காவிரியும் தமிழக முதல்வரும் …

காவிரியும் தமிழக முதல்வரும் …

jj-3

ஒரு வழியாக கர்னாடகா, மத்திய அரசு
என்கிற விடாக்கண்டன்,
கொடாக்கண்டன்களையும் -மற்ற
சகலவிதமான தடைகளையும்  தாண்டி –
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு  நேற்று நள்ளிரவு –
மத்திய அரசின் கெசட்டில் வெளியிடப்பட்டு –
இன்று சுப்ரீம் கோர்ட்டில் அளிக்கப்பட்டு விட்டது.

நீண்ட நாட்களாக மறுக்கப்பட்டு வந்த
காவிரி டெல்டா பாசனப் பகுதிகளைச் சேர்ந்த
லட்சக்கணக்கான தமிழக விவசாயிகளின் –

தண்ணீருக்கான  உரிமை இன்று
சட்டபூர்வமாக உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

பிடிவாதம் என்பதை negative குணம் என்றும்
விடாமுயற்சி என்பதை positive குணம் என்றும்
சொல்வார்கள். இரண்டையும் குழைத்து –
அரியதொரு கலவையாக்கி
அதையே தனது பலமாக்கிக் கொண்டு இந்த அற்புதமான
சாதனையை செய்திருக்கிறார்  தமிழக முதல்வர்
ஜெயலலிதா அவர்கள்.

சிலரால் வெளிப்படையாக
ஒப்புக்கொள்ள முடியாவிட்டாலும் –

இதன் மூலம் தமிழக மக்கள்
அனைவரின் மனப்பூர்வமான பாராட்டுதல்களுக்கும் அவர்
உரித்தானவர் ஆகிறார் என்பதே உண்மை !

முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு
அவரது விடாமுயற்சிக்காகவும்,
அயராத உழைப்பிற்காகவும் – இந்த வெற்றிக்காகவும்
நமது மனப்பூர்வமான பாராட்டுதல்களை தெரிவித்துக்
கொள்வோம்.

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to காவிரியும் தமிழக முதல்வரும் …

  1. ரிஷி சொல்கிறார்:

    தமிழக அரசு இதில் சாதித்திருப்பதாகக் கூறப்பட்டாலும், வாழ்வாதாரம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் இந்திய அரசின் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இவ்வளவு தூரம் போராடினால்தான் இந்தியாவில் என் வாழ்வாதாரத்தின் நிலையைக் காக்க முடியும் என்றால் – நான் இந்தியன் என்று எவ்வாறு பெருமை கொள்வது??? சொல்லுங்கள் அறிவுகெட்ட மூடர்களே..

    (இது ஒரு விவசாயியின் காட்டமான குரலொலி)

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      இந்த காட்டமான குரலொலியில் என் குரலும்
      சேர்ந்தே இருக்கிறது !

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  2. ரிஷி சொல்கிறார்:

    //சட்டபூர்வமாக உறுதி செய்யப்பட்டிருக்கிறது.//
    மன்னிக்கவும் காவிரி மைந்தன் ஐயா. இது சற்றே நகைப்புற வைக்கிறது.

  3. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    நண்பரே,

    இது நகைப்புற வைக்கக்கூடாது.
    கோபம் கொள்ள வைக்க வேண்டும்.

    இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக –
    காவிரி தோன்றிய காலத்திலிருந்தே – அதன்
    நீரை பயன்படுத்தி விவசாயம் செய்த தமிழர்கள்
    இன்று அதே தண்ணீரைப் பெற –

    ஒவ்வொரு கோர்ட் வாயிலாக அலைய
    வேண்டி இருக்கிறது.

    அரசியல் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை
    உறுதி செய்ய வேண்டிய மத்திய அரசு அரசியல்
    பண்ணுகிறது.

    மத்தியில் கூட்டாக ஆட்சி செய்யும் தமிழகக்கட்சி
    தப்பித் தவறிக்கூட தமிழகத்திற்கு சாதகமாக
    மத்திய அரசு எதையும் செய்து விடக்கூடாது என்று
    தன்னால் ஆனது அனைத்தையும் செய்கிறது.

    இந்த நிலையில் – உச்சநீதிமன்ற தற்போதைய
    நடவடிக்கைகளின் விளைவாக நீருக்கான நமது
    உரிமை தான் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

    இதை நடைமுறைப்படுத்த – இன்னும் ஏகப்பட்ட
    ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். அதைச் செய்வதற்கு
    மத்திய அரசும், கர்நாடக அரசும் ஒவ்வொரு நிலையிலும் எவ்வளவு தூரம்
    இழுத்தடிக்கப்போகின்றனவோ ?

    இப்படிப்பட்ட நிலையில் – உறுதி செய்யப்பட்டிருக்கிறது
    என்பதைத் தவிர வேறு வார்த்தை எதையாவது
    போடலாமா ? – நண்பரே நீங்களே சொல்லுங்களேன்.

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

    • ரிஷி சொல்கிறார்:

      //இது சற்றே நகைப்புற வைக்கிறது.//

      இது விரக்தியுடன் சிரிக்க வைக்கிறது என்று சொல்லியிருந்தால் சரியாக இருந்திருக்கும்.

      //உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்பதைத் தவிர வேறு வார்த்தை எதையாவது போடலாமா ? – நண்பரே நீங்களே சொல்லுங்களேன்.//

      இதைப் போன்ற ஆயிரம் உறுதிப்படுத்தல்கள் பார்த்துவிட்டதுதான் உறுத்தலாக உள்ளது ஐயா.

  4. எழில் சொல்கிறார்:

    பிடிவாதம்,விடாமுயற்சி இவற்றுடன் மூர்கதனம் என்ற ஒன்றையும் சேர்த்து கொள்ளவேண்டும் எனபது எனது அபிப்பிராயம். இந்த மூர்க்கதனத்தால் சில நேரங்களில் தன் தலையிலேயே மண்ணை வாரி போட்டுகொள்வார் முதல்வர். ஆனால் காவிரி பிரச்சனையில் அவரின் இந்த செயல்பாடு ஒரு வரலாற்று சாதனை. 1924 இல் போடப்பட்ட ஒப்பந்தம் முடிவுக்கு வந்து இப்போது நமக்கு என்று உரிமையுடன் தண்ணீரில் பங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டு விட்டது. போகவேண்டிய தூரம் இன்னும் அதிகம் இருப்பினும் பாதையும் இலக்கும் வகுத்தாகி விட்டது.இதற்காக தமிழக முதல்வரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

    இந்த வேளையில் கூட தமிழர்களின் வெற்றியாக பாராட்ட மனதில்லாமல் தான் தான் இதற்கெல்லாம் வழி வகுத்தேன் என்ற ரீதியல் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கும் செம்மொழி தலைவரை என்னவென்பது!

  5. Ganpat சொல்கிறார்:

    காவிரி நீர் என்பது நம்மை (தமிழர்களை)பொருத்தவரை இனி கானல் நீரே.
    அதிக மழைப்பொழிந்து கர்நாடக மாநிலத்தில் தோன்றும் உபரி நீரே இனி நமக்கு கிடைக்கும்.என்ன! இனியாவது கர்நாடகா அரசு, காவிரி ஆற்றின் குறுக்கே,புதிய அணை ஏதும் கட்டாது/அல்லது இருக்கும் அணை கொள்ளளவைஅதிகமாக்காமல் பார்த்துக்கொள வேண்டியது அவசியம்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.