முல்லைப் பெரியாறு -தமிழ் நாடு ஏமாந்து கொண்டிருக்கிறது – உடனடித் தேவை பலமான பதில் தாக்குதல்

முல்லைப் பெரியாறு  -தமிழ் நாடு
ஏமாந்து கொண்டிருக்கிறது –
உடனடித் தேவை பலமான பதில் தாக்குதல்


முல்லைப் பெரியாறு பற்றி அகில இந்திய அளவில்
புயலைக் கிளப்பிவிட்டு – தமிழ் நாட்டை
பைத்தியக்காரர்கள் வசிக்கும் இடம் என்று பேச
வைப்பதில் வெற்றி பெற்று விட்டனர் கேரளத்தவர்.

மீடியாக்களில்,டெல்லியில், அகில இந்திய அளவில்
கேட்கிறார்கள் –பலமாகக் கேட்கிறார்கள் !

“116 வருட சுண்ணாம்பு அணை – இன்னும்
எவ்வளவு நாள் தாங்கும் ?

தங்கள்  இடத்திலேயே –
தங்கள்  செலவிலேயே –
புதிய அணையைக் கட்டி,
தமிழ் நாட்டிற்கு அதே அளவு தண்ணீரைத் தருவதாக
கேரளா சொல்கிறதே – ஒப்பந்தம் எழுதிக்
கொடுக்கிறோம் என்கிறார்களே.
இதை ஏற்றுக் கொள்ள தமிழ் நாடு ஏன் மறுக்கிறது ?
இது என்ன வீண் பிடிவாதம் ?
இது என்ன பைத்தியக்காரத்தனம் ?”

இங்கு தான் தமிழ்நாடு ஏமாந்து கொண்டிருக்கிறது.
கேரளா இதுவரை செய்த அநியாயங்கள்,
புதிய அணை கட்டி இனி செய்ய
உத்தேசித்திருக்கும் அயோக்கியத்தனங்கள் –

இவை எதுவுமே வெளி உலகுக்குத் தெரியவில்லை.
ஏன் தமிழ் நாட்டிலேயே – சென்னையிலேயே கூட,
படித்தவர்கள் பலருக்கு கூட தெரியவில்லை !

புதிய அணை கட்டுவதில் என்ன தவறு ? -அதான்
அதே அளவு தண்ணீர் தருகிறேன் என்கிறார்களே
என்று தமிழர்களே கேட்கிறார்கள்.
தமிழ் நாளிதழ்களும், அரசியல் கட்சிகளும்
தொலைக்காட்சிகளும் கூட தமிழ் மக்களை
தயார் படுத்துவதில் தவறி விட்டன என்று தான்
சொல்ல வேண்டும்.
இனியாவது விழித்துக் கொள்ள வேண்டும்.

புதிய அணை கட்டுவதாகச் சொல்வதில் இருக்கும்
சதி பற்றி விவரமாக அகில இந்திய அளவில்
எடுத்துச் சொல்ல வேண்டும்.

இந்த வலைத்தளத்தைப் படிப்பவர்களுக்காக –
நான் எனக்குத் தெரிந்ததை சுருக்கமாக
கீழே தருகிறேன்.

முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டது
பிரிட்டிஷ் ஆண்ட காலத்தில் – 1895ல்.
அப்போது இந்த அணை கட்டும் இடம் திருவாங்கூர்
சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்ததாக
கருதப்பட்டது (உண்மை அது அல்ல.தமிழ் நாட்டின்
வரையரைக்குள் தான் இருந்தது)
எனவே பிரிட்டிஷார்- திருவாங்கூர் மஹாராஜாவுடன்
இந்த அணை கட்டப்படும், மற்றும் அதன் நீர்ப்பிடிப்பு
பகுதியான சுமார் 8000 ஏக்கர் நிலத்தை
999 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்து (ஆண்டுக்கு
ரூபாய் 40,000/- குத்தகைப் பணம் ) இந்த
அணையை 1887ல் கட்ட ஆரம்பித்து 1895ல்
கட்டி முடித்தனர்.

இதில் வேடிக்கை என்னவென்றால், இதில்
அடிப்படையான பெரியாறு உற்பத்தியாவது  
தமிழ் நாட்டில் தான். அணையும் தமிழ் நாட்டிற்கு
சொந்தமானது. அதை நிர்வகிப்பதும் தமிழ் நாடு தான்.
ஆனால் இடம் மட்டும் கேரளாவிற்கு சொந்தம்.
அதிகாரம் செலுத்துவதும் அவர்களே !

இந்த அணையின் உயரம்-கொள்ளளவு -152 அடி.
இதன் மூலம் பாசனம் பெறும் நிலம் –
சுமார் 2,08,000 ஏக்கர்.
மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய
4 மாவட்டங்களைச் சேர்ந்த 10 லட்சம் விவசாயிகள்
பாசனத்திற்கும், 60 லட்சம் மக்கள் குடிநீருக்கும்
இந்த அணையை நம்பி இருக்கிறார்கள்.
இந்த அணை பறிக்கப்பட்டால் – இத்தனை இடங்களும்
பாலைவனங்கள் ஆகும். இத்தனை ஜனங்களும்
பிழைப்பு பறிபோய் – பிச்சைக்காரர்கள் ஆவார்கள்.

பிரச்சினை ஆரம்பித்தது எப்படி ? எப்போது ?

கேரளா, இதற்கு சுமார் 50 கிலோமீட்டர் கீழே,
இடுக்கியில் 1976ல் ஒரு அணையும் நீர்
மின்நிலையமும் கட்டியது. பின்னர் தான்
ஆரம்பித்தன அத்தனை தொல்லைகளும்.

பெரியாறு அணையின் மொத்த கொள்ளளவே
15.66 டிஎம்சி தான்.அதிலும் சுமார் 10 டிஎம்சியை
தான் பயன்படுத்த முடியும்.
(104 அடி வரை டெட் ஸ்டோரேஜ் .)

ஆனால் இடுக்கி இதைப் போல் 7 மடங்கு பெரியது.
கொள்ளளவு 70 டிஎம்சி.
பெரிய அணையைக் கட்டி விட்டார்களே தவிர அது
நிரம்பும் வழியாகக் காணோம். 3 வருடங்கள்
பொறுத்துப் பார்த்தார்கள். பெரியாறு வருடாவருடம்
நிரம்பிக் கொண்டு இருந்தது. ஆனால் இடுக்கி
நிரம்பவே இல்லை.  

அப்போது போடப்பட்ட சதித்திட்டம் தான் –
பெரியாறு அணைக்கு ஆபத்து என்கிற
குரல் -கூக்குரல்.
சுண்ணாம்பு அணை உடைந்து விடும்.
அதிலிருந்து வெளிவரும் நீரால் 35 லட்சம்
மக்கள் செத்துப் போவார்கள். எனவே
உடனடியாக புதிய அணை கட்டுவதே தீர்வு !

புதிய அணையினால் அவர்களுக்கு என்ன லாபம் ?
மேலே இருக்கும் பழைய அணையை இடிப்பதால்,
நீர்பிடிப்பு பகுதியிலிருந்து அத்தனை நீரும் நேராக
இடுக்கிக்கு வந்து அதை நிரப்பும்.

சரி நிரம்பட்டுமே. நல்லது தானே !
அதான் தமிழ்நாட்டுக்கு இதே அளவு
தண்ணீர் தருகிறேன் என்று சொல்கிறார்களே
என்று உடனே மக்கள் கேட்கிறார்க்ள்.

அங்கே தான் இருக்கிறது அவர்கள் சாமர்த்தியம்.
பெரியாறு அணை இருப்பது கடல் மட்டத்திலிருந்து
2709 முதல் 2861 அடி உயரம் வரை. இதிலிருந்து
மலையைக் குடைந்து குகைப்பாதை வழியாக
தண்ணீர் தமிழ் நாட்டை நோக்கி கொண்டு வரப்படுகிறது.

புதிய அணையை கட்டப்போவது 1853 அடி
உயரத்தில்.இந்த அணை கட்டப்படும் உயரத்திலிருந்து
தமிழ் நாட்டிற்கு தண்ணீரைத் திருப்பி விட முடியாது.
நமக்கு பெரியாறு அணையிலிருந்து நீர் எடுத்து வரும்
பாதை இதை விட உயரத்தில் ஆரம்பித்து, ஒரு கிலோ
மீட்டர் பயணத்திற்கு பிறகு 5704 அடி நீளமுள்ள –
மலையைக் குடைந்த குகை வழியாக திசை மாறி
வந்து பின்னர் கீழே வைகையில் கலக்கிறது.
அணையைக் கட்டிய பிறகு,
இவர்கள் உண்மையாகவே விரும்பினாலும் நீரைத்
திருப்ப முடியாது. மேலும் புதிய அணையிலிருந்து
ஆண்டு முழுவதும் நீர்மின்சாரம் உற்பத்தி செய்ய
நீரை வெளியேற்றிக் கொண்டே இருக்கப் போகிறார்கள்.
எனவே அணை எப்போதுமே முழுவதுமாக நிரம்பி
இருக்காது.தமிழ் நாட்டிற்கு தண்ணீர் நிச்சயமாக
கிடைக்காது.

புதிய அணையினால்  தமிழ் நாட்டிற்கு பயன் இல்லை –
புரிகிறது.

ஆனால் பழைய அணை சுண்ணாம்பு அணை –
எப்போது வேண்டுமானாலும் உடைந்து விடும்.
35 லட்சம் மக்கள் செத்து விடுவார்கள் என்கிறார்களே –
பயம்  உண்மையானது போல் தோன்றுகிறதே  ?

அயோக்கியத்தனம்.
வடிகட்டிய அயோக்கியத்தனம்.

முதலாவதாக –
பெரியாறு அணை உடைந்தால் தண்ணீர் –
மலைப் பள்ளத்தாக்குகள் வழியாகப் பாய்ந்து –
நேராக கீழே உள்ள  இடுக்கி அணையைத் தான்
வந்தடையும்.
பெரியாறு அணையிலிருந்து அதன் முழு நீரும்
(10 டிஎம்சி) ஒரே நேரத்தில் வெளியேறினாலும்,
நேராக அதைப்போல் 7 மடங்கு கொள்ளளவு
உடைய இடுக்கி அணையைத் தான் வந்தடைய
போகிறது. இடையில் எந்த நாடு, நகரமும் இல்லை.
வாதத்திற்காக இடுக்கி அணை ஏற்கெனவே நிரம்பி
இருந்தாலும் – வெளியேறும் நீர் பெரியாறு
அணையிலிருந்து இடுக்கி வந்து சேர 4 மணி நேரம்
ஆகும். அதற்குள்ளாக இடுக்கியிலிருந்து
தேவையான நீரை வெளியேற்றி விட முடியும் !
எனவே வெள்ளத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள்
என்கிற பேச்சே அபத்தமானது.

இரண்டாவதாக –

1976ல் இடுக்கி அணையை கட்டினார்கள்.
1979ல் பெரியாறு அணை உடையப்போகிறது
என்று குரல் எழுப்பினார்கள்.
பயத்தைக் கிளப்பினார்கள்.
சுப்ரீம் கோர்ட் வரை போனார்கள்.
2000ஆவது ஆண்டு சுப்ரீம் கோர்ட் நிபுணர் குழுவை
அமைத்தது. நிபுணர் குழுவின் ஆலோசனைப்படி
அணை அனைத்து விதங்களிலும் பலப்படுத்தப்பட்டது.

கேரளா சொல்வது போல்
இது வெறும் சுண்ணாம்பு அணை அல்ல.
ஏற்கெனவேயே முதல் தடவையாக 1933ல்
40 டன் சிமெண்ட் கலவை சுவரில் துளையிட்டு உள்ளே
செலுத்தப்பட்டது. மீண்டும் 1960ல் 500 டன் சிமெண்ட்
உள் செலுத்தப்பட்டது.

2000ஆவது ஆண்டு சுப்ரீம் கோர்ட் சென்ற பிறகு –
நிபுணர் குழுவின் ஆலோசனைப்படி –
லேடஸ்ட் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி,
கேபிள் ஆன்கரிங் முறையில் அணையுள் கான்க்ரீட்
கலவை செலுத்தப்பட்டது. வெளிப்புறமாக –
ஒரு கவசம் போல், கிட்டத்தட்ட புது அணையே போல்,
கான்க்ரீட் போடப்பட்டு, ஒரு புத்தம்புதிய கான்க்ரீட்
அணையே உருவாக்கப்பட்டு விட்டது.

கீழே உள்ள வரைபடத்தைப்
பார்த்தால் நன்றாகப் புரியும்.

இதன் பிறகு தான், 27/02/2006 அன்று,
சுப்ரீம் கோர்ட், இனி அணைக்கு எந்த ஆபத்தும் இல்லை
என்பதை நிபுணர் குழுவின் மூலம் உறுதி செய்துகொண்டு –
156 அடிவரை தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம்
என்று அனுமதியே கொடுத்தது.

விட்டார்களா நமது கேரள சகோதரர்கள் ?
மீண்டும் சதி. ஒரு மாதத்திற்குள்ளாக,
கேரள சட்டமன்றத்தில் புதிய சட்டம்
இயற்றி, சுப்ரீம் கோர்ட் உத்திரவையே செல்லாததாக்கி
விட்டார்கள்.

வழக்கம் போல் தமிழன் இளிச்சவாயன் ஆகி விட்டான்.

மீண்டும் கோர்ட் பின்னால் அலைகிறோம்.
இப்போது, இன்னும் வழக்கு சுப்ரீம் கோர்ட்டின்
பரிசீலனையில்  இருக்கும்போதே –
தீர்ப்பு அவர்களுக்கு பாதகமாக
இருக்குமோ என்கிற தவிப்பில் – மீண்டும் நாடகம்
ஆடுகிறார்கள்.  அணைக்கு ஆபத்து -புதிய அணை
கட்ட வேண்டும் என்று.

பாராளுமன்றத்தில் குரல் கொடுக்கிறார்கள்.
பிரதமரை போய்ப் பார்க்கிறார்கள்.
உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.
பந்த் நடத்துகிறார்கள்.
இப்போதைக்கு அவர்கள் குரல் தான் பலமாகக்
கேட்கிறது. வெளிமக்கள் அவர்கள் பக்கம் நியாயம்
இருக்கிறது என்று நினைக்கத் தொடங்கி விட்டார்கள்.

தமிழ் நாடு ஏமாந்தது போதும்.
உடனடித் தேவை பலமான பதில் தாக்குதல்.
தமிழகம் முழுவதும் சேர்ந்து பதிலடி கொடுக்க வேண்டும்.
ஒரே குரலில் பேச வேண்டும்.
உண்மையை  உரக்கச் சொல்ல வேண்டும்.
அகில இந்தியாவிற்கும் தெரியும்படி சொல்ல வேண்டும்.
நம் தரப்பு நியாயம் அனைவருக்கும் புரியும்படி –  
சுப்ரீம் கோர்ட்டுக்கு புரியும்படி சொல்ல வேண்டும் !
நல்ல தீர்ப்பு விரைவில் கிடைக்கும்படி செய்ய வேண்டும்.

கேரளாவிற்கு – எங்கே அடித்தால் வலிக்குமோ
அங்கே அடிக்க வேண்டும். எப்படிச் சொன்னால்
புரியுமோ – அப்படிச் சொல்ல வேண்டும்.
நாடகமாடினால் இனியும் தமிழர்கள் ஏமாற மாட்டார்கள்
என்பதை  அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.

Advertisements
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

48 Responses to முல்லைப் பெரியாறு -தமிழ் நாடு ஏமாந்து கொண்டிருக்கிறது – உடனடித் தேவை பலமான பதில் தாக்குதல்

 1. prakash சொல்கிறார்:

  nalla vizhippunarchi katurai…naan intha katturaiyai enathu facebook il share seigiren…

 2. surendra சொல்கிறார்:

  nalla padhivu uraippavargalukku uraiththal sari nandri
  surendran
  surendranath1973@gmail.com

 3. சத்ரியன் சொல்கிறார்:

  காவிரிமைந்தன்,
  நாம் கன்னத்தைக் காட்டவே பழகிக் கொண்டிருக்கிறோம்.
  ’கண்ணுக்கு கண்’ தான் சரியான பதில்.

 4. நாஞ்சில் மனோ சொல்கிறார்:

  நானும் கரடியாக கத்திகிட்டேதான் இருக்கேன்…!!!

 5. Ganpat சொல்கிறார்:

  உங்களுக்கு சல்யூட் அடித்து அடித்து கை தான் வலிக்கிறது.
  மிக மிக அருமையான விவரங்கள் நிரம்பிய அவசியமான கட்டுரை.சத்தியமாக சொல்கிறேன்.நம் அமைச்சர்கள் ஒருவருக்கும் இதில் நூற்றில் ஒரு பங்கு விவரம் கூட தெரிந்திருக்காது.ஏற்கனேவே கன்னடகாரனிடம் காவிரியை இழந்தோம்.இப்போ மலையாளிகளிடம் பெரியாறை இழக்கப்போகிறோம்.மொத்த தி.மு.க வினரையும்,அ(தே) தி.மு.க வினரையும் (தாத்தா அம்மா உட்பட)இந்த அணையில் பிடித்து தள்ளி விட்டால்தான் நம் மாநிலத்தைப்பிடித்த பீடை விலகும்.
  மிகவும் நன்றி காவிரிமைந்தன்

 6. Somu சொல்கிறார்:

  Super Sir

 7. ramanans சொல்கிறார்:

  வழக்கம் போல் விவரமான தகவல்கள் அடங்கிய விழிப்புணர்ச்சி ஊட்டக் கூடிய கட்டுரை. தமிழ்நாட்டு அரசியல் செவிடர்கள் காதில் விழுமா? விழுந்தாலும் அவர்கள் இதில் அக்கறை கொள்வார்களா? இல்லை.. புதிய அணை கட்டுவதில் ஏதாவது காண்ட்ராக்ட், கமிஷன் கிடைக்குமா என்று அலையப் போகிறார்களா? பதில் தெரியாத, 1979 முதல் விடை கண்டுபிடிக்க முடியாத கேள்வி…

 8. selvaganesh சொல்கிறார்:

  Today i am sending this blog to dinamalar, dinamani, sun tv. We will see who is going to respond

 9. Ganpat சொல்கிறார்:

  >>பதில் தெரியாத, 1979 முதல் விடை கண்டுபிடிக்க முடியாத கேள்வி…<<
  திருத்தம் ..திரு.ramanans
  பதில் தெரியாத, 10/2/1969 முதல் விடை கண்டுபிடிக்க முடியாத கேள்வி…

  • ramanans சொல்கிறார்:

   கண்பத் சார்

   இதுலயும் ஒரு திருத்தம். விஷக்கிருமிகள் பரவத் துவங்கிய 1967 முதலேன்னு சொல்லுரது சரியா இருக்குமா? 😦

 10. satharana tamilan சொல்கிறார்:

  naama pesamatuthan seirom…. antha naikali vedakudathu…..eppa pathalum tamilanai sandaiku ellupoatha velaya pochu….

 11. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  நம்மிடமுள்ள 40 MPக்கள் இதற்காகவாவது ஒன்று சேர்ந்து குரல் கொடுக்கின்றனரா என்றால் அதுவும் கிடையாது. இதிலும் அரசியல் செய்வதால் தான் நம்மை எவனும் மதிப்பதில்லை.
  நண்பர் காவிரி மைந்தனுக்கு ஒரு வேண்டுகோள்!
  மேலே குறிப்பிட்டுள்ள தகவல்களை தொகுத்து ஒரு POWERPOINT PRESENTATION செய்து YOU TUBEல் அப்லோட் செய்ய முடியுமா என்று பாருங்கள்!
  இந்த விவரங்கள் பலருக்கு தெரியாமலுள்ளது, என்னையும் சேர்த்துதான் கூறுகிறேன்.

 12. Nivas.T சொல்கிறார்:

  சிந்திக்கச் செய்யும் ஆதரப் பூர்வமான பதிவு

  மிக்க நன்றி

 13. விஜயகாந்த் சொல்கிறார்:

  நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இன்று (03.12.2011) காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டார். பிற்பகல் ஒரு மணிக்கு சென்னை வரும் அவருக்கு சிறப்பான வரவேற்பை அளிக்க திமுக நிர்வாகிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.————-செய்தி…
  தமிழக மக்களின் தவிப்பை புரியாமல் நீங்கள் என்ன முல்லைபெரியாருக்கு போயிட்டீங்க ??????

 14. Ganpat சொல்கிறார்:

  ramanans சார்!!
  ஒரு ச(த)ரித்திரத்தை தேதிவாரியாக சொல்லவேண்டாமா?
  விஷக்கிருமிகள்
  தோற்றம்:17/9/1949
  வளர்ச்சி:17/9/49 முதல் 5/3/1967
  தாக்குதல்:6/3/1967
  தொடர்ச்சி:4/12/2011 காலை 8.45 வரை

 15. r v ramani சொல்கிறார்:

  மிக நல்ல பதிவு. முல்லைப்பெரியாரைப் பற்றி கூடுமானவரை
  ஜோடனையின்றி தகவல்களை தந்தமை பாராட்டலுக்குரியது..

 16. rathnavel சொல்கிறார்:

  நல்ல பதிவு.
  நன்றி.

 17. Vijayakumar சொல்கிறார்:

  கேரளா ஐயப்பனை வைத்து பிசினெஸ் செய்கிறது. ஏற்கனவே மகர விளக்கு வேறு, மகர ஜோதி வேறு என்று விளக்கம் (!!) கொடுத்து விட்டார்கள். தொடர்ந்து இரண்டு வருடம் தமிழகத்தில் இருந்து எவரும் செல்லவில்லை என்றால் ஐயப்பன் கோவிலை இழுத்து மூடி விடுவார்கள். பிசினஸ் நஷ்டத்தில் எவரும் செய்ய மாட்டார்கள். தமிழனுக்கு புரிந்தால் சரி.

 18. tamil சொல்கிறார்:

  Tamilna vilithu kollu nam tamil makkel lukaga neethiku poradu

 19. seenu சொல்கிறார்:

  thank you sir your giving good message, every bady need to reed this message.
  Vazhga valamudan.
  seenu.

 20. Ranz Rnji சொல்கிறார்:

  its really really fantastic statement for tamilians,,, guys from kerala kindly surely knwn this in few days…. Thanks to u for good knwledge to knw more about bridge.

 21. Nitin Pathrose சொல்கிறார்:

  DONT SAY ABOUT DAM; SAY ABOUT THE WATER AND SAY ABOUT THE SAFETY OF INDIAN KERALA PEOPLES THEY NOT TAMILIANS THEY ARE INDIAN-KERALA PEOPLES ” NOT A KERALIAN ” :/

 22. tamilmalar சொல்கிறார்:

  முல்லைபெரியாறு அணை பலமுடன் உள்ளது. அதன் முழு உரிமையும் தமிழகத்துக்கு தான் என்ற கருத்தில் எள் அளவும் மாற்றம் இல்லை. ஆனால் ஒரு எதார்த்த தமிழனாக இந்த கோரிக்கைகளை முன் வைக்கிறேன்.

  அணை நிலநடுக்கப்படுகியில் உள்ளது. அடிக்கடி லோசான நிலநடுக்கம் ஏற்படுகிறது என்பது உண்மை. ஒவ்வொரு மழையின் போதும், ஒவ்வொரு நில அதிர்வின் போதும், மரண பயத்தில் உறைந்துபோகின்றனர் ஒரு லட்சம் மக்கள். போதாகுறைக்கு ஊடகங்களின் பீதி கூட்டலின் உச்சம் வேறு. அணு அணுவாக செத்துமடியும் இந்த உயிர்களின் மரண கூக்குரலை தயவு செய்து காது கொடுத்துக் கேளுங்கள்.

  அணையை உடைக்கவோ, புதிய அணை கட்டவோ வலியுறுத்தவில்லை. தயவு செய்து அணையின் பயன்பாட்டை குறைத்துக்கொள்ளுங்கள் என்று தானே சொல்கிறோம். இதில் என்ன தவறு கண்டீர்கள்?

  முல்லைபெரியாறு அணையின் பயன்பாடு இல்லாமலே தமிழகம் தாராளமாக தண்ணீர் எடுத்துச்செல்லக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. இப்படி இருக்கும்போது எதற்காக பிரச்சனையையே தீர்வாக வலியுறுத்தி வருகிறீர்கள்? ஒரு பிரச்சனைக்கு அதன் மாற்றுவழி ஒன்று தானே உண்மையான தீர்வு.

  கிழக்கு இந்திய கம்பெனியால் முதன் முதலில் பரிசீலிக்கப்பட்ட திட்டம், பென்னிகுயிக் விரும்பிய திட்டம் இது ‘‘கூடுதல் கால்வாய்கள் மூலம் தண்ணீரை நேரடியாக தமிழகத்துக்கு கொண்டு வருதல்’’. பென்னிகுயிக்கிடம் நிதி இல்லாமல் தான் இந்த திட்டம் கைவிடப்பட்டதே தவிர வாய்ப்பு இல்லாமல் அல்ல. இந்த திட்டம் தமிழக விவசாயிகளுக்கு மிகப்பெரிய வரபிரசாதமாக அமையும். கேரள மக்களின் தலைக்கு மேல் உள்ள மரண பயத்திற்கு முழுமையான ஆறுதலை தரும்.

  இந்த திட்டத்தை ஏன் பரிசீலித்து செயல்படுத்தக்கூடாது?

  இதனால் தமிழக விவசாயிகளுக்கு கடுகளவேனும் இழப்பு உண்டா? சுமூகமான தீர்வுகள் இருக்கும்போது ஏன் தமிழர்கள் வீண்பிடிவாதம் பிடிக்க வேண்டும். முல்லைப்பெரியாறு அணை என்றும் தமிழர்களுடையது தான். ஆனால் தயவு செய்து மனிதாபிமான அடிப்படையிலாவது கேரள போராட்டக்குழுவின் கோரிக்கையை பரிசீலியுங்கள்.

  இந்த கோரிக்கையில் 1% மேனும் தவறு இருந்தால் சுட்டிக்காட்டுங்கள் உங்கள் கருத்தை முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன்.

 23. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  வருக நண்பரே

  என் விளக்கத்திற்கு முன்னர் உங்களுக்கு
  ஒரு கேள்வி –

  நீங்கள் சம்பந்தப்பட்ட பகுதியில் வசிக்கிறீர்களா ?

  அல்லது கேரளாவில் வேறு எங்காவது ?

  நீங்கள் கூறும் இந்த “மரண பயம்” உங்களுக்கு
  ஏற்படுகிறதா ? அல்லது வேறு யாராவது கூறுவதை
  வைத்து கூறுகிறீர்களா ?
  ———
  அணையை உடைக்கவோ, புதிய அணை கட்டவோ
  வலியுறுத்தவில்லை. தயவு செய்து அணையின்
  பயன்பாட்டை குறைத்துக்கொள்ளுங்கள் என்று தானே
  சொல்கிறோம்.(அப்படியானால் நீங்களும்
  அவர்களில் ஒருவரா ? ) இதில் என்ன தவறு கண்டீர்கள்?
  —————-

  இதை யார் சார்பாக நீங்கள் சொல்கிறீர்கள் ?
  நேற்று நடந்த அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிறகு
  கேரள முதல்வர் உம்மன் சாண்டி கூறி இருக்கிறாரே –
  அணையை உடைப்பது என்றும், அதுவரை நீர்மட்டத்தை
  120 அடியில் நிறுத்தி வைப்பது என்றும்
  தீர்மானித்திருக்கிறோம் என்று !

  ஒன்று நீங்கள் எங்கோ தவறாகப்
  புரிந்து கொண்டிருக்கிறீர்கள்.
  இல்லையென்றால் நீங்கள்
  இத்தகைய கேள்வியைக் கேட்கவே மாட்டீர்கள்.

  என் இடுகையிலேயே உங்கள் கேள்விக்கான
  விரிவான பதில் இருக்கிறது.
  இருந்தாலும் மீண்டும் கூறுகிறேன் –

  சுப்ரீம் கோர்ட் நியமித்த நிபுணர் குழு –
  சகலவிதமான சோதனைகளையும் செய்து
  பார்த்த பிறகு தான்,
  அணையை மீண்டும் தேவையான விதங்களில்
  பலப்படுத்திய பிறகு தான்,
  அணைக்கு நிச்சயம் எந்தவித
  ஆபத்தும் இல்லை என்று உறுதி செய்து கொண்ட
  பிறகு தான் 27/02/2006 அன்று நீர்மட்டத்தை
  உயர்த்த அனுமதி கொடுத்தது.

  சுப்ரீம் கோர்ட் – பொறுப்பில்லாமல் தீர்ப்பு கொடுக்கும்
  என்று நினைக்கிறீர்களா ? அல்லது கேரள
  அரசியல்வாதிகள் சுப்ரீம் கோர்ட்டை விட
  பொறுப்பானவர்களா ?

  சரி -அணை உடைந்தால் கூட, வெறும்
  450 குடும்பங்கள் மட்டுமே பாதிக்கப்படும்.
  அவர்களை உடனடியாக
  இடம் மாற்றி விடலாம் என்றும்,

  முல்லைப் பெரியாறு அணையிலிருந்து வெளிவரும்
  நீரை, அதைவிட 7 மடங்கு பெரிய இடுக்கி அணையில்
  தேக்கி விடலாம் என்றும்,

  – போன வாரம் கேரளா உயர்நீதிமன்றத்தில்
  கேரள அரசின் அட்வகேட் ஜெனரல்
  கொடுத்த தகவலை நீங்கள் படிக்கவில்லையா ?

  புதிய அணை கட்ட குறைந்த பட்சம் 4 ஆண்டுகள் ஆகும்
  (அதுவும் கேரள அரசு முனைந்து பாடுபட்டால் ).
  அதுவரை தென் தமிழ் நாட்டின் 2 லட்சம் விவசாயிகள்
  பட்டினி கிடக்கட்டுமா ?
  6 லட்சம் மக்கள் குடிக்க தண்ணீர் இல்லாமல்
  காத்திருக்கட்டுமா ?
  700 கோடி ரூபாயை முழுக்க முழுக்க தமிழ் நாடு
  பயன்பெறப்போகும் ஒரு அணைக்கு செலவு செய்வதாக
  கேரள அரசியல்வாதிகள் கூறுவதை நீங்களும்
  நம்புகிறீர்களா ?

  எல்லாவற்றிற்கும் மேலாக, புதிய அணை கட்டப்படும்
  இடம் தாழ்வானது என்றும் அங்கிருந்து தமிழ் நாட்டிற்கு
  நீரை திசை திருப்ப முடியாது என்றும் தரப்பட்டுள்ள
  தகவல்களை நீங்கள் படிக்கவில்லையா ?

  என் இடுகையை மீண்டும் ஒரு முறை
  படித்துப் பாருங்கள்.

  பெரியாறு அணைக்கு நில அதிர்வால் ஆபத்து என்று
  சொல்பவர்கள் –

  அதிலிருந்து 45 கிலோமீட்டர் அருகிலேயே இருக்கும்
  இடுக்கி அணைக்கு எந்தவித ஆபத்தும் நேராது
  என்று எதை வைத்து கூறுகிறார்கள்.
  ஏன் நில அதிர்வு இடுக்கி அணையைத் தொட
  மாட்டேன் என்று கேரள அரசியல்வாதிகளுக்கு
  சத்தியம் செய்து கொடுத்திருக்கிறதோ ?

  இவர்கள் கூறும் இதே நில அதிர்வு,
  இடுக்கி அணையை உடைத்தால் இவர்கள் என்ன
  செய்வதாக இருக்கிறார்கள் ?
  கேரள மக்களின் பயத்தைப் போக்க
  அதையும் இப்போதே உடைத்து விட வேண்டியது தானே ?
  அதற்கு யாரிடமும் அனுமதி கேட்க வேண்டிய
  அவசியம் இல்லையே !

  கேரள அரசியல்வாதிகள் செய்வது
  பச்சை அயோக்கியத்தனம். வேண்டுமென்றே
  கேரள மக்களிடம் பீதியைக் கிளப்புகிறார்கள்.

  ஏன் – விஷயம் ஏற்கெனவெ சுப்ரீம் கோர்ட்டின்
  விசேஷ குழுவின் பரிசீலனையில் தானே
  இருக்கிறது. இன்னும் ஒன்றிரண்டு மாதங்களில்
  சுப்ரீம் கோர்ட் மீண்டும் சகல விஷயங்களையும்
  ஆராய்ந்து,இறுதித் தீர்ப்பு கொடுக்கத்தானே போகிறது ?

  அதற்குள்ளாக ஏன் இந்த கூக்குரல் ?

  நண்பரே – ஒன்றை சரியாகப் புரிந்து கொள்ளுங்கள்.
  சென்னையிலும், கோவையிலும் எவ்வளவு
  கேரளத்தவருக்கு தமிழ் நாடு வாழ்வு கொடுத்துக்
  கொண்டிருக்கிறது தெரியுமா ?
  அவர்களில் யாரையாவது கேட்டுப்பாருங்கள் –
  அவர்கள் இங்கு எவ்வளவு கௌரவமாகவும்,
  வசதியாகவும் வாழ்கிறார்கள் என்பது புரியும்.

  சுயநலவாத கேரள அதிகாரிகளும்,
  அரசியல்வாதிகளும் தான்
  தொடர்ந்து தமிழர்களுக்கு
  துரோகம் இழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
  அவர்கள் தானாக திருந்தா விட்டால்”இயற்கையே”
  அவர்களைத் திருத்தும்.

  -வாழ்த்துக்களுடன்
  காவிரிமைந்தன்

 24. Sathish சொல்கிறார்:

  Its really a nice article. Every tamilian should read it. But, If we post it in tamil, will it reach every indians?! It would be great if you post an english version as well.

 25. yatrigan சொல்கிறார்:

  காவிரிமைந்தன் அவர்களே,

  அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய

  உங்களது இந்த பதிலை நான் என்னுடைய
  வலைத்தளத்திலும் மறுபதிவு பண்ணுகிறேன்.

  நன்றி.

  யாத்ரிகன்
  http://www.yatrigan.wordpress.com

 26. Naveenkumar Arumugam சொல்கிறார்:

  Tamila pothum inimelum nee adimaiyaai irathae , un varlaru yevalavu sirapudaiyathu yendru arinthu kol , un balam ariyathathaal thaan unaku intha ihalchi, nee yaar yendru ulakirku kaatu. Tamilanuku muthalil
  Singapooril adi, Karnatakavil adi ( cauvery), Andhravilum adi, ilangaiyilum adi, ippothu Keralavilum , .. Yevalavu adithalum vaangi kolhiraay nee romba nallavan yenbatharkahava pothum ini nee vallavan yenpathaiyum kaatu – vaazha tamizh . Tamzhan yendru sollada Thalai Nimirnthu nilada
  ” BATHAHAM SEYPAVARAI KANDAAL NEE BAYAM KOLLAL AHATHU PAAPU , MOTHI MITHITHU VIDU PAAPA AVAR MUHATHIL UMILNTHU VIDU PAAPA” – tamizh pulavan Bharathi

 27. saravanan சொல்கிறார்:

  உடைந்து விடும், உடைந்துவிடும் என்று 33 ஆண்டுகளாக பயமுறுத்திக் கொண்டிருக்கிறார்கள். உடையும் நிலையில் இருந்திருந்தால் இந்த 33 ஆண்டுகளில் ஏன் அவ்வாறு நடக்கவில்லை. ஒருவேளை அது உடைந்தாலும் நீர் வழித்தடத்தின் ஊடேதான் சென்று இடுக்கி அணையை அடையப் போகிறது. அந்த ஆற்றுப்பாதைக்குள் ஒருவேளை வீட்டைக் கட்டி வைத்திருந்தால் – நம் சென்னையில் செய்கிறார்களே அதுபோல – அதற்கு யாரும் பொறுப்பாக முடியாது. மற்றபடி வேண்டுமானால், 300 கோடி செலவு செய்து புதிய அணை கட்டுவதற்கு பதிலாக சில நூறு கோடிகளில் அந்த நீர்வழிப்பாதையின் இருமருங்கிலும் கான்கிரீட் தடுப்பு சுவர் அமைக்கலாம்.

  உண்மையிலே மக்கள் உயிர் மீது அக்கறை இருந்தால் அதைத்தான் செய்யவேண்டும் கேரள அரசு. அதை விடுத்து புதிய அணை கட்டினால் … அது மட்டும் பின்னாளில் உடைந்து விடாது என்பதற்கு என்ன உத்தரவாதம்..? அதுவும் லஞ்சம் கொடுத்துப் பெறப்படும் இந்த காலத்து காண்ட்ராக்ட் வேலைகளின் தரத்தைப் பற்றி கேட்கவே வேண்டாம்.

 28. Naveenkumar Arumugam சொல்கிறார்:

  வணக்கம் , தமிழா போதும் ஏமாந்தது , அன்பு காட்டியது நீ அடிமையாய் ஆகிவிட்டதும் நீ ,
  உன் வரலாறை அறிந்து கொள் , பின்பு நீ அறிவாய் உன் சிறப்பை ,
  திப்பு சுல்தான் அனைத்தையும் வென்றான் , அனால் அவனால் வெல்ல முடியாதவர்கள் எங்கள் தமிழ் மன்னர்கள் சேர , சோழ , பாண்டியர்கள்,
  அப்போது சுல்தானுக்கு பயந்து யாரும் அடிக்கலாம் தராத போதும் சௌராஷ்டிரா மக்களுக்கு அடைக்கலம் தந்தவன் எங்கள் தமிழக மன்னன் பாண்டியன் , சௌராஷ்டிரா இன மக்களை இன்னமும் மதுரையில் பார்க்கலாம் , இத்தகைய வீரமும் , அன்பும் கொண்டவர்கள் எம் தமிழ் மக்கள் . நம் பலம் அறியாததே நமக்கு இகழ்ச்சி .
  முதலில் மலேசியாவில் அடித்தார்கள் , பின் இந்தியாவில் ஆந்திராவில் வஞ்சகத்தால் அடித்தார்கள் , பின் இலங்கையில் தமிழ் இனத்தையே அழித்தார்கள் , அடித்தார்கள்,
  நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் ( காவேரி) அடித்தார்கள், இப்போது கேரளாவிலும் – எவ்வளவு அடித்தாலும் வாங்கி கொள்கிறாய் நீ நல்லவன் என்பதற்காகவா , போதும் இனி நீ வல்லவன் என்பதையும் காட்டு – வாழ்க தமிழ்.

  ” பாதகம் செய்பவரை கண்டால் இனி பயம் கொள்ளல் ஆகாது பாப்பா
  மோதி மிதித்து விடு பாப்பா அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா”
  – மஹா கவி பாரதியார்

 29. saravanan சொல்கிறார்:

  நண்பரே.. மேலே என் ஆதங்கத்தை கொட்டிக்கொண்டிருந்ததால் உங்கள் கட்டுரையைப் பற்றி குறிப்பிட மறந்து விட்டேன். மிக சிறப்பாக ஆராய்ந்து எழுதியிருக்கிறீர்கள். இது அவசியம் எல்லோராலும் – தமிழ் தெரியாத எல்லோராலும் – படிக்கப்பட வேண்டியது. நான் இதை என்னால் இயன்றவரையில் ஆங்கிலத்தில் மாற்ற முயற்சிக்கிறேன். மற்றவர்களும் முடிந்தால் ஆங்கிலத்தில் மாற்றி பதிப்பிட முயலவும்.

 30. sugumarje சொல்கிறார்:

  கட்டுரை மிக தெளிவாக பிரச்சனையை விளக்கிச்சொல்கிறது, நன்றி…

 31. a Kearalite சொல்கிறார்:

  I am from Kerala and read your article with my limited knowledge of Tamil language and help from some Tamil friends. I find that the crux of this problem is lack of trust between the two states. While it is true that we, people of India don’t trust our political leaders (we don’t trust your leaders when they say dam will not break or there will not be any earth quack), there is no need for people of Tamil Nadu not to trust the people of Kerala. We have never objected to give water to Tamil Nadu in the last 166 years, whereas your other neighbors will give you water only when there is a flood in their state. We have 44 rivers and you cannot travel in Kerala even for 20 kms without having to cross a major river, stream, backwater or any other water body. Besides we get water wherever we dig. This is the only case in India where a river starts, flows and ends in one state, but the water from that river is diverted to another state. It is sad that the project which should be an example of co-operation and brotherhood between two states of India has become synonymous with distrust and hatred.

  I also do not understand your logic in saying that water will not flow to Tamilnadu from 1853 feet height. Water can actually flow from even one foot and if there really is a problem we need to find an engineering solution to it. It just is not worth risking the lives of lacs of people on this issue. You can insist the quantity of water to be shared be mentioned in a proper contract, which any way will have more value than the current 999 years lease to which both our states are not party to. Today people of Kerala don’t feel morally responsible to adhere to the terms of an agreement thrust upon a tiny state of Travancore by the mighty British empire.

  It also is not true to state that we started to raise the issue of Mullaperiyar when the Idukki dam was not getting filled. It started after the Morvi dam failure in Gujrat, which happened in 1979 in which 25000 people were killed in one hour. Anyway we do not believe that our politicians are so patriotic towards their state that they will do such a thing to increase the electricity production. They will easily start some other project which will help them earn crores in commissions. The issue now came to fore after the recent earthquakes in the area. (22 according to our Government, 4 as per your CM). You would agree that even one strong quake is enough to destroy an already crumbling dam.

  Whether Idukki dam will hold the sudden inflow of water from Mullaperiyar in case of a breach is a question to which we will know the answer only after the dam breaks. But what about the people living in towns and villages in the 35 kms between Mullaperiyar and idukki, which includes a large number of Tamils as well? How can you be so heartless towards them? To know how they are feeling, please ask your brothers at Koodamkulam who are fighting against the Nuclear plant even when everyone including Abdul Kalam says it is safe. The fear of people at Mullaperiyar and adjoining towns are 100 times more as the danger is near and real.

  And finally you should ask your leaders what they are doing to solve your water woes other than starting a strike and instigating violence towards people from other states demanding water from neighboring states. Your rivers in Chennai have been converted to open sewage while rivers in Coimbatore carry deadly chemicals. Other rivers go dry in summer due to massive deforestation. Politicians and land mafia encroach upon your lakes and build apartments with the silent support of your Government. It is not that we do not have these problems. Since we are a little more blessed by nature we have not yet started to feel the pinch.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   my dear friend from kerala,

   All of you from Kerala are united
   in one thing –
   in repeatedly telling unfound lies,
   spreading false stories, rumours and
   just trying to gain undue sympathy
   all over India on false grounds.

   Now all of a sudden –
   What was the necessity of raising
   this issue by Keralites at this stage
   when the case is before Supreme Court
   and the verdict is expected shortly.
   It is just because you feel that the
   judgement may not be in your favour !

   All the doubts, points raised by you
   have already been clarified/
   explained in detail
   with sufficient evidences and proof
   in my above article. Then why you are
   again repeating the same old story ?

   Why you are keeping your mouth shut
   on the statement made by your own
   Kerala State Advocate General in the
   Kerala High Court. He has submitted
   a sworn affidavit stating that –

   – NO SERIOUS DAMAGES ARE LIKELY
   EVEN IF PERIYAR DAM COLLAPSES AND

   – HARDLY 450 FAMILIES ARE RESIDING
   IN THE AREA LIKELY TO BE AFFECTED
   AND THEY CAN BE EASILY SHIFTED WITHIN
   NO TIME.

   Do you think that you are MORE KNOWLEDGED
   than your Advocate General ?

   Your Menons, Nairs, Pillais and
   others at Delhi were responsible for the
   killing of lakhs of innocent Tamils
   in Srilanka.

   Probably you are You not satisfied
   with that and now trying to
   cause death of the
   two lakh farmers of
   south tamil nadu also ?

   If you people continue to
   behave like this –
   even GOD WILL NOT FORGIVE YOU.

 32. rajanat சொல்கிறார்:

  //இவர்கள் கூறும் இதே நில அதிர்வு,
  இடுக்கி அணையை உடைத்தால் இவர்கள் என்ன
  செய்வதாக இருக்கிறார்கள் ?
  கேரள மக்களின் பயத்தைப் போக்க
  அதையும் இப்போதே உடைத்து விட வேண்டியது தானே ?
  அதற்கு யாரிடமும் அனுமதி கேட்க வேண்டிய
  அவசியம் இல்லையே !//

  A good argument plus Kerala Advocate Generals statement too.
  But Kerala govt got a point of argument Mullai periyar is old and Idukki is young,rather put it this way suriki vs.cement construction.Hence Cement construction will stand an earthquake bu surikki will fail.

  How we are going to break their argument?

 33. rajanat சொல்கிறார்:

  @kearlite…I happened to read your comment with my previous opinion.I liked your balanced statement.With your point of chennai river become a open sewage is simply with a reason of over crowded metro life.Coimbatore,Erode etc cities industrial growth is not the reason for water pollution but the present situation of kerala dam issue like with karnataka cavery water.

 34. tamil சொல்கிறார்:

  another dam in kerala in 19 th century
  Pothundi Dam is an irrigation dam near a small village in Palakkad district of Kerala state, India. “Pothundi dam “is a wonder for the technology, which is built without using Cement/concrete at all. Its an old dam which is built in late 1800 AD. Usually for earth dam the core is built with concrete and the structure with earth or boulders. Usually the earth dam is built with core in concrete and the massive body to counter act water pressure in earth and boulders. Here for the construction of this dam boulders and earth is used as usual but the cementing material is a mixture of jaggery and quick lime, in a peculiar combination. The strength offered by this mortar is a real wonder for the present technology The dam is about 8 km from Nemmara and 42 km from Palakkad. Nelliampathi is 17 km from here and is known for its Nemmara Vallengi Vela

 35. Ganpat சொல்கிறார்:

  @ a Keralite..

  Pl do not start any issues based on hypothesis.Who says the Mullai dam would break? Any civil engineer? Do not waste everybody’s time.This dam was built when honesty was practised and corruption could be seen only in dictionaries.whereas your Idukki dam has been built
  when corruption is practised and honesty could be seen only in dictionaries.If at all there is any earthquake (God forbid),your Idukki would crush before Mullai.So relax and try to be truthful to your nation.
  Thanks

 36. a Keralite சொல்கிறார்:

  Now we are responsible for the problems in Srilanka too..? Brilliant observation!! Is that why you hate us? What was your MPs doing while it was all happening? What did DMK which was part of Government do to prevent it? They did not think it was worth to give up the plump portfolios they were enjoying to save a few thousands of Tamils. And now you think it was our duty to stop the massacre. Very convenient.

  On your question, why it all started now, the trigger was repeated mild quacks the region experienced during the past months. What is your definition of ‘no time’ when you say 450 families can be evacuated in no time? They live in close proximity of the dam and will be washed away in minutes if the dam breaks. Iduki dam is 35 kms down the stream and there are scores of towns and villages on the way which houses tens of thousands of people. And if Idukki breaks (god forbid) results will be catastrophic. Yes, we have some legal gems on our side too like our AG. That is why we have this 999 years contract in the first place.

  And for the comment about Pothundi dam, there are lots of other dams in India which are more than 100 years old. The difference is they are all very small compared to Mullaperiyar (5 to 15 mtrs high) and does not hold enough water to pose a threat as huge as this.

  If this issue is similar to that of cauveri, why don’t you lease some land in Karnataka, build a dam there and control it for the next 999 years no matter what happens?

  Now again it all boils down to the same issue of trust. What Tamil Nadu wants is water. Not the dam. This issue will be resolved when and only when the people of Tamil Nadu trust the People of Kerala on this. If the dam breaks, we are the ones who will suffer. If it was in any other state, they would have demolished it long ago.

  @Ganpat, I agree with your point on corruption and nobdy expects Idukki to last 160 years. But everything has a lifespan and Mullai has outlived its expected life by 3 times and stretching it any further will be disastrous.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   My dear friend,

   Your reply is not covering the
   points raised in the article/
   my responses.

   Moreover you are talking either
   without full knowledge
   or deliberately suppressing the
   facts.

   Please note that the initial agreement
   for 999 years made between the Britishers
   and Maharaja of Travancore in the
   year 1886 has been renewed again –

   IN MAY 1970 BY THE ELECTED GOVERNMENTS
   OF KERALA AND TAMIL NADU AGREEING TO
   ALMOST ALL THE CONDITIONS OF PREVIOUS
   AGREEMENT.

   TO BE MORE ACCURATE, THE KERALA
   GOVERNEMENT WANTED MORE ANNUAL RENTALS
   FOR THE LEASE AND

   ACCORDINGLY THE NEW RATES WERE WORKED OUT
   AND AGREED TO BY BOTH THE PARTIES !

   (In 1970 when Shri Achutha Menon
   was Kerala Chief Minister –
   according to the renewed agreement,
   the tax per acre was increased to
   INR 30, and for the electricity
   generated in Lower Camp using
   Mullaperiyar water,
   the charge was INR 12 per kiloWatt
   per hour – You can get this verified !)

   Further – don’t suppress the information
   that the issue of tremours
   are nothing new
   and being raised by Kerala
   right from 1978 onwards –

   i.e. after
   construction of Idukki Dam and
   realising the Idukki Dam
   is not getting enough waters because
   of the existence of Mullai Periyar Dam.

   Further, the tremours are only near
   Idukki and not near Mulllai Periyar.
   So if you are really worried and afraid
   about the tremours –
   why not you ask for
   decommissioning
   of Idukki Dam also ?

   Also you have no answer – as to
   Why Kerala is raising hue and cry and
   passing repeated resolutions when
   the matter is before the Supreme Court.
   If you are sure about the facts –
   you should then convince the
   Supreme court instead of creating
   panic amongst the public.

   I wish we stop exchange of this type
   of responses from now and leave it
   to the judicial system of the country
   for a just and fair judgement !

   Inspite of all what Kerala is
   doing to us –

   We still wish you all the best !

   kavirimainthan

 37. MarkkamG சொல்கிறார்:

  it is real thing i will support to tamil nadu people about mullaiperiyar issue.
  because i am belong to theni dist.i know uses of this river.i request to all please quickily solve this problem otherwise it is danzer one thanking you

 38. jashua vijay சொல்கிறார்:

  thank you

 39. Ponraj Mathialagan சொல்கிறார்:

  //Now we are responsible for the problems in Srilanka too..? Brilliant observation!! Is that why you hate us? What was your MPs doing while it was all happening? What did DMK which was part of Government do to prevent it? They did not think it was worth to give up the plump portfolios they were enjoying to save a few thousands of Tamils. And now you think it was our duty to stop the massacre. Very convenient//

  Wake up Keralite…!!! I can show you thousand evidences to prove your beloved Narayanan,siva sangara menan’s involvement in SRILANKA Genocide.Do you want wikileaks link? Do you want Gothapaya rajapakshe’s parliament speech? Poor keralite. I agree we didnt have moral support from DMK and that is why the got punished in the immediate election and almost vanished and thrown away from TN politics. Like you a keralite, Tamilans also dont support those DMK idiots and they are completely isolated. If we have a strong lead like viko as our CM, we should not have let Menon to kill a single TAMILAN in SRI LANKA and our response for this MULLA PERIYAR DAM issue could be very very different. I cant blame you keralites and it is our fate for not having a good lead here. But this situation will not last for long. Be ready to face it dude….!!!

 40. V.MATHIVANAN சொல்கிறார்:

  Good message, But try to convene the same message to all web site and to start with in face book and let that even be done in english for the better understanding of all peoples. I have forwarded this to as many as possible from my end. If the same is availablle in English I can spread the same to many more.
  Thamizhan iyyappanai nambuvathai vittu, Avanai namba vendum.

  Mathivanan.V Chennai

 41. P. Saravanan சொல்கிறார்:

  Very Improtant message. Every tamilan knowing this message. Thank u friend.. This message save and send to all my friends.

 42. R. Raj Kumar சொல்கிறார்:

  Commendable job done by you Mr. Kaveri… Even though I have know about the history of DAM, the presentation was impressive and it rightly pointed out where we are. Unless and otherwise, each and every individual of the state understands the situation, we can’t expect any positive response from the Central and State Governments. Let us raise our voice…. Let us expect the positive Supreme Court order for raising the level of storage of water in the DAM.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.