காஸ்டியூம் கிங்ஸ் -ஒப்பனை மன்னர்கள் ..?

காஸ்டியூம் கிங்ஸ் -ஒப்பனை மன்னர்கள் ..?

நான்பாட்டிற்கு  தொடர்ந்து சீரியஸாக கட்டுரைகள்
எழுதிக்கொண்டே வருகிறேன்.
ராணிப்பேட்டையிலிருந்து ஒரு நண்பர் போனில்
பேசினார். “உங்கள்  வலையில் வருபவற்றை
எல்லாம் படிக்கும்போது ரொம்ப கோபம், கோபமாக
வருகிறது -ஒரே டென்ஷனாகி விடுகிறது”
என்றார்.

இந்த கட்டுரைகளுக்கான விஷயங்களை சேகரிக்கும்
போதும், எழுதும்போதும்நானும் தான்
டென்ஷனாகி விடுகிறேன்.

என்னடா இது. நாமும் டென்ஷனாகி,
படிப்பவர்களையும் டென்ஷனாக்கி – தேவையா இது ?
என்று என்னையே கேட்டுக்கொண்டேன்.

உபயோகம் இல்லாத விஷயங்களை எழுதவும்
மனம் வர மாட்டேனென்கிறது.
அதே சமயம் B.P.யும் எகிறாமல் பார்த்துக் கொள்ள
வேண்டும். என்ன பண்ணுவது ?

கடைசியாக ஒரு சமாதானத்திற்கு(compromise)
வந்தேன் -சீரியஸுக்கு நடுவே -அவ்வப்போது,
கொஞ்சம் காமெடியாகவும் எழுத –
முயற்சி செய்வது என்று.

இதோ  ஒரு முயற்சி –

அந்த காலத்தில், சினிமா நடிகர்கள் எல்லாம் படத்திற்கு
படம் வித்தியாசமாகத் தோற்றமளிப்பார்கள். (இப்போது
அநேகமாக அந்த பழக்கம் போய் விட்டது ).
போட்டோவில் உள்ள காஸ்டியூமை பார்த்தே அது எந்தப்
படம் என்று சொல்லி விட முடியும்.

இங்கே பாருங்களேன் –
இந்த படத்தில் சிவாஜி காஸ்டியூமை பார்த்தவுடனேயே
சொல்லி விட முடியும் – இது உத்தம் புத்திரன் என்று.

அதே போல் – எம்ஜிஆரின் இந்த புகைப்படத்தை
பார்த்தவுடன் சொல்லி விடலாம் இது நாடோடி மன்னன் என்று.

நடிகர்கள் கைவிட்ட பழக்கத்தை இப்போது அரசியல்வாதிகள்
எடுத்துக் கொண்டு விட்டார்கள்.
இப்போது வட இந்தியாவில் 5 மாநிலங்களில் தேர்தல்.
தலைவர்கள் எல்லாம் பிஸியாக, மாநிலம் மாநிலமாகச்
சுற்றி வருகிறார்கள்.

அவர்கள்  புகைப்படத்தையும், அதில் காஸ்டியூமையும்
பார்த்தவுடன் சொல்லி விடலாம் – அவர்கள் இப்போது
எந்த மாநிலத்தில் இருக்கிறார்கள் என்று.

இதோ சாதாரணமாக பிரியங்கா காந்தி –

இதுவே -ஓ புடவையா ? அப்ப இது உத்திரப்பிரதேசம்.

இதோ சாதாரணமாக   ராகுல் காந்தி –

இது ? தாடியும், டர்பனும் –
பார்த்தாலே தெரியுமே -அப்போ இது பஞ்சாப்.

இதோ சாதாரணமாக சோனியா காந்தி –

இது ? தாடியும், டர்பனும் பெண்களுக்கு
பொருந்தாது.  எனவே நீண்ட கத்தி ! –
இதுவும் பஞ்சாப் தான்.

பின்குறிப்பு – நமக்கு தான் நம் தமிழக
அரசியல்வாதிகளை
வித்தியாசமாகப் பார்க்க கொடுத்து
வைக்கவில்லை.
ஒருவேளை அவர்களும், ஒரு நாள் அகில
இந்திய அளவில் தேர்தல் பிரச்சாரம்
செய்ய நேர்ந்தால் – அவர்கள்
காஸ்டியூம் எப்படி இருக்கும் –
யோசித்துப் பாருங்களேன் !

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.