பிள்ளை – மக்கு, அச்சுப்பிச்சு ! மாப்பிள்ளையோ -ஜெகதலப்பிரதாபன் !!

மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த
பிள்ளை தான் மக்காகி விட்டது –
அச்சுப்பிச்சு என்று நிரூபித்து விட்டது !

அன்னையின் கவலையைப் போக்க வந்த
மாப்பிள்ளையாவது ஜெகதலப்பிரதாபனாக அமைந்தது,
அவர்களைப் பொறுத்த வரையில் மிகப்பெரிய
மகிழ்ச்சி தான்!
ஆனால் எசகுபிசகாக சில விஷயங்கள் ஒன்று சேரும்
என்பது எதிர்பார்க்காத விஷயம்.
அதனாலென்ன – எத்தனையோ  சமாளித்தாகி விட்டது-
இதை சமாளிக்க முடியாதா என்ன ?

ஏற்கெனவே, போன வருடமே எகனாமிக் டைம்ஸில்
அரசல் புரசலாக வந்தபோது,செய்ய வேண்டியதைச் செய்து
சமாளித்தாகி விட்டது.
இப்போது மீண்டும் திடீரென்று அர்விந்த் கெஜ்ரிவால்
என்கிற ஒரு வில்லன் வடிவத்தில் வில்லங்கம் !

யோசித்துப் பார்த்தால் –
அடடா – என்ன சாமர்த்தியம் ?
“ராஜா”வே  அண்ணாந்து பார்க்க வேண்டிய
அதிசய சாமர்த்தியம்.

2007- 2010 – மூன்றே வருடங்கள் –

வெறும் 50 லட்சம் மட்டும் முதலாகப் போட்டு,
ஒரு கம்பெனியைத் துவங்கி –

உலகப் புகழ் பெற்ற DLF  நிறுவனத்திடமே 65 கோடி ரூபாய்
(சரியாக கவனிக்கவும் –கோடிகள்) –

வட்டி இல்லாமல் –
ஷூரிடி இல்லாமல்கேரண்டி எதுவும் இல்லாமல் –
அடமானம்  எதுவும் இல்லாமல் –
(உலகில் வேறு எந்த தனி மனிதனாக இதைச் சாதிக்க முடியுமா?
இதற்கு தேவைப்பட்டது திருமதி சோனியா காந்தியின்
மருமகன் என்கிற தகுதி மட்டுமே !)

கடனை  வாங்கி,
முதலே போடாமல்,
ஏழெட்டு கம்பெனிகளை தன் பெயரிலும்,
தன் தாயின் பெயரிலும் துவக்கி,

அதே DLF நிறுவனத்திடம் மொத்தம் 300 கோடி
மதிப்புள்ள  7 பங்களாக்களை (10,000 சதுர அடி பரப்பு
என்றால் பங்களா தானே ?) –
அவர்களிடமிருந்தே கடனாகப் பெற்ற
அதே வெறும் 65 கோடியைக் கொடுத்து –
தன் 7 கம்பெனிகளின் பெயரில் வாங்கி, ரிஜிஸ்டர் செய்து –

(சொந்தப் பெயரில் வாங்கினால் பிரச்சினைகள் வரக்கூடும்
என்பதால், எந்த பிசினஸும் செய்யாத இந்த 7 கம்பெனிகளின்
பேரில் 7 பங்களாக்கள். இன்கம் டேக்ஸ், பத்திரப் பதிவுத்துறை
எல்லாரையும் இணங்க வைத்து –
உதாரணம் –
30 கோடி பெறுமானமுள்ள 10,000 சதுர அடி
பங்களா வெறும் 89 லட்சம் பெறுமானம் காட்டி பதிவு
செய்யப்பட்டிருக்கிறது )

DLF நிறுவனம் இந்த 300 கோடியை சும்மாவா அள்ளிக்
கொடுத்திருக்கும் ? காங்கிரஸ் ஆட்சி செய்யும் ஹரியானா
மாநில  அரசால் DLF நிறுவனத்திற்கு 450 ஏக்கர் நிலம்
கிரயம் செய்து கொடுக்கப்பட்டதற்கும் இதற்கும் தொடர்பு
இருக்கிறதா இல்லையா என்று கேட்கிறார் கெஜ்ரிவால் !

மூன்றே வருடத்தில் –
வெறும் அரை கோடியை, 50 லட்சத்தை –
300 கோடியாக்கும் சாமர்த்தியம் –
எப்பேர்ப்பட்ட சாமர்த்தியம் ! யாருக்கு வரும் ?

ஒரு சந்தேகம் – இந்த குணாதிசயங்கள் எல்லாம்
இருந்ததால் தான் மாப்பிள்ளையாக முடிந்ததா  அல்லது
மாப்பிள்ளையானதால் இந்த குணாதிசயங்கள் வந்தனவா?

மாலையிலிருந்தே டெல்லி தொலைக்காட்சிகளில்
வரிசையாக ஒவ்வொருவராக ரவுண்டு
கட்டிக் கொண்டு வருகிறார்கள் வக்காலத்து வாங்க !-
சல்மான் குர்ஷித், ரஷீத் ஆல்வா,
அம்பிகா சோனி, ஜெயந்தி நடராஜன்
சந்தீப் தீக்ஷித், மணீஷ் திவாரி – எவ்வளவு பெரிய படை !

இறுதியாக மாமியாரே வந்து விட்டார் –
“என் மருமகன் எந்த முறைகேடும் செய்யவில்லை”

மருமகன் என்னென்ன தொழில் செய்கிறார் ?
எப்படி எல்லாம் சம்பாதிக்கிறார் ?
எவ்வளவு சொத்து சேர்த்திருக்கிறார் ?
-என்றெல்லாம் விவரமாகத் தெரிந்தால் தானே
இப்படி உறுதியாக்ச் சொல்ல முடியும் ?
அப்படியென்றால்  – மருமகன் தொழில் தொடர்புகள்
அனைத்தும் மாமியாருக்கும் தெரியும் என்று தானே அர்த்தம் ?
எல்லாம் அவருக்கு தெரிந்து தான் நடக்கிறது என்று தானே
அர்த்தம் ?

இல்லாவிட்டால் அவர் தவறு எதுவும்
செய்யவில்லை என்று சம்பந்தப்பட்டவரைக்  கேட்காமலே
எப்படிச் சொல்ல முடியும் ?

கேட்டால் மாப்பிள்ளை வெளிநாடு போயிருப்பதால் –
மாமியார் பதில் சொல்கிறார் என்கிறார்கள்.

அன்னை, பிள்ளை, மாப்பிள்ளை – யாருமே
எப்போது போகிறார்கள், எப்போது வருகிறார்கள் என்பது
யாருக்கும் தெரிவதில்லை. துபாயா, இத்தாலியா,
அமெரிக்காவா, ஸ்விட்சர்லாந்தா – யாருக்குத் தெரியும் ?
ஏர்போர்ட்டே மாமியார் வீடு மாதிரி தானே –
அதான் எங்கேயும் எந்த வித செக்கிங்கும் கிடையாதே !
புதிய விதி ஒன்று எழுதப்படுகிறது.
இந்தியாவில் பணக்காரர் ஆக வேண்டுமானால்,
சொத்து சேர்க்க வேண்டுமானல் –
ஒன்று ஆளும் கட்சி அரசியல்வாதியின் மகனாக
இருக்க வேண்டும்  
அல்லது அவர் பெண்ணை திருமணம் செய்து கொண்டு
மருமகனாகி விட வேண்டும்.

பார்ப்போம் –
நாமக்கல் கவிஞர் சொன்னது போல் –
எத்தனை காலம் தான் ?
இன்னும் – எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்
இந்த நாட்டிலே, நம் நாட்டிலே ?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to பிள்ளை – மக்கு, அச்சுப்பிச்சு ! மாப்பிள்ளையோ -ஜெகதலப்பிரதாபன் !!

 1. chollukireen சொல்கிறார்:

  குறைந்த வயிற்றிற்கு கொள்ளும், பலாக்காயும், நிறைந்த வயிற்றிற்கு நீர்மோரும் பானகமும் சாப்பிட்டால் எப்படி இருக்கும்?

 2. tim சொல்கிறார்:

  இந்த ராபர்ட் வத்ராவின் குடும்ப உறுப்பினர்களின் மர்ம மரணம் பற்றி படித்தால் இவர் பெரிய ஜகஜால கில்லாடியாக இருப்பார் போல இருக்கிறது. சகோதரி கார் ஆக்சிடெண்டில் 2001 இல் மரணம். சகோதரர் 2003 இல் தற்கொலை. அப்பா 2009 இல் தற்கொலை (மாரடைப்பால் மரணம் என்றும் சொல்லப்படுகிறது)

  கொஞ்சநாள் முன் இவருக்கு எல்லா ஏற்போர்டிலும் எந்த வித செக்யூரிட்டி செக் இல்லாமல் செல்ல சிறப்பு அனுமதி கொடுத்தது பற்றி செய்தி வந்தது. அதன் பிறகு ஐஸ்வர்யாவின் குழந்தைக்கு என்ன பெயர் போன்ற அதி முக்கியமான செய்திகளால் இவர் பற்றிய செய்திகள் மறக்கடிக்கப்பட்டது.

  பார்க்கலாம். இது எவ்வளவு நாளுக்கென்று!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   வருக நண்பரே,

   இது ஒரு மர்மமான குடும்பம். இதன்
   உறுப்பினர்கள் எல்லாருமே மர்ம மனிதர்கள் –
   ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் !
   மர்மங்கள் ஒவ்வொன்றாக வெளிவரும்.
   காத்திருப்போம்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 3. Padmanabhan Potti சொல்கிறார்:

  சோனியா காந்தியின் மருமகனை பிரியங்காவின் மாப்பிள்ளையை கோடிஸ்வரனாக்கிய வித்தையை சோனியா
  அனைவருக்கும் தெரிவித்து உதவி செய்தால் அடுத்தமுறையும் ஆட்சியை பிடித்து விடலாம்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பரே,
   இது துவக்கம் தான்.
   இன்னும் நிறைய விஷயங்கள் வெளி வரக்
   காத்திருக்கின்றன. காத்திருப்போம் !

   வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 4. Srini சொல்கிறார்:

  kaverimainthan sir, happy that after u r break u r back with more energy. I saw a small clip in facebook, college function in SP jain management collge, pune. you will definetly like it. i am giving the link below, please see. you will forget yourself and laugh for sure. the speaker talks about cwg, 2g and MG ( madam gandhi).

  http://skandan-the-way-to-wisdom.blogspot.com/search?updated-min=2012-01-01T00:00:00-08:00&updated-max=2013-01-01T00:00:00-08:00&max-results=50

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.