ஒளிந்திருக்கும் விவரங்கள் … டெல்லி மீடியாக்கள் யார் கண்ட்ரோலில் ?

ஒளிந்திருக்கும்  விவரங்கள் …
டெல்லி மீடியாக்கள் யார் கண்ட்ரோலில்  ?

தமிழ் நாட்டைப் பொருத்த வரையில், எந்த டிவி,
எந்த பத்திரிகை – யாருடையது, எந்த கட்சியுடையது
என்று யாரும் நமக்குச் சொல்ல வேண்டியதே இல்லை.
இங்கு எல்லாம் வெளிப்படை !
எனவே அதை நான் விவாதத்திற்கு எடுத்துக்
கொள்ளவில்லை.

ஆனால் நேஷனல் மீடியா என்று சொல்லப்படும் டெல்லி
ஆங்கில தொலைக்காட்சிகளைப் பொருத்த வரை –
யார் எந்தப் பக்கம், எதன் பின்னால் யார் இருக்கிறார்கள்
என்று பொது மக்கள் யூகிப்பது மிகவும் கடினம்.
வேடம் பூண்டிருக்கும் மர்ம ஆசாமிகள் இவர்கள் !

எந்தெந்த தொலைக்காட்சிகளின் பின்னால் –
யார் யார் இருக்கிறார்கள் என்று தெரிந்தால் –
கொஞ்சம் அதிர்ச்சியாகத் தான் இருக்கும் !

BIG FIGHT
WE THE PEOPLE
CENTRE STAGE  – என்றெல்லாம்
அவ்வப்போது – சூடான அரசியல் தலைப்புகளில்
விவாதம் அனல் பறக்கும். தேவலையே
தைரியமாக, நேர்மையாக –
விவாதிக்கிறார்களே என்று தோன்றும்.
ஆனால் விவாதம் முடியும்போது –
அவர்கள் ஏற்கெனவே தீர்மானம் செய்து
வைத்திருக்கும் விதத்திலேயே முடிப்பார்கள். காரணம் –
விவாதத்தில் கலந்து கொள்ள அவர்கள் அழைக்கும்
நபர்களைத் தேர்ந்தெடுக்கும் விதம்தான் ! முடிவுகள்
அனைத்தும் முன்கூட்டியே முடிவு செய்யப்பட்டவை !

காரணம் – எல்லாமே – கட்சி தான் – காசு தான் –
வியாபாரம் தான் ! இவற்றிடையே – தமிழ் தொலைக்காட்சி
சானல்களைப் போல் உங்களால் வெளிப்படையாக
இன்னார் இந்த கட்சிக்கு சாதகமாக வேலை செய்கிறார்கள்
என்று கண்டு பிடிக்கவே முடியாது !

அரசாங்கத்திற்கு எதிராக எதாவது விஷயம் கிளம்பினால்,
உடனடியாக அதை தத்தெடுத்துக் கொள்வார்கள்.
24 மணி நேரமும் அதன் பின்னாலேயே அலைவார்கள்.
அதைப்பற்றியே பேசிக்கொண்டிருப்பார்கள்.
அந்த எதிர்ப்பை துவக்கியவர்களை விட இவர்கள்
வேகமாகப் போவது போலிருக்கும். ஆனால் நன்றாக,
வாய் கொள்ளும் வரை பலூனை ஊதி விட்டு,
திடீரென்று வெடிக்க வைத்து – அதை ஒன்றுமில்லாததாக
ஆக்கி விடுவார்கள். எதிர்ப்பை புஸ்வாணமாக்கி
விடுவார்கள். அந்த விஷயத்தைத் துவக்கியவர்களை
மக்கள் முன் பைத்தியக்காரர்களாக –
அல்லது உதவாக்கரைகளாக –
அல்லது வில்லன்களாக  ஆக்கி விடுவார்கள் !!

காரணம் …? இதன் பின்னர் இருந்து நடத்துபவர்கள்
பல விஷயங்களுக்கு மத்திய அரசை நம்பி இருக்கிறார்கள்.
பெரிய பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் (MNCs)
மூலம் இவர்களுக்கு பல கோடி ரூபாய் விளம்பரங்களின்
மூலம் வருகிறது. அவர்களை மீறி இவர்களால்
வியாபாரம் செய்ய முடியாது !

மக்களுக்காக சேவை செய்யவா இவர்கள் டெலிவிஷன்
கம்பெனி வைத்திருக்கிறார்கள் ? இத்தனை
போட்டிகளுக்கிடையில் எதற்கு இப்படி அலைகிறார்கள் ?
எல்லாம் வியாபாரம் ! –
ஆயிரக்கணக்கான கோடிகள் புரளும் வியாபாரம் !

எந்தெந்த  தொலைக்காட்சி நிறுவனங்களின் பின்னணியில்
யார் யார் இருக்கிறார்கள் என்பது பற்றி  நான் சேகரித்த
சில விவரங்களை – உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

இந்த விவரங்கள் எல்லாம் படித்த பிறகு -அடுத்த முறை
அந்த தொலைக்காட்சிகளை பார்க்கும்போது உங்களுக்கு
சில விஷயங்கள் புரியலாம் !


NDTV – நியூ டெல்லி டெலிவிஷன் –
கோஸ்பெல்ஸ் ஆப் சாரிடி என்கிற,
ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த, கம்யூனிஸ்ட் சார்புள்ள
ஒரு நிறுவனம் தான் இதன் பின்னணி, பலம் எல்லாம்.

கம்யூனிஸ்ட் கட்சிக்கு இந்தியாவில் இப்படி
ஒரு பலமா என்று தோன்றுகிறதா ?
கம்யூனிஸ்ட் என்றவுடன் உங்களுக்கு
நம்ம ஊர் பெரியவர் நல்லகண்ணு நினைவு வந்தால் –
நீங்கள் பைத்தியக்காரராகி விடுவீர்கள்.
இவர்கள் எல்லாம் ஏரோப்ளேனில் பறக்கும் கம்யூனிஸ்ட்கள்.
ஏர்கண்டிஷன் அறைகளில் தங்கி இருக்கும் கம்யூனிஸ்ட்கள்.
(நம் “இந்து” ராம் மாதிரி !!)

இந்தியாவில் இதன் CEO பிரனாய் ராய்.
ஒரு சுவையான விஷயம் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சியின் அகில இந்திய செயலாளர் பிரகாஷ் காரத்தும்
இந்த பிரனாய் ராயும் உறவினர்கள் !

அதாவது, இருவரது மனைவிகளும் –
உடன் பிறந்த சகோதரிகள் !

சோனியா காந்திக்கும், மத்தியில் ஆளும் காங்கிரஸ்
கட்சிக்கும் மிகவும் கடமைப்பட்டவர்கள்.
இதன் முதன்மை ஆசிரியர் விக்ரம் சந்திராவை விட –

இதன் செய்தி ஆசிரியர் பர்கா தத் –
நீரா ராடியா விவகாரம் மூலமாக –
தமிழ் நாட்டிற்கு மிகவும் தெரிந்தவர் –
2ஜி ஸ்பெக்ட்ரம் ராஜாவுக்கும், கனிமொழிக்கும் –
மிகவும் வேண்டியவர் !!


TIMES NOW – டிவியைத் தவிர, மிகப்பெரிய
சர்குலேஷனை உடைய – டைம்ஸ் ஆப் இந்தியா
நாளிதழ், எகனாமிக் டைம்ஸ், மிட் டே,
நவ்பாரத் டைம்ஸ், ஸ்டார் டஸ்ட்,
பெமினா  ஆகியவை பத்திரிகைகளும் இதே குரூப் தான்.

இதன் சொந்தக்காரர்கள் –
பென்னெட் காலமன் கம்பெனி
என்று சொல்லிக் கொண்டிருந்ததைப் பார்த்து
ஏதோ வெளிநாட்டு கிறிஸ்தவர்கள் கம்பெனி என்று
நிறைய பேர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
1838-ல் இந்த கம்பெனி துவக்கப்பட்ட காலத்தில்
அது உண்மையாக இருந்தது.

இப்போது .. ?

உண்மையில் இது ஒரு ஜெயின் குடும்பத்துக்குச்
சொந்தமானது. இதைத் துவக்கத்தில் வாங்கி நடத்தத்
துவங்கிய “சாது ஜெயின்” என்பவரது வாரிசுகளின்
வசம் தான் இப்போது உரிமை !
இந்து ஜெயின், சமீர் ஜெயின், வினீத் ஜெயின் ..!
இதன் செய்தி ஆசிரியர் அர்னாப்.
எந்தவித சந்தேகத்திற்கும் இடம் இல்லாமல் –
இது மத்தியில் ஆளும்  சோனியா காங்கிரசுக்கு
வேண்டப்பட்டவர்களுடையது தான் !

CNN-IBN –
இரண்டு முறை வெளிப்படையாகவே கண்டிக்கப்பட்ட
ஊடகம் இது. ஒரு முறை விவாதங்களில் பங்கேற்க
காங்கிரஸ் பிரதிநிதிகளைத் தயார் செய்து அழைத்து
வந்ததற்காகவும்,
மற்றொரு முறை ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர் அவர்களுடைய
முன்கூட்டியே பதிவு செய்யப்பட்ட பேட்டி ஒன்றை
“லைவ்”பேட்டி என்று போட்டு, அதற்கு பதில் வருவதாக
கூறி இவர்களே ட்விட்டர் செய்திகளையும்,
தொலைபேசி அழைப்புகளை உருவாகியதற்காகவும் !

இதன் முதன்மை ஆசிரியர் ஆணவமும், அகங்காரமும்
தாண்டவமாடும் – ராஜ்தீப் சர்தேசாய்.
இதன்  இணை ஆசிரியர் இவரது மனைவியே தான் –
சகாரிகா கோஷ் ! இருவரும் சேர்ந்து உருவாக்குபவை
தான் இதில் வரும் செய்திகள்-விவாதங்கள் !
இந்த டிவியின்  பின்னணியில் இருப்பது
சவூதி அரேபிய முதலீடு என்றால் ஆச்சரியமாக இல்லை ?

HEADLINES TODAY -ஹெட்லைன்ஸ் டுடே –
இந்தியில் ஆஜ்தக் என்கிற செய்தி சானலும்
இவர்களுடையது தான்.

இந்தியா டுடே குழுவினருடையது.
அண்மையில் – 2003ல் தான் துவக்கப்பட்டது.
இதன் முதன்மை ஆசிரியர் ராகுல் கன்வால்.

ஆளும் காங்கிரசுக்கு அதிகம் (!) தாளம் போடாத
ஒரே ஆங்கில செய்தி சானல் இது மட்டும் தான் !

இதை எல்லாம் படித்த பிறகு
உங்களுக்கும் தோன்றுமே –

“காயமே இது பொய்யடா – வெறும் காற்றடைத்த
பையடா “

எந்த தொலைக்காட்சி செய்தியும், நிகழ்ச்சியும் –
முழுவதுமாக நம்பத்தகுந்ததல்ல !

அவரவர் வசதிக்கேற்ப,
அவரவர் தேவைக்கேற்ப,
அவரவர் முதலாளிகளுக்கேற்ப,
உருவாக்கப்பட்டு,
ஒப்பனை செய்யப்பட்டு,
மெருகேற்றப்பட்டு –
மக்களை அடிமடையர்கள் என்று நினைத்துக் கொண்டு

– உலவ விடப்படுபவை தான் !!

இவர்கள் opinion makers அல்ல –
opinion breakers ..!!

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

18 Responses to ஒளிந்திருக்கும் விவரங்கள் … டெல்லி மீடியாக்கள் யார் கண்ட்ரோலில் ?

  1. K. Jayadev Das சொல்கிறார்:

    Thanks.

  2. எழில் சொல்கிறார்:

    இந்த காலத்திற்கு மிகவும் அத்தியாவசியமான பதிவு. தற்போதைய கால கட்டத்தில் ஒவ்வொருவரும் தொலைக்காட்சி, பத்திரிக்கை, வார இதழ் போன்றவற்றில் வரும் செய்திகளை அப்படியே எடுத்து கொள்ளாமல் அதையும் தாண்டி செய்தியை வழங்குவோரின் பின்னணி, நோக்கம், ‘between the lines ‘ என்று உணர்ந்து கொள்ளும் தகுதியை வளர்த்து கொள்ள வேண்டும்.

    அமெரிக்காவின் CNN , பிரித்தானியாவின் BBC முதல் நம்ப ஊர் ஜூனியர் விகடன் வரை எந்த செய்தி ஊடகமும் நடுநிலை என்ற வார்த்தையை எள்ளளவும் மதிப்பதில்லை.

  3. Dr.R.Phillips சொல்கிறார்:

    Mr.Kavirimainthan,

    You have done a remarkable job.
    One can even understand if he openly comes out and says
    he is in favour of this party or that party.
    But these bastards hide their real programme and act as if
    they are interested in the welfare of people and
    working for lthe common benefit of the soceity.

    You rightly said that these television programmes
    are stage managed.
    Please continue your valuable service.

    Dr.R.Phillips

  4. Padmanabhan Potti சொல்கிறார்:

    மொத்தத்தில் நான்கு சானல்களில் ஒன்றை மட்டும் நம்பலாம். அரசியல்வாதிகளும் அப்படித்தான் இருப்பார்கள் .பொதுவாக ஆளும் கட்சி எதிர் கட்சி என்பதெல்லாம் ஊருக்குத்தான் திரை மறைவில் எனக்கு நீ உனக்கு நான்
    என்ற பாணியில் பங்கு போட்டுக் கொள்வார்களோ என்று சந்தேகமாக உள்ளது.

  5. ஜோதிஜி திருப்பூர் சொல்கிறார்:

    என்னுடைய பாராட்டுகள். வாழ்த்துகள்.

  6. venkataramani சொல்கிறார்:

    சொல்லாலே சொன்னது பாதிதான் எனத்
    தோன்றுகிறது.

    உள்ளதை உள்ளவாறு செய்தி சொல்லி நாட்டு
    மக்களுக்கு நலம் பயப்பதல்ல சேனல்களின்
    வேலை. இது நாள்தோறும் கோடிகள் புரளும்
    தொழில். nothing is unfair என்பது போர், காதலுக்கு
    மட்டுமல்ல தொழிலுக்கும் தான். எது பரப்பரப்பை
    உண்டு பண்ணும் என்பதை கையிலெடுக்கும்
    புத்திசாலிதனம் தான் தேவை.

    “இனி சேனல்கள்தான்” செய்தி உலகை ஆளப்
    போகிறது என்பதை அறிந்து என் டி டி வியை
    துவக்கிய போது, பிரணாய் ராய்க்கு எந்த அரசியல்
    கட்சியின் ஆதரவும் இல்லை.அவரது புத்திசாலித்
    தனம் மட்டுமே அவரது மூலதனம்.

    சேனல் வளர்ந்து, “அடடே நல்ல தொழிலாக இருக்கிறதே.
    பணமும் பேரும் உடகார்ந்த இடத்தில் வருதே.
    இது ஏன் நமக்குத் தோன்றவில்லை” என்று பலரும் சிந்தித்த
    வேளையில் தான் மற்ற சேனல்களும் அவற்றுக்கு வெளி
    உலக மூலதனமும் வந்தன.

    நானும் புத்திசாலிதான் என்று (நீங்கள் சொல்லியவண்ணம்
    ஆணவமும் அகங்காரமும் கூடிய) ராஜ்தீப் பொங்கிய
    வேளையில் தான் சி என் என் ஐ பி என உதயமானது.

    சேனல்காரர்களுக்கு ஆளும் கட்சியின் ஆதரவு மிக மிக
    (எத்தனை வேண்டுமானலும் சேர்த்துக் கொள்ளலாம்)
    முக்கியம். விளம்பரத்திற்கும் வியாபரத்திற்கும் மட்டுமல்ல.
    பலவித உள் விவகாரங்கள் உள்ளன.

    பிஜேபி ஆட்சிக் காலத்திலும் “சில தீடீர்” சேனல்கள்
    வந்ததும் பின்னர் மறைந்தையும் அறிந்திருக்கக் கூடும்.

    மாறன்கள் உலக் கோடிஸ்வரர்களாக வலம் வருவது
    “அரசியல்” பலத்தாலும் “பூமாலையாலும்” (சன் டி.விக்கு
    முன் வந்த வீடியோ பத்திரிகை) அல்ல. சன் டி வியால்.

    உள்ளூர் சேனல்களுக்கே அரசியல் ஆதரவு தேவைப்
    படுகிறது. இந்நிலையில் “பல கோடிகளும்” உள் மறைந்த
    நோக்கங்களும் நிறைந்த “தேசிய” சேனல்களைப் பற்றி
    சொல்லவும் வேண்டுமோ?

    சென்னையில் மட்டும் (?!) தெரியும் என்டிடிவிஇந்துவே
    பல கோடிகளுக்கு “தந்தி”க்காரர்களுக்கு “கை” மாறி
    இருக்கிறது.

    விவாத நிகழ்ச்சிகள் பலவற்றின் முடிவுகள் முன்னதாக
    தீர்மானிக்கப்படுகின்றன என்பது ஊரறிந்த ரகஸ்யம்.
    நீயா நானும், அரட்டை (மக்கள்) அரங்கமும், நேருக்கு நேரும்,
    இந்த வாரம் சந்தித்தேனும் (இப்போது அவ்வளவாக இல்லை)
    கூட இவ்வகைதான்.

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நன்றி வெங்கட்ரமணி.

      அந்த என்டிடிவி-ஹிந்து – தந்தி பற்றிய விவரமான
      தகவல்கள் எனக்கு கிடைக்கவில்லை. கொஞ்சம்
      விவரமாக எழுதுங்களேன். மற்றவர்களுக்கும்
      பயன்படும்.

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  7. ரமேஷ் சொல்கிறார்:

    நல்ல உழைப்பு.
    நிறைய தகவல்கள் தருகிறீர்கள்.
    நன்றியும் பாராட்டும்.

  8. Rangarajan Rajagopalan சொல்கிறார்:

    Mr.Kavirimainthan,

    There are some similarities between
    your writing and that of Mr.Gnani.
    The visible difference I find is that
    while he is writing in general,
    you are more specific and punching
    straight on the face.
    Sorry I could not write in tamil.
    I happened to see your blog only
    recently and now I am trying to see
    all your old articles also.

    Nice came to your blog.

    Thank you.

    Rangarajan Rajagopalan

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      Thank you Mr.Rangarajan Rajagopalan.

      It may be your view. But Mr.Gnani is a Senior and experienced writer
      and his style of writing is different.
      I am just a beginner and started writing just 2 years ago only !
      Thanks for your nice words.

      -with best wishes,
      Kavirimainthan

  9. Ganpat சொல்கிறார்:

    Dear Kavirimainthan,

    I have some problem in my net connection and so could not see your website from yesterday.
    May be it gets repaired soon.I just squeezed in to congratulate and thank you for bringing out this wonderful writeup on channels.

    Regards,
    Ganpat

  10. kamalkanth சொல்கிறார்:

    அவசியமான ஒன்று. இந்த தளத்தையும் கொஞ்சம் பாருங்கள்..முக்கிய வடஇந்திய தொலைகாட்சிகளை/நிருபர்கள்/ஆசிரியர்கள் கிழித்து தோரணம் கட்டுகிறார் இதன் ஆசிரியர் 🙂
    http://www.mediacrooks.com/

  11. kpoornima சொல்கிறார்:

    Excellent article, An eye opener in many ways, thanks

  12. venkataramani சொல்கிறார்:

    நான்காண்டுகளுக்கு முன் (2009-ல்) என்டிடிவி-ஹிந்து சேனல்
    துவங்கப்பட்டது. முன்னவர் 51 சதவீத பங்குகளும் ஹிந்து
    49 சதவீத பங்குகளும் கொண்டு கூட்டமைப்பு சேனலாக உருவாக்கப்
    பட்டது. Metronation Chennai Television என கம்பெனிக்குப்
    பெயரிடப்பட்டது.

    நோக்கம்: என்டிடிவி பிரணாய் ராய்க்கு நாடெங்கிலும் பெருநகர
    செய்திகளை மட்டுமே உள்ளடக்கிய ஆங்கில செய்தி சேனலை
    உருவாகக வேண்டும் என்பது. அதன் முதல் முயற்சியாக அல்லது
    பரிசோதனை முயற்சியாக துவங்கப்பட்டது தான் என்டிடிவி-ஹிந்து.
    சென்னை பெருநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மட்டுமே
    இதன் அலைவரிசை.

    ஊடகத் துறையின் பல பிரபலஸ்தர்களின் பங்களிப்பும் வழிகாட்டுதலும்
    இருந்த போதிலும், சேனல் துவங்கிய காலத்திலிருந்தே, நஷ்டத்தில்
    இயங்குவதாக சொல்லப்பட்டது. அதன் காரணமாக அதை விற்றுவிட
    முணைந்தனர். சுமார் 20 கோடிகளைக் கொடுத்து தினத்தந்தியின் திரு
    சிவந்தி ஆதித்தன் இந்த சேனலை கடந்த அக்டோபரில் வாங்கிவிட்டார்.
    Metronation Chennai Televisionto Educational Trustee Company Pvt Ltd என்பது புதிய கம்பெனியின் பெயர்.

    ஆதித்தனின் “தந்தி”, அது வெளிவரும் தமிழக மாவட்டங்கள் தோறும்
    AMN tv என்கிற பெயரில் உள்ளூர் சேனல் நடத்தி வருகிறது என்பதும்
    கவனிக்கத்தக்கது.

    சில ஆண்டுகளுக்கு முன்னரே பிரணய் ராய் தமிழகத்தில் செய்திகள்
    அரசியல் கலப்போடுதான் மக்களை சென்றடைகிறது எனக் கருதி அதற்கு
    மாற்றாக சார்பற்ற செய்திகளை வழங்க முடிவெடுத்து ஸ்டார் விஜய்-ல்
    என்டிடிவி சார்பாக செய்திகளை வழங்கினார். அதில் தான் கோபிநாத்
    ( நீ நா) சண்முகசுந்தரம் (இப்போது கலைஞர் டி வி-ல்) போன்றோர்
    பனியாற்றி பயின்றனர். ஒருவர் ஹிந்துவில் இருக்கிறார். வேறு சிலர்
    சன்னுக்குப் போய், சேனல் மாறி காணாமல் போய்விட்டனர் என்பது
    குறிப்பிடத்தக்கது.

  13. D. Chandramouli சொல்கிறார்:

    Hmmm. There are many wheels within wheels! Many thanks for your research and sharing. I hitherto thought that barring some channels (usually of Tamil Nadu) which are openly pro a particular political party, others are by and large neutral. It looks as though that DD is doing a better job than the so-called private independent channels.

  14. sudarvinod சொல்கிறார்:

    Excellent I am enlightened by your article
    thank you

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.