கலைஞர் ஆட்சியின்போது, கிரானைட் கம்பெனியிடம் பணம் பெற்ற செயலாளர் …வெளிவந்திருக்கும் தகவல் !

கலைஞர் ஆட்சியின்போது வீட்டு வசதி வாரியத்தில் –
வீடு மற்றும் நில ஒதுக்கீடு சம்பந்தமாக நடைபெற்ற சில
முறைகேடுகளை தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ்
பெற்று வெளியிட்டு பெரும் பரபரப்பு ஏற்படுத்தினார்  
சமூக ஆர்வலர் திரு.கோபாலகிருஷ்ணன்.

அவர் மூலமாகவே இப்போது கிரானைட் ஊழல் தொடர்பான
சில பரபரப்பான விஷயங்கள் தெரிய வந்திருக்கின்றன.
இப்போது வெளிவந்திருக்கும் விவரங்கள் –

கலைஞரின் 3 செயலாளர்களில் ஒருவராகப் பணியாற்றிய
திரு தேவராஜ் என்பவரின் மகள் தீபா என்பவரின் பெயரில்
வீட்டு வசதி வாரியத்தின் சென்னை திருவான்மியூர்
புறநகர்த் திட்டத்தின் அடிப்படையில் கலைஞர் ஆட்சியின்
போது  ஒரு வீட்டு மனை ஒதுக்கப்பட்டிருக்கிறது.

காமராஜ் நகர்  ஏரியாவில் 543 என்கிற எண்ணை கொண்ட
அந்த மனை “சமூக சேவகர்” என்று காரணம் காட்டி
தீபாவிற்கு விசேஷமாக ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

4466 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த மனை
ரூபாய் ஒரு கோடியே எட்டு லட்சத்து ஏழு ஆயிரத்து
எழுநூற்று இருபது (1,08,07,720/-)க்கு விற்பனை
செய்யப்பட்டு இருக்கிறது. விண்ணப்ப மனுவில் தீபா
தன் தந்தையின் ரேஷன் கார்டையும் சான்றிதழாக
அளித்திருக்கிறார். இதற்கான விற்பனை ஒப்பந்தம்
11/02/2009 அன்று போடப்பட்டிருக்கிறது. அதில்,
தீபா தன் புகைப்படத்தை ஒட்டி கையெழுத்தும்
போட்டிருக்கிறார்.

இந்த மனைக்கான தொகை மொத்தம் 5 தவணைகளில்
செலுத்தப்பட்டிருக்கிறது. இதற்கான முதல் தவணையை
இவர் கொடுக்கவில்லை. இவர் சார்பாக மதுரையைச்
சேர்ந்த ஒரு கிரானைட் நிறுவனம் கொடுத்திருக்கிறது !

முதல் தவணையாக  43,50,000/- ரூபாயை
(நாற்பத்துமூன்று லட்சத்து ஐம்பதாயிரம்) மதுரையைச்
சேர்ந்த ஸ்ரீ முருகன் எண்டர்ப்ரைசஸ் என்கிற கிரானைட்
நிறுவனத்தால், செக் மூலம், (ஒரு லெட்டர்
ஹெட் பேப்பரில், செக் நம்பரையும் குறிப்பிட்டு)
12/07/2008 அன்று செலுத்தப்பட்டிருக்கிறது ! அதை
ஏற்றுக் கொண்டு வீட்டு வசதி வாரியம் 15/07/2008
அன்று ரசீதும் கொடுத்திருக்கிறது. இது ஒரு பக்கோடா
கம்பெனி என்பது லெட்டர் ஹெட் லட்சணத்தைப்
பார்த்தாலே தெரிகிறது.(ஒளி நகல் கீழே)

இந்த கிரானைட் நிறுவனம், அன்றையதினம் முதல்வராக
இருந்தவரின் செயலாளரின் மகளுக்காக இவ்வளவு பெரிய
தொகையை செலுத்தியது  ஏன்  என்கிற கேள்வி
இப்போது எழுந்திருக்கிறது !

– எப்போதோ படித்த அவ்வையார்  பாடல்
வரிகள் இப்போது  நினைவிற்கு வருகின்றன.

“நெல்லுக்கிரைத்த நீர் வாய்க்கால் வழியோடி
புல்லுக்கும் ஆங்கே  பொசியுமாம்”  

“புல்”லுக்குப் பொசிந்திருப்பது மேலே பார்க்கும்போது
தெரிகிறது !

அப்படியானால் “நெல் … ?”

உங்களுக்கு எதாவது தோன்றுகிறதா ?

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

9 Responses to கலைஞர் ஆட்சியின்போது, கிரானைட் கம்பெனியிடம் பணம் பெற்ற செயலாளர் …வெளிவந்திருக்கும் தகவல் !

  1. ramanans சொல்கிறார்:

    அண்ணே… எனக்கு ஒண்ணே ஒண்ணு மட்டும் தான்னே தோணுது. புல்லுக்கே இவ்வளவுன்னா, அப்போ நெல்லுக்கு…?

    தமிழர்களே.. தமிழர்களே.. நிவீர் வாழ்க.

  2. Prakash சொல்கிறார்:

    Nallavae!!!

  3. venkataramani சொல்கிறார்:

    கலைஞர் ஆட்சியில் அவரது உதவியாளர்கள் என்றில்லை
    உறவினர் அவர் தம் நட்புகள், நட்பு, “விசுவாச” ஊழியர்கள் என
    பலரும் இம்மாதிரியான் “கைம்மாறுகளை”ப் பெற்று
    இருக்கிறார்கள்.

    சன்னில் பணியாற்றிய காலத்தில் நிர்மலா பெரியசாமி கூட
    அடையாறு (?) பகுதியில் வீட்டடி மனை ஒதுக்கீடு பெற்று
    இருக்கிறார்.

    “பாட்டுக்குப்பாட்டு” கேலக்ஸி நிறுவனம் மேலாண்மைக்
    கல்லூரி நடத்தும் அளவு வளர்ந்திருக்கிறது.

    இதற்கெல்லாம் பல படிகள் மேலாக, அவரது முந்தைய ஆட்சியில்
    அவரது நெருங்கிய கவிஞர் ஒருவரின் ஏற்காடு ஏஸ்டேட்டில்
    உள்ள அவரது இல்லத்திற்கு “போய் வர வசதியாக” பொதுப் பணித்
    துறையின் மூலமாக சாலை வசதியே செய்து தந்திருக்கிறார்.

    அது சரி. புல்லுக்கே கோடிகள் என்றால், வயலுக்கு எத்தனை?

  4. rathnavelnatarajan சொல்கிறார்:

    படித்துப் பாருங்கள். அருமையான பதிவு. நன்றி திரு காவிரி மைந்தன்.
    What a Scientific & Innovative Idea. இவர்களால் மட்டும் தான் முடியும். மேகத்திலும், நிலத்திலும், நீரிலும், எதிலும், இவர்களால் எப்படியும் செய்ய முடியும்.

  5. rr சொல்கிறார்:

    “தேன் எடுப்பவன் புறங்கயை நக்கமலா இருப்பான்” இத்தகைய அரிய தத்துவததை தமிழ்ருக்கு போதனை செய்தவர்கள் தானே????????????!!!!!!!!!!!!

  6. RATHINAVEL சொல்கிறார்:

    தேன் எடுப்பவன் புறங்கயை நக்கமலா இருப்பான்” இத்தகைய அரிய தத்துவததை தமிழருக்கு போதனை செய்தவர்கள் தானே????????????!!!!!!!!!!!!

  7. GOPALASAMY சொல்கிறார்:

    KARUNA’S CLOSE FRIEND VAIRAMUTHU ( FUTURE NOBAL PRIZE WINNER) DID NOT SAY ANYTHING ABOUT GRANITE.
    IN JUNIOR VIKADAN, THERE IS PICTURE OF MOUNTAIN LIKE HALF CAKE! WHERE IS THE OTHER HALF?
    WHY THIS INTERNATIONAL POET KEPT QUIET, WHEN THE WATER SOURCES OF HIS NATIVE PLACE/DISTRICT WERE GRABBED AND RUINED?

  8. M.Meenakshisundaram சொல்கிறார்:

    I have got fed up with our tamil party for the tamils of the tamils and by the tamils. The less said about the state of affairs, the better, at least for your health.

  9. Padmanabhan Potti L சொல்கிறார்:

    கிரானைட் மட்டுமல்ல ஊழல் நடக்க வாய்ப்புள்ள அனைத்து மாநில மற்றும் மத்திய அரசு சார்பு நிறுவனங்களை சம்பந்தப்பட்ட தணிக்கை அதிகாரிகள் ஆய்வு செய்து காணப்படும் ஊழல்களை யாருக்கும் அஞ்சாமல் பொதுமக்களுக்கு தெரிவிப்பார்களா? மாநில மத்திய அரசுகள் அனுமதிக்குமா?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.