அரசுக்கு சூடு, சொரணை, தைரியம் – மக்களின் உயிர் மீது அக்கரை – கொஞ்சமாவது இருக்கிறதா ?

அரசுக்கு சூடு, சொரணை, தைரியம் –
மக்களின் உயிர் மீது அக்கரை –
கொஞ்சமாவது  இருக்கிறதா ?

வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா நேரில்
இலங்கை சென்று பேசி விட்டு டெல்லி திரும்பி
இன்னும் 24 மணி நேரம் கூட ஆகவில்லை.
அதற்குள்ளாக அடுத்த அட்டாக் செய்தி.

இந்த தடவை கிருஷ்ணாவிற்காக விசேஷ தள்ளுபடி
துப்பாக்கி குண்டுக்கு பதிலாக – கல்லடி.  
ஆனால் 9 மீனவர்களையும்,
அவர்களது மீன்பிடி படகையும்
இலங்கைக்கு இழுத்துச்சென்று விட்டனர் சிங்கள
கடற்படை சிப்பாய்கள்.
எத்தனை நாள், எத்தனை தடவை இதே கதையை
நாம் திரும்ப திரும்ப பேசிக்கொண்டிருக்கிறோம்.
இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டாமா?

சுண்டைக்காய் நாடு சிங்கள ஸ்ரீலங்கா.
செய்து கொண்ட ஒப்பந்தத்தையும் மதிக்கவில்லை.
கொடுத்த வாக்குறுதிகளையும் மதிக்கவில்லை.
போய்ப் பேசி விட்டு வந்த மந்திரியையும் மதிக்கவில்லை.
மீண்டும் மீண்டும் வம்புக்கு இழுக்கிறார்கள்.
மீனவர்களின் உயிர் அவ்வளவு சல்லிசாகப் போய் விட்டதா ?

இந்திய அரசு –
அடிபடுபவர்களையும், கொல்லப்படுபவர்களையும்
இந்தியர்களாகப் பார்ப்பதே இல்லை.
வெறும் தமிழர்களாக மட்டுமே,
இதை தமிழர்களின் பிரச்சினையாக மட்டுமே பார்க்கிறது.

இத்தனைக்கும் காரணம் 1974ல் கச்சத்தீவை
இலங்கைக்கு தாரை வார்த்து போடப்பட்ட இந்த
ஒப்பந்தம் தான்  –

agreement of 1974

——————————————-

Agreement between Sri Lanka and India
on the Boundary in Historic Waters
between the two Countries and Related
Matters 26 and 28 June 1974

The Government of the Republic of
Sri Lanka and the Government of the Republic of

India,

Desiring to determine the boundary line
in the historic waters between Sri Lanka
and India and to settle the related
matters in a manner which is fair and
equitable to both sides,

Having examined the entire question
from all angles and taken into account
the historical and other evidence and
legal aspects thereof,

Have agreed as follows:

Article 1
The boundary between Sri Lanka and India
in the waters from Palk Strait to Adam’s
Bridge shall be arcs of Great
Circles between the following positions,
in the sequence given below, defined by
latitude and longitude:
Position 1: 10° 05′ North, 80° 03′ East
Position 2: 09° 57′ North, 79° 35′ East
Position 3: 09° 40.15′ North, 79° 22.60′ East
Position 4: 09° 21.80′ North, 79° 30.70′ East
Position 5: 09° 13′ North, 79° 32′ East
Position 6: 09° 06′ North, 79° 32′ East

Article 2

The co-ordinates of the positions specified
in Article 1 are geographical co-ordinates
and the straight lines connecting
them are indicated in the chart annexed
hereto which has been signed by the
surveyors authorized by the two

Governments,respectively.

Article 3

The actual location of the aforementioned

positions at sea and on the sea-bed shall
be determined by a method to be
mutually agreed upon by the surveyors
authorized for the purpose by the two
Governments, respectively.

Article 4

Each country shall have sovereignty and
exclusive jurisdiction and control over
the waters, the islands, the continental
shelf and the subsoil thereof, falling
on its own side of the aforesaid boundary.

Article 5

Subject to the foregoing, Indian fishermen
and pilgrims will enjoy access to visit

Kachchativu as hitherto,

and will not be required by Sri Lanka to
obtain travel documents or visas for these

purposes.

Article 6

The vessels of Sri Lanka and India will
enjoy in each other’s waters such rights
as they have traditionally enjoyed
therein.

Article 7

If any single geological petroleum or
natural gas structure or field, or any
single geological structure or field of any other

mineral
deposit, including sand or gravel, extends across

the boundary referred to
in Article 1 and the part of such
structure or field which is situated on
one side of the boundary is exploited,
in whole or in part, from the other side of the

boundary, the
two countries shall seek to reach
agreement as to the manner in which the
structure or field shall be most effectively

exploited
and the manner in which the proceeds deriving

therefrom shall be apportioned.

Article 8

This Agreement shall be subject to
ratification. It shall enter into force on the

date of
exchange of the instruments of
ratification which will take place
as soon as possible.
Colombo, 26th June, 1974. New Delhi, 28 June,

1974.

———————————————-

மேலே காணப்படும் Article 5 தான் கச்சத்தீவு பற்றிய
வாசகம். அதில் – கச்சத்தீவில் இதற்கு முன்னதாக இந்திய
மீனவர்கள் அனுபவித்து வந்த அத்தனை உரிமைகளையும்
தொடர்ந்து அனுபவிக்கலாம் என்று கூறப்பட்டிருக்கிறது.
(மீன் பிடிக்கும் உரிமை என்று தனியே கூறப்படவில்லை)
அடுத்து article 6-ல்  நாம் ஏற்கெனவே
பாரம்பரியமாக சென்று வந்துகொண்டிருந்த
நீர்ப்பகுதிகளில் மீன்பிடி படகுகள் செல்லும்
உரிமை தொடர்ந்து இருக்கும் என்பது
உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்திய மண்ணில் ஒரு அங்குல நிலத்தைக் கூட
அண்டை அயல் நாடுகளுக்கு விட்டுக் கொடுக்க
வேண்டுமானால், எல்லைகளை மாற்ற அரசியல் சட்ட
திருத்தம் கொண்டு வரப்பட்டு பாராளுமன்றத்தில்
மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களால் ஏற்றுக்
கொள்ளப்பட வேண்டும்.

சம்பந்தப்பட்ட மாநிலமான தமிழ் நாட்டையும்
கலந்து ஆலோசிக்காமல் –
பாராளுமன்றத்தின் அனுமதியையும் கோராமல் –
இந்தியப் பிரதமர் இந்திரா அம்மையார் தன்னிச்சையாக
இலங்கையுடன் ஜூன் 28, 1974 அன்று ஒப்பந்தத்தில்
கையெழுத்து போட்டு விட்டு –

பின்னர் பாராளுமன்றத்திற்கு அதனை ஒரு தகவலாக
தந்தார்- அதையும் வெளியுறவுத் துறை அமைச்சராக
இருந்த ஸ்வரண் சிங்கின் ஒரு அறிக்கை மூலமாக.

அன்றைக்கு பாராளுமன்றத்தில் இருந்த அடல் பிஹாரி
வாஜ்பாய் உட்பட எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும்
எதிர்த்ததை ஆளும் கட்சி சிறிதும் சட்டை செய்யவில்லை.

அன்றைய பாராளுமன்ற கூட்டத்தில்,
கச்சத்தீவு பற்றி வெளியுறவுத்துறை
அமைச்சர் ஸ்வரண் சிங் கொடுத்த  வாக்குறுதி-

“At the same time I wish to remind the Hon’ble
Members that in concluding
this agreement on rights of fishing,
pilgrimage and navigation which both
sides have enjoyed in the past, have
fully been safeguarded for the future.”

அதாவது, இதற்கு முன்னதாக இரண்டு தரப்பிலும்
அனுபவித்து வந்த மீன்பிடிக்கும் உரிமை போன்றவை
தொடர்ந்து அனுமதிக்கப்படும் என்கிற உறுதிமொழி.

அன்று அமைச்சர் வாயினால் கொடுத்த வாக்குறுதி
அன்றே காற்றோடு கலந்து காணாமல் போய் விட்டது !

இந்த ஒப்பந்தம் குறித்து இரண்டு முக்கியமான
விவாதங்கள் இருக்கின்றன.

ஒன்று – ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளபடி – ஏற்கெனவே
இந்திய மீனவர்கள் அனுபவித்து வந்த – கச்சத்தீவை
ஒட்டிய பகுதிகளில் மீன் பிடிக்கும் உரிமையை
தொடர்ந்து அனுபவிக்கலாம் என்பது.
இது எழுத்தளவில் தான் (அதுவும் தெளிவில்லாமல்)
உள்ளது. இந்த ஒப்பந்தத்தின்  ஷரத்துக்களையும்
இலங்கை மதிப்பதில்லை.

இரண்டாவது – அதிமுக்கியமான விஷயம் –
இப்படி ஒரு ஒப்பந்தம் போடவே இந்திய அரசுக்கு
அதிகாரமோ, உரிமையோ இல்லை.

ஒப்பந்தத்தின் வாசகங்களே தவறானவை.
கச்சத்தீவு இரண்டு நாடுகளுக்கிடையே உள்ள
பிரச்சினைக்குரிய ஒரு பகுதியாக ஒப்பந்தத்தில்
சித்தரிக்கப்பட்டுள்ளது. அதுவே தவறு.

கச்சத்தீவு – எந்தவித சந்தேகத்திற்கும் இடம் இல்லாமல்,
ராமநாதபுரம் ஜமீனின் – இந்தியாவின் –
ஒரு பகுதியாகத்தான் இருந்தது என்பது
கீழே காணப்படும் விவரங்களிலிருந்து புரியும் –

In 1947 one Mr.Mohammed had taken lease
of the island of Katcha Theevu which was
registered in the Sub-Registrar’s office of Indian
town
of Rameswaram (Ref: Reg.No. 278/1948.)

After India attained independence the
Indian State of Madras by way of Government Order
No: 2093
dated 11.8.1949 declared that
Katcha Theevu as barren land under Rameswaram
revenue village
Survey Number: 1250 in an area of
285 acres and 20 cents.
Thus for centuries Katcha Theevu was
under the Princely state of Ramnad
in British India, and under Government of Madras
in
Independent India.

இவ்வாறு சந்தேகத்திற்கே இடமில்லாமல், தமிழ் நாட்டின்
ஒரு பகுதியாக இருந்த கச்சத்தீவை –
அரசியல் சட்டப்படி அதற்குரிய அதிகாரம் இல்லாமலே
இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுத்த அந்நாளைய
இந்திய அரசின் செயல் சட்ட விரோதமானது.

இதை எதிர்த்து தான் –
இந்த ஒப்பந்தம் செல்லாது என்று அறிவிக்கக் கோரி தான்
சுப்ரீம் கோர்ட்டில் –  அதிமுக செயலாளராக
செல்வி  ஜெயலலிதாவும்
இன்னும் பலரும் வழக்கு தொடுத்திருக்கிறார்கள்.

இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வரும்போது –
அது தமிழ் நாட்டிற்கும், தமிழக மீனவர்களுக்கும்
ஒரு வேளை சாதகமாக இருக்கக்கூடும்.

ஆனால் – 37 ஆண்டுகளுக்கு முன்னர் படுகொலை
செய்யப்பட்ட மத்திய ரெயில்வே அமைச்சர்
எல்.என். மிஸ்ரா அவர்களின்  வழக்கே இன்னும்
விசாரணை முடிந்த பாடில்லை.
இந்த லட்சணத்தில், கச்சத்தீவு வழக்கு எந்த காலத்தில்
விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு,
எத்தனை வருடங்கள்  விசாரணையில் கழிந்து –
எப்போது தீர்ப்பு வரும் என்று காத்திருப்பது ?

அதுவரை இன்னும் எத்தனை தமிழ் மீனவர்கள்
உயிர் விடப்போகிறார்கள் – கல்லடி படப்போகிறார்கள் ?

தம் மக்களின் மீது அக்கரை இல்லாத –
மக்கள்,தேவையின்றி தவிப்பதைப் பற்றி கவலைப்படாத –
இந்த நாட்டு மீனவர்களின் உயிர்கள் அநியாயமாக
பறிக்கப்படுவதைக்கண்டு பதறித் துடிக்காத –
ஒரு மத்திய அரசு !

இதை எல்லாம் பார்க்கும்போது –
நமது நடைமுறைகளின் மீது வெறுப்பும்,
ஆத்திரமும்,  கோபமும் வருவதைத்  
தவிர்க்க முடியவில்லை.

இன்னும் எத்தனை நாள் இவற்றை எல்லாம்
சகித்துக் கொண்டே இருக்கப் போகிறோம் ?

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

15 Responses to அரசுக்கு சூடு, சொரணை, தைரியம் – மக்களின் உயிர் மீது அக்கரை – கொஞ்சமாவது இருக்கிறதா ?

  1. smtvkendra சொல்கிறார்:

    கச்சத்தீவு தொடர்பாக எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர்கள் ஆட்சியாளர்களை கவனித்து
    மீனவர்களுக்கு உதவி செய்வார்கள்.

  2. ரிஷி சொல்கிறார்:

    பிஜேபி வந்தாலும் இதே நிலைமைதான் நீடிக்கப் போகிறது என்னும்போது ஆட்சி மாற்றம் இப்பிரச்சினைக்குத் தீர்வாக முடியாது.

  3. ரிஷி சொல்கிறார்:

    என்னைப் பொறுத்தவரை இதற்கு வேறு சில தீர்வுகளை முன் வைப்பேன். ஆனால் அவை விவாதத்திற்குரியவை. அதிரடியானவையும்கூட!

    தற்போதைய ‘ஜனநாயக’ வழியில் மத்திய அரசுக்கு எதிர்ப்பைக் காட்டுவதற்கு, அதன் ‘கவனத்தைக்’ கவருவதற்கு ஒரே தீர்வாக வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் புறக்கணிப்பு மட்டுமே இருக்க முடியும். ஒட்டுமொத்த மீனவ சமுதாயமும், மீனவ சங்கங்களும் ஒரே அமைப்பின்கீழ் திரண்டு (அதாவது சென்னை முதல் குமரி வரை – அத்தனை மீனவக் குடும்பங்களும்) நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கக் கூடாது. யார் எவ்வளவு பணம் கொடுத்தாலும் சரி.. வாங்கிக் கொள்ளலாம். ஆனால் ஓட்டுச்சாவடிக்குப் போகக்கூடாது. ஒரு மீனவன் கூட அடிபடாத நிலை வரும்போது மட்டுமே வாக்களிப்போம் என பகிரங்கமாக அறிவிக்கவேண்டும்.

    வாக்களிப்பது என்பது நம் கடமை மட்டுமல்ல.. வாக்களியாமை நம் உரிமையும் கூட. பிற மாவட்டத் தமிழ் மக்களும் மீனவ சமுதாயத்துக்கு ஆதரவாக புறக்கணிப்பில் ஈடுபடலாம். ஒட்டுமொத்த சராசரியாக 35 சதவீத வாக்குகளைக் கூடத் தொட்டுவிடக்கூடாது. இதன்மூலம் சற்றே இந்திய ‘ஜனநாயகத்தை’ அதிரச் செய்து பார்க்கலாம். தேர்தலுக்குப்பின் எப்படியும் யாரேனும் ஒருவர் வெறும் 15% வாக்குகள் மட்டும் பெற்றிருந்தாலும் மற்றவர்கள் குறைவாக பெற்றிருப்பின் ‘வெற்றி’ (?) பெற்றதாகவே அறிவிக்கப்படுவார். இதன் தொடர்ச்சியாக இன்னும் பல்வேறு பரப்புரைகள் செய்யவேண்டும். அதாவது இந்திய தேர்தல் முறை கேலிக்கூத்தானது என்பதான பரப்புரை. வெற்றி பெற்றவர் 85% மக்களால் நிராகரிக்கப்பட்டவர் என்பதாக இருக்கவேண்டும் அப்பரப்புரை.

  4. சைதை அஜீஸ் சொல்கிறார்:

    ரிஷியின் யோசனையை நானும் முன்மொழிகின்றேன். மத்திய அரசுதான் தமிழர்களான நம்மை ஊதாசினப்படுத்துகிறது. நாம் அவர்களை ஊதாசினப்படுத்துவோம். நேரம் நெருங்குகிறது. நம் கோபத்தையும் அதிருப்தியையும் அவர்களுக்கு புரியவைத்து பாடம் புகட்டுவோம்!
    already செருப்படி வாங்கியுள்ள நம் எதிர்கால பிரதமர்(?) இங்கு வந்து கரும்புள்ளி செம்புள்ளி குத்திக்கொண்டு போகட்டும்.

  5. நித்தில் சொல்கிறார்:

    காவிரி நதி நீர் பங்கீட்டுப் பிரச்சனையில் சுப்ரீம் கோர்டின் உத்தரவை குப்பையில் போட்ட கர்நாடகாவின் அப்போதைய முதல் மந்திரி எஸ்.எம். கிருஷ்னாவிற்கு தமிழக மீனவர்களின் பாதுகாப்பில் என்ன அக்கரை இருக்கப்போகிறது.காங்கிரஸ் கட்சிக்கோ அல்லது அதன் தலைமைக்கோ தமிழர்களும் இந்தியர்கள்தான் என்ற நினைப்பு சிறிதும் இல்லை. மாறாக மீனவர்கள் இலங்கை கடற்பகுதிக்கு அத்துமீறி மீன் பிடிப்பதால்தான் அந்நாட்டு ரானுவம் சுடுகிறது என்று வாய்கூசாமல் பேசுகிறார்கள் இன அழிப்பில் முக்கிய பங்கெடுத்த இந்திய அரசின் ஆட்சியாளர்களாகிய காங்கிரஸார் மற்றும் அவர்களுக்கு துணைபோன தமிழின துரோகிகள். ஆஸ்திரேலியாவிலோ, அமெரிக்காவிலோ இந்திய மாணவர்கள் தாக்கப்பட்டாலோ அல்லது கொல்லப்பட்டாலோ பக்கம் பக்கமாக எழுதி தள்ளும் பத்திரிக்கைகளோ தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை அவ்வளவு சீரியஸாக எடுத்துக்கொள்வதில்லை. தமிழகம் பலமுனைகளிலிருந்து எதிர்ப்புகளையும் துரோகத்தையும் நேர்கொண்டுவரும் காலமிது.

  6. எழில் சொல்கிறார்:

    Article 6 தான் தெளிவாக நம் மீனவர் இலங்கை கடற்பரப்பில் காலம் காலமாக என்ன செய்தார்களோ (மீன் பிடித்தல்) அதை தொடர்ந்து செய்யலாம் என்கிறதே. பின் என்ன மயிருக்கு நம் கடற்படை மீனவர்கள் எல்லை தாண்டுகிறார்கள் என்று ரெக்கார்டு போடுகிறது?! நான் இதுவரை இந்த பிரச்னையை சுருக்கமாகவும், தெளிவாகவும் ஆதாரத்துடனும் யாரும் எழுதி படித்ததில்லை. நன்றி கா மை ஐயா. தொடரட்டும் உங்கள் நற்பணி.

  7. யாத்ரிகன் சொல்கிறார்:

    தான் ஒரு காங்கிரஸ்காரன் என்று
    சொல்லிக் கொள்ளவே யாரும் கூச்சப்பட வேண்டிய
    சமயத்தில் கேவலமான மனிதர்களெல்லாம்
    வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

    நேற்று மதுரையில் பாரதிராஜா காங்கிரஸ்
    நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தான் காங்கிரஸ்
    பரம்பரையில் வந்தவர் என்று சொன்னதோடு நில்லாமல்,
    இத்தாலியில் பிறந்திருந்தாலும் இந்தியப் பண்பை
    நிலை நாட்டியவர் என்று வெட்கமில்லாமல் சோனியாவின்
    புகழை வேறு மகிழ்ந்து பாடி இருக்கிறார்.
    என்ன கிடைக்கும் என்று எதிர்பார்த்து இப்படி கூஜா
    தூக்கப் போயிருக்கிறாரோ தெரியவில்லை.

    முதலில் இந்த மாதிரி சந்தர்ப்பவாதிகளை நம் சமுதாயத்தில்
    அடையாளம் கண்டு ஒதுக்க வேண்டும்.

    குறைந்த பட்சம் தமிழர் நலன், தமிழ் நாட்டின் நலன்
    பாதிக்கப்படும் நிலை வரும்போதாவது, கட்சி வேறுபாடு
    இல்லாமல் அத்தனை தமிழர்களும்
    ஒன்று பட்டு ஒரு குரலில் பேசும் வழக்கத்தை
    மேற்கொள்ள வேண்டும்.

  8. லால்குடி நாராயணன் சொல்கிறார்:

    காவிரிமைந்தன் அவர்களே,

    மிகத்தெளிவான பதிவு.
    ஐந்தே நிமிடங்களில் பிரச்சினையை
    மிகத்தெளிவாக, தகுந்த ஆதாரங்களின் துணையுடன்
    புரிய வைக்கும் உங்கள் திறனுக்கு பாராட்டுகள்.
    உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

    தமிழ் நாட்டு மக்கள் அத்தனை பேரும் ஒன்றுபட்டு
    தங்கள் எண்ணத்தை, எதிர்ப்பை
    மத்திய அரசுக்கு தெரிவிக்க ஒரு வழியைக்
    கண்டு பிடிக்க வேண்டும். அண்மையில்,
    கம்பத்தில், தேனியில், குமுழியில் தெரிவித்தார்களே
    அது போல் கட்சிசார்பு இல்லாமல் மக்கள் அனைவரும்
    பங்கேற்க வேண்டும்.

    அது அதிரடியான வழியாக இருக்க வேண்டும்.
    அவர்களின் இருப்பை அசைக்கக் கூடியதாக
    இருக்க வேண்டும்.

    இது நடக்குமா ?

  9. யாத்ரிகன் சொல்கிறார்:

    அடுத்த தேர்தல் வரட்டும் –
    ஒரு கை பார்போம் என்று சொல்வதெல்லாம்
    உதவக்கூடிய வழிகள் அல்ல.

    எதிர்ப்பு உடனடியானதாக இருக்க வேண்டும்.

    நண்பர் சொல்வது போல் அவர்கள்
    இருப்பை அசைப்பதாக இருக்க வேண்டும்.

  10. ரிஷி சொல்கிறார்:

    அன்பர்களே,
    இங்கு எல்லோரும் பிரச்சினைகளை மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறோம். இது எல்லா மக்களுக்கும் தெரிந்த விஷயம்தான். தங்கள் அளவில் கொதிப்படைந்து இருந்தாலும் ஒட்டுமொத்தமாக இந்நிலையை மாற்றுவது எப்படி என்பது அவர்களுக்குத் தெரியவில்லை (அ) மாற்றவே முடியாதென முடிவு செய்துகொண்டு தத்தம் வேலைகளைக் கவனிக்கின்றனர்.

    எதிர்ப்பு எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும் என்று இதுவரை இங்கு முன்மொழிந்தவர்கள் மிகக் குறைவு. நண்பர் காவிரி மைந்தன் கூட ஒரு கேள்விக்குறியுடன் முடித்து விடுகிறார். நாமும் படித்துவிட்டு கலைந்து விடுகிறோம்.

  11. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    நண்பர்களே,

    நண்பர் ரிஷி சொன்னது பற்றி –

    உண்மை தான். பல விஷயங்களில் -என்னாலும்
    எதுவும் தீர்வு சொல்ல முடியவில்லை தான்.

    என்னைப் பொறுத்த வரை – நான் சமுதாய நலனில்
    அக்கரை உடையவன். என்னைப் உருவாக்கிய இந்த
    சமுதாயத்திற்கு நான் திரும்ப எதாவது செய்ய வேண்டும்
    என்று நினைப்பவன்.

    இதுவரையிலும், என்னைச் சுற்றி இருந்த கூட்டத்திற்கு
    என்னால் இயன்ற வகையில் நான் எதாவது செய்து
    கொண்டே தான் இருந்தேன். இப்போது வெளியே வேறு
    வித்தியாசமான சூழ்நிலையில் இருக்கிறேன்.

    இந்த சூழ்நிலையில் –
    நிறைய படிக்கிறேன் –
    நிறைய விஷயங்கள் சேகரிக்கிறேன்.
    பல முக்கிய நிகழ்வுகளை அருகிலிருந்து கவனிக்கிறேன்.
    சமுதாயத்திற்கு பயன்படும் என்று தோன்றும் விஷயங்களை
    இந்த வலைத்தளத்தின் மூலமாக பிறருடன் பகிர்ந்து
    கொள்கிறேன். சில விஷயங்களில் மற்றவர்களுடன்
    சேர்ந்து பொதுக்கருத்தை (public opinion)
    உருவாக்கவும் முயற்சி செய்கிறேன்.

    என்னை விட இளமையும், சக்தியும் உடையவர்கள்
    முனைந்தால் – அவர்களுக்குத் துணை நிற்க என்னால்
    இயலும்.
    இதற்கு மேல் என்னால் எதுவும் செய்ய முடியுமா …?
    தெரியவில்லை. காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

    தொடர்ந்து நம்மால் முடிந்ததை செய்வோம் ….

    -வாழ்த்துக்களுடன்
    காவிரிமைந்தன்

  12. ரிஷி சொல்கிறார்:

    வணக்கம் காவிரிமைந்தன்,
    தங்கள் சூழலையும் முனைப்பையும் வயதையும் நன்கு உணர்கிறேன். சிறு சிறு உள்ளூர் பிரச்சினைகளில் பலருடன் பேசி பொதுக்கருத்தை உருவாக்கி அவற்றைத் தீர்ப்பது எளிதாக இருக்கும். இதுவே மீனவப் பிரச்சினை போன்ற பரிணாம அளவில் பெரிய விஷயங்களில் அமைப்பு ரீதியாக முன்னெடுக்கவேண்டும். ஆயினும் ஏற்கெனவே இருக்கும் அமைப்புகள் ஈகோ அடிப்படையில் இதை சிதைக்கவே முயலும். அதிலும் சிற்சில கருத்து வேறுபாடுகளுடன் மட்டும் திகழும் அமைப்புகள் நிறையவே உண்டு. அவற்றுடன் ஒத்த கருத்தை உருவாக்கி திறம்பட நடத்தல் என்பது மிகப்பெரிய வேலைதான். இப்போதைக்கு நம்மால் இயன்றது இணையத்தில் இவற்றைப் பதிந்து, இவை சரிதானா என்று விவாதிப்பது மட்டுமே.

  13. Ganpat சொல்கிறார்:

    நண்பர்கள் காவிரிமைந்தன் மற்றும் ரிஷிக்கு வணக்கம்.
    எங்கும் ஊழல்,எதிலும் ஊழல் என்றிருக்கும் இன்றைய கால கட்டத்தில் மக்கள் உண்மை நிலை அறிய நம்பியிருக்கும் செய்தித்தாள்களும் செய்திகளைத்திரித்து போடும்போது உண்மையான ,நடுநிலையான செய்திகளை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதே பிரச்சினைக்கு ஒரு வகை தீர்வு என ஆகிவிட்டது.உதாரணத்திற்கு முல்லைப்பெரியார் விவகாரத்தில் காவிரிமைந்தன் பதிவைப்படித்து தெளிவடைந்த பல பேர்களில் நானும் ஒருவன்.இது மிகப்பெரிய ஊடகங்களான ஹிந்து ,டைம்ஸ் of இந்தியா நாளிதழ்களிலும் சரியாக போடப்படவில்லை.
    மேலும் நாம் (இந்தியர்கள்) எதிர்நோக்கும் பிரச்சினை மிக சிக்கலானது.சுருக்கமாக சொன்னால் வேலியே பயிரை மேயும் பிரச்சினை.இரண்டொரு முறை வேலியை மாற்றியும் பயனில்லை.ஒரு அப்பாவி இந்தியன்,”ஐயா! நீங்கள் காங்கிரஸ்,பிஜேபி,இரண்டும் சரியில்லை என்கிறீர்கள்.
    நான் யார்க்கு ஓட்டளிப்பது?எவ்வாறு ஓட்டளிப்பது என சொல்லுங்கள்” என்று நம்மை கேட்டால் அதற்கு விடை நம்மிடம் இல்லை.கடந்த 60 ஆண்டுகளில் தீயவை அனைத்தையும் அடையாளம் காட்ட முடிந்த நம்மால் ஒரு நல்லதைக்கூட அடையாளம் காட்ட இயலவில்லை.
    இத்தகைய இருள் சூழ்ந்த நிலையில்,ஒரே ஒரு வெளிச்சம்! வலைத்தளம் வந்தது முதல் பலரிடம் கருத்து பரிமாற்றம் சிறப்படைந்து விழிப்புணர்வு பெருகி வருகிறது.இது தொடர்ந்து பயன் அளிக்க மேலும் ஒரு இருபது முப்பது ஆண்டுகள் ஆகலாம் பொறுத்திருக்க வேண்டியதுதான்!!

  14. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    மிக்க நன்றி கண்பத்.

    நீங்கள் சொல்லும் அந்த முல்லைப்பெரியாறு
    அணை பற்றிய இடுகையை இந்த வலைத்தளத்தில்
    மட்டும் இதுவரை 5731 பேர் படித்திருக்கிறார்கள்
    என்கிற wordpress நிறுவனம் தரும்
    புள்ளி விவரம் எனக்கே ஆச்சரியத்தையும்,
    மகிழ்ச்சியையும் கொடுக்கிறது.

    அதிகம் பேரைச் சென்றடையும்போது
    தான் அதன் உழைப்பிற்கு உண்மையான பலன்
    கிடைக்கிறது இல்லையா ?

    மற்றபடி, நீங்கள் சொல்வது போல் –
    கருத்துப் பரிமாற்றம் ஒன்று தான்
    நம் கண் முன் தெரியும் ஒரே பலன்.

    ஒத்த கருத்துடைய (சில விஷயங்களிலாவது !)
    சில மனிதர்கள் இணைவது இன்னொரு பலன்.

    இதையும் தாண்டி – வேறு நல்ல பயன்கள்
    ஏதேனும் ஏற்படுமானால் அது பெரிய
    ஆச்சரியம் என்று தான் சொல்ல வேண்டும் !

    -வாழ்த்துக்களுடன்
    காவிரிமைந்தன்

  15. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    பின் குறிப்பு –

    சில இடுகைகளில் –
    யாரை மையப்படுத்தி எழுதுகிறோமோ –
    அவர்களே படித்து விட்டு
    விளக்கம் கொடுப்பதும் இன்னொரு வகையில் பயனுள்ளதாக
    இருக்கிறது ( உம் – திரு ஞானி, நாஞ்சில் நாடன் )
    – இல்லையா ?

    நன்றி.
    காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.