“மார்பிங்” செய்யப்பட்ட கார்ட்டூன் ஒன்று …

நேற்று வெளியான ஜூனியர் விகடன் இதழில் வெளி வந்திருக்கும்,
மார்பிங் செய்யப்பட்ட கார்ட்டூன் ஒன்றை கீழே வெளியிடுகிறேன்.

இதற்கான காரணங்கள் இரண்டு –

1) சென்ற மாதம் இது போன்ற முறையில் இருந்த கார்ட்டூன்
ஒன்றை இந்த வலைப்பதிவில் போட்டபோது – அது பல வித
இடைஞ்சல்களை சந்தித்தது. “அன்னை” சம்பந்தப்பட்ட
மார்பிங் – கார்ட்டூன்கள் வலைத்தளங்களில்  ஏற்றுக்
கொள்ளப்பட மாட்டா என்கிற அபிப்பிராயத்தை
அது தோற்றுவித்தது. அது உண்மையா என்பதை இதன் மூலம்
ஊர்ஜிதம் செய்துகொள்ள விரும்புகிறேன்.

2) பக்கம் பக்கமாக எழுதிப் புரிய வைக்க வேண்டிய
செய்திகளை சில கார்ட்டூன்கள்  பார்த்தவுடனேயே
நொடிப்பொழுதில் புரிந்து கொள்ளும்படி விளக்கி விடுகின்றன.
இந்த புத்திசாலித்தனமான கார்ட்டூனை தயாரித்தவர் யார்
என்று தெரியவில்லை. அவருக்கு என்/நம் பாராட்டுதல்களை
தெரிவிக்க  விரும்புகிறேன்.


———————————————————————————————–
இது நான் கண்ட ஒரு கல்வெட்டு –
மேலே உள்ளதற்கும் இதற்கும் எந்தவித
சம்பந்தமும் இல்லை !

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

10 Responses to “மார்பிங்” செய்யப்பட்ட கார்ட்டூன் ஒன்று …

  1. எழில் சொல்கிறார்:

    அன்னை தலயில் தலைப்பா கட்டி என்ன பலன். நம் அனைவருக்கும் அவர் ஏற்கனவே குல்லா மாட்டி விட்டாரே!

    அரசியல்வாதிகள் வாரிசுகளை அரசியலில் இறுக்குவது, தங்கள் இறுதி ஊர்வலத்துக்கு ஆள் சேர்பதற்கு தானோ?!

  2. கொச்சின் தேவதாஸ் சொல்கிறார்:

    ஒரு கார்டூன் எத்தனை தகவல்களைத் தருகிறது?அமெரிக்க கழுகு,மன்மோகன்,தலைக்குப்பின் உள்ள சாணி கலர்
    கொச்சின் தேவதாஸ்

  3. எழில் சொல்கிறார்:

    கார்டூன்களை பற்றிய பதிவாதலால் அது தொடர்பான ஒரு செய்தி. நேற்று லக்பிம எனும் பிரபல சிங்கள பத்திரிகை ஒரு கார்டூன் இட்டுள்ளது.

    “பக்கம் பக்கமாக எழுதிப் புரிய வைக்க வேண்டிய செய்திகளை சில கார்ட்டூன்கள் பார்த்தவுடனேயே நொடிப்பொழுதில் புரிந்து கொள்ளும்படி விளக்கி விடுகின்றன” என்று மேலே காவிரி மைந்தன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

    இதை பார்த்த பின் இந்த கார்டூன் வரைந்தவரையும் அவர் சார்ந்த சமுதாயத்தையும், அதை கண்டும் காணாமல் இருக்கும் அந்த அரசையும் பற்றி எழுதி தான் புரிய வைக்க வேண்டுமா?!

    A tasteless cartoon, Twitter and Indo-Sri Lanka relations (Updated)

    கார்டூனின் ஆபாசம் கருதி செய்தியில் அது மங்கலாகக பட்டுள்ளது. ஆனால் கீழ் நோக்கி சென்றால் வாசகர்கள் தெளிவான படத்தை சேர்த்துள்ளனர்.

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      தகவலுக்கு நன்றி எழில்.

      திட்டமிட்டபடி ராஜபக்சே அவசியம் இந்தியாவிற்கு
      வர வேண்டும் என்று விரும்புகிறேன்.

      வந்து, அவனுக்கு கிடைக்க வேண்டிய
      “மரியாதை”களை எல்லாம் அவசியம்
      பெற்றுச் செல்ல வேண்டும்.

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

      • எழில் சொல்கிறார்:

        என் வாழ்க்கையிலேயே நான் பார்த்த மிக கேவலமான கார்டூன். இந்த கார்டூனில் ஜெயலலிதாவை மட்டுமல்ல, மன்மோகன் சிங்கை (என்ன இருந்தாலும் இந்தியாவின் ஜனநாயக பிரதமர்) மிக கேவலமாக சித்தரித்து இந்தியர் அனைவைரையும் கேவல படுத்தி இருக்கிறார்கள்.

        இதில் கொடுமை என்னவென்றால் அசீம் திர்வேதி என்பவர் அண்ணாஹஜாரே போராட்டத்தில் கீழ் கண்ட கார்டூனை பிடித்திருந்தார்
        http://indiatoday.intoday.in/story/anti-corruption-cartoonist-aseem-trivedi-arrested-on-sedition-charges/1/216643.html
        என்று தேச துரோக வழக்கு தொடர்ந்து ஏழு நாட்கள் காவலில் வைத்துள்ளார்கள்.

        அவ்வழியில் பார்த்தால் இந்த கார்டூனுக்காக இலங்கை தூதுவராலயத்தை மூடி அவர்களை நாட்டுக்கு திருப்பி அனுப்ப வேண்டும்.

        இதை பார்த்த பின் ஆவது மன்மோகன் சிங்கு ரோஷம் வருமா தெரியவில்லை!

  4. venkataramani சொல்கிறார்:

    ஒருவர் மீதான நமது அபிப்ராயத்தை அல்லது நாம் சொல்ல
    விழைந்தும் சொல்ல இயலாத கருத்தை வெளிப்படுத்துவதே
    கருத்து சித்திரங்கள் (cartoon).

    நாம் விரும்பாத நபர் ஒருவரை, அவர்து எதிர்பார்ப்பாளரே
    முகம் சுளிக்கும் வகையில் விமர்சிக்கும் கருத்துக்களை
    உள்ளடக்கிய சித்திரங்கள் எல்லாம் கருத்துச் சித்திரங்களோ
    அல்லது கேலிச் சித்திரங்களோ ஆகா.

    ரயில் வண்டி கக்கூஸில் உள்ளவை கருத்து சித்திரமாகுமா?

    அம்மாதிரியான சித்திரங்கள் ஓவியரின் மன விகாரங்களை
    வெளிப்படுத்தும் சித்திரங்களே. பத்திரிகை எதுவானாலும்,
    “(பத்திரிகை) தொழில் தர்மம்” இம்மாதிர்யான சித்திரங்களை
    அனுமதிப்பதில்லை.

    ஆனால், பத்திரிகையாளர் சுதந்திரம் என்கிற பெயரில் இவர்கள்
    யாரை வேண்டுமானாலும், எது “குறி”த்தும் வரைவார்கள்.
    அரசியல்வாதிகளின் வெளியீடுகள் ஆனதால், முதலாளிகள்
    இவர்களுக்கு “கவர்” தருவார்கள். எனவே. இவர்களிடத்தில் கேவல
    உணர்ச்சிகளும் எண்ணங்களும் வெளிப்படுவது இயற்கையே.

    அதனால் தங்கள் (சமயங்களில் முதலாளிகளின்) மன விகாரங்களை,
    வக்கிர உணர்வுகளை, வெளிப்படுத்தவே “இம்மாதிரியான” ஆசாமிகள்
    “வேலை” செய்கிறார்கள்.எனவே, அவர்களுக்கு தொழில் உண்டு;
    ஆனால், தர்மம் இல்லை. ( குறிப்பிட்டு நான் சொல்ல வருவது
    “அம்மா” வை வைத்து படம் வரைந்தவரை).

    பிரச்சனை வந்தால் மறைந்து கொள்ள இவர்களுக்கும் “அடியில்”
    இடமிருக்கிறது.

  5. ரமேஷ் சொல்கிறார்:

    நாம் “விமரிசனம்” செய்து கார்ட்டூன் போடுவதற்கும்,
    சிங்களத்தான் கார்ட்டூன் போடுவதற்கும் தான்
    எவ்வளவு வித்தியாசம் ! இந்த வலைத்தளத்திலும்
    எவ்வளவோ விமரிசனங்கள் வந்துள்ளன.
    ஆனால் நிச்சயமாக எதுவும் அசிங்கமாகவோ,
    ஆபாசமாகவோ இருந்ததில்லை.
    அந்த வகையில் நாம் எவ்வளவோ உயர்ந்தவர்கள்
    காவிரிமைந்தன் சார்.

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நன்றி ரமேஷ் –

      நல்ல சமயத்தில் நினைவு படுத்தினீர்கள்.
      இந்த வலைத்தளத்தில் இதுவரை 600க்கும்
      மேற்பட்ட இடுகைகள் வெளிவந்துள்ளன.

      மிகவும் ஆத்திரத்தோடு, கோபமாக – எழுதப்பட்ட
      விமரிசனங்கள் எல்லாம் கூட உண்டு.
      இந்த விமரிசனங்களில் – கேலி, கிண்டல், கோபம், வசவு,
      ஆத்திரம், கடுஞ்சொற்கள் – எல்லாம் உண்டு.

      ஆனால் – அசிங்கம், ஆபாசம் – இரண்டிற்கும்
      நாம் இடம் கொடுத்ததே இல்லை.

      இந்த மரபைத் தொடர்ந்து கடைப்பிடிப்போம்.

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  6. Padmanabhan Potti L சொல்கிறார்:

    சோனியா காந்திக்கு தலைப்பாகை கட்டியதன் மூலம் அவரை விவேகனந்தராக சித்தரிக்கிறார்களோ என்னவோ? எனக்கும் பேஸ் புக்கில் இதுபோன்ற படம் வந்துள்ளது. ஆனால் அதில் சோனியா தலைப்பாகையுடன் குறுந்தாடியோடு மன்மோகன் சிங்க் போலவே மார்பிங் செய்யப்பட்டு அதில் கீழ்கண்டவாறு எழுதப்பட்டுள்ளது BEHIND EVERY SUCCESSFUL WOMAN THERE IS MAN என எழுதப்பட்டுள்ளது.

  7. c.venkatasubramanian சொல்கிறார்:

    the realityIt s easier to draw cartooons,occupy the chair feel the heat,can understand

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.