அன்பழகன் நிஜமாகவே அய்யோ பாவமா ?

அன்பழகன் நிஜமாகவே அய்யோ பாவமா ?

நேற்றைய இரவு சென்னை புரசைவாக்கம் கூட்டத்தை
“நமது” கலைஞர் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு
செய்தார்கள் -பார்த்தேன்/கேட்டேன்.

பேராசிரியர் அன்பழகன் உரையில் உண்மையும்,
கற்பனையும், கலைஞர் பால் அவரது விசுவாசமும்
கலந்திருந்தன. முதலில் சில உண்மைகள் -

“தமிழ்நாட்டு மக்கள் சில நேரங்களிலே
ஏமாறுவது உண்மைதான். ஆனால்
தொடர்ந்து ஏமாற மாட்டார்கள்.
தமிழன் சிந்திக்கக் கூடியவன்தான்.
எண்ணிப்பார்க்கக் கூடியவன்தான்.
அடியோடு அறிவை இழந்தவிட்டவன் அல்ல.
ஆனால் சூழ்நிலை காரணமாக சில நேரத்தில்
தமிழக மக்கள் உண்மைகளை புரிநதுகொள்ள முடியாமலோ,
அறிந்துகொள்ள முடியாமலோ ஏமாந்துபோயிருக்கிறார்கள்.”

அடுத்து கலைஞர் மீது அவர் விசுவாசத்தை
வெளிப்படுத்த சில வார்த்தைகள் -

“கலைஞர் பெரியாருடைய சீடர் அது முதல் தகுதி.
அண்ணாவினுடைய தம்பி அது இரண்டாவது தகுதி.
மிகப்பெரிய எழுத்தாளர் அது அவருடைய சொந்த தகுதி.

சட்டமன்றத்திலே 12 முறை வெற்றி பெற்று வந்தவர்.
அது வேறு யாரும் பெறமுடியாத தகுதி.
பலமுறை குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கு
இன்னாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று முதன் முதல்
முன்மொழிந்த பெருமைக்குரியவர்”.

அடுத்து  முன்னைப்போல் கலைஞரை மதிப்பதில்லை
என்கிற மறைமுக குற்றச்சாட்டை மறுத்து -

“கலைஞர் முதல் அமைச்சராக இருந்தால் தான்
நான் மதிப்பேன் என்று கிடையாது.
அவர் வீட்டில் இருந்தாலும்,
ரோட்டில் நின்றாலும் நான் மதிப்பேன்.
முதல் அமைச்சர் இல்ல, பதவியே தேவையில்லை.
செல்வாக்கு என்பது தேர்தல் மூலமாக கிடைப்பதுதான்
என்று எண்ணக்கூடாது. தமிழுக்கு தொண்டு செய்தவர் -
அதற்கே அவரை மதிக்கலாம். தமிழனுடைய
இன உணர்வை வளர்த்தவர் அதற்கே மதிக்கலாம்.
கல்லக்குடி போராட்டத்திலே தலை வைத்து ரயில்
வருவதற்கு முன்பு தலை வைத்து படுத்தவர்
அதற்கே மதிக்கலாம். 16 வயதிலேயே இந்தி எதிர்ப்பு
போராட்டத்தில் ஈடுபட்டு கொடிபிடித்தவர் அதற்கே
மதிக்கலாம். தமிழ்நாட்டு தலைவர்களிலேயே
அதிக முறை சிறைச்சாலைக்கு சென்றவர்
அதற்கே மதிக்கலாம். சிறைச்சாலைக்கு போவதற்குக்கூட
புதுப் புது வழி கண்டுப்பிடித்தவர் அதற்கே மதிக்கலாம்”.

பாவம் பேராசிரியர் !

கலைஞர், அன்பழகன், நெடுஞ்செழியன்,
நாஞ்சில் மனோகரன -எல்லாரும் பேசுவதைக் கேட்க  
ஆவலுடன் மக்கள் கூடிய காலமும் இருந்தது.
அதில் நான் கூட ஒருவனாக இருந்தேன் !
அது ஒரு கனாக் காலம் !

இது அத்தனையும் சுயநலக்கூட்டம் -
தாங்கள்  பதவி பிடிக்க, பணம் சம்பாதிக்க, கவர்ச்சியாக,
அடுக்கு மொழியில் தமிழ் பேசி, சுயமரியாதை இயக்கத்தை
சொந்த சுகங்களுக்காக பயன்படுத்துவார்கள் என்று மக்கள்
கனவில் கூட நினைத்திராத காலம் அது.

அன்பழகனோ – அவரைச் சேர்ந்தவர்களோ
வலைத்தள பக்கமே போவதில்லை போலிருக்கிறது.
வந்தால் தெரிந்திருக்கும் – இன்றைய தமிழ் மக்களின்
மன நிலை என்ன என்பது.

அன்பழகன் என்ன தான் சொன்னாலும் -

இன்று “கலைஞர்” என்கிற பெயரை நினைத்தாலும்,
சொன்னாலும் -

1,76,000 கோடி -
2ஜி ஸ்பெக்ட்ரம் ராஜா,
கனிமொழி,
தா.கி. படுகொலை,
தினகரன் பத்திரிகை அலுவலகம் எரிப்பு
“கண்கள் பனித்தன -இதயம் இனித்தது” குடும்ப நிகழ்வு
முள்ளிவாய்க்கால் படுகொலைகள்,
காலைச்சிற்றுண்டிக்கும் – மதிய உணவுக்கும் இடையே
அவர் கொண்ட உண்ணாவிரத நோன்பு,
குடும்ப வளர்ச்சி -
சோனியா காந்தியுடன் கை கோர்த்துக்கொண்டு -
ஈழமக்களை அழித்தது -
தமிழினத்தலைவன்  என்று சொல்லிக்கொண்டு,
தமிழர்களை அநாதைகளாக, அகதிகளாக ஆக்கியது,
மஞ்சள் துண்டு போடும் மகிமை,
திருட்டு லாட்டரி மார்டின் நட்பு,
“கலாம்” என்றால் “கலகம்” அர்த்தம் கண்டுபிடிப்பு
போன்றவை தான்
நினைவிற்கு வருகின்றன.

நெஞ்சில் என்றும் பதிந்திருக்கும் புகைப்படங்கள்
சில மேலெழுந்து வருகின்றன -

என்ன செய்வது ? மன்னிக்க வேண்டும் பேராசிரியரே -
உங்கள் பேச்சை எங்களால்
ஏற்றுக் கொள்ள முடியவில்லை !! நிலைமையை
புரிந்து கொண்டு நீங்கள் “ரிடையர்” ஆவது தான்
உங்களுக்கு இருக்கிற மரியாதையையாவது
தக்க வைக்கும்.

About these ads
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

அன்பழகன் நிஜமாகவே அய்யோ பாவமா ? க்கு 11 பதில்கள்

  1. உண்மைத் தமிழன் says:

    ஹையோ ஹையோ, காவிரிமைந்தன் சார்
    உண்மையில் நீங்க தான் அய்யோ பாவம் -
    அன்பழகனைப் போய் அப்பாவி என்கிறீர்களே !

    படத்தின் டைட்டிலில் துவங்கி இறுதியில் வணக்கம்
    கார்டு போடுவது வரை கூடவே இருந்த, இருக்கும்
    அசோசியேட் டைரக்டர் அன்பழகன். இவருக்கு ஒப்புதல்
    இல்லை என்றால் எப்பவோ வெளியே போயிருக்கலாமே
    யார் தடுத்தது ?

    கலைஞர் விளம்பர விரும்பி, இவர் காரியவாதி.
    தன் காரியம் நடந்தால் போதும்.
    அவர் குடும்பம் பெரிது, வெளியே தெரிந்தது.
    இவர் குடும்பம் சிறிசு, வெளியே தெரியாமல் காரியம்
    நடக்கிறது.

    • vimarisanam - kavirimainthan says:

      ஹையோ ஹையோ நண்பரே,

      நான் அன்பழகனை அப்பாவி என்று சொல்லவில்லை.
      அப்பாவி போல் தோற்றமளிக்கும் “அதி புத்திசாலி” அவர்.

      ந்ண்பர் கண்பத் சொன்னது
      -திருட்டுப் பொருளை வாங்கும் சேட்” – இன்னும் பொருத்தம் !

      தலைப்பு ஒரு “கவர்ச்சி”க்காக வைக்கப்பட்டது தான் !

      உங்கள் கருத்துடன் நான் முழுமையாக
      ஒத்துப்போகிறேன்.

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  2. எழில் says:

    இன்று செய்தியாளர்களுடன் பேசிய கருணாநிதி தான் தான் பிரணாப் பெயரை முதலில் பரிந்துரைத்தது போல் ஒரு தோற்றத்தை உருவாக்கியுள்ளார். மேலும் 30 ஆம் திகதி பிரணாப்புக்கு வரவேற்ப்பும் விருந்தும் திமுக வைக்க உள்ளது.

    உங்கள் ஞாபக திரையை சற்று பின் நோக்கி ஓட விடுங்கள். முல்லிவைகாலில் 2 இலட்சத்துக்கு மேற்பட்ட தமிழ் பெண்கள் குழந்தைகள் முதியவர் இளைஞர்கள் – வீடு, வைத்தியசாலைகள், பாடசாலைகள் என அனைத்தும் பாரிய குண்டுகளுக்கு இலக்கான நிலையில் உணவு தண்ணீர் அற்ற நிலையில் உயிரையாவது காப்பாற்றலாம் என்று ஒதுங்குவதற்கு சில வாரங்களுக்கு முன்பு நடந்தது இது.அப்போது cluster bombs எனும் கொத்து குண்டுகளை வீசிக் கொண்டு சிங்கள படை, பலத்த தமிழர்களின் சாவுகளுக்கு நடுவில் முல்லை தீவை நெருங்கி விட்டது.

    கருணாநிதி ‘உயிருக்கு ஆபத்தான’ தண்டு வட ஆபரேசன் என்று இராமச்சந்திரா மருத்துவ மனையில் ஜாலியாக மல்லாக்கா படுத்திருந்த நேரம். (அது என்னவோ 3 மணி நேர உண்ணாவிரத நாடகம் இந்த ஆபரேசன் நாடகத்தை மிஞ்சிவிட்டதால் பலரும் இதை நினைவில் வைத்திருப்பதில்லை).

    தமிழக மக்களும் மற்றும் சகல கட்சிகளும் கொடுத்த அழுத்தத்தால் அப்போதைய வெளியுறவு துறை அமைச்சர் பிரணாப், மத்திய அரசையே ஒரு வார்த்தையால் கவிழ செய்யக்கூடிய அதிகாரம் படைத்த கருணாநிதியுடன் தொலைபேசியில் பேசிவிட்டு தமிழ் மக்களின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கொழும்பு செல்கிறார்.

    போர் நிறுத்தம் வரும் என்று பெரிதும் எதிர்பார்த்த நிலையில் ராஜபக்சேவை சந்தித்து விட்டு திரும்பி வந்த பிரணாப் ஒரு அறிக்கை வெளியிட்டார். அது முழுக்க முழுக்க சிங்கள அரசு எழுதி கொண்டுத்தது போலவே இருந்தது. அதில் எங்குமே போர் நிறுத்தம் பற்றி பேசியதாக கூட இல்லை. போகிற போக்கில், போரில் அப்பாவி மக்கள் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று மட்டும் கேட்டுக்கொண்டதாக இருந்தது. பலத்த உயிரல்ப்புக்கு மத்தியில் மறுநாள் முல்லைத்தீவு விழுந்தது.

    ஆக, தமிழர்களை கருவறுத்த இரு துரோகிகளும் 30 ஆம் தேதி விருந்துண்டு களிப்புறுவார்கள்.

    எமது தலைவர் கை காட்டுபவர் தான் நாட்டின் அதிபர் என்று கழக உடன் பிறப்புகள் இறுமார்ப்பு எய்துவார்கள்.

    நானும் பிரனாப்பும் ஈழத்தமிழர் பிரச்சனையின் தீர்வு குறித்து ஒத்த கருத்தை கொண்டிருக்கிறோம் என்று அன்று மாலை கருணாநிதி அறிக்கை விடுவார்.

    எம்மை எல்லாம் ஒரு பைசாக்கு லாயக்கில்லாத அம்னீசியாவில் வாழும் மனிதர்கள் என்று காட்டும் வகையில் அவரது அல்லக்கைகள் சுபவீர பாண்டியன், திருமாவளவன் போன்றோருடன் தனி ஈழம் அமைக்க ‘டெசோ’ மாநாடு நடத்த போய்விடுவார்.

    நமக்கு தான் இந்த ஆளு தலை எழுத்து என்றால் ஈழ தமிழர்கள் என்ன பாவம் பண்ணினார்கள்! நெஞ்சு பொறுக்குதில்லை சார்!!

    நான் மேலே எழுதியதற்கு ஆதாரம்:
    http://articles.timesofindia.indiatimes.com/2009-01-28/chennai/28027966_1_parties-vck-leader-pranab-mukherjee

  3. srini says:

    மேலும் சில ………..
    இந்து என்றால் திருடன்
    நான் ஒரு ப்ரோகிதர்
    ஹிந்தி எதிருப்பு, ஹிந்தி யில் ஸ்டாலினிற்கு போஸ்டர்
    கடவுள் எதிர்ப்பு , கனி விடுதலைக்கு நவக்ராஹா பரிஹாரம்
    மானாட மயிலாட
    குஸ்பு, வடிவேலு , namitha
    sun tv , kalaignar tv,
    வீரமணி மனசாட்சி
    ராஜா என்னோட தம்பி மாதிரி
    துணைவி , இணைவி, மனைவி
    சாய் பாபா
    நில அபகரிப்பு
    வைரமுத்து ஜால்ரா
    நட்சத்திர கலைவிழா
    வீராணம்
    அறிவாலயம்
    சி. அய். டி. காலனி
    கோபாலபுரம்
    உடன்பிறப்பு கடிதம்
    பிரதமருக்கு கடிதம்
    முரசொலி

  4. Ganpat says:

    உண்மைத்தமிழன் சொல்லியிருப்பது முற்றிலும் உண்மை..
    கருணை is JUST having the cake whereas அன்பு is having it and eating it too.

    ஒருவர் ஊரறிந்த திருடன் போன்றவர் .மற்றவரோ யாரும் அறியாத ஆனால் அந்த
    திருடன் கொண்டு வரும் பொருட்களை வாங்கிக்கொள்ளும் சேட்டு போன்றவர்.

    பி சி சர்க்கார் மாயாஜால நிகழ்ச்சிக்கு போயிருக்கும் அனைவர்க்கும் தெரிந்திருக்கும்,அங்கு நடப்பது உண்மையல்ல வெறும் கண் கட்டு வித்தை என்று.
    ஆனாலும் மெய்மறந்து பார்த்தவண்ணம் இருப்போம்.

    கருணா அதைவிட சிறந்த ஒரு மாயாஜாலக்காரர்.
    அவர் செய்வது அனைத்தும் குற்றம்/பொய் என தெரிந்தாலும்,
    ஒரு 25 சதவிகித வாக்காளர்கள் இன்னும் அவரை நல்லவர் என கருதி வாக்களிக்கிறார்கள்.

    நன்றி

  5. நித்தில் says:

    இவர் பெரியார் சீடர் என்று சொல்வதெல்லாம் பெரியாரின் புகழை கலங்கப்படுத்துவதற்குதான் பயன்படும். அரசு அதிகாரம் பதவி சுகம் பணம் இன்னும் இத்தியாதிகளுக்காக அற்ப காரணத்தை காட்டி அண்ணாதுரையும் அவர் சார்ந்த கும்பலும் பெரியாரை விட்டு பிரிந்து வந்தனர். அன்றே பெரியாரின் கொள்கைகளையும் காற்றில் பறக்கவிட்டனர். இன்று பெரியாரை பலரும் புரிந்து கொள்ளாமல் இருப்பதற்கும் தூற்றுவதற்கும் காரணம் இவரைப் பார்த்துதான். தான் பெரியாரின் சீடன் என்று சொல்லிக்கொள்வதால்தான். அன்றைய கால கட்டத்தில் பெரும் செல்வந்தருமான பெரியார் தனது சொத்துக்களையும் மேலும் அவரது கொள்கையின்பால் ஈர்க்கப்பட்டு அதன் மூலம் பெறப்பட்ட நிதிகளையும் தனக்கு பின் சமுதாயத்திற்கு பயண்பட வேண்டும் என்ற நோக்கில் பொரியாரால் தொடங்கப்பெற்ற ட்ரஸ்ட்டை கருணாநிதியின் ஜாலரா வீரமணி வகையறாக்கள் இன்று எப்படி பயண்படுத்துகிறார்கள் என்பதிலிருந்தே கருணாநிதியின் யோக்கியதை புரியும்.

    பாஸ்போர்ட் அலுவலகத்தில் நடந்த தாக கூறப்பட்ட ரூ.100 கோடி ஊழலில் சிக்கிய அதிகாரி சுமதியை காப்பாற்ற இந்த பேராசிரியர் காட்டிய முனைப்பைப் பார்க்கும் போது இவரும் யோக்கியர் இல்லை என்பது தெளிவு.

  6. Ganpat says:

    எழில்
    உங்கள் வேதனையை புரிந்து கொள்கிறேன்..ஒன்றுபடுகிறேன்.
    தி.மு.க என்பது தீ… கா ங்கிரஸ் என்பது கா ற்று..
    இரண்டும் இணைந்தால்,
    நல்லவை,நல்லவர்,மற்றும் நாடு எரிய கேட்கவா வேண்டும்??

  7. rajanat says:

    //அடுக்கு மொழியில் தமிழ் பேசி, சுயமரியாதை இயக்கத்தை
    சொந்த சுகங்களுக்காக பயன்படுத்துவார்கள் என்று மக்கள்
    கனவில் கூட நினைத்திராத காலம் அது.//

    அழகான வரிகள்.

  8. விமர்சனம் இதுநாள்வரை எனது ஈமெயில் மூலமாக எனக்கு வந்துகொண்டிருந்தது. நானும் அதை படித்து பார்த்து
    எனது கருத்துக்களை எழுதி வந்தேன் ஆனால் சிறிது நாட்களாக ஈமெயில் மூலமாக விமர்சனம் வருவதில்லை.
    எனவே என்னால் விமர்சனங்கள் படிக்க முடிவதில்லை. எனவே ஒவ்வொரு முறையும் விமர்சனம் குறித்த
    ஈமெயிலை எனக்கு அனுப்பித்தர கேட்டுக்கொள்கிறேன்.

  9. karthikeyan says:

    சாட்டையடி பதிவு,,,,,

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.