எந்திரன் லாபம் கொடுத்த உற்சாகத்தில் புதிதாக விமான கம்பெனி பங்குகள் ! ?

எந்திரன் லாபம் கொடுத்த உற்சாகத்தில்
புதிதாக விமான கம்பெனி பங்குகள் ! ?

கலாநிதி மாறன் உருவாக்கியுள்ள
கேஏஎல் விமான நிறுவனம்  சார்பாக
ஸ்பெஸ்ஜெட்  விமானத்தின்
5 % பங்குகள் சுமார்
91.52 கோடிகளுக்கு புதிதாக
வாங்கப்பட்டுள்ளதாக
மும்பை ஸ்டாக் எக்ஸ்சேஞ்சுக்கு
விமான நிறுவனத்தின் சார்பில் –

இன்று ஒரு அறிவிப்பு தாக்கல்
செய்யப்பட்டுள்ளது.

விளம்பரம் இன்றி செய்யப்பட்டுள்ள
இந்த வர்த்தகம், பங்குச்சந்தை அறிவிப்பு
சட்டப்படி கட்டாயம் என்பதால் செய்தி
வெளிவந்துள்ளது.

கலாநிதி மாறன் ஜூன் மாதத்தில்
ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்தில்
பங்குகள் வாங்கி பொறுப்பேற்க
ஆரம்பித்த பிறகு, இதன் செயல்பாடுகள்
விரிவடைய
ஆரம்பித்துள்ளன.

22 விமானங்களைக் கொண்டுள்ள இந்த
நிறுவனத்தின் செயல்பாடுகள் இதுவரை
இந்தியாவிற்குள் மட்டும் இருந்து வந்தது.

இன்று முதல் வெளிநாடுகளுக்கும் விமான
சேவை விரிவாக்கப்படுகிறது.
இன்று  முதல்
தில்லி – காட்மண்டுவுக்கும்,

வருகிற சனிக்கிழமை முதல்,
சென்னை-கொழும்புவிற்கும் இடையேயும்

ஸ்பைஸ்ஜெட் விமானங்கள் புதிதாக
இயக்கப்படுகின்றன.

எந்திரன் அனுபவம் கொடுத்த  உற்சாகமா ?

எப்படி இருந்தாலும் – கலாநிதி மாறனுக்கு
நம்  வாழ்த்துக்கள்  !!

This entry was posted in அரசியல், அரசு, இணைய தளம், இந்தியன், இன்றைய வரலாறு, ஈழம், எந்திரன், கட்டுரை, கலாநிதி மாறன், குடும்பம், சரித்திர நிகழ்வுகள், தமிழ், திரைப்படம், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, பொருளாதாரம், Uncategorized and tagged , , , , , , , , , , , , . Bookmark the permalink.