“துக்ளக்” அட்டையில் கார்ட்டூனும் “விமரிசனம்” பின்னூட்டங்களும் …

“துக்ளக்” அட்டையில்  கார்ட்டூனும்
“விமரிசனம்” பின்னூட்டங்களும் …

பிப்ரவரி 16 தேதி(அதாவது 7 நாட்களுக்கு முன்)
திருமதி சோனியா காந்தி  மற்றும் அவரது மகள்
பிரியங்கா சேர்ந்திருக்கும் ஒரு அந்நியோன்னியமான
புகைப்படத்தை வெளியிட்டு –

நான் எதுவும் எழுதாமல், விமரிசனம்
வாசகர்களிடமிருந்து வரும் பின்னூட்டங்களைத்தான்
இடுகையில் போடப்போகிறேன் என்று சொல்லி
இருந்தேன்.

“பார்ப்போம் எது மிகவும் பொருத்தமான வாசகம்”  
என்றும் சொல்லி இருந்தேன்.

நிறைய பின்னூட்டங்கள் வந்தன.
இது வரை வந்த அத்தனையையும்
இடுகையில் பதிவேற்றி விட்டேன்.( பார்க்கவும் –
16ம் தேதியிட்ட “செல்லமே !!” – “எப்டீம்மா
முடியுது ஒன்னாலே ?” !! )

எனக்கு  ஒரு இனிய அதிர்ச்சியாக – இன்றைய
தினம் வெளிவந்துள்ள  “துக்ளக்” வார இதழும்
அந்தப் போட்டியில் கலந்து கொள்வது போல்
ஒரு வாசகத்துடன் அதே புகைப்படத்தை
அதுவும் அட்டையில் -வெளியிட்டுள்ளது !

அதை உங்கள் பார்வைக்கு கீழே தருகிறேன் –

நம் இடுகை  விளைவித்த சிந்தனையில்,
துக்ளக் கார்ட்டூன் போட்டிருக்குமோ என்று
நினைப்பதெல்லாம்  டூ மச் !

ஆனால் –
ஒரே புகைப்படம், எவ்வளவு பேருடைய
சிந்தனைகளை  எப்படி வெவ்வேறு கோணங்களில்
கிளறுகிறது என்பதற்கு  இது ஒரு நல்ல உதாரணம்.

பின்னூட்டம் போட்ட அனைத்து நண்பர்களுக்கும்
என் நன்றிகள். தொடர்ந்து எழுதுங்கள்.
உங்கள் பின்னூட்டம் தான் எனக்கு டானிக் !
 

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to “துக்ளக்” அட்டையில் கார்ட்டூனும் “விமரிசனம்” பின்னூட்டங்களும் …

  1. Ganpat சொல்கிறார்:

    WOW!
    CONGRATS KAA.MAI.

  2. chollukireen சொல்கிறார்:

    ஆமாம். ரொம்ப பொருத்தமாக இருக்கு.

  3. லால்குடி நாராயணன் சொல்கிறார்:

    துக்ளக் ஆசிரியர் குழுவில் “இதயா” என்று
    ஒருவர் பணியாற்றுகிறார்.
    இணைய தளத்திலிருந்து பல சுவையான
    செய்திகளை அவர் அடிக்கடி சேகரித்துத் தருகிறார்.
    ஒரு வேளை விமரிசனம் இடுகை பார்த்து,
    அவர் ஆர்வம் தூண்டப்பட்டிருக்கலாம்.
    அதன் விளைவாகவும் இந்த கார்டூன்
    வெளிவந்திருக்கலாம்.

    இந்த இடுகையின் பின்னூட்டங்கள் எல்லாமே இவர்கள் மீது
    மக்களுக்கு எத்தகைய அபிப்பிராயம் இருக்கிறது
    என்பதைத் தான் வெளிப்படுத்துகின்றன.

  4. seenu சொல்கிறார்:

    arumaiyana karuthu

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.