2000 பேரிடம் வசூல் வேட்டை – ஜெகத் கஸ்பர் ராஜ் தமிழின் பெயரில் அடித்த / அடிக்கும் கொள்ளை !!

2000 பேரிடம் வசூல் வேட்டை –
ஜெகத் கஸ்பர் ராஜ் தமிழின் பெயரில்
அடித்த / அடிக்கும் கொள்ளை  !!

2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடுகள் வெளிப்பட
ஆரம்பித்ததில் ஒரு நல்ல விஷயம் –
ஜெகத் கஸ்பர் ராஜின்  இன்னொரு பக்கம்
(ஒரு பக்கம் என்று சொல்வது தவறாகலாம் –
பல பக்கங்கள் )வெளியே வந்திருப்பது.

தமிழின் பெயரைச் சொல்லிக்கொண்டே
இவர் இழைத்த துரோகம்
எங்கு சென்றாலும்  இவரை விடாது துரத்தும்
என்பது நிச்சயம்.

ராஜாவின் ஆலோசனையின் பெயரில்,
ஏர்டெல் சுனில் மிட்டல் தமிழ் மையத்திற்கு
40 லட்சம் ரூபாய் நன்கொடை(!)
என்று கூறி அளித்திருந்தாராம் !
அதன் விளைவே  சிபிஐ
தமிழ் மையத்திற்கு வருகை.
நான் வாங்கியது நன்கொடை தானே –
அதில் என்ன தவறு என்று
வினவினாராம் இவர் !
சுனில் மிட்டல் என்ன இவர் மாமனா – மச்சானா ?
இல்லை உடன்பிறந்தவரா ?
அவர் ஏன் கொடுக்க வேண்டும் இவருக்கு ?
அதுவும் இந்த அளவிற்கு ?

இவரைப் போன்ற பிறவிகளிடம் கூச்சத்தை
எதிர்பார்க்கலாமா ? மீண்டும் இப்போது
சென்னை சங்கமம் சீசன் ஆரம்பித்து விட்டது !
மீண்டும் பணம் பண்ண இன்னும் ஒரு சந்தர்ப்பம்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர்
ஒருவர் ஊழல் வழக்கிலிருந்து தமிழ் மையம்
விடுபடாத நிலையில், தமிழக அரசு தமிழ்
மையத்துடன் சேர்ந்து சங்கமிப்பது, பொதுமக்களின்
வரிப்பணத்தை ஊழல் பேர்வழிகளிடம்
ஒப்படைப்பதாகும் என்று வழக்கு போட்டிருந்தார்.

இது சம்பந்தமாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு
அளித்துள்ள பதில் மனுவில் –
மொத்தம் ஒரு கோடி ரூபாய் செலவழியக்கூடும்
என்றும் அதில் 67 லட்சம் கலைஞர்களின்
சம்பளத்திற்காகவும், 33 லட்சம் விளம்பரத்திற்காகவும்
செலவழிக்கப்படும்  என்றும்,

தமிழ் மையத்துடன் பண பரிவர்த்தனை(?) ஏதும்
செய்யப்பட மாட்டாது என்று உறுதி அளித்திருக்கிறது.

கலைஞர்களை ஒருங்கிணைக்கும் பணியில் மட்டுமே
தமிழ் மையம் இணந்து செயல்படும் என்றும்
அதன் பெயர் எங்கும்  விளம்பரப்படுத்தப்பட மாட்டாது
என்றும் அரசு உறுதி அளித்துள்ளது.

இதே சமயத்தில், இன்னொரு தகவல் வெளியாகி
இருக்கிறது. அரசு பணம் வரா விட்டால் என்ன –
அரசு துணை இருந்தால் போதுமே –
சம்பாதித்துக் கொள்ள
எங்களுக்கே தெரியும் என்பது போல் –

சுமார் 2000 பணம் படைத்தவர்களுக்கு (!)
தமிழ் மையம் சார்பில் ஜெகத் கஸ்பர்
தாக்கீது (?) விடுத்திருக்கிறாராம்.
சங்கமம் நிகழ்ச்சியை செவ்வனே நடத்திட
4 கோடி ரூபாய் தேவைப்படும் என்றும்
அதற்கான கொடையை (!) தமிழ் மையத்திற்கு
தந்திட வேண்டும் என்று.

கடந்த 4 ஆண்டுகளில் இவ்வாறு
அடித்த கொள்ளைகள் எவ்வளவோ ?

விழாவை அரசாங்கம் நடத்துவதாக இருந்தால்
இவர் எதற்காக வசூல் நடத்த வேண்டும் ?
இத்தனை அவமானங்களுக்குப் பின்னரும்
மீண்டும் மீண்டும் மக்கள் மத்தியில் வர
இவருக்கு வெட்கமாக இல்லாமல் இருக்கலாம் –
ஆனால் நமக்கு அசிங்கமாக இருக்கிறதே !

சங்கமம் நிகழ்ச்சி தொடர்பாக –
மீண்டும் இந்த மனிதர் செய்தியாளர்களை
சந்திக்க நேர்ந்தால்,  தமிழகச் செய்தியாளர்கள்
அவ்வளவு சுலபமாக இவரைத் தப்ப
விடக்கூடாது.

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, போலிச் சாமியார்கள், மனித உரிமை மீறல், Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.