100 ஆண்டுகளாக ஸ்காட்லாந்தில் மறைந்திருந்த பிரிட்டிஷ் காலத்து இந்திய புகைப்படங்கள் ……

100 ஆண்டுகளாக ஸ்காட்லாந்தில் மறைந்திருந்த பிரிட்டிஷ் காலத்து இந்திய புகைப்படங்கள் ……

மிகவும் சுவாரஸ்யமான ஒரு தற்செயலான கண்டுபிடிப்பு ஸ்காட்லாந்தின் அருங்காட்சியகம் ஒன்றில் நிகழ்ந்துள்ளது.

மிகப்பழைய பெட்டகம் ஒன்றைத்திறந்து பார்த்தபோது 178 புகைப்படங்களின் நெகடிவ்கள் ஒரு செய்தித்தாளில் சுற்றப்பட்டு வைக்கப்பட்டுள்ளது  தெரியவந்துள்ளது.

அதை டிஜிட்டல் முறையில் பிரிண்ட் போட்டுப் பார்த்திருக்கிறார்கள். ஆச்சரியம் ஒன்று காத்திருந்திருக்கிறது ! 1912 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரும் ராணி மேரியும் இந்தியாவிற்கு விஜயம் செய்தபோது கல்கத்தாவிலும் மேலும் சில நகரங்களிலும்  எடுக்கப்பட்ட கருப்பு வெள்ளை  புகைப்படங்கள்  தான் அவை.

அவை எப்படி ஸ்காட்லாந்து அருங்காட்சியகத்தை சென்று சேர்ந்தன என்பதை அவர்களால் கண்டு பிடிக்க முடியவில்லை. அந்த நெகடிவ்கள் 1912 ஆம் வருடத்திய – கல்கத்தாவிலிருந்து வெளிவரும் ஸ்டேட்ஸ்மேன்  ஆங்கில பத்திரிகைத்தாளில் சுற்றப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கின்றன. எனவே, அவை 1912 ஆம் ஆண்டு கல்கத்தாவிலிருந்து வந்திருக்க வேண்டும் என்பது தெரிகிறது.  ஆனால் இந்த புகைப்படங்களை எடுத்தவர் யார் என்பது போன்ற விவரங்கள் கிடைக்கவில்லை.

நமது தாத்தாவிற்கு தாத்தா காலத்திய உடைகள், அலங்காரங்கள், கடைகள், ஆற்றங்கரை, விழாக்கள் எல்லாம் எப்படி இருந்தன என்பதை ஆதாரபூர்வமாக நினைவுபடுத்தும் ஒரு பொக்கிஷம் இது.

சுவாரஸ்யமான அந்த புகைப்பட கத்தையிலிருந்து – மாதிரிக்கு சில படங்களைக்  கீழே கொடுத்திருக்கிறேன்.

தேர்ந்தெடுக்கப்பட்ட நாற்பது படங்கள் ஆன்லைனில் காணக்கிடைக்கின்றன. அவற்றைக் காண்பதில் ஆர்வம உடையோர் கீழ்கண்ட வலைத்தளத்திற்கு விஜயம் செய்யவும்  –

http://www.rcahms.gov.uk/news/lost-imagery-of-india-discovered

(கல்கத்தாவின் டல்ஹௌசி ஸ்கொயர் என்கிற இடம் பிரிட்டிஷ்  மன்னர் குடும்பத்தின் வருகையை முன்னிட்டு ஒளி விடும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மின்னுவதை பிரதிபலிக்கிறது )-

( சாலை ஓரத்திலேயே நடமாடும் முடிதிருத்தகம் ) –

( கல்கத்தாவில் – இஸ்லாமியர் மொகரம் அனுசரிப்பின்போது )

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to 100 ஆண்டுகளாக ஸ்காட்லாந்தில் மறைந்திருந்த பிரிட்டிஷ் காலத்து இந்திய புகைப்படங்கள் ……

  1. மாசிலா சொல்கிறார்:

    அனைத்து படங்களும் அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  2. விச்சு சொல்கிறார்:

    super collection.பதிவுனூடே தெரியப்படுத்தியமைக்கு நன்றி.

  3. ஆர்.ராமமூர்த்தி சொல்கிறார்:

    சார் சூப்பர் படங்கள்!

  4. Padmanabhan Potti சொல்கிறார்:

    வெளிநாட்டில் இருக்கும் இது போன்ற அரிய படங்களை. ஆவணங்களை, பொருட்களை இந்திய அரசு
    இங்கு கொண்டுவர முயற்சி மேற்கொள்ளவேண்டும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.