கோபாலகிருஷ்ணன் கேட்டபோதே கொடுத்திருந்தால் – உதயகுமார் கேட்கும் நிலை வந்திருக்காதே !

கோபாலகிருஷ்ணன் கேட்டபோதே கொடுத்திருந்தால் -
உதயகுமார் கேட்கும் நிலை வந்திருக்காதே !

இடுகையின்  தலைப்பு மட்டும் தான் என்னுடையது !
உள்ளடக்கம் கீழே உள்ள இரண்டு  செய்திகளில் –
(news items  )- உள்ளது.
படித்தால் முழு விவரமும் உங்களுக்கே தெரிய வரும் !


முதலாவது   -  மாலை மலர் நாளிதழிலிருந்து -

இரண்டாவது  -   தினகரன்  நாளிதழிலிருந்து -
news item from
dinakaran – 27/02/2012

அமைச்சர் நாராயணசாமி புகார் -

“சோனியாவின் வருவாய் பற்றி
உதயகுமார் கேட்கிறார்”

உதயகுமாருக்கு வெளிநாட்டிலிருந்து நிதி
வந்துள்ளதாகவும், ஸ்வீடன் தொண்டு அமைப்பிலிருந்து
உதயகுமார் அமைப்பிற்கு நிதி பெறப்பட்டுள்ளதாகவும்
அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
சாக்கர் என்ற அமைப்பில்,
உதயகுமார் மற்றும் அவரது மனைவி உறுப்பினர்களாக
உள்ளனர். சாக்கர் அமைப்பிற்கு ரூ.5 கோடியே
32 லட்சம் நிதி வந்துள்ளது.
கூடங்குளம் எதிர்ப்பு போராட்டக் குழு தலைவர்
உதயகுமார் பணம் பற்றி கணக்கு கேட்டால்,

சோனியாவின் வருவாய் பற்றி
உதயகுமார் கேட்கிறார் -

என்றும் தனி நபர் வருவாய் பற்றி கணக்கு கேட்க
வருமான வரித்துறைக்கு மட்டுமே
அதிகாரம் உண்டு எனவும் வழக்கை சட்டப்படி
எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் அமைச்சர்
நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to கோபாலகிருஷ்ணன் கேட்டபோதே கொடுத்திருந்தால் – உதயகுமார் கேட்கும் நிலை வந்திருக்காதே !

  1. smtvkendra says:

    அமைச்சரின் புகார் ஏற்றுக்கொள்ளதக்கதாக இல்லை. ஒரு பழமொழிதான் நினைவுக்கு வருகிறது. மாமியார் உடைத்தால் மண் குடம்.?

  2. எழில் says:

    உதயகுமார் பற்றி பல்வேறு கருத்துக்கள் பலர் சொன்னாலும் ஒரு போராட்டத்தை தலைமை ஏற்று பெரிய ‘தலைகளுடன்’ மோதுவது என்பது சாதாரண காரியம் அன்று. இவ்வகையில் அவர் மீது ஒரு மதிப்பு ஏற்படுவதை தவிர்க்க இயலவில்லை. (கவனிக்க: அவர் செய்வது சரி என்று நான் கூற வரவில்லை)

  3. சைதை அஜீஸ் says:

    எப்போது “பொது”வாழ்க்கைக்கு வந்தாகிவிட்டதோ பிறகு “தனி”வாழ்க்கை எல்லாம் இல்லை என்பதை இவர்களுக்கு யார் புரியவைப்பது?
    இந்த லட்சணத்தில் காமராஜ் ஆட்சி… கத்திரிக்காய் ஆட்சின்னு வேற ஃபிலிம் காட்டுறானுங்க!

  4. சவுக்கடி சந்திரகாந்தா says:

    செய்தி -

    ஜெர்மானியர் நாகர்கோயிலில்(கூடன்குளத்திற்கு
    மிக அருகே) கடந்த 30 நாட்களாக ஒரு
    ஓட்டலில் தங்கி இருக்கிறார்.

    உதயகுமார் -
    அந்த ஜெர்மானியரை 4-5 வருடங்களுக்கு முன்
    சந்தித்திருக்கிறேன். ஆனால் அவருடன்
    தொலைபேசியில் பேசியே ஒரு வருடத்திற்கு மேல்
    ஆகி விட்டது.

    செய்தி -
    ஜெர்மானியர் கடந்த சில வருடங்களில்
    12 முறை நாகர்கோயில்
    ஏரியாவிற்கு வந்திருக்கிறார்.
    டூரிஸ்ட் விசாவில் வந்திருக்கிறார்.
    ஆனால் அதற்கு பொருத்தமில்லாத வேலைகளைச்
    செய்திருக்கிறார். அவர் மடிக்கணினியில்
    கூடங்குளம் அணுமின் உலை பற்றிய புகைப்படங்கள்
    இருக்கின்றன. சென்ற முறை வந்தபோது,
    கூடங்குளத்தில் நடந்த மெழுகுவர்த்தி போராட்டத்தில்
    அவரும் கலந்து கொண்டிருக்கிறார். அது தொடர்பான
    புகைப்படங்கள் கிடைத்திருக்கின்றன.

    உதயகுமார் -
    அவர் ஒரு இந்தியா விரும்பி.நம் நாட்டின் மீது
    அவருக்கு மிகவும் பிரியம். ஒரு முறை நான் நடத்தும்
    பள்ளியின் விழா நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்து
    கொண்டிருக்கிறார்.

    செய்தி -
    சாக்கர் என்ற அமைப்பில்,
    உதயகுமார் மற்றும் அவரது மனைவி உறுப்பினர்களாக
    உள்ளனர். சாக்கர் அமைப்பிற்கு ரூ.5 கோடியே
    32 லட்சம் நிதி வந்துள்ளது.

    உதயகுமார் -
    அமைச்சர் நாராயணசாமியும், மத்திய அரசும்
    எங்களை அவமானப்படுத்துகிறார்கள். எங்களுக்கு
    எங்கிருந்தும் பண உதவி வருவதில்லை. பீடி சுற்றும்
    பெண்களும், மீனவர்களும் தங்கள் வருமானத்தில்
    பத்து சதவீதம் இந்த போராட்டச் செலவுகளுக்காக
    கொடுக்கிறார்கள்.

    நான் என்னுடைய மற்றும் என் மனைவியுடைய
    பேங்க் பாஸ்புக்கை முதல்வரிடம் காட்டுவதற்காக
    வைத்திருக்கிறேன். எந்த வெளிநாட்டிலிருந்தும்
    எங்கள் கணக்குக்கு பணம் வரவில்லை என்பதை
    இதிலிருந்தே பார்த்துக் கொள்ளலாம்.

    செய்தி -
    தூத்துக்குடி பல்நோக்கு சேவை சங்கம், கடல்சார்
    மக்கள் கூட்டமைப்பு, கிறிஸ்தவ வாழ்வுரிமை
    இயக்கம்,வ்டியல், வ்ர்ல்ட் விஷன், ஸ்டீபன்
    அறக்கட்டளை, ரூரல் அப்லிப்ட் செண்டர்
    போன்ற தூத்துக்குடி, நெல்லை, கன்யாகுமர்
    மாவட்டங்களைச் சேர்ந்த தொண்டு நிறுவனங்களுக்கு
    கடந்த சில வருடங்களில் வெளிநாடுகளிலிருந்து
    நிறைய பணம் வந்திருக்கிறது. இந்த பணம்
    மறைமுகமாக அணுமின் நிலைய எதிர்ப்பு
    இயக்க பணிகளுக்காக செலவழிக்கப்பட்டிருக்கிறது.

    பெண்கள் சுய உதவி குழுக்களைத் திரட்டி,
    ஒவ்வொரு குழுவுக்கும் தலா இரண்டு லட்சம் ரூபாய்
    வீதம் நிதியுதவி கொடுத்து, 150 குழுக்களைச்
    சேர்ந்த 3000 பெண்களை இந்த போராட்டங்களில்
    பங்கேற்க வைத்துள்ளார்கள்.

    உதயகுமார் -
    இதெல்லாம் திசை திருப்பும் முயற்சி.
    எங்கள் மக்களை பயமுறுத்தும் முயற்சி.
    இந்த மக்கள் அணு உலையினால் ஏற்படக்கூடிய
    விளைவுகளை எண்ணி அஞ்சுகிறார்கள்.
    யார் என்ன சொன்னாலும் சரி – கூடங்குளம்
    அணு உலையை இழுத்து மூடும் வரை எங்கள்
    போராட்டம் தொடரும்.

    முடிவுரை -
    ஆப்பிரிக்காவில் 7 வருடம், அமெரிக்காவில்
    9 வருடம் இருந்த உதயகுமார் இந்த கூடங்குளம்
    மக்களின் துயர் கண்டு தான் அங்கிருந்து
    இடம் பெயர்ந்து இங்கேயே வந்து, பல தொண்டு
    நிறுவனங்களை உருவாக்கி, நடத்திக் கொண்டு -
    யாரிடமிருந்தும் எந்த நிதியுதவியும் இல்லாமல்
    இந்த மகத்தான போராட்டங்களை நடத்திக் கொண்டு
    இருக்கிறார். நம்புவோமாக.

  5. லால்குடி நாராயணன் says:

    சவுக்கடி சுளீர் !

    ஆனால் காவிரிமைந்தன் சார் – நீங்கள்
    உதயகுமாரை ஆதரித்து எழுதுவீர்கள்
    என்று நான் எதிர்பார்க்கவே இல்லை.

  6. vimarisanam - kavirimainthan says:

    அட நாராயணா ! (மன்னிக்கவும்)

    நான் எங்கே ஆதரித்தேன் ?

    தயவுசெய்து,
    மீண்டும் ஒரு தடவை இடுகையை
    படித்துப் பாருங்கள்.

    இரண்டு செய்திகளை இணைத்து,
    இடுகைக்கு ஒரு தலைப்பு எழுதியதைத் தவிர
    வேறு எந்தப் பாவமும் நான் பண்ணவில்லையே !

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s