இவர்கள் எல்லாரும் வசதியான பெரிய இடத்துப் பிள்ளைகள் – பின் ஏன் இப்படி ….?

இவர்கள் எல்லாரும் வசதியான
பெரிய இடத்துப் பிள்ளைகள் –
பின் ஏன் இப்படி ….?

வட இந்திய பத்திரிகைகள், ராஜஸ்தான் மாநிலத்தில்
108 ஆம்புலன்ஸ் சேவை புரியும் “சிகிட்சா” என்கிற
நிறுவனத்தின் மூலம் நிகழ்த்தப்பட்டுள்ள ஊழல்கள்
பற்றி பெரிய அளவில் எழுதுகின்றன.


இந்த நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகள்  –

கார்த்தி ப.சிதம்பரம்,
சச்சின் பைலட்,
ரவிகிருஷ்ணா (மத்திய அமைச்சர் வயலார் ரவி
அவர்களின்  மகன் ),
ரவிகிருஷ்ணாவின் மனைவி,
ராகுலின் முன்னாள் செயலர் ஷபிமாதர்

இந்த நிறுவனம் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ள
சில மாநிலங்களில் ஆம்புலன்ஸ் சேவை நடத்த
உரிமை பெற்றுள்ளது. தாங்கள் செய்யும் “சேவை”க்கு,
பில் போட்டு மாநில அரசுகளிடம் பணம் பெற்று
வருகிறது. இது மத்திய அரசின் நிதியுதவியைப்
பெறும் திட்டம் என்பதால், மத்திய அரசில்
செல்வாக்குள்ளவர்கள் மூலம், இந்த நிறுவனம் –
காங்கிரஸ் கட்சி ஆட்சி நடத்தும் 8 மாநிலங்களில்
இந்த சேவையை நடத்த உரிமம் பெற்றுள்ளது
என்பதும் ஒரு குற்றச்சாட்டு.

அந்த சேவையில் பல குறைபாடுகள் உள்ளன என்றும்,
அரசை ஏமாற்றி பல விதங்களில் போலியான
ரசீதுகளைக் கொடுத்தும்,
ஒரே நோயாளியை பல இடங்களில் கணக்கு காட்டியும்,
ஓடாத ஆம்புலன்ஸ் களுக்கு பணம் பெற்றதாகவும்,
ஒரு நாள் – ஒரே ஆம்புலன்ஸில் 243 நோயாளிகளை
மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றதாகக் கூறி
கணக்கு காட்டியதாகவும் –
செப்டம்பர் 2011ல் 37,000 ஆம்புலன்ஸ் ட்ரிப்புகள்
நடத்திவிட்டு,  55,000 ட்ரிப்புகள் நடந்ததாக
பில் போட்டிருப்பதாகவும் – பலவித குற்றச்சாட்டுகள்
கூறப்பட்டுள்ளன. பாஜக செயலாளர் கிரத் சோமய்யா
இது பற்றி உரிய விசாரணை நடத்த வேண்டும்
என்று, ராஜஸ்தான் கவர்னர் சிவராஜ் பாடீலிடமும்,
பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் வேண்டுகோள்
விடுத்துள்ளார்.

தமிழ் செய்தித்தாள் ஒன்றில் இது குறித்து
நேற்றைய தினம் வெளிவந்த செய்தி கீழே –

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

10 Responses to இவர்கள் எல்லாரும் வசதியான பெரிய இடத்துப் பிள்ளைகள் – பின் ஏன் இப்படி ….?

  1. Padmanabhan Potti சொல்கிறார்:

    நூற்றி எட்டு ஆம்புலன்ஸ் ஊழல் குறித்து படிக்கும்போது சுமார் இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன்னர் இல்லாத
    நபர்களை வேலை செய்ததாக கூறி அவர்களுக்குரிய சம்பளத்தை ‘ லபக்’ பண்ணினார்கள். அந்த காலத்தில் மிகவும்
    பரபரப்பாக வாத பிரதிவாதங்கள் நடைபெற்று தற்போது முழுமையாக மறக்கப்பட்டு விட்டது. அதுதான் சென்னை கார்ப்பரேஷன் மஸ்டர் ரோல் ஊழல். .தற்போது ஊழல் பாரதம் முழுக்க பரவிவிட்டது. யாராலும் ஒன்றும் செய்ய
    முடியாது. பன்றி காய்ச்சல் மாதிரி தொத்துநோய் உலகம் முழுக்க பரவிகொண்டேயிருக்கிறது ஊழல் ஊழல் என்று
    நாம் புலம்பிக்கொண்டேயிருக்க வேண்டியதுதான்..

  2. R.Gpalakrishnan சொல்கிறார்:

    Dear Mr.KM,
    Why you are yet to write about recent drama of JJ and Sasi. Don’t you feel the awkwardness
    in their ugly drama. Or are you pro JJ. Still you have faith in our system change. Of course,
    I do believe, it is a reverse belief. What a shame.

  3. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    Dear Mr.Gopalakrishnan,

    I have written many times earlier –
    (probably you have not read them )

    I do not belong to any political party.
    and as such –
    I have absolutely no necessity
    to support any particular leader
    or party.

    I believe/work on my own “மனசாட்சி”

    However, I have got my own order of
    priorities in choosing matters/topics
    for writing. I go by that !

    ————

    Regarding loosing faith
    in the system –

    I would simply ask you –
    You are an elderly person –
    don’t you believe in the saying –

    “தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் –
    முடிவில் தருமம் வெல்லும்”

    -with all best wishes,
    kavirimainthan

  4. ராஜராஜ சோழன் சொல்கிறார்:

    காவிரிமைந்தன் சார்,

    கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு இதையும்
    சொல்லி விடுங்களேன் ! –

    “முதலில் இந்த நாட்டு மக்களுக்கு தெளிவு
    பிறக்க வேண்டும் !
    பிரிட்டிஷ்காரர்களிடமிருந்து சுதந்திரம் பெற்றது –
    இத்தாலிக்காரர்களிடம் அடகு வைக்க அல்ல என்பது
    அவர்களுக்குப் புரிய வேண்டும் !
    எல்லாவற்றையும் கண்டும் காணாமல்,
    சகித்துக் கொண்டு போவதற்கு பதிலாக –
    நம் உரிமைகள் என்ன – அவற்றைப் பெறுவது
    எப்படி என்று மக்கள் யோசிக்க வேண்டும் !”

    கா.மை.சார் – தொடர்ந்து உற்சாகமாக எழுதுங்கள்.
    உங்களுக்கு தோன்றுவதை எல்லாம் எழுதுங்கள்.
    நீங்கள் எழுதுவது எல்லாம் அருமை.எதாவது
    ஒரு விதத்தில் பயனுள்ளதாகவும் இருக்கிறது.
    நன்றி.

  5. R.Gpalakrishnan சொல்கிறார்:

    Dear KM,
    For your information, I read every article you write minimum 3 times every day. I get restless when I don’t find a new article every day. Of course, you have your own priority which I don’t deny. I understand from your every word that you don’t have any political affiliation. That is why I care to read your articles eagerly. If I hurt your feelings in any way, I tender my apology Sir.My comment is due to my total inability, time running out very fast etc., On who else I can show my
    legitimate anger Mr.KM other than you? Kindly inform Mr.RR.Chozhan, that I was born during
    British rule and this country will never be pledged to a single Italian.

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      Dear Mr.Gopalakrishnan,

      Absolutely no problem.
      I am able to understand you.

      Actually You need some sort of
      ventilation for letting out
      your feelings / thoughts.

      I will suggest –
      You make use of this platform –
      You can express your feelings/thoughts
      on any social/political/economical
      issues of importance on this blog
      itself.
      When you share your feelings with
      others – you will feel lighter !

      Try !

      -with all best wishes,
      kavirimainthan

  6. ரிஷி சொல்கிறார்:

    //“முதலில் இந்த நாட்டு மக்களுக்கு தெளிவு
    பிறக்க வேண்டும் !
    பிரிட்டிஷ்காரர்களிடமிருந்து சுதந்திரம் பெற்றது –
    இத்தாலிக்காரர்களிடம் அடகு வைக்க அல்ல என்பது
    அவர்களுக்குப் புரிய வேண்டும் !
    எல்லாவற்றையும் கண்டும் காணாமல்,
    சகித்துக் கொண்டு போவதற்கு பதிலாக –
    நம் உரிமைகள் என்ன – அவற்றைப் பெறுவது
    எப்படி என்று மக்கள் யோசிக்க வேண்டும் !”//

    அன்புள்ள ராஜராஜ சோழன்,
    மேற்குறிப்பிட்டது ஒரு பொத்தாம்பொதுவான ஸ்டேட்மெண்ட் அல்லது அட்வைஸ். குறிப்பிட்ட ஒரு பிரச்சினையை எடுத்துக்கொண்டு அதற்குத் தீர்வாக நீங்கள் எதை முன்வைப்பீர்கள் என்பதை அலசினால் நாம் தேர்ந்தெடுக்கும் பாதை எத்தகையது என்ற தெளிவு பிறக்கும்.

    காவிரி மைந்தனும் தர்ம, அதர்மங்களின் விளைவுகள் ‘இறுதியில்’ எப்படி இருக்கும் என்பதற்கு நம்பிக்கை வைத்திருக்கிறார். நம்புதல் என்பது ஒரு பொதுவான விஷயம். உறுதியாக நடந்துவிடும் என்றோ, நடக்கவே நடக்காது என்றோ சொல்லிவிட முடியாதபட்சத்தில், ‘நல்லது நடக்கவேண்டும்’ என்று நம் மனம் விரும்புவதால் இந்த ‘நம்புதலுக்கு’ மனம் ஆட்படுகிறது.

    ஆக, சரியான தீர்வுகளைக் கண்டுணர்ந்து அவற்றை செயற்படுத்துதற்கான முயற்சிகளில் இறங்கி, தன்முனைப்போடு குழுக்குழுவாய் எல்லோரும் இயங்கும்போது அந்த ‘நம்புதலுக்கு’ போதுமான வலிமை சேரும். ஆனால் அரசியலற்ற மக்களால் இது சாத்தியப்படும் என்று நினைக்கிறீர்களா?

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்பர் ரிஷி,

      இன்றைய இடுகைக்கு உங்கள் பின்னூட்டம்
      தான் காரணம் – பாருங்கள் !

      -வாழ்த்துக்களுடன்
      காவிரிமைந்தன்

  7. பிரபுவின் சொல்கிறார்:

    சிதம்பரம் எப்படிப்பட்ட கிருமி என்று தெரியும். மகனைப் பற்றி சொல்லவா வேண்டும்.

  8. Padmanabhan Potti சொல்கிறார்:

    பதினைந்து வருடங்களாக இணைந்து இருந்தவர்களால் பிரிவு என்பது மிகவும் சிரமமான காரியம். நட்புக்கு இலக்கணம் வகுத்தவர் மேலும் வகுத்துக்கொண்டு இருப்பவர் ஜெயலலிதாவும் சசிகலாவும். என்னதான் தவறு செய்தாலும் மூன்று மாதத்துக்குமேல் பிரிந்து இருக்கமுடியாது. சசிகலாவின் உறவினர்கள் வழக்குகளும் மக்கள் மறந்தவுடன் புஸ்வாணமாகி விடும். இதுபோல்தான் எல்லா ஊழல்களும் 108 –ஆம்புலன்ஸ் உள்பட எதிர்காலத்தில் மறக்கப்பட்டு விடும். ஆளும் கட்சிகள் நேற்று செய்ததெல்லாம் இன்று ஊழல். இன்று செய்வதெல்லாம் நாளை ஊழல். விளம்பரத்துக்காக மேற்கொள்ளுவதுதான் இந்த ஊழல் நடவடிக்கைகள். எந்த
    விளைவுகளும் உண்டாக போவதில்லை. .மனதில் உள்ளதை கொட்டிவிட்டேன். எதிர்காலம் நோக்கி காத்திருப்போம்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.