ஒரு துளி எமெர்ஜென்சி …

ஒரு துளி எமெர்ஜென்சி …

அண்மையில் மூத்த பாராளுமன்றவாதி இரா.செழியன்
அவர்களின் ஆங்கிலக்  கட்டுரை ஒன்றைப் படித்தேன்.

இந்திரா அம்மையாரின் எமெர்ஜென்சி காலத்தில்
நிகழ்ந்த பல அத்துமீறல்கள், சட்ட மீறல்கள்
எல்லாவற்றையும் அந்த நாட்களில் அனுபவத்தில்
கண்டவன் தான்.
இருந்தாலும், இப்போது அவர் எடுத்துக்கூறும் ஒரு
நிகழ்ச்சியை பார்த்தவுடன் பழைய நினைவுகள்
திரும்புகின்றன.

இந்த நிகழ்வு எமெர்ஜென்சி முடிவுக்கு வந்து, மொரார்ஜி
தேசாய் தலைமையில் புதிய ஆட்சி அமைந்த பிறகு,
எமெர்ஜென்சி அத்துமீறல்களை விசாரிக்க அமைக்கப்பட்ட
நீதிபதி ஷா கமிஷன் மூலம் வெளியுலகுக்கு தெரிய வந்தது.

—————–

வருடம் 1976 – மாதம் மார்ச்.
பி.சி.சேத்தி – எமெர்ஜென்சி காலத்தில், இந்திரா காந்தி
அம்மையாரின் ஆட்சியில் உள்துறை அமைச்சராக
அதிகாரம் செலுத்திக் கொண்டிருந்தார்.
ஒரு நாள் –
பொதுத்துறை வங்கியான – பஞ்சாப் நேஷனல்பேங்க்கின் –
சேர்மன் மற்றும் மேனேஜிங் டைரெக்டராகப்பணியாற்றிக்
கொண்டிருக்கும் டி.ஆர்.துளி – அமைச்சரது இல்லத்திற்கு
வரவழைக்கப்படுகிறார்.

பார்லிமெண்ட் தெருவிலிருந்து செயல்படும் ஒரு  
பத்திரிகை நிறுவனத்திற்கு,PNB வங்கியிலிருந்து
10 லட்சம் ரூபாய் கடன் அளிக்கும்படி,
“துளி”க்கு அமைச்சர் “வாய்மொழி”உத்திரவு இடுகிறார்.

அதைத் தொடர்ந்து, அந்த பத்திரிகை நிறுவனத்திற்கு
பார்லிமெண்ட் தெருவிலுள்ள PNB கிளையிலிருந்து 10 லட்ச
ரூபாய் கடன் அளிக்குமாறு மேற்படி வங்கிக் கிளைக்கு
திருவாளர் துளி “வாய்மொழியாக” உத்திரவு போடுகிறார்.

அந்த சமயத்தில், அந்த பத்திரிகை நிறுவனத்திற்கு,
மேற்படி வங்கிக்கிளையில் கணக்கு கூட இல்லை.
எந்த கேள்வியும் கேட்காமல், அந்த கிளையின்
மேலாளர் அந்த பத்திரிக்கையின் பேரில் புதிதாக
ஒரு கணக்கைத்  துவக்க ஏற்பாடு செய்து,
அந்த நிறுவனத்திற்கு 10 லட்ச ரூபாய் கடன்
கொடுக்கப்படுகிறது.

கடன் கொடுக்கும்போது  –

1) அந்த  பத்திரிகை நிறுவனம் முதலில்
கொடுப்பதாக ஒப்புக்கொண்ட  சொத்து அடமான
பத்திரத்தை கடைசி வரை  கொடுக்கவே இல்லை.

2) மேற்படி வங்கியோ, அந்த பத்திரிகை
நிறுவனத்தின் முந்திய இரண்டு ஆண்டுகளின்
பேலன்ஸ் ஷீட்டில்  10 லட்ச ரூபாய்க்கு நஷ்டக்கணக்கு
காட்டப்பட்டிருப்பதையும்,

3) கடன் வாங்கும் தினத்தில் – ஏற்கெனவே அந்த
நிறுவனத்திற்கு 47 லட்சம் ரூபாய் கடன் இருப்பதையும்
கருத்தில் கொள்ளவில்லை.

4)ஏற்கெனவே அந்த நிறுவனம் கணக்கு வைத்திருந்த
மூன்று வங்கிகளான -யுகோ வங்கி, சிண்டிகேட் வங்கி,
விஜயா வங்கி ஆகிய மூன்றையும் விட்டு விட்டு
பஞ்சாப் வங்கியில் புதிதாக  ஒரு  கணக்கைத் துவக்கி
கடன் வாங்க வேண்டிய நிலை அந்த பத்திரிகை
நிறுவனத்திற்கு  ஏன், எப்படி ஏற்பட்டது
என்பதையும் ஆராயவில்லை.

5) ஒரு நிறுவனத்திற்கு 10 லட்சம் ரூபாய் அளவிற்கு
கடன் கொடுப்பதானால், ஆராய வேண்டிய விஷயங்கள்
எதையுமே ஆராயவில்லை –

அமைச்சர் சொல்லி விட்டார். வங்கித் தலைவர்
பணம் கொடுத்து விட்டார்.

பின்னாளில் ஷா கமிஷன் விசாரணை நடக்கின்ற சமயத்தில்
கூட, அந்த பத்திரிகை நிறுவனம் அந்த கடனை
திருப்பிக் கொடுத்திருக்கவில்லை.ஓரளவு வட்டியை மட்டுமே
செலுத்தி இருந்தது.

ஷா கமிஷன் விசாரணையில் பதில் அளிக்கும்போது,
PNB தலைவர் துளி – எந்த வித விசாரணையும் செய்யாமல்,
வங்கி நடைமுறைகளை சரிவர கடைபிடிக்காமல்
அந்த பத்திரிகை நிறுவனத்திற்கு 10 லட்சம் ரூபாயை
தூக்கிக் கொடுத்ததற்கு சொன்ன ஒரே காரணம் –

அந்த பத்திரிகை நிறுவனத்திற்கு கடன் கொடுக்க
வேண்டுமென்பது பிரதமர் இந்திராகாந்தியின் விருப்பம் என்று
அமைச்சர் தெரிவித்ததே.

இன்னும் கொஞ்சம் ஆழ விசாரித்ததில் அந்த
PNB தலைவர் பதவிக்கு “துளி” எப்படி நியமிக்கப்பட்டார்
என்கிற விஷயமும் வெளிவந்தது.

பொதுத்துறை வங்கித் தலைவர் பதவிக்கு வழக்கமாக
ரிசர்வ் வங்கி பொருத்தமான 3 பெயர்களைக் கொண்ட
ஒரு பட்டியலை அரசுக்கு அனுப்பும். அதிலிருந்து
ஒரு நபரை மத்திய அரசு தேர்ந்தெடுக்கும்.
இந்த “துளி” விஷயத்தில் –
ரிசர்வ் வங்கி அனுப்பிய 3 பெயர்களையும் தவிர்த்து விட்டு,
இந்திரா அம்மையார் தானே சிபாரிசு செய்த பெயர் தானாம்
“துளி”- எனவே இதை எல்லாம் தொடர்பு படுத்தி –
ஒருங்கிணைத்துப் பார்த்தால்
உத்திரவாதம் இல்லாமல் கடன் கொடுத்ததோ,
கொடுத்த கடனை திரும்ப வசூலிக்காமல் விட்டதோ
எந்த கோணத்திலும் வியப்பாகத் தோன்றாது.

————————

இன்றைய தினத்தில் நிகழும் விஷயங்களை எல்லாம்
ஒப்பிடும்போது மேற்படி 10 லட்சம் கடன் எல்லாம் ஒரு
பொருட்டே இல்லை.

பின் எதற்காக இதைப்பற்றி இவ்வளவு விவரமாக
எழுதுகிறேன் என்கிறீர்களா ?

இந்த விஷயத்தில் நமக்கு ஈடுபாடு வருவது
அந்த பத்திரிகை நிறுவனத்தின்
பெயர் தெரியும்போது தான் – ஆமாம் –
AJL – Associated Journals Limited.

– எங்கேயோ கேள்விப்பட்ட பெயர் மாதிரி இருக்கிறதே
என்று யோசிக்கத் தோன்றுகிறதா ?

கொஞ்ச நாட்கள்  முன்னதாக வந்த செய்தி –
வழக்கம் போல் மறந்திருப்போம் !

சில நாட்களுக்கு முன்னர் டாக்டர் சுப்ரமணியன் சுவாமி
மும்பையில் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில்
கூறிய விஷயம் –

கம்பெனி ஆக்ட் செக்ஷன் 25ன் கீழ், திருமதி சோனியா
காந்தியும், அவரது மகன் ராகுல் காந்தியும் “யங் இண்டியன்”
என்கிற பெயரில் ஒரு புதிய நிறுவனத்தை துவக்கினார்கள்.
அதில் இருவருக்கும் தலா 38 % பங்குகள் என்கிற அளவில்
மொத்தம் 76 % உரிமையாளர்களாக ஆகிறார்கள்.

மேலே கூறியுள்ள (எமெர்ஜென்சி காலத்திய)
AJL – Associated Journals Limited க்கு
அகில இந்திய காங்கிரஸ் கட்சி கடனாக 90 கோடி ரூபாய்
கொடுத்திருந்தது (எப்போதோ -நமக்குத் தெரியவில்லை ).
ஒரு அரசியல் கட்சி தனது நிதியை ஒரு வர்த்தக
நிறுவனத்திற்கு கடன் கொடுப்பதே தேர்தல் கமிஷன் விதிகளை
மீறிய விஷயம் என்று சுவாமி புகார் கூறி இருந்தார்.

மேலும்   நிறுவனத்திடமிருந்து 90 கோடி கடனைத்
திரும்பப் பெறுவதற்கு  பதிலாக, வெறும் 50 லட்சத்தை
மட்டும் பெற்றுக் கொண்டு மீதிக் கடனை ரத்து செய்வது
என்றும், அதற்கு பதிலாக, AJL நிறுவனம் தனது
கம்பெனி பங்குகளை “யங் இண்டியன்” கம்பெனிக்கு எழுதிக்
கொடுத்து விட வேண்டும் என்றும் ஒரு போர்டு தீர்மானம்
நிறைவேற்றி செயல் பட்டது.

இதன் மூலம் கிட்டத்தட்ட 1600 கோடி ரூபாய்
பெறுமானமுள்ள AJL நிறுவனத்தின் சொத்துக்கள்,
அன்னையையும், பிள்ளையையும் பங்குதாரர்களாகக்
கொண்ட புதிய”யங் இண்டியன்” நிறுவனத்திற்கு
வந்து சேருகிறது. (யங் இண்டியன் நிறுவனத்திற்கும்
காங்கிரஸ் கட்சிக்கும் அதிகாரபூர்வமாக எந்தவித
சம்பந்தமும் இல்லை என்பது தான் விசேஷம் !)
முதல் எதுவும் போடாமலே –
இத்தனை சொத்துக்களுக்கு முதலாளியாகும் பேறு
இந்த நாட்டில் வேறு யாருக்கு கிட்டும் ?

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to ஒரு துளி எமெர்ஜென்சி …

  1. rathnavelnatarajan சொல்கிறார்:

    Friends,
    Please read. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

  2. c.venkatasubramanian சொல்கிறார்:

    what about INDIAN BANK Mr Gopalakrishnan?

  3. c.venkatasubramanian சொல்கிறார்:

    People should start utilising the RTI Act

  4. சைதை அஜீஸ் சொல்கிறார்:

    ஒரு மாநிலக்கட்சியே ஒரு லட்சத்து சில்லரை கோடிகளை அமுக்கும்போது இது என்ன பிஸாத்து ஆயிரத்து அறநூறு கோடி.
    தலைப்பை மாத்துங்க திரு காவிரி சார்.
    ஒரு துளி எமர்ஜன்ஸி அல்ல
    ஒரு கடல் எமர்ஜன்ஸி.
    (ரூம் போட்டு யோசிப்பாங்க போல, பணத்தை எப்படியெல்லாம் கொள்ளையடிப்பது என்று, கொள்ளிலே போறவனுங்க!)

  5. Padmanabhan Potti L சொல்கிறார்:

    இந்திரா காந்தி காலத்தில் கருணாநிதி இந்திராவுக்கு எதிராக போராட்டம் நடத்தினார்.
    ஆனால் தற்போது சோனியாவுக்கு எதிராக ஒன்றும் செய்யமுடியவில்லை. காரணம்
    பாவமூட்டையை சுமந்து கொண்டிருக்கிறார் .சோனியாவின் அனுமதி யின்றி தொலைதொடர்பு ராஜா மூலம் உலக மகா கொள்ளையை செய்திருக்க முடியாது .அதனால்தான் ராஜா மற்றும் கனிமொழி மீது நீதிமன்றத்தில் நிலுவை பெயரில் ஒரு நடவடிக்கையும் இல்லை. ஆனால் சோனியா காந்தி தன்னை விட அதிகமாக
    கொள்ளையடிக்க எப்படி அனுமதித்தார் என்றுதான் ஆச்சர்யமாக உள்ளது. ஒருவேளை
    கணிசமான தொகை சோனியாவின் குடும்ப வங்கிக்கு போயிருக்குமோ? எது எப்படியோ ?
    அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்

  6. Ganpat சொல்கிறார்:

    நண்பர் காவிரிமைந்தனுக்கு வணக்கம்,
    உங்கள் விடா முயற்சிக்கு என் நன்றி.
    நம் நாட்டில் தேர்தல் என ஒன்று இருந்து அதில் பாமரர்கள் அனைவரும் ஓட்டளிக்கலாம் எனும் நிலை உள்ளவரை எந்த பிரச்சினையும் தீராது.
    ஊழலற்ற இந்தியாவை பார்க்கும் பாக்கியம் செய்த ஒரு இந்தியனின் பாட்டன் கூட இன்னும் பிறக்கவில்லை எனபதே நிதர்சனம்.
    ஒரு Paracetamol கூட கைவசம் இல்லாத போது,கையில் உள்ள சிறந்த thermometer ஐயையும் விட்டெறிந்து விடுவதுதான் விவேகம்.
    வாழ்த்துக்கள்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.