துக்ளக் ‘சோ’ – ஜெயலலிதா வழக்கு குறித்த தலையங்கம் …..

 

 

இன்றைய தினம் வெளிவந்துள்ள ‘துக்ளக்’ வார இதழில் ஆசிரியர் ‘சோ’ அவர்கள் – ஜெயலலிதா அவர்களின்  வழக்கு குறித்த சில கேள்விகளுக்கு பதில் கூறி அதையே தலையங்கமாகப் போட்டிருக்கிறார்.

அதைப் பார்க்க வாய்ப்பில்லாத நண்பர்களுக்காக –
முக்கியமான சில பகுதிகளை மட்டும் கீழே தந்திருக்கிறேன்.

 

thuglaq editorial -1

thuglaq editorial -2

thuglaq editorial -3
பின் குறிப்பு –

ஆசிரியர் ‘சோ’ அவர்கள் ஜெயலலிதா ஆதரவாளர் தானே அவர் ஜெ-க்கு சாதகமாகத்தானே எழுதுவார் என்றெல்லாம் யோசிக்காமல் –

‘சோ’ அவர்கள் கூறும் சட்ட பின்னணிகளை மட்டும்
ஆராய்ந்தால் – நியாயம் புலப்படும்.

ஜெயலலிதா அவர்களுக்கு ‘நிகழ்ந்தது அப்பட்டமான அநியாயம்’ என்று நான் இதே விமரிசனம் தளத்தில் முன்னதாக எழுதியதெல்லாம் கிட்டத்தட்ட இந்த கோணங்களில் தான்.

இதில் கவனிக்கப்பட வேண்டிய
இன்னொரு மிக முக்கியமான விஷயம் –

ஜாமீன் மனு உயர்நீதிமன்ற நீதிபதி முன்பாக வந்தது
7ந்தேதி காலை பத்து மணிக்கு தான். சுமார் 1200 பக்கங்கள் அடங்கிய தீர்ப்பு ஆவணங்களை, விவாதங்களுக்கு இடையிலேயே படித்து முடித்து, யோசித்து,(அலசி ஆராய்ந்து..?)

‘தனி நீதிமன்றத் தீர்ப்பை அலசி ஆராய்ந்து
பார்த்தாகி விட்டது;
குற்றவாளிகளின் தவறுகள் உறுதிபடுத்தப்பட்டுள்ளன;
அது மிகவும் சரியான தீர்ப்பு”

-என்று உறுதியாகச் சொல்கிறார் நீதிபதி ( அதாவது ….
காவிரி பாயும் ….கர்நாடகா உயர்நீதி மன்ற நீதிபதி )

இதில் நியாயம் எங்கே இருக்கிறது என்று
பூதக்கண்ணாடியை வைத்துக் கொண்டு தேடிப் பார்த்தாலும் கிடைக்க மாட்டேனென்கிறது.

இருந்தால் தானே …. கிடைக்க ….?

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

58 Responses to துக்ளக் ‘சோ’ – ஜெயலலிதா வழக்கு குறித்த தலையங்கம் …..

  1. ரிஷி சொல்கிறார்:

    🙂 🙂 🙂

  2. ரிஷி சொல்கிறார்:

    கா.மை.,
    உச்சநீதிமன்றத்தில் பாலி நாரிமன் என்ற வழக்கறிஞர் ஜெ.வின் ஜாமீனுக்காக வாதாடப் போறாராமே? அவர் காவிரி நீர் வழக்குக்காக கர்நாடகத்தின் சார்பில் வழக்காடுபவர் என்றும் சொல்கிறார்கள். பின் எப்படி ஜெ.விற்காக? என்னதான் ஐயா நடக்குது இங்கே?

    • Sundar சொல்கிறார்:

      இதில் புரியாமல் என்ன இருக்கிறது ? காசு வாங்கிகொண்டு யோசிக்காமல் ஓட்டு போடும் நாட்டிலிருக்கிறீர்கள் அய்யா !!!

    • Ganpat சொல்கிறார்:

      நம்ம ஊர் ஜனங்க காலையில் சென்று ஸ்ரீராமரை வழிபட்டு விட்டு மாலையில் ம்யூசிக் அகெடமி யில் ராவணனின் வீணை கச்சேரிக்கும் தலைமை வகிப்பார்கள்.

      • ரிஷி சொல்கிறார்:

        அதெல்லாம் சரிதான் கண்பத் மற்றும் சுந்தர்.
        காவிரிக்காக கர்னாடகத்தின் சார்பில் வழக்காடுபவரை தன் வழக்குக்காக ஜெ. கொண்டு வந்திருப்பதன் மூலம் இதில் காவிர் நீர் பிரச்சினைக்கும், இவ்வழக்குக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை என ஜெ.வெ அறிவிக்கும்வண்ணம் ஆகிறதே….

        • M Nithil சொல்கிறார்:

          I observed that many JJs sympathizers tried to link Kaveri issue with this judgement and since JJ has sought the assistance of this lawyer, it is proved beyond doubt that there is no link between Kaveri issue with this judgement or rejection of bail.

      • M Nithil சொல்கிறார்:

        Yes Mr Ganpat, I agree both are wrong.

    • todayandme சொல்கிறார்:

      அரசியல்வாதிகள் தவறு செய்தார்கள் என்றால் மனிதர்கள் செய்யும் தவறு என்று கொள்ளலாம். ஆனால் இந்தப் பிரச்சினையைப் பொறுத்தவரை எங்கே சாதாரண கடைநிலை மனிதனுக்குக்கூட நீதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறதோ, நம்பப்படுகிறதோ அங்கேயே சட்டங்களை எதேச்சாதிகாரமாகப் பயன்படுத்தமுடியும் என்று பார்க்கும்போது….. .. கா.மை. எழுதியுள்ள விதமாக நீங்கள் மூவரும் புரிந்துகொள்ளவில்லை என்றே தோன்றுகிறது.

      நீ அப்போது செய்தாய், இப்போது அனுபவிக்கிறாய் என்பது சாதாரண மனிதர்களின் வெளிப்பாடு. ஆனால் சட்டப்படி குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டபிறகும்கூட, சட்டப்படியான வாத பிரதிவாதங்களுக்கு ஒப்பவே குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டவர் நீதி அமைப்புகளால் நடத்தப்படவேண்டும். இந்த சூழலில் தனிமனித சிந்தனைகளுக்கு அங்கு இடம் இல்லை. The court என்றால் நீதி அமைப்பு என்றுதான் பொருள்கொள்ளவேண்டும், நீதிபதி என்று அல்ல.

      இளைய தலைமுறையினர் சட்டமும் படிக்கவேண்டும், அப்போது இந்த நுணுக்கத்தைப் புரிந்துகொள்ள முடியும். கா.மை.யைப் பொறுத்தவரை இதே நிலை மாற்றுக் கட்சியினருக்கு மட்டுமல்ல, சாதாரண மனிதர்களுக்கு நிகழ்ந்தாலும் எழுதக்கூடியவர் என்பது இத்தனை பதிவுகளைப் படித்தபிறகும் உங்களுக்குப் (ரிஷி, நிதின், ரீடர்) புரியவில்லை என்றால், என்னால் நம்ப முடியவில்லை. தூங்குவது மாதிரி நடிக்கிறீர்கள் என்று வேண்டுமானால் எண்ண இடமிருக்கிறது.

      • M Nithil சொல்கிறார்:

        //இதே நிலை மாற்றுக் கட்சியினருக்கு மட்டுமல்ல, சாதாரண மனிதர்களுக்கு நிகழ்ந்தாலும் எழுதக்கூடியவர் என்பது //

        1) When 5 suspected bank robbers were killed brutally in Velachery (the chances to arrest them were plenty) Mr KM wrote, those criminals deserve such action. At the time the human rights group vehemently opposed the police action and argued that the suspects should have been arrested and given a fair trial. But Mr KM was very supportive to police killings and opposed the human rights group’s arguments.

        2) I am not a blogger or spending so much time reading and commenting blogs. I read 2 or 3 blogs regularly and Mr KM’s blog is my first choice. I was very much interested to know his views on 27th sep, but was much disappointed with his post ‘ aadama jaichomada’. He never bothered to write a word about JJ’s 1st term. He did not want to accept the fact that JJ is harvesting what she and Sasi sowed in the past.

        3) Just because JJ is good in her present term it doesn’t mean she and Sasi’s actions could be condoned. Why Mr Km is not accepting this fact.

        4) It is absurd to believe that without JJ TN will not survive.

  3. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    இந்த இடுகையின் மூலம் நான் சொல்ல வந்த
    இரண்டு முக்கியமான விஷயங்கள் –

    1) கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் ‘ஜாமீன்’
    கொடுப்பதற்கான எல்லா நியாயங்களும்
    இருந்தும், ஜாமீன் மறுக்கப்பட்டிருக்கிறது….
    ‘ஜாமீன் மறுப்பு’ சட்டத்தின் அடிப்படையில்
    அல்லாமல், நீதிபதியின் அணுகுமுறையின்
    அடிப்படையில் நிகழ்ந்திருக்கிறது…..

    2) அப்பீல் இன்னும் விசாரணைக்கு எடுத்துக்
    கொள்ளப்படாத நிலையிலேயே, ஒரே நாளிலேயே,
    சில மணி நேரங்களிலேயே, அப்பீல் ஜட்ஜ் –
    சுமார் 1200 பக்கமுள்ள கீழ்க்கோர்ட் ஜட்ஜ்மெண்ட்டை
    படித்துப் பார்த்து, ஆராய்ந்து விட்டு, சரியான தீர்ப்பு
    தான் என்று (தீர்ப்பே) கூறி விட்டார்.

    இவை எந்த அளவிற்கு நியாயம் என்பதையொட்டி,
    விவாதங்கள் நிகழ்ந்தால் பொருத்தமாக இருக்கும்
    என்பது என் கருத்து…..

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

    • ரிஷி சொல்கிறார்:

      ஜெ.விற்கு எதிராக மாபெரும் அராஜகம் கர்நாடக நீதிபதிகளால் நிகழ்த்தப்பட்டுள்ளது என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

      • M Nithil சொல்கிறார்:

        Both JJ and Sasi group looted TN from 1991 to 1996. Many cases were filed and they were acquitted but in this case they got the punishment. Why Mr KM is not writing a word about the atrocities that were taken place during JJ’s 1st tenure in TN. If Mr KM really means his blog’s caption //எனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்// then he should write or atleast acknowledge the atrocities of JJ + SASI. Afterall the atrocities and lootings took place in TN which Mr KM likes very much.

        I, like any other common man, understands the injustice shown to JJ when her bail plea was rejected by Karnataka HC. But at the same time JJ and SASI are not innocent. So it did not matter to me since I don’t belong to any party or follower of any political leader.

        • ரிஷி சொல்கிறார்:

          நிதில், நீங்கள் ஜெ மீது கொண்ட காழ்ப்புணர்வின் வெளிப்பாடுதான் இப்பின்னூட்டம் என்று கா.மை. அவர்கள் சற்று நேரத்தில் தனது கருத்தினை தெரியப்படுத்துவார். 🙂

          ஆகவேதான் என்னால் முழு விவரமாக சொல்ல முடியாமல்,

          //ஜெ.விற்கு எதிராக மாபெரும் அராஜகம் கர்நாடக நீதிபதிகளால் நிகழ்த்தப்பட்டுள்ளது என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.//

          இப்படி மட்டும் சொல்லிவிட்டு என் கருத்தினை முடித்துக்கொண்டேன்.

          • reader சொல்கிறார்:

            high five..

          • todayandme சொல்கிறார்:

            ரிஷி
            நீங்கள் உங்கள் சொந்தக்கருத்தைப் பின்னூட்டமிடலாமே தவிர பதிவரை சந்தோஷப்படுத்தவென்று பின்னூட்டமிடவேண்டிய தேவை இல்லையே.

            கா.மை. நிதிலைப் பற்றி என்ன எழுதுவார் என்று நீங்கள் அவருக்கு முன்பாக யூகிப்பதிலேயே தெரிகிறது, நீங்கள் பதிவரைப் பற்றியும் பதிவைப் பற்றியும் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறீர்கள் என்று அல்லது நானும் இருக்கிறேன் என்று காட்டிக்கொள்வதற்காக எதையே எழுதுகிறீர்கள் என்று.

            உண்மையாகவே உங்கள் சொந்தக் கருத்தை எழுதப் பாருங்களேன்.

        • todayandme சொல்கிறார்:

          Eventhough you don’t belong to any party or follower of any political leader, as a human, can’t you see this issue as a human right violation (on rejecting the bail plea with no reason to the ill-old-aged lady senior citizen). Very sad for the inhumanism.

  4. p shakthi சொல்கிறார்:

    If one is neutral and does not take sides, or prejudiced, consider what the case is for .It is pure & simple, and just an open & shut case !
    Unaccounted money in crores of rupees flowing into your bank account. The amount is more than 60 crores in just 2 years. If your income is bonafide, why you cannot show the source of such income? And intentionally you did not submit IT returns for 2 years although you have been earning multi crores. And with the present system in India, we all know that if the bank account alone shows such an enormous illegal wealth, how much more would be your hidden benami wealth!! And why the hell did you drag on the case for 18 years, and now say it is an old case !
    Your hundreds of good deeds cannot wipe out the crime committed.
    Nobody needs to go through her voluminous pleadings for bail/ the fact of the case just simple.
    Explain the source of income and go home joyfully! Otherwise you suffer the rule of law.
    No one can you put you behind the bars if you are innocent.
    Let us be neutral and dont take any sides. Let the courts do their job. We cannot say all the courts upto the Supreme court are all prejudiced!
    P.Shakthi

    • todayandme சொல்கிறார்:

      Shakthi,
      This is not just an open & shut case !

      If you read regularly all KM’s posts regarding this issue, one can easily understand the background. But you the people don’t want to understand the bg, want close this case.

      Though you all think to close this much, the others like swami wont want to shut.

      Yes . We are neutral, accepting the court’s justice and after that… Is ther any law to control the victim not to apply for bail…..

      Very sorry to say, This is the comman man’s BIG problem. Fearing about to know the law (of anybody whether the victim may ADMK / DMK / DMDK / PMK / VC / BJP ! / AFTERALL WE THE COMMONPEOPLE)

    • bandhu சொல்கிறார்:

      //Why Mr KM is not writing a word about the atrocities that were taken place during JJ’s 1st tenure in TN. //

      இதில் ஜெ தவறு செய்தாரா இல்லையா என்பதை விவாதிக்கவே இல்லை. தவறு செய்தவர் என்று குற்றம் சாட்டப் பட்டவர், குற்றம் நிரூபிக்கப் பட்டது என்று கீழ் கோர்ட்டில் தீர்ப்பளிக்கப் பட்டவர், எந்த உரிமையும் இல்லாதவரா? இந்த வழக்கில் ஜெ வை மறந்து வேறு யாரையாவது நினைத்துக் கொள்ளுங்கள்.. அவருக்கும் இதே வாதங்கள் பொருந்தும்.

      நீதி மன்றங்கள் வழக்கை அதன் அடிப்படைகள் மூலமும், வாதங்கள் மூலமும் மட்டுமே நடத்த வேண்டும். குற்றம் சாட்டப் பட்டவர் யார் என்று பார்த்து அதற்கேற்றார் போல் ‘நீதி’ வழங்கக் கூடாது. அதனால் தான் நீதி தேவதையின் கண்கள் கட்டப் பட்டிருக்கிறது.

      இது எல்லோருக்கும் பொருந்தும்!

  5. reader சொல்கிறார்:

    1. பொதுவாக உயர்நீதிமன்றம் இது மாதிரி வழக்குகளில் உடனே பிணை கொடுப்பதில்லை என்கிறார்கள்.
    2. பிணை கொடுப்பதும், கொடுக்காததும்நீதியரசரின் விருப்பம் சார்ந்ததே, ஏன் என்று கேள்வியெழுப்ப முடியாது.
    3. அம்மா விரும்பாவிட்டாலும் அவருக்கு திகாரில் ஒருத்தர் ஆப்படித்து விட்டார். 10வருடம் சிறை தண்டனை பெற்ற முன்னாள் ஹரியானா முதல்வர் ஓபி சௌதாலா உடம்பு சரியில்லை என்று பிணை வாங்கி தேர்தல் பரப்புரை செய்தாரென்றி அவரின் பிணை குறைக்கப்பட்டது. இது அம்மாவுக்கு பிணை தர உச்சநீதிமன்ற நீதியரசர்களை யோசிக்கச் செய்யும்.
    4. இப்ப இருக்கும் வாய்ப்பு, தமிழக சிறைக்கு மாறிக் கொள்வது ஒன்றுதான்.

    எல்லோருக்கும் தாமதப்படும் நீதி அம்மாவுக்காக மட்டும் விரைந்து வரவேணுமா?
    வழக்காடும்போது 160 வாய்தா வாங்கியவர்கள் ஜாமீனுக்கு மாத்திரம் இன்னிக்கே வேணும்னு அவசரப்படுவது விந்தையே.

    என்னதான் ஏகச் சக்ரவர்தினியாக முடி சூட்டிக் கொண்டாலும் அவருக்கு வந்திருக்கும் கேடு காலத்தை அவர் மட்டுந்தானே அனுபவித்து ஆகவேண்டும்?

    ஒருவிதத்தில் அந்தம்மாவுக்கு இது தனிமையில் நிறைய introspect செய்ய கடவுளாப் பாத்து ஏற்படுத்திக் கொடுத்த சந்தர்ப்பம் எனக் கொள்ள வேண்டியதுதான்.

    மேலும் உங்களிடம் காசு (கூட செல்வாக்கும்) இருந்தால் சிறை உங்கள ராஜா (அல்லது ராணி) போலப் பாத்துக்கும்.

    …தெய்வம் நின்று கொல்லும்!

    • bandhu சொல்கிறார்:

      //பிணை கொடுப்பதும், கொடுக்காததும்நீதியரசரின் விருப்பம் சார்ந்ததே, ஏன் என்று கேள்வியெழுப்ப முடியாது//

      I thought we were in democracy!

      • reader சொல்கிறார்:

        ”பொதுவாக வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தின் விடுமுறை தினங்களை பற்றிய கவனத்தில் இருப்பார்கள். செப்டம்பர் 20-ம் தேதி தீர்ப்பு என்று இருந்ததை அப்படியே விட்டிருக்கலாம். செப்டம்பர் 27-ம் தேதி என்று ஸ்பெஷல் கோர்ட் மாற்றியபோதாவது கவனமாக இருந்திருக்க வேண்டும். அதன்பிறகு ஒருவார காலம் கர்நாடக நீதிமன்றங்கள் விடுமுறை. அதனை இந்த வழக்கறிஞர்கள் கவனிக்கவில்லை. மேலும் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யும் போது மற்ற மனுக்களை போட மாட்டார்கள்.வழக்கின் தீர்ப்புக்குள் போகாமல் உடல்நலத்தைக் காரணமாகக் காட்டி மட்டுமே ஜாமீன் கேட்பார்கள். ஆனால் தேவையில்லாமல், தீர்ப்பை விமர்சித்து பேசி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வலியப் போய் மாட்டிக்கொண்டார்கள். ஜாமீன் மனுவோடு சேர்த்து 24-க்கும் மேற்பட்ட மனுக்களைப் போட்டு வழக்கை சிக்கல் ஆக்கினார்கள். நான்கு பேர் சம்பந்தப்பட்ட வழக்கில் ஒருவருக்கு ஜாமீன் வாங்கிவிட்டாலே அதனைக் காரணமாகக் காட்டி மற்றவர்களுக்கு வாங்க முடியும். ஜெயலலிதாவுக்கு மட்டும் முதலில் மனுப் போட்டு இருக்கலாம். அதனைவிட்டு நால்வருக்கும் சேர்த்து போட்டார்கள். இவை போதாது என்று, நீதிபதி குன்ஹாவை விமர்சித்து ஒரு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்கள். ‘அதிகப்படியான அபராதம் போட்டு என் மீது வெறுப்பை காட்டிவிட்டார் குன்ஹா’ என்று அந்த மனுவில் உள்ளது. இப்படி இந்த வழக்கறிஞர்கள் நடந்துகொண்ட அபத்தங்கள்தான் ஜெயலலிதாவுக்கு சிக்கல் மேல் சிக்கலை உருவாக்கிவிட்டது” என்று சொல்கிறார்கள். ”
        ****************************************************************************
        இது இன்றைய ஜூவியில் “விவரமறிந்த ஆய்வாளர்கள்” தெரிவித்துள்ள கருத்து.

      • reader சொல்கிறார்:

        இந்த டெமாகரசியில்தான் இதெல்லாம் நடந்தன, நடக்கின்றன, இனியும் நடக்கும்.
        **********************************************************************************************
        ஒரு நீதிபதி தன் சொந்த மாநில ஆட்களால் கோர்ட் பணியிடங்களை நிரப்புகிறார்
        ஒருவர் தலைமை நீதிபதி வழக்கு வகைபிரிப்பை சுழற்சியினால் மாற்ற விடாமல் கனிமவளங்கள் தொடர்பான வழக்குகளை ஒருவரே விசாரிக்கிறார்
        ஒருவர் தலைமை நீதிபதி கோர்ட்டுக்குசென்று காச்சுமூச்சென்று கத்துகிறார், மிரட்டுகிறார்.
        ஒருவர் தன் தனிப்பட்ட சொத்து பகைக்காக சொந்த சகோதரனையே கோர்ட் அவமதிப்பு என்று ரிமான்ட் செய்து சிறையிலடைக்கிறார்.
        விசில்ப்ளோயர் ஒருத்தரின் தளம் சட்டவிரோதமாக தடை செய்யப்படுகிறது.
        ஒருவர் அரசு நிறுவனம் என்று போர்ஜரி செய்யும் டுபாக்கூர் நிறுவனத்தின் துணையுடன் வலைத்தளத்தை ஹேக்கிங் செய்கிறார்.
        தன்னைப் பற்றி எழுதிய வலைத்தளத்தை பழிவாங்கும்பொருட்டு சம்பந்தமேயில்லாத தளத்தின் வடிவமைப்பாளரை சிறையிலடைக்கிறார்.
        ஒருவர் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட நூற்றுக்கணக்காட கிலோ எடையுள்ள சுங்கவரித்துறையினரால் கைப்பற்றப்பட்ட தங்கத்தை விடுவிக்கிறார்.
        ஒருவர் ஜெ சொத்து வழக்கு பெங்களூரில் நடந்து கொண்டிருக்கம்போதே அதன் தொடர்புடைய பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளை சம்பந்தமேயில்லாத வேறொரு மனு மூலம் விடுவிக்கிறார்.

    • todayandme சொல்கிறார்:

      ரீடர் அவர்கள் குழந்தைத்தனமாக யோசிக்கிறார், ஒரேயொரு சிறப்பு, அடம்பிடிக்கும் குழந்தை. கேட்பதைக் கொடுத்துத்தான் அழுகையை நிறுத்தவேண்டிய அடம்பிடிக்கும் குழந்தை.

      வாழ்நாளெல்லாம் குழந்தையாகவே இருந்துவிட்டால் நல்லதுதான் – இவர்களுக்கு யாரோ சோறுபோடுவார்கள், இவர்களுக்காக யாரோ யோசிப்பார்கள், இவர்களுக்காக யாரோ சம்பாதிப்பார்கள். என்ன ஒரேயொரு கஷ்டம் என்றால் அவதி என்று வரும்போது இவர்கள் தான் பாடுபட்டாகவேண்டும். அந்த யாரோ வந்து பார்க்கவேண்டிய அவசியம் இல்லை, அந்த யாரோ – தாயாக இல்லாத பட்சத்தில்.

      இது எனது தனிப்பட்ட கருத்து. நண்பர் கொஞ்சம் சட்டரீதியாக யோசிக்கப் பழகவேண்டும் என்பதற்காக கூறினேன். தவறென்றால் மன்னிக்க வேண்டுகிறேன்.

  6. N.S.M. Shahul Hameed சொல்கிறார்:

    ஜாமீன் மறுப்புக்கு நீதிபதி முன்வைத்த முக்கியமான காரணங்களில் ஒன்றை சோ அவர்கள் வசதியாக மறைத்து/மறந்து விட்டார். அது, உச்ச நீதிமன்றம் வழங்கிய முன்மாதிரித் தீர்ப்புகளின் படி (லாலு பிரசாத் வழக்கு உட்பட) உடனடியாக ஜாமினில் விடமுடியாது என்பதே.

    தண்டனை நிறுத்தி வைப்பது பற்றிய கோரிக்கையில், அந்த நீதிபதி தீர்ப்பு விபரங்களை அன்று காலை பத்து மணியிலிருந்துதான் படிக்கத் துவங்கியிருப்பார் என்று கருதிக்கொள்வது சுத்த அபத்தம். அப்படி முன்பே படித்திருந்தால் மறுவாசிப்பு என்பது மிகச்சுலபமானதாய் இருக்கும்.

  7. ரிஷி சொல்கிறார்:

    todayandme,
    உங்களுக்கு விளக்கிப் புரிய வைக்குமளவிற்கு என் சக்தி போதாமையை உணருகிறேன். தங்களது கருத்துகளுக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    • todayandme சொல்கிறார்:

      ரிஷி,
      என்னை யாரும் மூளைச்சலவை செய்யத் தேவை இல்லாதபடிக்கும் செய்தாலும் வழுவாதபடிக்கும் பிரச்சினையை நன்றாகப் புரிந்து தெளிந்திருக்கிறேன் நண்பரே. கா.மை. சொல்லும் விதமும் நன்கு புரிகிறது, நீங்கள் குறிப்பிடும் விதமும் புரிகிறது. உங்கள் சக்தியை விரயம் பண்ணாமல் சேமித்துவைத்துக்கொள்ளுங்கள். காலம் கனியும்போது உபயோகப்படும்.

  8. todayandme சொல்கிறார்:

    நண்பர் காமை.
    ராவணன் அவர்கள் தனது பின்னூட்டத்தில் தரக்குறைவான வார்த்தைகளால் பின்னூட்டமிடுபவர்களைக் குறிப்பிட்டிருப்பதால் தயவுசெய்து அதனை நீக்கும்படி கோருகிறேன்.

  9. ரிஷி சொல்கிறார்:

    /கா.மை. நிதிலைப் பற்றி என்ன எழுதுவார் என்று நீங்கள் அவருக்கு முன்பாக யூகிப்பதிலேயே தெரிகிறது, நீங்கள் பதிவரைப் பற்றியும் பதிவைப் பற்றியும் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறீர்கள் என்று அல்லது நானும் இருக்கிறேன் என்று காட்டிக்கொள்வதற்காக எதையே எழுதுகிறீர்கள் என்று.//

    ஒரு விடயத்தை மட்டும் தெளிவாக்கி விடுகிறேன். நான் எந்த வலைதளங்களிலும் கருத்துரைப்பதில்லை. எங்காவாது ஓரிரு தளங்களில் எப்போவாவது கருத்துரைப்பதோடு சரி. முன்னர் அதிகம் வழக்காடியது வினவு தளம் மற்றும் உண்மைத்தமிழன் தளங்களில் மட்டுமே. இப்போது அங்கே வாசிப்பதோடு சரி.. முழுமையாய் இயங்குவதில்லை. எனக்கென்று தனி வலைப்பூவும் கிடையாது. ஆகவே என்னைக் காட்டிக்கொள்ளத் தேவையே எனக்குக் கிடையாது.

    நான் தொடர்ச்சியாக subscribe செய்து வாசித்து வருவது காவிரி மைந்தனின் தளம் மட்டுமே. இதிலிருந்தே இத்தளத்தின் மீது, இத்தள நிறுவனர் மீது நான் கொண்டிருக்கும் மதிப்பினைப் புரிந்துகொள்ளலாம். மேலும், கா.மையின் அனைத்துப் பதிவுகளுக்கும் நான் கருத்துப் போடுவதில்லை. எங்காவது அதீத மாறுபாடு இருந்தால் மட்டுமே போடுவதுண்டு.

    சமீப காலமாக ஜெ. சார்பு நிலை கா.மையிடம் அதிகம் இருப்பதாகப் புலப்பட்டது. ஜெ.வை எதிர்த்து கருத்து சொன்ன சில நல்ல பின்னூட்டங்களுக்குக் கூட, அவரது பதில்கள் எனக்கு ஏற்புடையதாக இல்லை. அவரது சார்பு நிலை காரணமாகவே, எனது எதிர்ப்பு நிலை சற்று ஆழமாய் இருப்பதாக ஒருவேளை தோன்றலாம். அவர் கருத்து அவருக்கு; என்னுடையது எனக்கு.

    //ஜெ.விற்கு எதிராக மாபெரும் அராஜகம் கர்நாடக நீதிபதிகளால் நிகழ்த்தப்பட்டுள்ளது என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.//

    சிலவற்றை “ஒற்றைப் பரிமாணத்தில் இருந்து மட்டுமே பார்க்கச் சொல்லும்போது”, அதில் மேலும் வாதிட ஒன்றுமில்லாமல் போய்விடுகிறது. ஆகவே satire பாணியில்தான் மேற்கண்ட கருத்தினை இட்டேன். இது கா.மையை திருப்திப்படுத்த அல்ல.

    • todayandme சொல்கிறார்:

      //ஜெ. சார்பு நிலை கா.மையிடம் அதிகம் இருப்பதாகப் புலப்பட்டது//
      இதைத்தான் தவறு என்கிறேன். அவர் குறிப்பிட்டிருப்பது குற்றவாளியே ஆனாலும் சட்டம் மறுக்கப்பட்ட நிலை என்று நான் புரிந்துகொண்டிருக்கிறேன்.

      //அவர் கருத்து அவருக்கு; என்னுடையது எனக்கு..// நிச்சயமாக.

      // இது கா.மையை திருப்திப்படுத்த அல்ல..// உண்மையை வெளிப்படுத்தியதற்கு நன்றி நண்பரே.

  10. Drkgp சொல்கிறார்:

    Even though the excesses committed in the nineties were obvious
    to our eyes, it is not so until the highest court of our land agree with us.
    It is where the finest details of criminality is microscopically dissected
    and versatility of the lower court judgement decided. Hence there is an
    element of optimism is there. There are much bigger Sharks swimming
    scotfree throughout our country. Special courts are usually set up to put
    political opponents in quandary . Many convicted in similar cases are
    out on bail. So I feel she has a legal right to be out on bail.

  11. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    நண்பர் நிதில், ரிஷி – மற்றும் அவர்களையொத்த
    கருத்துடைய மற்ற நண்பர்களுக்கும் சேர்த்தே –

    30 வயதில் ஒருவருக்கு இருக்கும்
    மன நிலையும், அனுபவமும்,
    சூழ்நிலையும், பக்குவமும் வேறு.
    40 வயதில் வேறு.
    50 வயதில் வேறு.
    60 வயதில் அவர் அடைகின்ற பக்குவம் வேறு.
    வாழ்க்கையில் அடிபட அடிபட – அனுபவம் கூடுகிறது.
    எண்ணங்கள் மாறுகின்றன.
    லட்சியங்கள் மாறுகின்றன.
    சிந்தனை மாறுகிறது, போக்கு மாறுகிறது,
    செயல் திறன் மாறுகிறது.

    40 வயதில் என்னைப் பார்த்தவர்கள்,
    என்னுடன் பழகியவர்கள்
    இன்று 70 வயதில் என்னைப் பார்த்து அதிசயிக்கிறார்கள்.
    அந்த அளவிற்கு நான் மாறி விட்டேன் –
    அதை நானே உணர்கிறேன்.
    நானாக விரும்பி என்னை மாற்றிக் கொண்ட விதம் இது.

    இது போல் மற்றவர்களும் மாறலாம் – மாறுகிறார்கள்…!!
    மாறுபவர்கள் தான் மனிதர்கள். என்ன – அந்த மாற்றம்
    நல்ல திசை நோக்கி நடைபெற வேண்டும்.

    நண்பர் நிதிலுக்கும், ரிஷிக்கும் 91-96-ல் என்ன வயது
    இருந்திருக்கும் என்பது எனக்குத் தெரியாது.

    ஆனால் இவர்களை விட அதிகமாக எனக்கும் அப்போது
    கோபம் வந்தது. நானும் அதிமுகவை எதிர்த்து
    நிறைய பேசினேன் – எதிர்த்து ஓட்டுப் போட்டேன்.

    96-ல் ஜெ. அவர்களுக்கு என்னென்ன நிகழ்ந்தது …?
    28 நாட்கள் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்
    பட்டார். கலைஞர் கருணாநிதி அவரை
    முதல் தடவை சிறையில் அடைத்தபோது,
    இப்போது போல் அவர் மீது
    யாருக்கும் அனுதாபம் வரவில்லை.
    நன்றாக வேண்டும், படட்டும் என்று தான் நினைத்தார்கள்.

    உறவினர்கள் யாருமின்றி வாழும்
    ஒரு நடுவயதுப் பெண்மணியின் வீட்டில்,
    அவரைச் சிறையில் அடைத்து விட்டு,
    அவர் இல்லாத நேரத்தில்,
    செய்தியாளர் அனைவருக்கும்
    அவரது வீட்டைத் திறந்து காட்டி,
    படுக்கையறை, உள்ளாடைகள், புடவைகள், பாத்ரூம்
    உட்பட வீடியோ எடுத்து,
    அவரது தனிவாழ்க்கையின் புகைப்படங்கள் உட்பட –
    அனைத்தையும், அனைத்து ஊடகங்களிலும் பிரசுரித்து,
    அதிகபட்ச அவமானத்திற்கு அவர் உள்ளாக நேர்ந்தது.
    அப்போது அந்த செயல் -யாருக்குமே,
    ( நான் உட்படத்தான் ) –
    தவறாகத் தெரியவில்லை.

    91-96 -ல் நடந்தது தமிழக மக்கள் அனைவருக்கும்
    அப்போதே தெரியும். இன்று கோர்ட் கொடுப்பதை விட
    அதிகமான தண்டனையை அன்று அவர்களே
    கொடுத்து விட்டார்கள்.

    1996 – தேர்தலில் தோற்கடிக்கப்பட்டது முதல் தண்டனை.

    28 நாட்கள் சென்னை மத்திய சிறையில் இருந்ததும்,
    திமுக அரசு, சன் டிவி உட்பட அனைத்து மீடியாக்களின்
    முழு உதவியோடும், துணையோடும் அவரது
    சொந்த வாழ்க்கையைப் படம் பிடித்து வெளிச்சத்தில் காட்டி
    அவர் அவமானத்திற்கு உள்ளாக்க்கப்பட்டது அவருக்கு
    கிடைத்த இரண்டாவது தண்டனை.

    இப்போது கர்நாடகாவில் அவருக்கு கிடைத்திருப்பது
    மூன்றாவது தண்டனை.

    எந்த கட்சியையும் சாராத நான் –
    இப்போது ஏன் அவருக்குப் பரிந்து பேசுகிறேன்….?

    தமிழகத்தின் கடந்த காலங்கள் அனைத்தையும்
    உடனிருந்து அனுபவித்தவன் தான் நானும்.

    இவருக்குப் பின்னால் ஆட்சிக்கு வந்தவர்கள் –
    இவர் மீது குற்றம் சாட்டியவர்கள் –
    செய்த அலங்கோலங்கள்,
    என் வயது, என் அனுபவம், பக்குவம் –
    என் எண்ணங்களின் முதிர்ச்சி –
    அவரது நிகழ்கால செயல்பாடு –
    ஆகியவை தான் காரணம்.

    கடந்த 3 ஆண்டுக்காலமாக, தமிழ் நாட்டின்
    அடித்தட்டு மக்களின் நல்வாழ்வுத் திட்டங்களை
    அவர் ஒவ்வொன்றாக நிறைவேற்றுவது எனக்கு
    மன நிறைவு அளிக்கிறது.

    சமுதாயத்தில் யாருக்கு அரசு உதவி – உண்மையில்
    போய்ச்சேர வேண்டுமோ – அத்தகைய மக்களுக்கான
    திட்டங்கள் வரிசையாக வந்து கொண்டே இருக்கின்றன.

    என் 12 வயதில் – 9 பேர் இருந்த எங்கள் குடும்பத்தில்,
    அடுத்த வேளை சாப்பாட்டிற்கு அரிசி இல்லாத
    ஒரு நேரத்தில் –

    நான் இரண்டு அவுன்ஸ் ரத்தம் கொடுத்து,
    அதற்கீடாக 14 ரூபாய் வாங்கி வந்து,
    அதில் அரிசி வாங்கி வீட்டில் சோறு சமைக்கப்பட்டது.
    ( எனக்கு முன் பிறந்த என் அண்ணன் ஒருவனைத்தவிர,
    வீட்டில் வேறு யாருக்கும் இது தெரியாது )
    (அப்போது ரத்த தானம் எல்லாம் கிடையாது…
    ரத்தத்திற்கு டிமாண்ட் மிக அதிகம்.
    வயது பார்க்காமல் எடுத்துக் கொண்டார்கள்…)

    இன்று – வீட்டில் அரிசி இல்லை -சோறு இல்லை
    என்கிற நிலை தமிழ்நாட்டில்
    எந்த குடும்பத்திலும் இல்லை.
    இதே போல் பள்ளிகளில் நோட்டு புத்தகத்திலிருந்து,
    உடையிலிருந்து, சைக்கிளிலிருந்து,
    மதிய உணவிலிருந்து மடிக்கணிணி வரை
    அத்தனையும் –
    சமுதாயத்தில் யாருக்குப் உதவி தேவையோ –
    அவர்களுக்குப் போய்ச்சேருகிறது.
    பள்ளியில் ஆசிரியராக ராணிப்பேட்டையில்
    பணிபுரியும் என் நண்பர்
    ஒருவரிடம் நேற்றிரவு பேசிக்கொண்டிருந்தேன்.
    அவரது பள்ளியில் மட்டும் 413 சிறுவர்/சிறுமிகளுக்கு
    மடிக்கணிணிகள் இந்த வருடம் கொடுக்கப்பட்டனவாம்.

    ஒரு நாளைக்கு 100 ரூபாய் சம்பாதிக்கும் ஒருவரின்
    4 பேர் கொண்ட குடும்பம் கூட இன்று 3 வேளையும்
    அம்மா உணவகத்தில்
    சாப்பிட்டே பிழைத்து விடலாம்.

    சென்ற வாரம் திருச்சி சென்ற நான்
    அரசு மருத்துவமனையை பார்த்து பிரமித்து விட்டேன்.
    அத்தனை வசதிகளும் அடிமட்ட மக்களுக்கு இலவசமாகச்
    செய்யப்படுகின்றன.

    கர்ப்பிணி பெண்களுக்கு, பிறந்த குழந்தைகளுக்கு –
    எவ்வளவு வகை உதவிகள் …. வேண்டாம் –
    நான் விவரமாகச் சொல்லப்போனால்
    அது பிரச்சாரமாகி விடும்.

    தமிழகம் சார்ந்த பிரத்யேக பிரச்சினைகளை –
    காவிரி நதி நீர் பிரச்சினை ஆனாலும் சரி,
    முல்லைப் பெரியாறு பிரச்சினையிலும் சரி,
    தமிழக மீனவர் பிரச்சினையிலும் சரி,
    இலங்கைத் தமிழர் நல்வாழ்வு பற்றிய விஷயத்திலும் சரி,
    மத்திய அரசு சம்பந்தப்பட்ட – மாநிலத்தின்
    உரிமைப் பிரச்சினையிலும் சரி,
    இந்தி மொழி திணிப்பை வெளிப்படையாக எதிர்ப்பதிலும்,
    ராஜீவ் வழக்கில் தண்டனை பெற்றவர்களை
    விடுவிக்கும் விஷயத்திலும் சரி –

    தமிழ் நாடு, தமிழர் நலம் ஆகியவற்றில் தொடர்ந்து,
    எந்தவித தயக்கமும் இன்றி வெளிப்படையாக அவர்
    செயலாற்றுவதை நான் மனம் நிறைய
    பாராட்ட விரும்புகிறேன்.
    என்னை வருத்தும் ஒரே ஒரு பெரிய குறை –
    டாஸ்மாக். அது அடுத்த தேர்தலுக்குள்
    தொலைந்து விடும் என்று என் மனம் சொல்கிறது.

    பிடிவாத குணம் கொண்டவர்,
    யாரையும் மதிப்பதில்லை,
    எதிர்க்கட்சியினரை எதிலும்
    கலந்தாலோசனை செய்வதில்லை-
    என்றெல்லாம் குறை கூறலாம்.
    ஆனால் அவையெல்லாம்
    அவரது குணாதிசயத்தின் ஒரு பகுதி.

    அவரது – சாமர்த்தியம்,
    புத்தி கூர்மை,
    தைரியம்,
    வித்தியாசமான சிந்தனைத் திறன்,
    பிரச்சினைகளை கையாள்வதில்
    அவருக்கு இருக்கும் சாமர்த்தியம் ஆகியவை –

    இன்றைய தினம் தமிழகத்தில் இருக்கும் வேறு எந்த
    தலைவருக்கு இருக்கிறது சொல்லுங்கள் பார்ப்போம்…..

    கலைஞர் கருணாநிதி / தளபதி மு.க.ஸ்டாலின் …?
    டாக்டர் ராமதாஸ் / டாக்டர் அன்புமணி ….?
    கேப்டன் விஜய்காந்த் ….?

    (முதல்வர் பதவிக்கு வாய்ப்பு இருப்பவர்களை மட்டுமே
    இங்கு ஒப்பிட்டு கூறி இருக்கிறேன் )

    ஜனநாயகம் என்பது என்ன ….?

    இருப்பவற்றில் சிறந்ததைத் தேர்ந்தெடுக்கும்
    உரிமை தானே…?
    இப்போது தமிழ்நாட்டில் இருக்கின்ற
    தலைவர்களில் சிறந்தவர் யார் …?
    வேறு யாரைத் தேர்ந்தெடுக்கலாம் ….?
    நீங்கள் தான் சொல்லுங்களேன்….

    என்னுடைய பார்வையில் –
    இன்றைய தினம் – ஜெயலலிதா அவர்கள்
    தமிழ் நாட்டிற்கு மிக மிகத் தேவை.

    ஜெயலலிதா அவர்களின் தவறுகள் –
    பல ஆண்டுகள் பழையவை.
    அதற்கான தண்டனையை அவர் ஏற்கெனவே
    பல தடவைகள் பெற்று / அனுபவித்து விட்டார்.
    இப்போது கூட, சட்டத்தின் மூலம் நியாயமான தண்டனை
    கிடைத்திருக்குமானால், நான் அதைப்பற்றி பேசவே
    முனைந்திருக்க மாட்டேன்.

    அவர் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்களை
    சட்டபூர்வமாக எதிர்க்கும் உரிமை அவருக்கு இருக்கிறது.
    சட்டபூர்வமாக அவருக்கு உள்ள –
    “ஜாமீன்” ”
    “நியாயமான மற்றும்
    விரைவான அப்பீல் விசாரணை”
    போன்ற உரிமைகள் அவருக்கு அனுமதிக்கப்பட வேண்டும்.

    பின்னூட்டம் மிக நீண்டு விட்டது.
    இந்த பதிலை எழுத வேண்டிய அவசியத்தை
    உண்டுபண்ணிய
    நண்பர்கள் நிதிலுக்கும், ரிஷிக்கும் என் நன்றிகள்.

    நண்பர்களுக்கு – மீண்டும் ஒரு முறை கூறுகிறேன்.
    என் மனசாட்சி சொல்வதைத் தான்
    நான் இங்கு எழுதுகிறேன்.
    என் மனசாட்சிக்கு நான் என்றும் நேர்மையாக இருப்பேன்.
    நான் யாரையும், எந்த கட்சியையும் அண்டிப்
    பிழைக்கவில்லை.
    40 ஆண்டுகள் உழைத்ததால் கிடைக்கும்
    ஓய்வூதியத்தில் தான் என் குடும்பம் இன்று நடக்கிறது.
    ” இருக்கும் வரை – உடல் ஆரோக்கியமாக
    இருக்க அருள்புரி ” என்கிற ஒன்றை மட்டும் தான்
    இறைவனிடம் வேண்டுகிறேன்.

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

    • R.Ramachandran சொல்கிறார்:

      காவிரிமைந்தன் சார்,

      முன்னால் உள்ள சில பின்னூட்டங்களை பார்த்தபோது
      எனக்கு கூட எழுத வேண்டும் என்று தோன்றியது.
      ஆனால், சிக்கலான சில விஷயங்களை எப்படி
      எழுதுவது என்று புரியாமல் யோசித்துக் கொண்டிருந்தேன்.
      மிக அழகாக தெளிவாக விளக்கமாக
      உங்கள் position ஐ சொல்கிறீர்கள் சார்.
      உங்கள் stand எந்த அளவிற்கு சரி என்பதை
      உங்கள் பின்னூட்டம் மிகத்தெளிவாக சொல்கிறது.

      நீங்கள் சொல்வது போல், இருபது, முப்பது
      ஆண்டுகளுக்கு முன்னால் ஒருவர் செய்ததை எல்லாம்
      வைத்து இன்றைக்கு எடை போடுவது சரி இல்லை தான்.
      இன்றைக்கு ஒருவர் எப்படி இருக்கிறார் என்பதை
      வைத்து அவரை எடை போடுவது தான் சரியாக
      இருக்கும். உங்கள் இடுகைகளும், பின்னூட்டங்களும்
      நிறைய யோசிக்க வைக்கின்றன. நான் கூட உங்கள்
      இடுகைகளை பார்த்து சில விஷயங்களில் மாறி இருக்கிறேன்.
      உங்கள் அனுபவத்திற்கும், மனசாட்சிக்கும் என் வணக்கங்கள்.
      நன்றியுடன்,

      ஆர்.ராமச்சந்திரன்

    • விஜயன் சொல்கிறார்:

      அப்போ 2G வழக்குல தலீவருக்கு சிறைத்தண்டனை கொடுத்தா, அவருக்கு 2011 ல ஆட்சி வாய்ப்பை இழந்ததே பெரிய தண்டனை.
      அது மட்டும் இல்லாம அவரையும் 3 நாள் ஜெயில்ல வெச்சு அசிங்கப்படுத்திட்டாங்க..அதனால court தண்டனை ல்லாம் கொடுக்கப்படாது ன்னு எடுத்துக்கலாம் இல்ல..?!

      //காவிரி நதி நீர் பிரச்சினை ஆனாலும் சரி,
      முல்லைப் பெரியாறு பிரச்சினையிலும் சரி,
      தமிழக மீனவர் பிரச்சினையிலும் சரி,
      இலங்கைத் தமிழர் நல்வாழ்வு பற்றிய விஷயத்திலும் சரி,
      மத்திய அரசு சம்பந்தப்பட்ட – மாநிலத்தின் உரிமைப் பிரச்சினையிலும் சரி,
      இந்தி மொழி திணிப்பை வெளிப்படையாக எதிர்ப்பதிலும்,
      ராஜீவ் வழக்கில் தண்டனை பெற்றவர்களை
      விடுவிக்கும் விஷயத்திலும் சரி –//

      மனசாட்சிப்படி நீங்களே சொல்லுங்க..நீங்க குறிப்பிட்டு இருக்கிற இந்த 7 விஷயத்திலேயும் என்ன நமக்கு கெடைச்சுதுன்னு..

      //ஒரு நாளைக்கு 100 ரூபாய் சம்பாதிக்கும் ஒருவரின் 4 பேர் கொண்ட குடும்பம் கூட இன்று 3 வேளையும் அம்மா உணவகத்தில் சாப்பிட்டே பிழைத்து விடலாம்.//

      இதுதான் உங்களோட “ADMK” ஆட்சியைப்பத்தின மதிப்பீடுன்னா…. I am so Sorry கா.மை சார்..

      டிஸ்கி: உங்களை மாதிரியேதான் ‘நானும்’ எந்தக்கட்சியையும் சார்ந்தவன் இல்ல… 🙂

      • எழில் சொல்கிறார்:

        //அதனால court தண்டனை ல்லாம் கொடுக்கப்படாது ன்னு எடுத்துக்கலாம் இல்ல..?!//

        ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். 🙂

    • reader சொல்கிறார்:

      அய்யா,

      நீங்கள் மற்றும் உங்கள் நண்பர்களின் கவலை அம்மா சிறைப்பட்டதற்காக அல்ல, கருணாநிதி குடும்பத்தாருக்கு கிடைக்காத தண்டனை எப்படி இவருக்குக் கொடுக்கலாம் என்ற ரீதியிலேயே உள்ளதாக எனக்குப் படுகிறது.

      கவலை வேண்டாம். உப்பைத் தின்ற *.*நிதிகளும்/வாரிசுகளும் தண்டனை பெற வேண்டிய, தண்ணி குடிக்க வேண்டிய வேளை வந்து கொண்டிருக்கிறது. அது தாமதித்தால் அதை முன்னெடுக்க வேண்டிய கடமை உங்கள் நண்பர்களுக்கு நிறையவே உண்டு.

      அம்மாவின் மழைநீர் சேமிப்புத்திட்டம் எனக்கும் பிடிக்கும்தான். எம்.ஜி.ஆரின் சத்துணவுத் திட்டமும் பிடிக்கும்தான். அதற்காக அக்கட்சியின் ஆட்சியில் செய்யப்படும் ஊழல்களை சகித்துக் கொள்ள முடியாதே.

      ஆட்சியில் செய்யும் தவறுகளுக்கு தேர்தல் தோல்விதான் தண்டனை என்றால் அடுத்த முறை கருணாநிதி வென்றால்…. பரவாயில்லையா?
      அவருக்குத்தான் மக்கள் மன்றத்தில் ஏற்கனவே தண்டனை கொடுக்கப்பட்டாயிற்றே?

      அப்புறம் இப்படி மாற்றி மாற்றி தேர்தல் தண்டனை கொடுத்துக் கொண்டிருந்தால் மாற்று அரசியல் எங்ஙனம் தோன்றும்?

      **
      60 வயதில் அவர் அடைகின்ற பக்குவம் வேறு. வாழ்க்கையில் அடிபட அடிபட – அனுபவம் கூடுகிறது. எண்ணங்கள் மாறுகின்றன. லட்சியங்கள் மாறுகின்றன. சிந்தனை மாறுகிறது, போக்கு மாறுகிறது, செயல் திறன் மாறுகிறது.
      **
      அம்மாவிடம் அப்படி ஒன்றும் மாற்றம் தெரியவில்லையே. அவரிடம் நீங்கள் கண்ட மாற்றம்தான் என்ன?
      இப்போதாவது குற்றத்தை ஒப்புக் கொண்டு தண்டனையைக் குறைக்கும்படி கேட்டாரா என்ன? இன்னும் அரசியல் சதி என்ற பழைய பல்லவிதானே.

      **
      சென்ற வாரம் திருச்சி சென்ற நான்
      அரசு மருத்துவமனையை பார்த்து பிரமித்து விட்டேன்.
      அத்தனை வசதிகளும் அடிமட்ட மக்களுக்கு இலவசமாகச்
      செய்யப்படுகின்றன.
      **
      இது போன 3 வருசத்தில புதுசாக் கட்டுன மருத்துவமனைங்களா?. இல்லை மற்ற அரசு மருத்துவமனைகளில் இது போன்று நடப்பதில்லையா?

      **
      என்னை வருத்தும் ஒரே ஒரு பெரிய குறை –
      டாஸ்மாக். அது அடுத்த தேர்தலுக்குள்
      தொலைந்து விடும் என்று என் மனம் சொல்கிறது.
      **

      எப்படிங்க? ஸ்ரீமான் சோ அவர்கள் இயக்குநராக இருந்த, ஜெ மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான கோல்டன்-மிடாஸ் மது உற்பத்திக் கூடத்தை இழுத்து மூடியா?

      **
      இன்றைய தினம் தமிழகத்தில் இருக்கும் வேறு எந்த
      தலைவருக்கு இருக்கிறது சொல்லுங்கள் பார்ப்போம்…..

      கலைஞர் கருணாநிதி / தளபதி மு.க.ஸ்டாலின் …?
      டாக்டர் ராமதாஸ் / டாக்டர் அன்புமணி ….?
      கேப்டன் விஜய்காந்த் ….?
      **
      இவர்கள் யாருமே சிறந்த ஆட்சியாளர்கள் இல்லை.

      **
      என்னுடைய பார்வையில் –
      இன்றைய தினம் – ஜெயலலிதா அவர்கள்
      தமிழ் நாட்டிற்கு மிக மிகத் தேவை.
      **
      எதுக்கு வைகுண்டராஜனையும், பி.ஆர்.பழனிசாமியையும், ஆறுமுகசாமியையும் காப்பாத்துவதற்கா?

      சரிங்க, அவங்கள எதிர்கால மின்தேவையைக் கருத்தில் கொண்டு புதிய மின்சார உற்பத்தித் திட்டங்களையும், காற்றாலை மின்சாரத்தை பெற தகுந்த கிரிட்டையும், சூரிய ஒளி மின்சாரத்தை ஏதுவாக்கும் கொள்கைகளையும், ஏழைப் பெண்களுக்கு கோவை முருகானந்தத்தின் மலிவு விலை சானிடரி நேப்கின் திட்டத்தையும், அனைத்து வீடுகளுக்கும் மானிய விலையில் எல்.ஈ.டி விளக்குகளையும் வழங்க ஏற்பாடு செய்யச் சொல்லி பன்னீரிடம் கட்டளையிடச் சொல்லுங்க.

    • விஜயன் சொல்கிறார்:

      //உறவினர்கள் யாருமின்றி வாழும் ஒரு நடுவயதுப் பெண்மணியின்,//
      அப்புறம் எதுக்கு சார் இவ்ளோ சொத்து சேர்க்கணும்????

      //மாறுபவர்கள் தான் மனிதர்கள். என்ன – அந்த மாற்றம்
      நல்ல திசை நோக்கி நடைபெற வேண்டும்.//
      அப்படி எதுவும் ‘அம்மா’ மாறியது மாதிரி தெரியுதுங்களா..?

      //கடந்த 3 ஆண்டுக்காலமாக, தமிழ் நாட்டின் அடித்தட்டு மக்களின் நல்வாழ்வுத் திட்டங்களை அவர் ஒவ்வொன்றாக நிறைவேற்றுவது எனக்கு மன நிறைவு அளிக்கிறது.//
      கிக்கிக்கீ… ஆனாலும் உங்களுக்கு நகைச்சுவை உணர்வு நெம்ப ஜாஸ்திங்ணா..

      //என்னுடைய பார்வையில் – இன்றைய தினம் – ஜெயலலிதா அவர்கள் தமிழ் நாட்டிற்கு மிக மிகத் தேவை.//
      நம்முடைய லட்சியம் எதுவோ அதை நோக்கியே பயணம் அமையட்டும். பயணம் சிறக்க வாழ்த்துக்கள்..!!

      இதுக்கு எதுக்கு வேண்டாத டிஸ்கி எல்லாம்…..

    • Ganpat சொல்கிறார்:

      இதற்கு என் பதில் ஒரே வார்த்தையில்…”B R I L L I A N T”

    • yogeswaran சொல்கிறார்:

      Sir,

      you are too innocent.

      in democracy we are in the gutter. so we have select from the gutter..

      rgs

      yogi

  12. Drkgp சொல்கிறார்:

    Dear KM,
    Since the political picture in tn is so much muddied ,
    the best option for the sake of our future should be
    someone among the available who has at least
    one percent chance of making it. Some of them
    want to run even before they can crawl. Your
    analysis captures a fairly full picture as of now.

  13. natchander சொல்கிறார்:

    the much proclaimed AMMA UNAVAGAM haidesno allotment has beem made in the budget so fas been meeting funds only from the corporations funds. the recent audit has revealed that the ammaunavagam scheme hAS been eating the funds of corporation. andurring scheme.ough loss inc the amma water schemehas been handled by the transport drivers conductors only. again loss incurring scheme. let us hope that the defects may be removed soon

  14. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    “அன்புக்கு கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள்” –

    என்கிற அழகான தலைப்பில் வலைப்பதிவு
    வைத்திருக்கும் ‘வருண்’ என்கிற நண்பர் ஒருவர்
    தனது வலைத்தளத்தில், அன்பு மிகுதியால்
    என்னைப் பாராட்டித் தள்ளி இருக்கிறார்.
    தமிழில் எத்தனை சிறந்த “பண்பாளர்களை”
    கலைஞர் “உருவாக்கி” இருக்கிறார் என்பதைக் காண
    நன்றியால் உள்ளம் நிரம்பி வழிகிறது.
    அவரது பண்பை நீங்களும் காண வேண்டாமா ?
    எனவே அவரது இடுகை கீழே –

    ———————————————————————————–

    காவிரி மைந்தன், சோ ராமசாமி நீதியை வன்புணர்வு செய்யும்

    அயோக்கியர்கள்!

    நம்ம நாட்டில் சின்னப் பசங்கதான் தவறா நடந்துக்கிறாங்க.
    அவர்களுக்கு பொறுப்பில்லை! னுதான் பெரியவர்கள் சொல்வார்கள்.

    ஆனால் சாகிறவரைக்கும் நாட்டை எவ்வளவு நாசம் பண்ணனுமோ

    அந்தளவுக்கு நாசம் பண்ணுகிறவர்கள் பெரியவர்கள் தான்.

    இல்லைனு சொல்றீங்களா?

    உடனே கருணாநிதியை மட்டும் கையை காட்டுவீங்களே?

    அப்பாவி சங்கராச்சார்யா, பாவம் அந்த அறியாக் குழந்தையை

    விட்டுவிடுவீர்களே?

    இன்னுமா தொடர்ந்து வாசிக்கிறீங்க??

    ******************

    செயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் வந்த தீர்ப்பை “அநீதி”

    என்கிறார் ஒரு பெரிய மனுஷன்!!

    யார் அந்த நீதிபதி?

    காவிரி மைந்தன் என்னும் பதிவுலகில் உளறித்தள்ளும் ஒரு பெரிய

    மனுஷன்!!

    இவர் சொல்லும் நீதிக்கு வழிகாட்டி?

    ஆமா, இவர் ஆசான் யாரு?

    பாப்பான் சோ ராமசாமி!!

    இவரும் பார்ப்பானா?

    இல்லை! அநீதியை நியாயப்படுத்தும் பார்ப்பானை வழிபடும் திராவிட

    கைக்கூலிதான் இந்த பெரிய மனுஷன்!

    இந்தாளு காவிரி மைந்தனும், இவரோட சகோதரர் இன்னொரு கிழம்

    சோ ராமசாமியும் 18 வருடங்கள் நடந்த ஒரு வழக்கின் முடிவை, அதற்கு

    அளிக்கப்பட்ட நீதியை இஷ்டத்துக்கு விமர்சிச்சு, நீதியையே

    வன்புணர்வு செய்கிறார்கள் அயோக்கியர்கள்!!!

    நீதியை வன்புணர்வு செய்யும் இக்கிழங்களின் இச்செயல், ஒரு

    பச்சைக்குழந்தையை வன்புணர்வு செய்யும் கிழங்களின் செயலைவிட

    இழிவானது. நமது நாட்டை பாதாளத்தில் பிடித்துத்தள்ளும்

    பித்துப்பிடித்தவர்களின் முயற்சி இது!

    நீதி தேவதையின் ரெண்டாவது மகன், காவிரி மைந்தன், (மூத்த மகன்

    சோ ராமசாமி..) அளிக்கப்பட்ட நீதியை அலசி ஆராய்கிறேன் என்று

    வன்புணர்வு செய்கிறார்கள்!! யாரை? இக்கிழங்களின் தாயான நீதி

    தேவதையையே!!

    ஆமா, நீங்கள் எல்லாம், இக்கிழங்களால் நீதிதேவதை வன்புணர்வு

    செய்யப்படுவதை வேடிக்கைப் பார்த்து ரசிக்கும் தேசத் துரோகிகள்!!

    வெட்கங்கெட்ட ஜென்மங்கள்!!

    ‘தனி நீதிமன்றத் தீர்ப்பை அலசி ஆராய்ந்து
    பார்த்தாகி விட்டது;
    குற்றவாளிகளின் தவறுகள் உறுதிபடுத்தப்பட்டுள்ளன;
    அது மிகவும் சரியான தீர்ப்பு”
    -என்று உறுதியாகச் சொல்கிறார் நீதிபதி ( அதாவது ….
    காவிரி பாயும் ….கர்நாடகா உயர்நீதி மன்ற நீதிபதி )
    இதில் நியாயம் எங்கே இருக்கிறது என்று
    பூதக்கண்ணாடியை வைத்துக் கொண்டு தேடிப் பார்த்தாலும் கிடைக்க

    மாட்டேனென்கிறது.
    இருந்தால் தானே …. கிடைக்க ….?

    இரண்டு கண்ணும் அவிஞ்சு போன இக்கிழம் பூதக்கண்ணாடி போட்டுப்

    பார்த்துச்சாம்!

    கண்பார்வை அவிந்துபோனவனுக்கு பூதக்கண்ணாடி உதவாதுனு

    தெரியாதா, மதி கெட்ட பதரே??!!

    ஆமாம் உன்னைத்தான் சொல்கிறேன்!!!

    *********************

    இபோலா வைரஸை ஒழிக்கணும்னு உலகே போராடிக்கொண்டு

    இருக்கிறது. ஆனால், சட்டம் படித்து வந்து நீதிபதியாக இருக்கும்

    இன்னொரு இந்தியக் குடிமகனை, அநியாயமாக விமர்சிக்கும் நீதியை

    வன்புணர்வு செய்யும் கொடிய வைரஸான இந்த காவிரி மைந்தனை

    முதலில் பதிவுலகில் இருந்து ஒழிக்க வேண்டும்!

    இந்தாளு பேசுகிற நியாயம், தர்மம் எல்லாம் சரினு நீங்கள்

    நினைத்தீர்களென்றால்,

    நீயும் !!!

    ஆமா உன்னைத்தான் சொல்றேன்!!!

    அப்படி நினைக்கும் நீயும் அழிக்கப் பட வேண்டிய ஒரு கொடிய வைரஸ்!!

    ( http://timeforsomelove.blogspot.in/2014/10/blog-post_15.html )

    —————————————————————————————

    அவரது வலைப்பதிவுக்குச் சென்று
    என்னுடைய பாராட்டுதல்களைப் பதிவு
    செய்து நான் போட்டிருக்கும் பின்னூட்டம் கீழே –
    ———————————————————–

    நண்பர் வருண்,

    அற்புதமான இடுகை.
    தமிழில் எவ்வளவு அழகான சொற்கள் எல்லாம்
    இருக்கின்றன என்பதை நன்கு அறிந்து
    பயன்படுத்தி இருக்கிறீர்கள்.

    உங்கள் மனைவியும் இதைப் பார்த்தார்களா …?

    உங்கள் தாயிடமும் உங்களின் இந்தப் பக்கத்தைக்
    காட்டவும். உங்களைப் பெற்றதற்கு பெருமகிழ்வு
    கொள்வார்.

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

    • today.and.me சொல்கிறார்:

      கா.மை.

      விமர்சனத்தில் உங்கள் பதிவும், ரிலாக்ஸ் ப்ளீசில் உங்கள் பின்னூட்டமும் அருமை.

      “Please don’t judge me based on my attitude and from my blog posts and my responses. It is quite possible that I am a completely different person than ‘what you figured out’ from your analyses. Don’t read too much into it, please!” என்று பதிவரே தன்னைப் பற்றி (உண்மையை!) எழுதியிருப்பதால், இவரது கருத்தை நீங்கள் சீரியசாக எடுத்துக்கொள்ளத் தேவை இல்லை என்பது எனது கருத்து.

      https://www.blogger.com/profile/09822356453393865188

      பதிவர் தான் படித்ததோடு மட்டுமல்லாமல், அங்குவந்த அனைவருக்கும் விமரிசனத்தை அறிமுகம் செய்ததற்காக அவருக்கு நன்றி. அப்படிப்பட்டவர்களும் வந்து இங்கு படிக்கிறார்கள் என்பது விமரிசனத்துக்குக் கிடைத்த வரம்தான். இளையதலைமுறைக்கு உங்கள் அனுபவங்கள் மிகவும் தேவையான ஒன்றுதான். அதை அவர்களே படிக்கிறார்கள் அல்லவா.

      இன்று அவர்களது பாதை மாறியிருந்தாலும் நாளையாவது அவர்கள் பார்வை மாறுமல்லவா? நம்பிக்கை தானே வாழ்க்கை.

    • M Nithil சொல்கிறார்:

      Mr KM, you don’t have to reproduce this in your blog as it contains unacceptable language.This will :
      1) create a sort of sympathy for you and thereby influence people to accept your views
      2) create a guilt feeling to the people who do accept your views and express their opinions decently.

    • கோபாலன் சொல்கிறார்:

      ஐயா,

      தாங்கள் கூறிய இந்த நபரைப் பற்றி எனக்கும் தெரியும்.

      சேற்றில் விழுந்து ஓடும் ப……யைப் பார்த்து வேட்டி சேறாகிவிடும் என்று ஒதுங்கிப்போனால் தன்னைக்கண்டு அஞ்சுவதாக நினைத்து விரட்டும்.

      இவரின் பதிவை வெளியிட்டு தங்கள் வேட்டியை சேறாக்கி விட்டீர்களே.

      கோபாலன்

    • Ganpat சொல்கிறார்:

      இந்தப்பதிவை நீங்கள் இங்கு போடவேண்டிய தேவை ஏதுமில்லை என்பது என் கருத்து.

      • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

        மன்னிக்கவும் கண்பத்.

        இந்த விமரிசனம் தளத்தில் வெளியாகும் கருத்துக்களை
        பொறுத்துக் கொள்ள முடியாதவர்களின் –

        தரம்,
        மொழி,
        பின்னணி,
        நோக்கம் – ஆகியவை குறித்து,
        இந்த வலைத்தள நண்பர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்
        என்பது என் கருத்து. அதற்காகவே அதை இங்கு
        எடுத்துப் போட்டிருக்கிறேன்.

        (மற்றபடி, அவர் தரம் தாழ்ந்து எழுதுவதால்,
        என் சுயமரியாதை பாதிப்படைந்து விடும்
        என்கிற அச்சமெல்லாம் எனக்கு கிடையாது.
        என்னை விரும்புபவர்கள்,
        மதிக்கிறவர்கள் இத்தகைய கருத்துக்களைக் கொண்டு
        என்னை என்றும் மதிப்பிட மாட்டார்கள்….)

        தங்கள் கருத்துக்கு நன்றி.

        -வாழ்த்துக்களுடன்,
        காவிரிமைந்தன்

        • M Nithil சொல்கிறார்:

          // இந்த விமரிசனம் தளத்தில் வெளியாகும் கருத்துக்களை
          பொறுத்துக் கொள்ள முடியாதவர்களின் –

          தரம்,
          மொழி,
          பின்னணி,
          நோக்கம் – ஆகியவை குறித்து,
          இந்த வலைத்தள நண்பர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்
          என்பது என் கருத்து //

          Is this your opinion about the people who do not agree with your views ?

          • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

            நண்பர் நிதில்,

            இந்த வலைத்தளத்தில் வெளிவரும் கருத்துக்களை
            தாங்கிக் கொள்ள முடியாமல் –

            தரம் தாழ்ந்த வார்த்தைகளால் திட்டியும்,
            வயதைச் சொல்லி கேவலப்படுத்தியும்,
            சாதிவெறியில் உணர்வுகளை வெளிப்படுத்தியும்,

            எழுதுபவர்களைப் பற்றி – என் கருத்து இதே தான் –
            மீண்டும் கூறுகிறேன் – இதே தான்.

            அத்தகையவர்களை நீங்கள் ஆதரிப்பீர்கள் என்றால்,
            உங்களுக்கும் பதில் – இதே தான்.

            மாற்றுக் கருத்துக்களானாலும் சரி,
            வித்தியாசமான கருத்துக்களானாலும் சரி –
            உரிய முறையில் இங்கு தாராளமாக வெளிப்படுத்தலாம்.
            அவற்றைப் பண்பான, நாகரிகமான முறையில்
            விவாதிக்கத்தான் இந்த வலைத்தளம்.

            -இவ்வளவு நாட்களாக இந்த வலைத்தளத்தில்
            ஈடுபாடு காட்டுகிறீர்களே –
            உங்களுக்கு இது தெரியாதா என்ன… ?

            -வாழ்த்துக்களுடன்,
            காவிரிமைந்தன்

    • sakthy சொல்கிறார்:

      வருண் அண்ணா, நிச்சயமாக உங்களை விட நான் வயதில் குறைந்தவன். உங்கள் தளத்திற்கு வந்து என் பாராட்டுதல்களை சேர்க்க எண்ணினேன். ஆனால் என்னவோ மனம் இடம் தரவில்லை. நீங்கள் இங்கேயே படிப்பீர்கள் என்று தெரியும்.

      அண்ணா, படித்தவர்கள் எவரும் இப்படி எழுத மாட்டார்கள். படித்தவர்கள் என்பது பள்ளி-கல்லூரியில் படித்தவர்கள் என்பது பொருளல்ல. உண்மையை,நடு நிலையை, மற்றவர்களை-எதிரியானாலும் அவர்களை மதித்து நடப்பவர்கள், பண்பான வார்த்தைகளைப் பேசி எழுதி வருபவர்கள் இவர்களைக் குறிப்பது படித்தவர்கள் என்ற சொற் பதம்.

      ஆனால் நீங்கள் அதில் இருந்து தவறி விட்டதால், நிச்சயமாக நீங்கள் இணையத்தில் ஆபாச வலைப்பூக்களை -இலவசம் என்பதால் உருவாக்கி, தமிழ் அன்னையை கொச்சைப் படுத்தும் வார்த்தைகளைப் பயன்படுத்துவோரில் ஒருவராக இருக்கலாம் என எண்ணுகிறேன்.

      வேண்டாம் அண்ணா,இந்தக் கொலைவெறி. சாதி,மத ,வயது,ஏழை பணக்காரன் பேதமின்றி, சொல்லும் எழுதும் வார்த்தைகளை வைத்தே, மனித பண்பாடு,கலாச்சாரம் கொண்ட உலகம் நம்மை மதிக்கிறது.

      நல்லதை சொல்லி பெருமை சேர்க்கும் மனிதரும்,தீயதை சொல்லி சிறுமை சேர்க்கும் மனிதரும் இந்த உலகில் இருக்கவே செய்கிறார்கள். அவர்கள் திருந்துவதற்கு சில சந்தர்ப்பங்கள் கிடைக்கின்றன. உங்களுக்கும் இது ஒரு சந்தர்ப்பம். தவறு செய்வது மனித இயல்பு.

      உங்கள் வலைப்பூவை ஆபாச சாக்கடையில் வீழ்த்தாது, இனியாவது மனம் திருந்தி , நல்லதோர் வலைப்பூவாக நல்லதை சொல்லி,வழி நடத்தி செல்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்…………………

  15. visujjm சொல்கிறார்:

    Silence…

  16. chandraa சொல்கிறார்:

    well k.m.ji we know your immediate respnse in removing insult and indecent remarks of certain individuals. then why did you publish the rotten letter of

  17. sakthy சொல்கிறார்:

    பழிவாங்கத் துடிக்கும் சு.சாமி. ஜாமின் வழங்குவதில் புதிய சிக்கல்.
    சுப்பிரமணியசாமி சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் அவர், ‘‘ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கின் மனுதாரர் நான்தான். எனவே ஜெயலலிதாவின் ஜாமீன் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் போது எனது கருத்தையும் கேட்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

    இதன் மூலம் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கொடுக்கக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டில் சுப்பிரமணியசாமி வாதாடுவார் என்று கூறப்படுகிறது. அவர் எந்த சட்டப்பிரிவை சுட்டிக்காட்டி வாதாடுவாரோ என்ற பரபரப்பு நிலவுகிறது.

    சுப்ரீம் கோர்ட்டில் நாளை வழக்கமான பணிகள் முடிந்த பிறகு தீபாவளி விடுமுறை விடப்படும். 18–ந்தேதி முதல் 26–ந்தேதி வரை சுப்ரீம் கோர்ட்டுக்கு தீபாவளி விடுமுறையாகும். மீண்டும் 27–ந்தேதிதான் சுப்ரீம் கோர்ட்டு செயல்படத் தொடங்கும்.

    நீதி பக்கம் சாயுமா? தலை நிமிர்ந்து நிற்குமா?

  18. chandraa சொல்கிறார்:

    jeya had filed six to seven defamation cases against s.swamy. while dealing with times of india case the judge hadgivenen judgement in favour of times of india paper. besides the judge had criticised govt of tamilnadu for filing too many defamation cases. jeya never learns in her political career. now dr.swamy would naturally take vengeance on jeya let us witness dramatic developments on friday…..

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.