இத்தாலியர்களால் வளர்க்கப்படும் நாய்கள் எஜமானரின் நண்பர்களை கூட தெரிந்து கொள்ளுமாம் – பெயரைக் கேட்டாலே வாலைக்குழைத்து ஆட்டுமாம் !

இத்தாலியர்களால் வளர்க்கப்படும் நாய்கள்
எஜமானரின் நண்பர்களை கூட தெரிந்து கொள்ளுமாம் –
பெயரைக் கேட்டாலே வாலைக்குழைத்து ஆட்டுமாம் !

இன்று வெளிவந்துள்ள செய்திக்குறிப்பு –

தமிழர் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன்
சிறிலங்கா படையினரால் உயிருடன்
பிடித்து வைத்து பின்னர் கொல்லப்பட்ட “ஒளிப்படங்களின்
நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த முடியவில்லை”
என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நேற்று ஊடகங்களில் வெளியான பாலச்சந்திரனின்
ஒளிப்படங்கள் குறித்து, இந்திய வெளிவிவகார
அமைச்சரிடம் கேள்வி எழுப்பிய போது,

“சிறிலங்கா இராணுவத்தினரால் கொல்லப்பட்டதாக
குற்றம்சாட்டப்படும், விடுதலைப் புலிகளின் தலைவர்
பிரபாகரனின் இளையமகனின் ஒளிப்படங்களைப்
பார்த்தேன்.

ஆனால் அவற்றின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த
முடியவில்லை.

சிறிலங்கா ஒரு முக்கியமான அயல்நாடு.
இந்தியாவின் நெருங்கிய நண்பன்.
எல்லாத் துறைகளிலும் சிறிலங்காவுடன் இந்தியா
உறவுகளை வலுப்படுத்தி வருகிறது”.

———————-

இந்த ஒளிப்படங்கள் குறித்து –
தடயவியல் நிபுணர்களின் கருத்துக்களை சேனல் -4
கேட்டறிந்தபோது –

இந்த படங்கள் ஒரே காமிராவிலிருந்து,
சில மணி நேரங்களுக்குள் எடுக்கப்பட்ட
உண்மையான படங்கள்  –

என்பது உறுதி செய்யப்பட்டது என்று
அறிவித்திருக்கிறார்கள்.

இவற்றை உண்மையான, நம்பகத்தன்மையுடைய
படங்கள் என்று ஏற்றுக் கொண்டு, உலக நாடுகள்
பலவும், தங்கள் தொலைக்காட்சிகளிலும்,
செய்தித்தாள்களிலும் பதித்து வெளியிட்டு வருகின்றன.
ஆனால் – இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு
இவற்றின் நம்பகத்தன்மை பற்றி இன்னும் சந்தேகமாம் !

இந்தப் படங்கள் குறித்து – இதுவரை,
உலகிலேயே இரண்டே இரண்டு நாடுகள்
தாம் இத்தகைய சந்தேகங்களைத் தெரிவித்து
வந்திருக்கின்றன – இலங்கையும், இந்தியாவும் !

இந்தப் படங்களைப் பார்த்தவுடன் பொங்கியெழுந்து,
பாய்ந்திருக்க வேண்டிய இந்திய அமைச்சர் –
சாக்குபோக்கு, சமாதானம் சொல்கிறார் –
படங்களின் நம்பகததன்மை சந்தேகத்திற்குரியது என்று.

அமைச்சரே சொல்லி விட்டார் – அப்புறமென்ன –
அரசாங்கத்தின் நிலையும் அதுவே தானே ?

————————-

மாற்றுத் திறனாளிகளுக்குக் கொடுப்பதாகச் சொல்லி
லட்சக்கணக்கில்
அரசுப் பணத்தை கொள்ளை அடித்தவர்கள் –
தங்களை வளர்த்து ஆளாக்கி,
அடைக்கலம் கொடுக்கும் எஜமானர்களுக்கு
விசுவாசம் காட்டாமல் இருக்க முடியுமா ?

எஜமானரது நண்பர்கள் யார் என்பது இவர்களுக்குத்
தெரியாதா என்ன ?
கேட்காமலே வக்காலத்து வாங்குவார்கள் !
காணாமலே குழைவார்கள் !
விசுவாசிகள் -அவர்களிடம் வெறென்ன
எதிர்பார்க்க முடியும் ?

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to இத்தாலியர்களால் வளர்க்கப்படும் நாய்கள் எஜமானரின் நண்பர்களை கூட தெரிந்து கொள்ளுமாம் – பெயரைக் கேட்டாலே வாலைக்குழைத்து ஆட்டுமாம் !

  1. எழில் சொல்கிறார்:

    ராஜபக்சேவுடன் ஒன்றாக போர் நடத்தி பின் பிரிந்த வேளையில் சரத் பொன்சேக்கா ஒரு கருத்தை சொன்னார். “நாம் முள்ளி வாய்காலில் புலிகள் உட்பட ஏராளமான தமிழர்களை எல்லா திசைகளிலும் சுற்றி வளைத்து விட்டோம். அங்கு பொது மக்கள் அதிகம் இருந்ததால் மேற்கொண்டு மெதுவாகவே முன்னேற நினைத்திருந்தோம். ஆனால் அந்த காலகட்டத்தில் நடந்த இந்திய நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகள் வர இருந்த நிலையில், முடிவு எப்படி இருக்குமோ என்ற அச்சத்தில், முடிவு வெளியாகும் போது போர் முடிவுற்றிருக்க வேண்டும் என்ற நெருக்குதல் எமக்கு வந்ததால் தான் கண்மூடித்தனமாக குண்டுகளை வீச வேண்டி வந்தது. ” என்பதே அது.

    இப்போது சொல்லுங்கள் ‘கூட்டு களவாணி’ இடம் வேறு எவ்வாறான பதிலை தான் எதிர் பார்ப்பீர்கள்?

  2. ரமேஷ் சொல்கிறார்:

    இவ்வளவு முக்கியமான ஒரு விஷயம் வெளியாகி இருக்கிறபோது, பிரதமரோ,
    காங்கிரஸ் கட்சியின் அன்னைத் தலைவரோ, அவரது “பிள்ளை”த் தலைவரோ, எவருமே வாய் திறக்காமல் மௌனம் சாதிப்பது ஏன் ?

    காங்கிரஸ் கட்சி/இந்திய அரசு, அமெரிக்க தீர்மானத்துடன் ஒத்துழைக்கவில்லை என்றால்,
    இலங்கை அரசுக்கு எதிராக ஓட்டுப்பொட விரும்பவில்லை
    என்றால் கருணாநிதி என்ன முடிவெடுப்பார் ?

  3. Ganpat சொல்கிறார்:

    I have a feeling that Master Balachandran’s killing is being hyped and blown out of proportion by the press and media.When hundreds of innocent Balachandrans and their parents were massacred some forur years back,by the same Srilankan Army.the Govt of India and the media were silent spectators.The same “The Hindu” management honoured the President of Srilanka a year later.Now all have turned saints suddenly and try to absolve their sins.

    In a highly hetrogenous mix of people called Indians where the north-south divide is maximum,these incidents would continue.The only thing that unites India is the massive corruption prevelant among all walks and classes from Kashmir to Kanyakumari,Arunachal Pradesh to Gujarat.
    If a crime has to be dealt with seriously & sincerely by our Govt.,then the victim of the crime should be some senior minister’s close kith and kin.Otherwise just some lip service and disbursement of a few lakhs would close the issue.

  4. c.venkatasubramanian சொல்கிறார்:

    why do they support Raja paksshy?Anyone-pls clarify

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.