எங்க அப்பன்( ர் ?)இடம் – எனக்கு வேணும் – இப்பவே சொல்லிட்டேன் …!

எங்க அப்பன்( ர் ?)இடம் –
எனக்கு வேணும் – இப்பவே சொல்லிட்டேன் …!

சில சமயம், மிகவும் மெனக்கெட்டு, விவரமாக
விளக்க வேண்டிய விஷயங்களை,
சில கார்ட்டூன்கள் மிகச்சுலபமாகச் சொல்லி விடும்.

அப்படிப்பட்ட கார்ட்டூன் ஒன்று கீழே –
கார்டூனிஸ்ட்(இந்து)-சுரேந்திராவின்  கைவண்ணம் !
பிரனாப் முகர்ஜியின் பையன்  குறித்தது –

அண்ணன் எப்போ போவான் திண்ணை எப்போ
காலியாகும் என்பது ஒரு வழக்குச் சொல்.
அப்பா ஜனாதிபதி ஆகி 5 நிமிடங்களுக்குள்
பிரனாப் முகர்ஜியின் 50 வயதுப் பையன்
அபிஜித் முகர்ஜி, திண்ணையை பிடிக்கும்
தன் உத்தேசத்தைச் சொல்லி விட்டார் –

பிரனாப் முகர்ஜியின் பதவி உயர்வு காரணமாக –
காலியாகும் “ஜாங்கிபுர்” (மேற்கு வங்கம்) லோக்சபா
தொகுதியில் – தான் போட்டியிட விரும்புவதாக.

இந்த ஆள் 2011ல்  மேற்கு வங்க அசெம்பிளிக்கு
தேர்தல் வருவதற்கு 3 மாதம் முன்பு வரை மத்திய அரசு
பொதுத்துறை நிறுவனம் ஒன்றில் அதிகாரியாகப்
பணியாற்றி வந்தார்.
அப்பன்(ர்) – மம்தா பானர்ஜியுடன் கூட்டணி பேசி
முடிந்து க்ரீன் சிக்னல் கிடைத்தவுடன், தன் அரசு
வேலையில் வாலண்டியர் ரிடையர்மெண்ட் வாங்கிக் கொண்டு
மம்தா தீதியின் ஒத்துழைப்பில் MLA ஆனார்.
தீதி அதற்கு மேல் கருணை காட்டாததால் –
மாநிலத்தில் அமைச்சர் ஆக முடியவில்லை.

இப்போது அப்பா முகர்ஜி – ஜனாதிபதி ஆனவுடன்,
பையன் முகர்ஜிக்கு பார்லிமெண்ட் போக ஆசை வந்து
விட்டது. எப்படியும் அப்பாவின் பதவிக்காலம் முடிவதற்குள்
மத்திய மந்திரியும் ஆகி விடலாமே !

சில கழிசடைகள், MLA – MP பதவிகளை எல்லாம்
அப்பன் பாட்டனின் பரம்பரைச் சொத்து என்று நினைத்துக்
கொண்டு இருக்கின்றன. புருஷன் போய் விட்டால்
பெண்டாட்டிக்கு ! அப்பன் போய் விட்டால் பையனுக்கு !!

இந்த ஆளை மட்டும் சொல்லிப் பயன் இல்லை.
நம் நாட்டு அரசியல் – இதை ஒரு அங்கீகரிக்கப்பட்ட
உரிமையாகவே ஆக்கி வைத்திருக்கிறது !

இடதுசாரிகளையும், ஓரளவிற்கு பிஜெபி யையும் தவிர,
கிட்டத்தட்ட மற்ற அரசியல் கட்சிகள் அனைத்துமே
வாரிசு அரசியலை ஒரு வழக்கமாகவே வைத்திருக்கின்றன.

தமிழ்நாட்டு வாரிசுகளைப் பற்றி நான் சொல்லி
யாருக்கும் புதிதாகத் தெரிய வேண்டியதில்லை !

பார்லிமெண்டில் இருக்கும்  வாரிசுகளின் வரிசையை
பாருங்களேன் –

ராகுல் காந்தி, சச்சின் பைலட், ஜோதிர் ஆதித்ய சிந்தியா,
ஜிதின் பிரசாதா, மிலின் தியோரா, தீபேந்தர் சிங்
ஹூடா,  சுப்ரியா சுலே(பவார்), அகதா (சங்மா)
டிம்பிள், அகிலேஷ் (முலாயம் சிங்)யாதவ்,
பரூக் -உமர் அப்துல்லா …..

ஒரு தகவல் சொல்கிறது – மொத்த உறுப்பினர்களில்
28.6  சதவீத M.P.க்கள்
அரசியல் தலைவர்களின் வாரிசுகளே என்றும் –
30 வயதுக்குட்பட்ட  M.P.க்கள் அனைவருமே
வாரிசுகளே என்றும் !!

கார்ட்டூன் எவ்வளவு கன கச்சிதமாக சித்தரிக்கிறது
பாருங்கள் – பெரிய முகர்ஜி
சின்ன முகர்ஜியை அழைத்துக் கொண்டே ஜனாதிபதி
ஆசனத்தை நோக்கிப் போவதையும் –

சோனியா காந்தி,ம.மோ.சிங்,ராகுல் காந்தி ஆகியோர்
திகைப்புடன் பார்த்துக் கொண்டிருப்பதையும்  !

அன்னைக்கு வேறு வழியே இல்லை.
பையன் முகர்ஜிக்கு சீட் கொடுத்தே ஆக வேண்டும்.
அப்பா முகர்ஜி இப்போது இருக்கும் இடம் அப்படி !!!

(ஆனால் இவர்கள் எல்லாரும் எவ்வளவு திட்டம்
போட்டாலும், பையன் ஜெயிப்பது மம்தா தீதியின்
mood ஐ பொறுத்து தான் இருக்கிறது என்பது
இதில் இருக்கிற ஒரே ஒரு ஆறுதலான விஷயம் !)

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

18 Responses to எங்க அப்பன்( ர் ?)இடம் – எனக்கு வேணும் – இப்பவே சொல்லிட்டேன் …!

  1. Padmanabhan Potti சொல்கிறார்:

    இந்திய ஜனநாயகத்தில் ஆரம்பத்திலிருந்தே வாரிசு அரசியல் தொடர்கதையாகி உள்ளது. ஜவகர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி அடுத்தது ராகுல் காந்தி என தொடர் கிறது. இதில் இந்திரா காந்தியை காமராஜர்
    தான் பிரதம மந்திரியாக்கினார்.. இந்த அடிப்படையில் பதவிக்கு வருபவர்கள் பொதுமக்கள் நலன் காப்பவர்களாக இருந்தால் வாரிசு அரசியல் தவறில்லை என்றே கருதுகிறேன். இருப்பினும் காமராஜரே கொண்டு வந்த இந்திரா காந்தி பின்னாளில் அவசர நிலை பிரகடனப்படுத்தியதன் மூலம் தேர்தலில் படுதோல்வியடைந்தார். எனவே யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்பதே எனது கருத்து. டாக்டர் வாரிசு டாக்டராகவும் என்ஜினீயர் வாரிசு என்ஜிநீயராகவும் வர நினைப்பதில் தவறில்லை.

    • காவிரிமைந்தன் சொல்கிறார்:

      நண்பர் பத்மநாபன்,

      டாக்டருக்கும், எஞ்ஜினீயருக்கும் குறைந்த
      பட்சம் அந்த தொழிலுக்கான படிப்பும் அனுபவமும்
      தேவைப்படும் அல்லவா ?
      அல்லது just டாக்டர் மகன் என்பதாலேயே
      அவரிடம் போய் வைத்தியம் பார்த்துக் கொள்வீர்களா ?

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

      • Padmanabhan Potti சொல்கிறார்:

        பதவிக்கு வருபவர்கள் பொதுமக்கள் நலன் காப்பவர்களாக இருந்தால் வாரிசு அரசியல் தவறில்லை என்றே கருதுகிறேன் என்றுதான் கூறியுள்ளேன். எனவே அந்த கருத்தில் மாற்றமில்லை. மேலும் காமராஜர் அவர்களை அதற்க்கு உதாரணமாக தெரிவித்துக்கொள்கிறேன்.

        • Padmanabhan Potti சொல்கிறார்:

          டாக்டர் அல்லது என்ஜினீயர் என கூறவேண்டுமானால் அதற்குரிய கல்வி இருந்தால்தான் கூறுவார்கள். மற்றவர்களை போலி எனக்கூறுவார்கள்.

  2. venkataramaniv சொல்கிறார்:

    இந்தியாவில் செல்வாக்கும் சொல்வாக்கும் உள்ள பதவிகள்
    எதுவானாலும், கவுன்சிலர் பதவியானாலும் கவர்னர்
    பதவியானலும், வாரிசுகளுக்கே முன்னுரிமை என்பது எழுதாத
    விதி (விதிதான்) ஆகிவிட்டது. எனவே, இந்த மாநிலத்தில்தான்
    இப்படி அந்த மாநிலத்தில் இல்லை; அந்தக் கட்சியில்தான்
    அப்படி இந்த கட்சியில் இல்லை என்பதெல்லாம் பகுத்தறிவு
    கொண்டு ஆராய்ந்தாலும் விளங்காது.

    வாரிசுகளுக்கு வாய்ப்பு இல்லாத நிலையில், செல்வாக்குள்ள
    நபர் கை காட்டும் நபருக்கு என்றாகிவிட்டது. உ-ம் கர்நாடக
    எடியூரப்பாவின் அரசியல்.

    விடையில்லா கேள்விகள் என ஒரு பட்டியலுண்டு. அதில், ஏன்
    வாரிசு அரசியல்? வாரிசுகள் பதவிகளைப் பிடிக்க நாயாய் பேயாய்
    அலைகிறார்கள்? என்பதெல்லாம் முதலிடத்தில் இருக்கிறது.

  3. Ganpat சொல்கிறார்:

    இந்திய அரசியல் சட்டப்படி,ஒருவர் பாராளுமன்ற உறுப்பினர் ஆக தகுதிகள்:
    1) வாக்காளர் பட்டியலில் அவர் பெயர் இருக்க வேண்டும்.
    2) முப்பத்தைந்து வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
    3) மனநிலை பிறழாவதாவராக இருக்க வேண்டும்.
    4) தேர்தலில் போட்டியிடும மற்றவர்களைவிட ஒரு ஒட்டாவது அதிகம் பெற்றிருக்கவேண்டும்
    அபிஜித் முகர்ஜிக்கு மேற்கண்ட முதல் மூன்று தகுதிகளும் உள்ளன.
    நாலாவதை வாங்க அப்பா எக்கசக்க பணம் “சம்பாதித்து” வைத்துள்ளார்.
    விற்பதற்கு தொகுதி மக்களும் தயார்.
    பின் உங்களுக்கு என்ன ஆட்சேபம், காவிரிமைந்தன்?
    தயவு செய்து பதில் சொல்லும்போது “மனசாட்சி”,”அரசியல் நாகரீகம்”
    “தார்மீக அடிப்படை” போன்ற வழக்கொழிந்த சொற்கள் கலவாவண்ணம்
    பார்த்துக்கொள்ளுங்கள்.

    • venkataramani சொல்கிறார்:

      அப்பா பணம் சம்பாதித்து வைத்திருக்கிறார் என்பதென்னவோ
      உண்மைதான். பொதுவில் தேர்தல் விழாவில் மொய்ப்பணம்
      வாங்க மக்களும் தயார் தான். ஆனால், அதை வைத்துக் கொண்டு
      மட்டும் மகனின் வெற்றி வாய்ப்பை அவர் தீர்மானித்து விட
      முடியாது.

      மகனின் வெற்றி மம்தாவிடம் தான் இருக்கிறது.

      காரணம்: பல காலமாக அரசியல் களத்தில் இருந்தாலும், அப்பா
      சந்தித்ததே இரண்டொரு தேர்தல்கள் தான்.பதவிகள் எல்லாம்
      ராஜ்ய சபா அங்கத்தினராகத்தான். மே.வங்ககத்தில் ஐயாவுக்குப்
      பெரிய செல்வாக்கும் இல்லை. இருந்திருந்தால் மாநில அரசியலில்
      அவர் உச்சத்தை எப்போதோ அடைந்திருப்பார்.

      • காவிரிமைந்தன் சொல்கிறார்:

        வெங்கட்ரமணி,

        மிகச்சரியாகச் சொன்னீர்கள்.
        “அன்னை” ஓகே சொன்னாலும் –
        தீதி இப்போது தன் “கணக்கைத்” தீர்த்துக்
        கொள்வார் என்றே நினைக்கிறேன்.

        -வாழ்த்துக்களுடன்,
        காவிரிமைந்தன்

    • காவிரிமைந்தன் சொல்கிறார்:

      கண்பத்,

      எனக்கு ஒரு ஆட்சேபணையும் இல்லை !
      பாவம் “அன்னை”யை தர்மசங்கடத்திற்கு
      உள்ளாக்குகின்றார்களே என்கிற வருத்தம் தான் !!!

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  4. kumar சொல்கிறார்:

    Narendra modi pathi konjam Sollunga. Modi PM agalama. Avar nallavara Kettavara. Gujarat kalavarathil avar pangu patri sollunga. Thanks.

    • காவிரிமைந்தன் சொல்கிறார்:

      நண்பர் குமார்,

      இந்த பொறுப்பை நண்பர் கண்பத் ஏற்றுக்
      கொண்டால் எப்படி இருக்கும் -பார்ப்போமா ?

      என்ன கண்பத் –

      தயாரா ?

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

      • Ganpat சொல்கிறார்:

        நன்றி காவிரிமைந்தன்.தங்கள் சித்தம் என் பாக்கியம்.

        நேரு போன்று நல்ல எண்ணம் கொண்ட,சுயநலமற்ற,திறமை குறைந்த, ஜனநாயக வாதியும்,

        இந்திரா போன்று நல்ல எண்ணம் கொண்ட,சுயநலம் மிகுந்த,திறமை மிகுந்த, சர்வாதிகாரியும்,

        சோனியா போன்று, எந்த எண்ணமும் அற்ற,சுயநலமற்ற,திறமையற்ற ஒரு கோமா வை முன்னிறுத்தி ஆட்சி செய்யும் ஒரு கோமா ளியும்,

        செய்த ஆட்சியில் நாட்டிற்கு விளைந்தது என்ன என நன்கு புரிந்தபின்,

        நமக்குத்தேவை,
        நல்ல எண்ணம் கொண்ட,சுயநலமற்ற,திறமை மிகுந்த, சர்வாதிகாரி..

        மேற்கண்ட தகுதிக்கு,

        நாராயணமூர்த்தி.மற்றும் நிதீஷ் குமார் 75% பொருந்துகின்றனர்…ஆனால் அவர்கள் சர்வாதிகாரி இல்லை.

        அத்வானி மற்றும் அப்துல் கலாம் 60% பொருந்துகின்றனர்…
        ஆனால் அவர்கள் சர்வாதிகாரி இல்லை.திறமையும் குறைவு.

        எஞ்சியவர்கள் சேஷன்,மற்றும் மோடி.

        இவர்கள் இருவரில் யார் வந்தாலும் சரி..
        ஆனால் வாய்ப்பு பின்னவருக்கு பல மடங்கு அதிகம்.

        இன்னும் சுருக்கமாக சொன்னால்..

        அடுத்த பிரதமர்…

        மோடியா,
        ராகு காலமா?,
        கோமாவா?
        அம்மாவா?
        தீதியா?
        முலாயம்சிங்கா?
        ஏன்
        ஒரு மிக “அதிருஷ்ட” வேளையில்,
        தாத்தாவா?
        என்று நினைத்து முடிவெடுங்கள்!

        அப்போ குஜராத் கலவரம்?

        அதை நிச்சயம் காங்கிரஸ் முன்னிறுத்தும்..
        சீர் தூக்கிப்பார்த்து வாக்காளர்கள் முடிவெடுக்கட்டும்.

        எனக்கு தெரிந்தவரை,
        அதை,குஜராத் வாழ் இஸ்லாமியர்களே மன்னித்து விட்டதாக கேள்வி.

        • நித்தில் சொல்கிறார்:

          என்ன கண்பத் சார், ‘நான் குற்றவாளி என்றால் என்னை தூக்கிலிடுங்கள்’ என்று மோடி ஒரு உருது பத்திரிக்கைக்கு பேட்டி கொடுத்துள்ளார். நீங்க அவர குற்றவாளின்னு முடிவே செஞ்சிட்டீங்க. இல்லைன்னா ‘இஸ்லாமியர்களே மன்னித்து விட்டதாக கேள்வி’ ன்னு ஏன் எழுதப்போறீங்க.

          • Ganpat சொல்கிறார்:

            நித்தில் ஸார்,
            கலவரம் வெடித்து அரங்கேறிய மூன்று நாட்களில்,குஜராத் மாநில முதல்வர் மோடி அவர்கள்தான்..அந்த அளவில் இதற்கு அவர் பொறுப்பேற்றே ஆகவேண்டும்.ஆனால் காங்.கூறும் குற்றச்சாட்டு..இந்த கலவரத்தை திட்டமிட்டு நடத்தியவரே அவர்தான் என்று..அது முற்றிலும் பொய்.
            இதை நான் சொல்வதை விட பாதிக்கப் பட்டவர்கள் சொல்வது இன்னும்
            வலிமை சேர்க்கும் எனும் கருத்தில் நான் அவ்வாறு சொன்னேன்.

        • நித்தில் சொல்கிறார்:

          குஜராத் கலவரம் பற்றி மிக விலாவாரியாக இனையத்தில்ஆதாரங்களுடன் உள்ளது. அவைகளை படித்துதான் நான் அக்கலவரத்தைப் பற்றி தெரிந்துகொண்டதெல்லாம். களவானிகளின் கூற்றுப்படி ‘கலவரத்தை திட்டமிட்டு நடத்தியவரே அவர்தான்’ என்பது முற்றிலும் பொய்யாக இருந்தாலும் கலவரத்தை இரும்பு கரம் கொண்டு தடுத்து நிறுத்தக்கூடிய இடத்தில், பொறுப்பில் இருந்த மோடி ஏன் அதை செய்ய தவறினார்? சுதந்திர இந்தியாவில் நடந்த மிகப் பெரிய இனக் கலவரத்தை தடுத்து நிறுத்த த்தவறிய மோடியைத்தவிர பிரதமர் பதவிக்கு வேறு தலைவர்களே இல்லை என்று நினைக்கும்போது ஓன்றும் சொல்வதற்கில்லை.

          • reader சொல்கிறார்:

            பச்சையாகச் சொன்னால், இந்துக்களைச் சீண்டினால் என்னாகும் என்று மோடி காட்ட விரும்பினார்; கோத்ராவுக்குப் பின்னான சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டார். இந்தப் பசிக்கு பலியானவர்கள் 790 இஸ்லாமியர் மற்றும் 254 இந்துக்கள்.

  5. D. Chandramouli சொல்கிறார்:

    Kaveri Maindhan (I’m also one hailing from Tiruvarur!), could Prnab’s son enter parliament through back door Rajya Sabha? It wouldn’t require Mamata’s support, right?

  6. reader சொல்கிறார்:

    ‘தற்போது’ அஸ்ஸாமில் முஸ்லீம்களுக்கெதிரான வன்முறையில் கொல்லப்பட்ட பொதுமக்கள் எண்ணிக்கை 88. இதற்கு அஸ்ஸாமின் முதல்வர் தருண் கொகோய் காரணமா இல்லை அதுவும் மோடியா?

    “நடுநிலையாளர்கள்” கொட்டு முழக்கை அடக்கி வாசிப்பதன் மர்மம் என்ன?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.