சபாஷ் திருமா – அற்புதமான கேள்வி … !!

சபாஷ் திருமா – அற்புதமான கேள்வி … !!
இன்று வெளியாகியுள்ள ஒரு தலைப்புச் செய்தியும்
அது தொடர்பான புகைப்படமும் …

“மாரியை வேண்டினால் தாழ்த்தப்பட்டவர்கள் –
மேரியை வேண்டினால் பிற்படுத்தப்பட்டவர்களா ? “
திருமாவளவன் கேள்வி.. !

இன்றைய தினம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில்,
மதம் மாறிய கிறிஸ்தவர்களை உடனே
தாழ்த்தப்பட்டவர்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும்
என்று மத்திய அரசை வலியுறுத்தி”கருப்பு தின”
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட
திருமாவளவன் –

“மாரியை வேண்டினால் தாழ்த்தப்பட்டவர்கள்;
மேரியை வேண்டினால் பிற்படுத்தப்பட்டவர்களா?”
என்று கேள்வி எழுப்பினார் !

திருமாவளவன் எப்படிப்பட்ட மக்களுக்காகப்
போராடுகிறார் என்பதையும் அறிய
போராட்டத்தில்  கலந்து கொண்டவர்களின் சில
புகைப்படங்களையும் கொடுத்துள்ளது நக்கீரன் –

(செய்தியும் புகைப்படமும் – நன்றி – நக்கீரன் )

thiruma valluvar (1)

thiruma valluvar (2)

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to சபாஷ் திருமா – அற்புதமான கேள்வி … !!

 1. "மாரி"யப்பன் சொல்கிறார்:

  சட்டமன்றத்தில் ஒரு கட்சியிலிருந்து மற்றொரு
  கட்சிக்கு தாவினால் என்ன “பலன்” கிடைக்கும் என்பது திருமாவுக்குத் தெரியாதா என்ன ?

  அது போல ‘மாரி’யிலிருந்து ‘மேரி’க்கு தாவியர்களுக்கும் பலன் கிடைத்திருக்குமே. பிறகும் போராட்டம் ஏன் ?

  ஜாதி வேண்டாமென்று தானே ‘மாரி’யிலிருந்து ‘மேரி’க்குப் போனார்கள்.
  அங்கு போயும்
  ஏன் ஜாதியைக் கூப்பிடுகிறார்கள் ? கிறித்தவ மதத்திலும் இவர்கள் ஏன் புதிதாக ஜாதியை உண்டு பண்ணுகிறார்கள் ?

  புகைப்படத்தில் இருப்பவர்களுக்கெல்லாம் சலுகைகள் கொடுக்க வேண்டும்மென்றால் அம்பானி, டாட்டாவுக்கெல்லாம் கூட சலுகைகள் கொடுக்க வேண்டி இருக்கும் போலிருக்கிறதே.

 2. BC சொல்கிறார்:

  திருமாவளவன் எப்படிப்பட்ட மக்களுக்காக தமிழ்நாட்டில் போராடுகிறார் என்பதை அறிந்து கொண்டேன்.

 3. மேரியம்மா சொல்கிறார்:

  . திருமா. பாவம. கிறிஸ்தவம் . விட்டுடுங்க.

 4. c.venkatasubramanian சொல்கிறார்:

  Emaaruvarkal irukkumvarai—————oh JESUS pls save them&take them with u

 5. Vinoth சொல்கிறார்:

  @”மாரி” யப்பன் சனதான மதத்தின் நிலை எல்லாரும் அறின்தது தான். மதமாக மட்டும் இல்லாமல் வாழ்கை முறையாகவும் இருப்பது எல்லரும் அறிந்ததே..

  சனதான மதம் போலவே கிருத்துவம் , இஸ்லாம், புத்திசம் என்று எதற்கு மாறினாலும், சாதியையும் உடன் கொண்டே செல்கின்றனர்.

  பொருளாதார அளவில் முன்னேறாதவரை, தாழ்த்தபட்டவர்களுக்கு விடிவு இல்லை.

  தாழ்த்தபட்டவர்களின் மீதான கொடுமை சனதான மதத்தின் கொடுமை , மதம் மாறினால் நீங்குவதில்லை என்பதற்கு அம்பேத்கார் காலத்திலேயே உதாரணம் உண்டு.

  இதேல்லாம் தெரிந்தும் தாழ்தப்பட்வர்கள் எங்கிருந்தும் முன்னேற கூடாது என்றுறிருக்கும் நீர் மாரியப்பனா ..இல்லை சோமாரியப்பனா?

  அதெப்படி புகைபடத்தை பார்த்தே ஒருவரின் சமூக குடும்ப பொருளாதரார நிலையை கண்டறிந்து விடும் அளவுக்கு நீர் என்ன பெரிய டுபுக்கா?

  அப்படி பார்த்தால் 30 ருபாய் சம்பாத்தால் ஏழை இல்லைன்னு சொல்லும் திட்ட கமிசனிடம் விஞ்ஞானப்பூர்வ அளவுகோலாவது இருக்கே..?

  தாழ்தபட்டவர் யாரும் வெள்ளை சொள்ளையாக உடுத்த கூடாது என்னும் உம் சாதி வெறி ஒரே வரியில் வெளியாகிவிட்டதே..குடுமி தெரியுதே?

  கீ போர்டு இருதால் எதை வேண்டுமானாலும் எழுத்வீரோ?

  அது சரி கா மை..

  .
  ← “இந்த உலகிற்கு நாம் ஜெயித்துக் காட்ட வேண்டும் … எப்படி ?? (கொ.த.கொ.வி. Part-7)” முன்பே கேட்கவேண்டும் என்றீருந்தேன்… அது என்ன ? கொ.த.கொ.வி.

  இந்த சீனவை பற்றிய தொடர் பதிவில் திருமா எங்கே இடையில் ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் வினோத்,

   வருக.

   உங்கள் கருத்தைக் சொல்கிறீர்கள் –
   விவாதம் செய்யுங்கள். அது சரி.
   ஆனால் -வார்த்தைகளில் தனிப்பட்ட வசவைத்
   தவிர்த்து விடுங்களேன்.

   இந்த செய்தி/பின்னூட்டம் குறித்து என் கருத்து –

   என்னைப் பொறுத்த வரையில் ஜாதி வேற்றுமையை
   நான் ஏற்பதில்லை. பிறப்பால் யாரும் உயர்ந்தவரும்
   இல்லை -தாழ்ந்தவரும் இல்லை. அவரவர் உயர்வும்
   தாழ்வும் – அவரவர் குணத்தையும், செயல்களையும்
   பொறுத்து தான் இருக்கிறது.

   அதே போல் – என்னைப் பொறுத்த வரையில்
   பல்வேறு மதங்கள் இருப்பதை நான் ஏற்கிறேன்.
   மதிக்கிறேன். அதற்கான அவசியங்கள் இருக்கின்றன.

   ஆனால் -ஒவ்வொரு மதத்திற்கும் ஒரு இறைவன்
   என்று பல இறைவர்கள் இருக்க முடியாது. அனைத்து
   மதங்களும் இட்டுச்செல்வது ஒருவனிடத்தே தான்.

   இறைவன் ஒருவன் தான் என்னும்போது,
   அவரவர் இருக்கும் மதத்திலிருந்தே இறைவனைத்
   தொழலாம். மாற வேண்டிய அவசியமே இல்லை.

   ஆனால் – சுயநலத்திற்காக –
   மதம் மாறுபவர்களையும்,
   மத மாற்றம் செய்பவர்களையும் –
   நான் வெறுக்கிறேன். துச்சமாக மதிக்கிறேன்.

   ” இந்து மதத்திலுள்ள ஜாதிப்பிரிவுகளை வெறுத்து,
   வேண்டாமென்று தானே பிற மதங்களுக்கு
   மாறுகிறார்கள். பின்னர் கூடவே ஜாதியையும்
   இட்டுச்செல்வது ஏன் ? ”

   – இந்த வாதம் சரியென்றே நான் நினைக்கிறேன்.

   கிறிஸ்தவத்தில் கூட நாடார், முதலியார்,
   தாழ்த்தப்பட்டவர், உயர்ந்தவர் என்றெல்லாம்
   பிரிவுகள் உண்டா ? இது யார் ஏற்படுத்தியது ?
   அதை அந்த மதபோதகர்கள் ஏற்றுக் கொள்கிறார்களா ?
   அப்படி ஏற்றுக் கொள்வதானால் –
   பின் மதமாற்றத்திற்கான அவசியம் என்ன ?

   இந்த சமுதாயத்தில் ஜாதிகளை ஒழிக்க ஒரே வழி –
   பொருளாதார ரீதியாக அனைவரின் வாழ்க்கைத்தரத்தையும்
   உயர்த்துவது தான்.

   ———

   உங்கள் வினாவிற்கான விளக்கம் –

   – கொ.த.கொ.வி = கொஞ்சம் தகவல்களும்,
   கொஞ்சம் விவாதமும் …!

   – இடையில் திருமா வந்ததற்கான் காரணம் –
   தொடர்கட்டுரை பத்து நாட்களுக்கு மேலாக தொடர்ந்ததும்
   இடையில் வந்த செய்திக்கு முக்கியத்துவம்
   கொடுக்க வேண்டும் என்று நினைத்ததும் தான்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 6. Paramasivam சொல்கிறார்:

  திரு திருமா அவர்கள் இங்கு யாருக்காக போராடுகிறார் என்பதை விரிவாக விளக்கி உள்ளீர்கள். அனைவரும் அறிய வேண்டிய உண்மை.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.