுள்ளவர் எனக்கூறுவது மிகவும் கேலிக்குரியது.
    இவர் செய்த அலங்கோலதிறகெல்லாம் இவரது தோழியே காரணம் என சொல்வது அயோக்கியத்தனமானது.
    இனி எந்தத்தவறும் நிகழா என உறுதி அழிப்பது அசட்டுத்தனமானது.
    கறந்த பால் கூட மடி புகலாம்;ஆனால் கருணாவும் ஜெயாவும் திருத்துவது நடக்கவே நடக்காது.

    6.மொத்தம் அறுபது மாத ஆட்சியில்,எட்டு மாதங்கள் ஓடி விட்டன.ஜெயா அரசு இதுவரை உருப்படியாக எதுவும் செய்யவில்லை.முடிந்துவிட்ட 120 மாத ஆட்சியோ(1991-96,2001-06),ஒரு சாபம்’.
    இதை மோடியின் ஆட்சியுடன் எப்படி ஒப்பிட முடியும்?

    இவ்வளவு இருப்பினும் எனக்கு ஒரே ஒரு ஆறுதல்:
    பொதுவாக சோ விரும்பியது எதுவும் நிறைவேறாது..
    அவர் இப்பொழுது ஜெயா பிரதமராக வேண்டும் என விரும்புகிறார்.

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்பர் கண்பத்,

      மறந்து விட்டீர்களே –

      சோ இரண்டு விஷயங்களுக்கு
      ஆசைப்படுகிறார்.

      முதல் ஆசை – முடிந்தால் மோடி பிரதமர்
      இரண்டாவது ஆசை – முடியாவிட்டால் ஜெ பிரதமர்

      சோ ஆசைப்படுவது எதுவும் நடக்காதென்றால் … ?
      ————–
      சோ ராமசாமி – டிராபிக் ராமசாமி
      பஞ்ச் பிரமாதம் !

      -வாழ்த்துக்களுடன்
      காவிரிமைந்தன்

  3. சைதை அஜீஸ் சொல்கிறார்:

    //பொதுவாக சோ விரும்பியது எதுவும் நிறைவேறாது..
    அவர் இப்பொழுது ஜெயா பிரதமராக வேண்டும் என விரும்புகிறார்//
    கண்பத், செம க்ளோசிங்க் பன்ச்.

  4. செழியன் சொல்கிறார்:

    அன்புள்ள காவிரிமைந்தன் அவர்களே,

    உங்கள் அனுமதியுடன் இந்த சின்ன விஷயத்தை

    இங்கு வெளியிட விரும்புகிறேன்.

    இப்போது தான் ஜெயா டிவியில் பார்த்தேன்.
    எம்ஜிஆர் பிறந்த நாளையொட்டி சிவகுமார்
    தேன்கிண்ணத்தில் பேசினார். தான் ஒரு முறை
    படப்பிடிப்புக்கு நேரத்தில் போக வேண்டும்
    என்பதற்காக, கார் வராததால் ஒரு டாக்சியில்
    படப்பிடிப்புக்கு சென்றதை – ஒரு ஹீரோவாக
    இருந்தும் டாக்சியில் போனதை, தன் 100 வது
    பட விழாவின் போது எம்ஜிஆர் எடுத்துகூறி
    பாராட்டினார் என்றார்.

    இதே விஷயத்தை நேற்று முன் தினம் பொங்கல்
    நிகழ்ச்சியில் விஜய் டிவியில் பேசும்போதும்
    கூறினார்.ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால்
    அப்போது -தான் ஆட்டோவில் சென்றதாகவும்
    அதற்காக எம்ஜிஆர் பாராட்டியதாகவும் கூறினார்.

    முந்தாநாள் ஆட்டோ – இன்று டாக்சி.
    இதை எதற்கு எடுத்துச்சொல்கிறேன் என்றால் –
    நிஜம் கூறுபவர்கள் கவலைப்படவே தேவை இல்லை.
    ஆனால் – பொய் சொல்பவர்கள் – தான் என்ன
    சொல்கிறோம் என்பதை நினைவில் வைத்துக்
    கொண்டே இருக்க வேண்டும். இதைத் தான்
    ஒரு பொய்யை மறைக்க ஆயிரம் பொய் சொல்ல
    வேண்டும் என்று கூறினார்கள்.

    இந்த தளத்தை சிவகுமார் வழக்கமாகப்
    பார்ப்பதாக அறிந்தேன்.
    அதனால் தான் இங்கு எழுதுகிறேன்.
    அடுத்த தடவை பேசும்போது இது சைக்கிளாகி
    விடாமல் சிவகுமார் ஜாக்கிரதையாகப் பார்த்துக்
    கொள்ள வேண்டும்.

    இடம் கொடுத்தமைக்கு மிக்க நன்றி.

    எல்லாருக்கும் என் பொங்கல் வாழ்த்துக்கள்.
    செழியன்

  5. Ganpat சொல்கிறார்:

    திரு செழியன்.
    மாற்றி சொல்லுதல் பலவகைப்படும்.
    கண்ணதாசன் மாற்றி சொன்னால்:கவிதை
    காமராஜர் மாற்றி சொன்னால்:ராஜதந்திரம்.
    கருணா மாற்றி சொன்னால்: கபடம்
    ஜெயா மாற்றி சொன்னால்:அகங்காரம்
    கவுன்சிலர் மாற்றி சொன்னால் :பொய்.
    முதியோர் மாற்றி சொன்னால் :மறதி
    இளையோர் மாற்றி சொன்னால் :மோகம்
    குழந்தைகள் மாற்றி சொன்னால்:மழலை
    தந்தை மாற்றி சொன்னால்:அக்கறை
    தாய் மாற்றி சொன்னால்:பாசம
    மகன்(ள்) மாற்றி சொன்னால்:பயம்
    அந்த சிவகுமார் மாற்றி சொன்னால் : கவனக்குறைவு
    இந்த சிவகுமார்(கண்பத்) மாற்றி சொன்னால்:குழப்பம்.

    • ramanans சொல்கிறார்:

      //அந்த சிவகுமார் மாற்றி சொன்னால் : கவனக்குறைவு
      இந்த சிவகுமார்(கண்பத்) மாற்றி சொன்னால்:குழப்பம்.//

      வழிமொழிகிறேன் சார்! ஆனால் நீங்கள் (கண்பத்) சிவகுமார் என்பதை விட ’பார்வதி மைந்தன்’ என்பதுதான் சாலப் பொருத்தமாக இருக்கும்.

  6. ramanans சொல்கிறார்:

    //முந்தாநாள் ஆட்டோ – இன்று டாக்சி.
    இதை எதற்கு எடுத்துச்சொல்கிறேன் என்றால் –
    நிஜம் கூறுபவர்கள் கவலைப்படவே தேவை இல்லை.
    ஆனால் – பொய் சொல்பவர்கள் – தான் என்ன
    சொல்கிறோம் என்பதை நினைவில் வைத்துக்
    கொண்டே இருக்க வேண்டும்.//

    செழியன்…

    இதை ஏன் அவர் பொய் சொல்லி விட்டதாக எடுத்துக் கொள்கிறீர்கள்? மறதியில் கூட அவ்வாறு மாற்றிச் சொல்லியிருக்கலாம் அல்லவா?

    எப்படி என்கிறீர்களா?

    நீங்கள் அடுத்தடுத்த நாள்களில் நிகழ்ச்சியைப் பார்த்திருக்கலாம். ஆனால் அதற்கான படப்பதிவுகள் எப்போதோ எடுக்கப்பட்டிருக்கக் கூடும். அதில் முன்பு சொன்ன ஒரு விஷயத்தை மறுபடி சொல்லும் போது மாற்றிச் சொல்லியிருக்கலாம். அதை ”பொய் சொல்கிறார்” என்று எடுத்துக் கொள்வது மிகத் தவறானது.

    சிவகுமாருக்கு இவ்வாறு பொய் சொல்ல வேண்டிய அவசியம் என்ன?

    சிவகுமாரைப் பற்றி நீங்கள் புரிந்து கொண்டது அவ்வளவுதான்.அவர் சற்று உணர்ச்சி வசப்பட்டுப் பேசுபவராக இருக்கலாம். ஆனால் பொய்யர் அல்ல.

    நாசர், சிவகுமார், ராஜேஷ் போன்றவர்கள் எல்லாம் ஆழக் கற்றவர்கள். மனதில் பட்டத்தை அப்படியே பேசி விடக் கூடியவர்கள். கலைஞர்கள் என்பதால் அவர்களில் ஒரு சிலர் உணர்ச்சி வசப்பட்டுப் பேசுவதை ’பொய்’ என்றோ ‘உளறல்’ என்றோ நினைப்பது தவறு.

    நன்றி

  7. ramanans சொல்கிறார்:

    காவிரி மைந்தன்…

    ’சோ’ தனது ஆசையை, எதிர்பார்ப்பைச் சொல்கிறார். சொல்லி விட்டுப் போகட்டுமே! அதனால் என்ன வந்து விட்டது இப்போது.

    இன்னொரு விஷயம்… மோடு குஜராத்தை நன்கு முன்னேற்றி விட்டார். அவர் தேசிய அரசுக்குச் செல்லலாம். சென்றாலும் குஜராத்தில் அவரது தோழர்கள் அவர் பணியைச் செவ்வனே தொடவர்.

    தமிழகத்தில்..?

    இதை குஜராத் போல முன்னேற்றவே இன்னும் ஒரு பத்தாண்டாகும். அதன் பிறகு ஜெ.வைப் பிரதமராக்க முயற்சிக்கலாம்.அதை விட்டு இப்போதே அங்கு போனால் திரிசங்கு சொர்க்கம் தான்.

    அப்புறம் அன்புமணிதான் தமிழ்நாட்டின் முதலமைச்சராகக் கூடிய பேறு நமக்கு வாய்க்கும். இது தேவையா?

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்பர் ரமணன்,

      கொஞ்ச நாட்களாக கெட்ட கனவுகள்

      ஏதுமின்றி நிம்மதியாக இருக்கிறேன்.
      டாக்டர் – அன்புமணியை நினைவுபடுத்தி
      பயமுறுத்துவது நியாயமா நண்பரே ?

      -வாழ்த்துக்களுடன்
      காவிரிமைந்தன்

  8. kattuvasi சொல்கிறார்:

    oru paithiyathuku paithiyam pudicha athu paithiyathuku vaithiyam pakkura oru paithiyakara docter kita poi vaithiyam pakkum,but antha paithiyathuku vaithiyam pakkura paithiyakara docteru ke paithiyam pudicha antha paithiyakara docter entha paithiyathuku vaithiyam pakkura docter kitta poi vaithiyam pathukum.?????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????hiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      யார் இந்த காட்டுவாசி ?
      புதிதாக பயமுறுத்துகிறீர்களே –

      கொஞ்சம் அறிமுகப்படுத்திக்
      கொள்ளுங்களேன் !

      -வாழ்த்துக்களுடன்
      காவிரிமைந்தன்

  9. rajanatr சொல்கிறார்:

    //3.நடை முறையில் சோ ராமசாமி சாத்திததை விட traffic ராமசாமி சாத்திதது அதிகம்.அன்னா சாதித்தோ மிக மிக அதிகம்.//

    Good one!

  10. வலிபோக்கன் சொல்கிறார்:

    துக்ளக்கு கணவு, அவர் சாவதற்குள் பலித்துவிடும் போலிருக்கிறது. சத்தியமா நான் நம்புறேன்.

  11. Muthu Aiyer சொல்கிறார்:

    நரேந்திர மோதியை அத்வானி முதல்வர் வேட்பாளராக முன் மொழிய வேண்டும் என்பதில்தான் சாணக்கியரான சோ வின் ராஜ தந்திரம் புதைந்துள்ளது. இப்படிப் பேசினால் தாங்கள் கூறிய விளைவுகள் இப்பொழுதே தலைதூக்க ஆரம்பித்துவிடும். அத்வானி முன்மொழியும்வரை காத்திருக்கத் தேவையே இல்லை…….முத்து,புது தில்லி

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்பர் முத்து,

      அப்படியானால் “சோ”வின் இரண்டாவது

      ஆசை தான் பலிக்கும் என்பது
      உங்கள் எண்ணமா ?

      -வாழ்த்துக்களுடன்
      காவிரிமைந்தன்

  12. Amudhavan சொல்கிறார்:

    நண்பர் செழியன் குறிப்பிட்டிருப்பதுபோல் டாக்சி என்றும் ஆட்டோ என்றும் மாறுபட்டு வந்திருக்கலாம். ரமணன் சொன்னதுபோல் இது கவனக்குறைவாகவும் இருக்கக்கூடும். ஆனால் சிவகுமார் பொய் சொல்லிவிட்டார் எனவே பொய் சொல்லும் சிவகுமார் போன்றவர்கள் கவனமாக இருக்கவேண்டும் என்பதாக செழியன் குறிப்பிடுகிறார். இந்த விஷயம் எம்ஜிஆர் ரோசாப்பூ ரவிக்கைக்காரி நூறாவது படத்தின் விழாவுக்காக ஏவிஎம் தோட்டத்தில் ஏவிஎம் வீட்டுக்கு முன்பு போடப்பட்ட பந்தலில் நடந்த நிகழ்வு. விழாவில் நானும் கலந்துகொண்டேன்.

    அந்த விழாவில் எம்ஜிஆர் பேசிய இந்தப்பேச்சின் முழுவடிவம் அடுத்தநாள் எல்லா தினசரிகளிலும் வந்தது. ஏன் அந்தப் பேச்சின் ஒலிநாடா இன்னமும் என்னிடம்கூட இருக்கிறது. திரு சிவகுமார் அவர்களிடமும் ஒலிநாடாவும் இருக்கும் பிலிமும் இருக்கும்.எல்லா பேப்பர் கட்டிங்ஸும் இருக்கும். மற்றும் அந்த விழாவில் கலந்துகொண்ட எஸ்பி முத்துராமன், கமல், ஏவிஎம் சரவணன் போன்ற நூற்றுக்கணக்கான திரையுலகப் பிரமுகர்களும் பத்திரிகையாளர்களும் இன்னமும் உயிருடன்தான் உள்ளனர்.
    இந்தச் சின்ன கவனப்பிசகிற்காக நண்பர் ஏன் இப்படி பதறுகிறார் பதறியவர் எதற்காக இப்படி அபாண்டமாகப் பழி சொல்லுகிறார் என்பது புரியவில்லை.
    தவிர முந்தாநாள் ஒன்றைச் சொன்னார் அடுத்த நாள் அதை மாற்றிச்சொன்னார் என்கிற விஷயம்……விஜய் டிவியில் பேசிய பேச்சு ஒரு மாதத்திற்கு முன்பு நாமக்கல்லில் நடந்த விழாவில் பதிவு செய்யப்பட்ட பேச்சு. ஜெயா டிவியின் பேட்டி சென்ற வாரம் பதிவு செய்யப்பட்ட பேட்டி. நாமக்கல்லில் திடீரென்று கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களைச் சொல்லும்போது அந்த சம்பவம் பற்றிச்சொன்னவர் ஜெயா பேட்டிக்காக கிளம்பும்போது தயாரான நிலையில் கிளம்புவதற்காக எல்லாவற்றையும் சரிபார்த்துக்கொண்டு கிளம்பியிருக்கக் கூடும்.
    இரண்டும் அடுத்தடுத்து ஒளிபரப்பானதால் நேற்றைக்கு அது இன்றைக்கு இது என்று பாமரத்தனமாக நண்பர் நினைத்துக்கொண்டுவிட்டார் போலும்.

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      வருக நண்பர் அமுதவன்,

      உங்கள் விவரமான மறுமொழிக்கு நன்றி.
      செழியன் அவசரப்பட்டு விட்டார் –
      போகட்டும் – விட்டு விடுங்கள் !

      -வாழ்த்துக்களுடன்
      காவிரிமைந்தன்

  13. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    கடவுளே –

    சோ பேச்சு பற்றிய இடுகையை சூடாகப் போட்டால் –
    சுவையான விவாதங்கள், மறுமொழிகள் என்று
    தொடர முடியும் என்று நினைத்து கஷ்டப்பட்டு
    நேற்றிரவே எழுதி முடித்து வலையில் போட்டால் –

    விவாதம் விஷயம் மாறி எங்கோ போகிறதே !

    (செழியன் கூறிய திரு சிவகுமார் அவர்கள்
    பற்றிய சம்பவத்தை பொய் என்று கருதுவது
    மிகத் தவறு.
    கவனக்குறைவு – அவ்வளவு தான்.
    செழியன் அவசரப்பட்டு விட்டார் )

    செழியன் – மற்றும் அவர் போன்ற நண்பர்களுக்கு –
    ஒரு வேண்டுகோள் –

    தயவுசெய்து, இடுகையுடன் தொடர்புடைய
    கருத்துக்களை மட்டும் மறுமொழியில்
    எழுதுங்கள். நீங்கள் தாராளமாக ஆதரித்தோ,
    மறுத்தோ எழுதலாம். ஆனால் இடுகைக்கு
    தொடர்புடையதாக மட்டும் இருக்கட்டும்.

    மற்ற நண்பர்களுக்கு – இடுகையைப் பற்றிய
    விவாதத்தை தொடரலாமே !

    -வாழ்த்துக்களுடன்
    காவிரிமைந்தன்

  14. Senthil Kumar சொல்கிறார்:

    Dear Mr. KM,

    This is the latest news from mathrubhumi about the Mullai Periyar,

    Union minister’s Mullaperiyar remark irks Kerala
    Posted on: 17 Jan 2012

    Kottayam : Union Science and Technology Minister Ashwani Kumar’s statement that the 115-year-old Mullaperiyar dam is safe has not gone down well in Kerala with ruling front ally Kerala Congress (Mani) Monday announcing its support to a strike call by an anti-dam panel.

    Government chief whip and senior KC (Mani) party member P.C. George told IANS that the decision to extend moral support to the strike call by the Mullaperiyar Action Committee on Wednesday has been taken by his party’s political affairs committee.

    ‘It is not only us, almost all parties have extended their support to the call given by the Action Committee. This committee has been on a sit-in protest near the dam site for the past 1,800 days demanding a new dam,’ said George.

    State Water Resources Minister P.J. Joseph termed as ‘sad’ Union Minister Ashwani Kumar’s remark Sunday that the Mullaperiyar dam is safe and there was no need to worry.

    ‘It is sad that such a statement has come from a federal minister. We feel that our own ministers like Defence Minister A.K. Antony should speak up for our cause,’ said Joseph, who first raked up the dam issue when he said late last year that he can’t sleep apprehending that the dam in Idukki district might give way anytime.

    The Kerala Congress (Thomas), ally of the opposition Left Monday asked state Finance Minister K.M. Mani, the supreme leader of the KC (Mani), to leave the Congress-led ruling alliance if it was unable to push for a new dam.

    The months of November and December saw huge protests for a new dam with all political parties in the state joining in and numerous legislators holding indefinite relay fasts.

    Chief Minister Oommen Chandy and leader of opposition V.S. Achuthanandan met Prime Minister Manmohan Singh to demand a new dam.

    Kerala and Tamil Nadu have been at loggerheads over the dam, which was built under an 1886 accord between the then Maharaja of Travancore and the erstwhile British Raj. The dam, which is located in Kerala, serves Tamil Nadu.

    The Tamil Nadu government wants the storage capacity to be increased by raising the dam’s height from 136 feet (41.5 metre) to 142 feet (43 metre) to meet the state’s irrigation needs.

    The Kerala government says a strong earthquake could cause widespread destruction in the state.

    The state government is seeking a new dam and has offered the funds to build it, but the Tamil Nadu government has strongly opposed it.

    Experts say if a quake strikes, over four million people and their properties in the Idukki, Kottayam, Alappuzha and Ernakulam districts and parts of Thrissur would be affected. (IANS)

  15. arun சொல்கிறார்:

    சிவகுமார் பொயி சொல்பவர் அல்ல யேதொ கவனகுரைவு தான் டயவு செயிது பெரிதாக எடுத்து கொல்ல வேண்டம்

  16. prakash JP சொல்கிறார்:

    “நெருப்பையும்,பகையையும் மிச்சம் வைக்ககூடாது . முழுமையாக அழித்துவிடவேண்டும். கருணாநிதி-பகை, மிச்சம் வைத்தால் வளர்ந்து நம்மை அழித்து விடுவார்.” -துக்ளக் நடத்திய நிகழ்ச்சியில் சோ.

    திமுகாவையும் கருணாநிதியையும் இவர்கள் எதிர்ப்பது வெறும் தேர்தல் அரசியல் அல்ல, ஆரிய இன பகையே என்பதை மீண்டும் தெளிவுபடுத்தி, திராவிட தமிழர்கள் ஆதரிக்கவேண்டியது யாரை என்று தெளிவாக அடையாளம் காட்டிய சோவுக்கு நன்றி…..

    ஜெயா பிரதமாராக்க பாஜகா ஆதரவு அளிக்கவேண்டும்..ஜெயா பிரதமராக அனைத்து திறமைகளும், தகுதியும் உள்ளது – நடுநிலை போர்வை போர்த்திய சோ ராமசாமி..

    —– அந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் ஒருவரும் “ஊழல் வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளநிலையில் ஜெயா எப்படி தகுதியானவர்” என்று ஏன் துண்டு சீட்டில் கேள்வி எழுப்பவில்லை…..

    —– 30 ஆண்டுகாலம் ஒரே வீட்டில் இருந்து அனைத்திலும் பங்கெடுத்த சசியை அடையாளம் கண்டு வெளியேற்றிய ‘திறமையை’ குறித்து துண்டு சீட்டில் ஏன் கேள்வி எழுப்பவில்லை….

    — அனைத்திலும் கருத்து சொல்லும் சோ, ஏன் சசிகலா வெளியேற்றம் குறித்து எதுவும் கேட்ககூடாது என்று சொல்லவேண்டும்??? – அதை பற்றி சொல்வதற்கு சோவுக்கு தைரியம் இல்லையா, அல்லது அதை கேள்வியாய் கேட்க, அந்த கூட்டத்தில் இருந்த ஒருவர்க்கும் தைரியம் இல்லையா. இல்லை ஜெயாவின் திறமை, பங்கு அதில் வெளிப்பட்டுவிடும் என்ற பயமா…

    அதுசரி, அந்த கூட்டமே, வருடா வருடம் நடக்கும் அவாளின் வயிதெரிச்சல் கூட்டம் தானே…ஒவ்வொரு வருஷமும் நடுநிலை போர்வையில் இப்படி ஒரு கூட்டம் நடத்தி அவாளின் கொட்டத்தை அடக்கிய திராவிட இயக்கங்கள், தலைவர்கள் மீது தங்களின் ஆதிக்கம் இப்படியாகிவிட்டதே என்று இயலாமையில், வயிதெரிச்சலில் (stress buster) வசை பாடும் கூட்டம்தானே…

  17. செழியன் சொல்கிறார்:

    அன்புள்ள காவிரிமைந்தன் அவர்களுக்கு,

    என்னால் உங்களுக்கு ஏற்பட்ட அசௌகரியத்திற்கு
    வருந்துகிறேன். தய்வு செய்து மன்னிக்கவும்.

    இனி இப்படி நிகழாது.

    வணக்கத்துடன்
    செழியன்

  18. தமிழ்வேள் சொல்கிறார்:

    தோழர் பிரகாஷ்,

    தமிழர் தானே நீங்கள் ?
    இன்னும் திராவிடன் எங்கிருந்து வந்தான் ?
    அதான் ஆப்பு அடிக்கிறார்களே கேரளாவிலும்
    கர்னாடகாவிலும்.

    இன்னமும் ஏன் திராவிடன் என்று
    சொல்லிக்கொண்டு அலைகிறீர்கள் ?

    இனி எவராவது திராவிடன் என்று
    சொல்லிக் கொண்டு வந்தால் தமிழ் மக்கள்
    செருப்பால் அடிப்பார்கள்.

    தமிழன் என்று சொல்லுங்கள்
    தலை நிமிர்ந்து நில்லுங்கள்.

    ஜெயா அம்மையாரை காரணம் காட்டி
    இந்த ஆளை மீண்டும் தூக்கி விட யாரும்
    முயற்சிக்க கூடாது. இவர்கள் இரண்டு பேரையும்
    விட்டால் வேறு ஆளா இல்லை இந்த தமிழ்நாட்டில் ?

    தமிழினத் துரோகி கருணாநிதி.
    லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களின் அவல நிலைக்கு
    காரணம் இந்த சுயநலப் பன்னாடை.

    தான் முதல் மந்திரி,
    ஒரு மகன் மத்திய மந்திரி,
    இன்னொரு மகன் துணை முதல் மந்திரி,
    பேரன் ஒரு மத்திய மந்திரி,
    மகள் ஒரு எம்.பி.
    குடும்பமே ஒரு கொள்ளைக் கூட்டம்.

    ஆட்சியா நடந்தது ?
    சுயநலவாதிகளின் கொள்ளை அல்லவா நடந்து
    கொண்டிருந்தது ?
    குடும்ப கொள்ளை நடத்தியவனுக்கு இன்னும் ஏன்
    வக்காலத்து வாங்குகிறீர்கள் ?

    மந்திரித்து விட்ட ஆடு போல் அலையாதீர்கள்.
    இனியாவது விழித்துக் கொள்ளுங்கள்.

    அய்யா நெடுமாறன் இல்லையா, வைகோ இல்லையா,
    தமிழருவி மணியன் இல்லையா ?
    கரை படாத தமிழர்களை இனம் காணுங்கள்.
    இனியாவது தமிழன் தலை நிமிர்ந்து வாழும் வகை
    குறித்து யோசியுங்கள்.

    தமிழ்வேள்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.