இவர்கள் காசு அடிக்கிற லட்சணத்திற்கு பெருமை வேறா … ?

இவர்கள் காசு அடிக்கிற லட்சணத்திற்கு
பெருமை வேறா … ?

இன்றைய தினம் (10/02/2013) பல செய்தித்தாள்களில்
முழுபக்க விளம்பரம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

மத்திய அரசின் சார்பில் கரன்சி நோட்டுக்கள் அச்சடிக்கும்
மற்றும் (காசுகள்) நாணயங்கள் தயாரிக்கும் துறையின்
சார்பில் ஆண்டு விழா கொண்டாடுகிறார்கள் !

என்ன சொல்கிறார்கள் ….பார்ப்போமே !

-கடந்த 6 ஆண்டுக்கால சாதனையில் பெருமைப்படுகிறோம் !
-நஷ்டங்களையே சந்தித்து வந்த நிலைமை நீங்கி
 லாபம் காட்டத் துவங்கி விட்டோம் !
– நாணயங்கள்(காசுகள்) உற்பத்தி இரண்டு மடங்காக்கப்பட்டு
விட்டது !
– கரன்சி நோட்டுக்களின் உற்பத்தி 60% அளவிற்கு
உயர்ந்திருக்கிறது.

– இப்படி, இப்படி  சாதனைகள் பட்டியல் போகிறது.

நம் முன் சில கேள்விகள் எழுகின்றன.

-இவர்கள் செய்வது ஏகபோகத் தொழில். வேறு யாரும்
இதில்  (சட்டபூர்வமாக !) ஈடுபட முடியாது. இந்த துறையில்
இதுவரை நஷ்டம் வேறு ஏற்பட்டுக் கொண்டிருந்ததா ?

நம் நாட்டின் கரன்சி நோட்டுக்களை வெளிநாட்டில்
அச்சடிக்கும் நிலை இன்னமும் தொடர்கிறதே அது
அவமானம் இல்லையா ?
 

நம் நாட்டின் நாணயங்களில் சிலவகை
இன்னமும் அயல் நாடுகளில் தயார் செய்யப்பட்டு இறக்குமதி
செய்யப்படுகின்றனவே – அது ஏன் ?
இங்கு என்ன ஆட்களுக்குப் பஞ்சமா ?
தொழில் திறமைக்கு பஞ்சமா ?
(விட்டால் – சர்வ சாதாரணமாக
நம் ஆட்கள் பட்டரைகளிலேயே செய்வார்களே !)

தேவையான இயந்திரங்களை இறக்குமதி செய்து இங்கேயே
நாணயங்கள் அனைத்தையும் தயார் செய்ய முடியாதா ?
சுதந்திரம் பெற்று 65 ஆண்டுகளுக்குப் பிறகும்
நமக்குத் தேவையான கரன்சி நோட்டுகளையும்,
நாணயங்களையும் கூட வெளிநாட்டில் தயாரிக்க
ஆர்டர் கொடுப்பது –
நமக்குப் பெருமை தரும் விஷயமா ?
இந்த லட்சணத்தில் பத்திரிகைகளில்
சாதனை விளம்பரம் வேறா ?

இன்னும் சில விஷயங்கள் –

மக்களுக்கு அன்றாடம், அதிக பட்சம் புழக்கத்திற்கு
தேவைப்படும் நாணயங்கள் – 50 காசுகள், ஒரு ரூபாய்,
இரண்டு ரூபாய் மற்றும் 5 ரூபாய் நாணயங்கள்.
இவை எப்படி வடிவமைக்கப் பட்டிருக்கின்றன ?

கீழே பாருங்கள் –

25 காசு – 50 காசு   நாணயங்கள் –
ஒரே வடிவில் – ஒரே அளவில்.

25-50 coins

50 காசு – ஒரு ரூபாய் நாணயங்கள் –
ஒரே வடிவில் – ஒரே அளவில்.

50-100 coins

ஒரு ரூபாய் – இரண்டு ரூபாய் நாணயங்கள் –
ஒரே வடிவில் – ஒரே அளவில்.

100-200 coins

இந்த ஒரு ரூபாய்க்கும் இரண்டு ரூபாய்க்கும் வித்தியாசம்
தெரியாமல் மக்கள் அன்றாடும் படும் வேதனையை நான்
சொல்ல வேண்டியதே இல்லை. அவரவர்க்கே தெரியும்.

அடுத்து நாணயங்களின் மீது அச்சடிக்கப்பட்டிருக்கும்
சின்னங்களைப் பாருங்கள் –

1-2 coin symbols

இவை எதைக் குறிக்கின்றன ? இவற்றை யார்
தேர்ந்தெடுக்கிறார்கள் – யார் தீர்மானம் செய்கிறார்கள் ?
இவற்றை விட்டால் வேறு பொதுவான சின்னங்களே
நாட்டில் இல்லையா ?

நாணயங்கள் மற்றும் கரன்சி நோட்டுக்கள் தயாரிக்கும்
துறைக்குப்  பொறுப்பானவர்கள் இதை எல்லாம் யோசிக்க
வேண்டாமா ?

இருட்டில் தொட்டுப்பார்த்தால் கூட,
(கண் பார்வை அற்றவர்கள் தடவிப் பார்த்தே)
உணர வேண்டிய அளவிற்கு
நாணயங்களின்  வடிவத்திலும், எடையிலும்
வித்தியாசங்கள் இருக்க வேண்டாமா ?

இவர்களிடம் கற்பனா சக்தி இல்லையா -இல்லை
அக்கரையின்மையா ? அலட்சியமா ?
அமைச்சர்களின் புகைப்படங்களைப் போட்டு
செய்தித்தாள்களில் முழுப்பக்க விளம்பரம்
செய்வது சம்பந்தப்பட்ட அமைச்சர்களை
சந்தோஷப்படுத்தக்கூடும்.

அமைச்சர்கள் சில்லரைகளை கையாள்வதில்லை !
எனவே, அவர்களுக்கு மக்களின் சில்லரைக் கஷ்டங்கள்
புரியாமல் இருக்கலாம்.

ஆனால், அதிகாரிகள் சம்பளம் பெறுவது –
மக்களுக்காக உழைப்பதற்குத் தானே ?
பொது மக்களின் பிரச்சினைகளை கண்டறிந்து,
அவற்றைக் களைய  வேண்டியது அவர்களின்
முதல் கடமை இல்லையா ?


mint advt-2

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to இவர்கள் காசு அடிக்கிற லட்சணத்திற்கு பெருமை வேறா … ?

  1. சைதை அஜீஸ் சொல்கிறார்:

    சில்லரையில் இவ்வளவு இருக்கா காவிரி சார்?
    நம்மாளுங்களுக்கு இதைப்பற்றியெல்லாம் யோசிக்க நேரம் இருப்பதில்லையே!
    இவர்களுக்கு ஆயிரம் ரூபாயும் அதற்கு மேல் பத்தாயிரம் ரூபாய் நோட்டு அச்சடித்தால்தானே பதுக்க சுலபமாக இருக்கும்.
    இன்னும் கொஞ்ச நாட்களில் சுவிஸ் வங்கியின் விளம்பரம் நம் நாளிதழ்களில் வெளிவரும், பார்த்துக்கொண்டேயிருங்கள்!

  2. GOPALASAMY சொல்கிறார்:

    ONLY SONIA’S HAND IN ALL THE COINS? OR CONGRESS SYMBOL?

  3. Padmanabhan Potti L சொல்கிறார்:

    ஐம்பது பைசா , ஒரு ரூபாய் , இரண்டு ரூபாய் நாணயங்களில் உள்ள வளையல் போட்ட ?
    கை யாருடையது ? காங்கிரஸ் கையா ? எங்கள் ஆட்சி நடக்கும்போது எங்களது சின்னத்தை போடாமல் .பிஜேபி படமா போட முடியும் அதுபோல் எங்கள் விளம்பரம் கொடுக்காமல் மற்றவர்கள் விளம்பரமா கொடுக்கமுடியும் . அதிகாரிகள் நாங்கள் சொல்வதை மட்டுமே கேட்கும் நல்லவர்கள் . எங்களுக்கு எதிரானவர்கள்
    கூறுவதை யாரும் காது கொடுத்து கேட்கமாட்டார்கள் .

  4. c.venkatasubramanian சொல்கிறார்:

    Huge shortage of Re1,2 Coins.Differentiating between coins highly difficult.
    Pakistan printed fake notes r better than india printed.

  5. Ganpat சொல்கிறார்:

    1971 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து
    42 ஆண்டுகள் மிகச்சிறப்பான முறையில்
    காசு அடித்துக்கொண்டு….
    அதோடு நில்லாது,
    அந்த வித்தையை,
    மாநில கட்சிகள்,
    அரசு ஊழியர்கள்,
    போலீசார்,
    என்று அனைவர்க்கும் கற்பித்து,
    ஜாம் ஜாம் என அனைவரையும் காசு அடிக்க செய்த காங்கிரஸ் கட்சியை,
    மத்திய அரசாக கொண்ட நாட்டின் ஒரு குடிமகன் கேட்கும் கேள்வியா,

    “இவர்கள் காசு அடிக்கிற லட்சணத்திற்கு
    பெருமை வேறா … ?”

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.