ஜெயகாந்தன் என்னும் சிங்கம்

scan0001 copy

 
தமிழ் நாட்டில் சில  வருடங்களுக்கு முன்  ஜெயகாந்தன்  என்கிற பெயரில்  சிங்கம் ஒன்று இருந்தது ! நீண்ட நாட்களாக அதன் உறுமலைக் கேட்க முடியவில்லை!
சிஙகம் மீண்டும் எப்போது தான்  உறுமும்  என்று  அநேகர்  ஆவலோடு  காத்திருந்தனர்.

 

நேற்று  சிங்கம் உறுமியது !
(இது வரை 3 நூல்களை எழுதியுள்ள ) கவிஞர்  கனிமொழியின் நூல் வெளியீட்டு விழாவிற்கு தலைமை தாங்கி சிங்கம் பேசியதாவது –

 

“இந்த கவிதை தொகுப்பை  ஒரு வாரமாக  நான் திரும்பத் திரும்பப் படித்ததில்
நிறைய யோசிக்க வைத்தது.
உரை நடையில் (?) வாள் வீச்சைப் போல் அதன்  நடை இருந்ததால்,
கவிதையாக மாறி (?)  சிறப்பாக  வந்திருக்கிறது.
கவிதை தலைப்பைப் பற்றி (“சிகரங்களில் உறைகிறது காலம்”)
யோசிக்கும்போது (!),  திருவள்ளுவர்,   ஈவெரா,  அண்ணாதுரை,
கருணாநிதி வரிசையில் கனிமொழி வருவார் என்று தோன்றுகிறது.”

 

சிங்கம்   இப்படியானதற்கு  காரணம் கலைஞர்  அண்மையில் வாங்கிக் கொடுத்த இலக்கியத்திற்கான  பரிசு  தான் என்றும்   சிங்கமே  கூறி விட்டது !

———-

கதை முடிந்து விட்டது ! இனி  விக்கிரமாதித்தன்  கதையில் வரும் வேதாளம்
கேட்கும்  கேள்வி  போல் –  இதைப் படிக்கும்  மக்களுக்கான   கேள்வி –

கீழ்க்கண்ட  3  பேர்களில்  யார்  அதிக  புத்திசாலி ? –

சிங்க (மாக  இருந்த)  ஜெயகாந்தனா ?
சிங்கத்தைப் பிடித்த  கலைஞரா ?
கவிப்பேரரசு வைரமுத்து இருக்கையில் -ஜெயகாந்தனைத் தலைமை தாங்க
அழைத்து வந்த  கவிஞர்  கனிமொழியா ?

Advertisements
This entry was posted in Uncategorized and tagged , , , , , . Bookmark the permalink.

One Response to ஜெயகாந்தன் என்னும் சிங்கம்

  1. Jawahar சொல்கிறார்:

    நிச்சயம் ஜெயகாந்தன்தான். முரண்பாடுகளுக்குப் பெயர் போன அவர் செய்திருக்கும் இதுவும் முரண்பாடுதானே!

    http://kgjawarlal.wordpress.com

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.