இந்தியாவில் கொள்ளையடித்து, அமெரிக்காவில் யுனிவர்சிடி கட்டிய கடைந்தெடுத்த அயோக்கியனின் கதை…

இந்தியாவில் கொள்ளையடித்து,
அமெரிக்காவில் யுனிவர்சிடி கட்டிய
கடைந்தெடுத்த அயோக்கியனின் கதை…

yale university
கமலஹாசனுக்கு வேண்டுமானால்  இண்டர்னெட்  வளர்ச்சி
“போர்னோகிராபி” தளங்களைத் தேடவே அதிகம் உதவியாக
இருப்பதாகத் தோன்றலாம். ஆனால் – சரித்திரத்தில்,
விஞ்ஞானத்தில், அறிவியலில், அரசியலில்,ஆன்மிகத்தில்,
ஆர்வம் உள்ளவர்களுக்கு இண்டர்னெட் தோண்டத் தோண்ட
கிடைத்துக் கொண்டே இருக்கும் ஒரு அற்புதத் தகவல்
சுரங்கம்.

எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் – கல்லூரி மாணவர்
கூட்டம் ஒன்றில் “யேல்” பல்கலைக்கழகத்தைப் பற்றி
பேசியதாக வந்த ஒரு செய்தியைப் பார்த்தேன்.
அந்த செய்தி என் ஆர்வத்தைத் தூண்டி மேலும் மேலும்
அதுகுறித்து தேடுமாறு செய்தது. அதில் கிடைத்த
தகவல்களே இந்த இடுகை உருவாக அடிப்படை..!
அந்த வகையில் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு என் நன்றி.

கொள்ளையடிப்பதற்காகவே பொறியியல் கல்லூரிகளையும்
மருத்துவக் கல்லூரிகளையும் திறப்பது இந்தக் காலம்.
இங்கே -அரசியலில் ஈடுபட்டு கொள்ளையடித்தவர்களும்,
சாராய அதிபர்களும் –
கல்லூரித் தொழிலதிபர்களாக மாறியதை
நாம் அறிவோம்.

ஆனால் இந்தியாவில் கொள்ளையும்,
கொலையும், அடிமை வியாபாரமும்
செய்து சேர்த்த பாவப் பணத்தை-
அமெரிக்காவில் கல்லூரியும் பல்கலைக்கழகமும் உருவாக்க
தானமாகக் கொடுத்த ஒரு வெள்ளைக்காரனைப் பற்றிய
கதை இது.

east india company logo-1

உலகிலேயே சிறந்த பல்கலைக்கழகங்களின் வரிசையில்
11வது இடத்தில் (11th rank in the list of
best universities of the world ) இருக்கும் –

நமது முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா
அவர்களுக்கு முதல் முதலாக டாக்டர் பட்டம் கொடுத்த
“யேல் யுனிவர்சிடி” உருவாகக் காரணமாக இருந்தவனின்
கதை தான் இது.

elihu yale -1717
இன்றைக்கு சுமார் 364 ஆண்டுகளுக்கு முன்னர் –
1649ம் ஆண்டு அமெரிக்காவில் பாஸ்டன் நகரத்தில்
(அந்த காலகட்டத்தில் அது பிரிட்டனின்
ஒரு குடியேற்ற நாடாக இருந்தது )-
ஒரு பிரிட்டிஷ் தம்பதியருக்குப் பிறந்த எலிஹூ யேல்
(Elihu Yale) தன் இளமைக்காலத்தில் படிப்பிற்காகவும்
பின்னர் பிழைப்பிற்காகவும், இங்கிலாந்து சென்றான்.

கிழக்கு இந்திய கம்பெனியில் சுமார் 27 ஆண்டுகள்
வெவ்வேறு பொறுப்புகளை ஏற்று பணி புரிந்த இவன்,
கிழக்கிந்திய கம்பெனியின் –
சென்னையின் இரண்டாவது கவர்னராக –
1687 முதல் 1692 வரை பொறுப்பிலிருந்தான்.

இவன் பொறுப்பில் இருந்தபோது தான் முதல் முதலாக
சென்னை கார்பரேஷன் 1688-ஆம் ஆண்டு செப்டம்பர்
29ந்தேதி உருவாக்கப்பட்டது.

சென்னை புனித ஜார்ஜ் கோட்டை உருவாகவும்,
அதன் கொத்தளத்தில் உள்ள கொடிக்கம்பம் முதல் முதலில்
உருவாகவும் காரணமாக இருந்த ஆசாமி இவன் தான்.

அப்போதைக்கு இந்தியாவிலேயே பெரிய கொடிக்கம்பமாக
இருந்தது அது தான். சென்னை கடற்கரையில் கரைதட்டி
உடைந்த லாயல் அட்வெஞ்சர் என்கிற கப்பலின்
கொடிமரத்திலிருந்து உருவானது அது என்கிறது சரித்திரம்.
இந்தியாவில், கிழக்கிந்திய கம்பெனி கொடிக்கு பதிலாக
பிரிட்டிஷ் யூனியன் ஜேக் கொடி முதல் முதலில்
ஏற்றப்பட்டதும் இந்த கொடி மரத்தில்தான்
என்கிறது சரித்திரம்.

இந்த யேல் – சென்னையில் இருக்கும்போது, ஒரு
பிரிட்டிஷ் விதவைப்பெண்ணை புனித ஜார்ஜ் கோட்டையில்
உள்ள மரியன்னை தேவாலயத்தில் தான் திருமணம்
செய்து கொண்டிருக்கிறான். அதன் பிறகு இவர்களுக்கு
டேவிட் என்கிற பெயரில் ஒரு மகன் பிறந்து தனது
மூன்றாவது வயதில் இறந்து போயிருக்கிறான். அந்த
சிறுவனது உடல் சென்னையில் தான் அடக்கம் செய்யப்
பட்டிருக்கிறது.

கிழக்கிந்திய கம்பெனியின் பெயரை உபயோகித்து
சென்னை முதற்கொண்டு – தெற்கே கடலூர் வரை
தன்னால் முடிந்த மட்டும் கொள்ளையடித்திருக்கிறான்
இந்த ஆள்.

கம்பெனி பணத்தில், தேவனாம்பட்டினத்தில்(கடலூர்)
சொந்தமாக ஏகப்பட்ட நிலம் வாங்கி ஒரு சொந்த
துறைமுகத்தையும், கோட்டையையும் கட்டி இருந்தான்.
(private harbour and port )
அதற்கு தன் மகனின் நினைவாக டேவிட் கோட்டை
என்றே பெயரிட்டிருந்தான்.

தான் அடிக்கும் கொள்ளைப் பொருட்களை அவ்வப்போது,
தன் சொந்த கப்பலாக மாற்றப்பட்டு விட்ட –
கிழக்கிந்திய கம்பெனி கப்பல் ஒன்றின் மூலம்
கடலூர் துறைமுகத்திலிருந்து தான்
ஆப்பிரிக்காவிற்கும், இங்கிலாந்திற்கும் கடத்தி
இருக்கிறான்.

சென்னையில் அவன் பணம் சம்பாதிக்க செய்யாத
அட்டூழியங்கள் இல்லை. கம்பெனி அதிகாரத்தைப்
பயன்படுத்தி, பொதுமக்களையும்-வியாபாரிகளையும்
மிரட்டிப் பணம் பிடுங்கி இருக்கிறான்.
காடுகளை அழித்து, தேக்கு மரங்களை விற்றுப் பணம்
பண்ணி இருக்கிறான். வைர வியாபாரம் செய்திருக்கிறான்.

தன் சொந்த செலவுகளுக்காக, உள்ளூரில் கடுமையான
வரிகளைப் போட்டு வசூல் செய்திருக்கிறான்.
மக்களுக்கு தன்னிடத்தில் பயம் இருக்க வேண்டும்
என்பதற்காக பலருக்கு கடுமையான தண்டனைகளைக்
கொடுத்திருக்கிறான்.
ஒரு சமயத்தில் இவனது குதிரை லாயத்தில்
வேலை செய்து வந்த தமிழ் இளைஞன் ஒருவன் ஒரு
குதிரையுடன் ஓடிப் போய், பின்னர் கண்டுபிடிக்கப்பட்டு,
பிடித்து இழுத்து வரப்பட்டு, இவனால்,
அடித்தே கொல்லப்பட்டிருக்கிறான்.

இதையெல்லாம் விடப் பெரிய கொடுமையாக இவன்
அடிமை வியாபாரத்திலும் ஈடுபட்டிருந்திருக்கிறான்.
இவனிடம் வேலைக்குச் சேர்ந்தவர்களை விவரம்
சொல்லாமல் ஆப்பிரிக்காவிற்கு அனுப்பி, அங்கே
அவர்களை அடிமைகளாக விற்பனை செய்திருக்கிறான்.

கிராமங்களில், தெருக்களில் விளையாடிக் கொண்டிருக்கும்
சிறுவர்களை தூக்கி வரச்செய்து, அவர்களையும்
அடிமைகளாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருக்கிறான்
இந்த அயோக்கியன். யேல் காலத்தில் இந்தியாவில்
அடிமை வியாபாரம் நடந்தது என்பது சரித்திரத்தில் கூடப்
பதிவாகி இருக்கிறது.

நாளடைவில், இவனது பிரதாபங்கள் லண்டன் வரை
பரவி, இவன் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டு,
1692-ல் (43 வயதில் ) பிரிட்டனுக்கு திரும்ப அழைத்து
கொள்ளப்பட்டிருக்கிறான்.

அதன் பின்னர், கொள்ளையடித்த சொத்துக்களை வைத்துக்
கொண்டு, பிரிட்டனில் மிகப்பெரிய கோடீஸ்வரனாக
வாழ்க்கை நடத்தி, தனது 72வது வயதில்
(July 8, 1721) இறந்து போயிருக்கிறான்.
(அந்த காலத்தில் – இது அதிகம் தான் ..!)

இங்கிலாந்து திரும்பிய பிறகு, தனக்கு ஏற்பட்டிருந்த
கெட்ட பெயரை மாற்றும் விதமாக, தான தர்மங்கள்,
பண உதவிகள் என்று நிறைய செய்து, கொடை வள்ளல்
என்கிற தோற்றத்தை உருவாக்க முயன்று, அதில்
ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறான்.

யேலுக்கு 69 வயது நடந்து கொண்டிருக்கும்போது,
அதாவது, இன்றைக்கு சுமார் 295 வருடங்களுக்கு முன்னர் –
அவனது பிறப்பிடமான அமெரிக்காவில், கனெக்ட்கெட்
பிரதேசத்தில், தாங்கள் சிறிய அளவில் நடத்திவந்த
இறைக்கல்வி நிலையம் ஒன்றை கல்லூரி அளவில்
விரிவாக்கவும், அதற்கான கட்டிடங்கள் கட்டவும்
நிதி உதவி கோரி, மாதெர் காட்டன் என்பவர்
இங்கிலாந்து வந்து, அப்போது தர்மபிரபுவாக மாறியிருந்த
யேலை சந்தித்து நிதி உதவி கோரினார்.
எலிஹூ யேல், ஏற்கெனவே இங்கிலாந்தில் நிறைய தான
தர்மங்கள் செய்து வந்ததால், தான் பிறந்த இடத்திலிருந்து
உதவி கோரி வந்த இவர்களுக்கும் தாராளமாக உதவி
செய்தான்.

தன்னிடம் இருந்த சுமார் 400 புத்தகங்கள்,
இங்கிலாந்து அரசர் ஜார்ஜ் மன்னரின் பெரிய ஒவியம் ஒன்று,
மற்றும் இந்தியாவிலிருந்து தான் கொள்ளையடித்து –
கொண்டு வந்திருந்த பொருட்கள் அடங்கிய 8 பெரிய பெட்டிகள்
ஆகியவற்றை அளித்து, அவற்றை விற்பதால் வரும்
பணத்தை அவர்களுக்கு கொடுத்தான். யேல் கொடுத்த
பொருட்களை ஏலத்தில் விட்டபோது –
562 டாலர் பணம் கிடைத்தது(1718ஆம் ஆண்டிலேயே !).
அந்தப் பணத்தைக்கொண்டு கனெக்டிகட்டில் புதிய
கல்லூரிக்கான கட்டிடங்கள் கட்டப்பட்டன. அவன் நினைவாக
அந்த கல்வி நிறுவனத்துக்கு யேல் பெயர் சூட்டப்பட்டது.
பின்னர் அதுவே பெரிய பல்கலைக்கழகமாக வளர்ச்சி
அடைந்த பிறகு, 1745-ம் ஆண்டு முதல் அந்தப்
பல்கலைக்கழகத்துக்கே யேல் பெயர் சூட்டப்பட்டு
“யேல் பல்கலைக்கழகம்” என்று அழைக்கப்படலாயிற்று !

இன்றைக்கு 321 ஆண்டுகளுக்கு முன்னர் – அதாவது,

1692-ம் ஆண்டு – லஞ்ச ஊழல்,கொலை,கொள்ளை,
அடிமை வியாபரம் ஆகிய – குற்றசாட்டுகளுக்கு உள்ளாகிப்
பதவி இழந்த, படுபாவி ஒருவனின் பெயரில் தான் –
இன்று உலகம் முழுவதும் உயர்வாக மதிக்கப்படும் ஒரு
பல்கலைக்கழகமே இயங்குகிறது என்கிற உண்மைகள்
எத்தனை பேருக்கு தெரிந்திருக்கப்போகிறது ?

எனக்கும் எதேச்சையாகத்
தெரிய வந்த உண்மை தானே இது..!

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

20 Responses to இந்தியாவில் கொள்ளையடித்து, அமெரிக்காவில் யுனிவர்சிடி கட்டிய கடைந்தெடுத்த அயோக்கியனின் கதை…

 1. விவரணன் நீலவண்ணன் சொல்கிறார்:

  மிகவும் பயன்மிக்க பதிவு. முதலில் கமலகாசனின் கூற்று அபத்தமானது, இணையம் போர்னோவால் வளர்ந்தது உண்மை எனில் சினிமா பிட்டு நீலப்படங்களால் வளர்ந்தது என சொல்லலாமே. யேல் பற்றிய நானும் வாசித்துள்ளேன். சென்னையில் இருந்து பல கூலிகளை அடிமைகளாக விற்றது மட்டுமின்றி பல சிற்பங்களையும் கொள்ளியிட்டு விற்றுள்ளான், அவற்றில் சில யேல் பல்கலைகழகத்திலும் ஐரோப்பாவிலும் உள்ளன என கேள்வி. :/

 2. எழில் சொல்கிறார்:

  நான் இதுவரை கேளிவிப்படாத செய்தி. உங்கள் பதிவுக்கும், அதற்கான உங்கள் உழைப்புக்கும் நன்றிகள் கோடி.

 3. krishna சொல்கிறார்:

  There was a nice article in Thinathanthi about Yale and his donations to build university in connecticut.

 4. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  நாய் வித்த காசு கொறைக்காது
  மீன் வித்த காசு நாறாது
  என்பது இங்கு மட்டுமல்ல ஐரோப்பாவிலும் அமேரிக்காவிலும் கூட அப்படிதான் போல.
  பணம் கிடைக்கும்போது யாரும் அதன் ரிஷிமூலம் எல்லாம் பார்ப்பது கிடையாது.
  (மெட்ராஸ் தண்ணி குடித்தவன் எல்லாம் இப்படித்தானோ?)

 5. Kulasekaran சொல்கிறார்:

  நாய் வித்த காசு கொறைக்காது
  மீன் வித்த காசு நாறாது
  Absolutely correct.

  என்னவோ யேல்தான் அப்பலகலைக்கழகத்தை நிறுவியவர் என்று படித்தால், அவர் வெறும் நன்கொடைகள் மட்டுமே கொடுத்திருக்கிறார்.
  நன்கொடைகள் வாங்குவோர் அப்பணம் எப்படி சம்பாதிக்கப்பட்டது என்று பார்த்தால் இன்று கோயில்கள், பள்ளிக்கூடங்கள், பல்கலைக்கழகங்கள் இருக்கா. மன்னர்கள் கோயில்கள் கட்டினார்கள்? எப்படிக்கட்டினார்கள் என்பதை ஆராய்ந்தால் இதே கதைதான் வரும். மன்னர்கள் செய்யா அட்டகாசங்களும் அயோக்கித்தனங்களும் இல்லை. கோயில்கள் புனிதங்களை இழந்துவிட்டனவா? அனாதை ஆசிரமங்கள் இருக்கா. பணத்தில் தூயமை பார்த்தால் அக்குழந்தைகளுக்கு எங்கே ஆசிரமங்கள்? கருப்புப்பணத்தில்தான் இந்தியா ஓடுகிறது. கருப்புப்பணத்தில் எடுத்த சினிமாவைத்தான் நாம் இரசிக்கிறோம். அச்சினிமா கருப்புப்பணம் சம்பாதிக்கும் அரசியல்வாதிகள், அதிகாரிகளை வைத்துக்கதை புனைந்து மீண்டும் சம்பாதிக்கிறது. ” ஆரம்பம் ” கோடிக்கணக்கில் குமித்துவிட்டது. கதை அரசியல்வாதியைப்பற்றி. படம் வெள்ளைப்பணத்திலா எடுக்கப்பட்டது?
  முதலில் நன்கொடை கொடுக்க மனம் வேண்டும். அதிலும் பெருந்தொகையைக்கொடுக்க பெரிய மனம் வேண்டும். ஏனென்றால் கோடி கோடி யாக சம்பாதிக்கும் எத்தனை பேர் கொடுக்கிறார்கள்?
  யேல் உலகமக்களில் நன்றிக்குரியவர் என்றுதான் சொல்லவேண்டும். பெரும் தொகையைக்கொடுத்தபடியாலே அப்பலகலைக்கழகம் உருவானவது. என் பெயரை வைத்தால்தான் கொடுப்பேன் என்று அவர் சொன்னாரா? இல்லை. கொடுத்தைப்பெற்றவர்கள் அவரின் பெயருக்குக் கலங்கம் விளைவிக்காமல் அதை உலகத்தில் தரமிக்க ஒன்றாக நிலைநாட்டிக் காப்பாற்றிவருகிறார்கள். அண்ணமலைப்பலகலைக்கழகத்தில் நிலையென்ன இன்று> நாரிப்போய்க்கிடக்கிறது.
  நன்றிக்கடனாக யேல் பெயர் வைக்கப்பட்டது. இன்று கோயில் தூணில் கூடவும், ட்யூப்லைட்டிலும் அதைக்கொடுத்தோர் பெயரில்தான். அவர்கள் அப்போதுதான் கொடுப்பார்கள். 5 லட்சம் நன்கொடை கொடுத்தால் நிரந்தர வெள்ளி நுழைவுச்சீட்டு கோயில்களில், ஜெயின் அரசின் சாதனை. மக்களைக்கொள்ளையடித்து கோடிகோடியாக சம்பாதிக்கும் தமிழர்கள் நிறைந்த நாட்டில் வாழ்கிறோம். எங்கு பார்த்தாலும் பொது மக்கள் முதற்கொண்டு அநாகரிமான வாழ்க்கை. என்னால் ‘எனக்குப்பிடித்தது தமிழரும் தமிழ்நாடும்’ என்று சொல்ல முடியாது.
  யேல் கதை எனக்கு முன்பேயே தெரியுமென்பது மட்டுமன்று. செயின்ட்ஸ் மேரீஸ் சர்ச்சில் சென்றும் அவர் பெயரைப்பார்த்தேன். இன்றும் பார்க்கலாம்.

  • ராஜகோபாலன் சொல்கிறார்:

   காவிரிமைந்தன் சார்,

   உஷார். உஷார். உஷார்.
   வெங்கட்ரமணி ஒரு விடாது துரத்தும் கருப்பு.
   இப்போது குலசேகர ஆழ்வாராக அவதாரம்
   எடுத்து வந்திருக்கிறார் !

   ராஜகோபாலன்

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    திருவாளர் குலசேகரன் மே/பா வெங்கட்ரமணி,

    நான் ஒரு கொள்ளைக்கார வெள்ளையன் அல்லது
    வெள்ளைக்கார கொள்ளையனைப் பற்றி எழுதி
    இருக்கிறேன்.
    யேல் பல்கலைக்கழகத்தைப் பற்றி தவறாக
    எதுவும் சொல்லவில்லை.

    இதில் உங்களுக்கு என்ன ஆட்சேபணை இருக்க முடியும்
    என்பது எனக்குப் புரியவில்லை..!!
    நீங்கள் அவனை இவ்வளவு பாராட்டி இருப்பது
    ஏனென்றும் தெரியவில்லை …
    எதாவது…… தூரத்துச் சொந்தமோ …?

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

    • bandhu சொல்கிறார்:

     I think we are missing a point here. யேல் செய்ததெல்லாம் மஹா அக்கிரமம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அப்படி கொள்ளையடிக்கப்பட்ட பணம் கடைசியில் ஒரு நல்ல செயலுக்கு போனது.. Kind of poetic justice. விளைவறியாது நோபெல் கண்டுபிடித்த டைனமைட் கடைசியில் நோபெல் பரிசுக்கு காரணம் ஆனது போல.. என்ன.. அவன் பெயரை வைத்து அவன் செய்த கெட்ட செயல்களை மறக்கடித்தது தான் (again ..incidental ..) உறுத்துகிறது!

    • Kulasekaran சொல்கிறார்:

     ராஜகோபாலனுக்கு எழுதிய பதிலை படிக்கவும்.

     மாற்றுக்கருத்தைச் சொன்னால் தனிநபர் தாக்கத்தில் இறங்க வேண்டாம். இங்கே எழுதக்கூடாதென்றால் போய் விடுகிறேன். அதென்ன தூரத்துச் சொந்தமோ என்ற‌ கேள்வி? யாரோ எவரோ 300 ஆண்டுகளுக்கு முன் வாழ்தவர்களைப்பற்றிப் பேசும்போது கூடவா தனிநபர் தாக்கம் ? இத்தாக்கம் பொதுமேடைப் பண்பாடன்று என்று இன்றைய பத்திரிக்கைகள் சத்தியம் டி வி விடயத்தில் தலையங்கள் எழுதியிருக்கின்றன. The Cong MLA has filed case not only against the Tamil teacher but also, against the TV. We are all concerned with her although we are diametrically opposed to her views. Why? We want to uphold Tamilian culture of toleration and good public conduct.

   • Kulasekaran சொல்கிறார்:

    வெள்ளைக்காரனென்ல்லாம் அயோக்கியன் நாமெல்லாரும் யோக்கியர்கள் என்ற கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. என் மனசாட்சிபடியே எழுதிவருகிறேன். இருபக்கங்களிலும் குறை நிறை உண்டு என்பதுவே உண்மை.

    மாற்றுக்கருத்தைப்பதிவு செய்வோரை இகழ்வது பண்பாடன்று. பொதுதளத்தில் சில பண்புகளோடுதான் எழுத வேண்டும்.

    ராஜகோபாலனின் பின்னூட்டத்தையெல்லாம் காவேரி மைந்தன் அனுமதிப்பது அவரும் இப்பண்பாட்டுச்சிதையலை அனுமதிப்பது போல.

    எவ்வளவுதான் நாம் அக்கருத்தை விரும்பாவிட்டாலும் அவை நாகரிகம் காக்கப்படவேண்டுமென்பது இன்றைய தமிழகத்து பேச்சு. சத்தியம் டிவியில் ஒரு தமிழாசிரியர் நடத்தையைத்தான் சொல்கிறேன். பிறர் கருத்து தவறேயென்றாலும், அவர்களைத் தரக்குறைவாகப்பேசலாமா? ராஜகோபாலன் தனிநபர் தாக்குதலில் இறங்கலாமா?

 6. Ganpat சொல்கிறார்:

  “அண்ணா” நகரில் ஒரு மனை விலை…எட்டு கோடி
  “கலைஞர் கருணாநிதி” நகரில் ஒரு மனை விலை ஆறு கோடி.
  “ஜெயலலிதா” நகரில் (மொகப்பேர்)ஒரு மனை விலை ஐந்து கோடி.
  “யேல்” பல்கலை கழகத்தில் இடம் கிடைப்பது குதிரைக்கொம்பு.
  நண்பர்.கா.மை..உங்கள் உழைப்பும் ஆராய்ச்சியும் அருமை.
  அதற்கு என் நன்றி மற்றும் பாராட்டுக்கள்.

  • Kulasekaran சொல்கிறார்:

   It is disinformation about US universities.

   Pay bribes and money and get seats in India.
   Show your merits and get seats in Ive League.
   Only that you must have enough financial strength to make your son or daughter stay there for MS or PhD. The college wont pay for your board and lodging.
   However, there are scholarship you can avail, for which too, you need merits to compete. Among the top 200 universities, only European Universities figure. IITs come after 200. Feel proud! Ganpat.

   There are lot of good things to learn from the westerners. Denial means dishonesty.

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    அது திருவாளர் குலசேகரனாக இருந்தாலும் சரி,
    சுந்தரபாண்டியனாக இருந்தாலும் சரி,
    கண்ணாயிரமாக இருந்தாலும் சரி,
    திருவாளர் வெங்கட்ரமணியே எத்தனை உருவம்
    எடுத்து வந்தாலும் சரி –

    என் வலத்தளத்தைப் பயன்படுத்திக்கொண்டு நீங்கள்
    ஏறுமாறாக எழுதுவதை நான் விரும்பவில்லை
    என்பதை ஏற்கெனவே பலமுறை கூறி விட்டேன்.

    நான் இனி உங்கள் தளத்தில் எழுத மாட்டேனென்று
    சொல்லி விட்டுத்தானே சென்றீர்கள் – பின் ஏன் திரும்ப
    மாறு பெயர்களில் வந்து எழுதுகிறீர்கள்.

    வெவ்வேறு பெயர்களில் மீண்டும் மீண்டும்
    வந்து தொல்லை கொடுக்கிறீர்கள்.

    உங்களுக்காக என் நேரத்தையும் உழைப்பையும்
    வீணடிக்க நான் தயாராக இல்லை.

    நான் எழுதுவது உங்களுக்காக இல்லை.
    எனக்காக – என் திருப்திக்காகவும்,
    என் எழுத்தை விரும்பி வாசிக்கும்
    நண்பர்களுக்காகவும் தான்.

    “எனக்குப் பிடித்தது தமிழும் தமிழ் நாடும்”
    என்று நான் எழுதி வைத்திருக்கிறேன்.

    இங்கு வந்து ” என்னால் ‘எனக்குப்பிடித்தது தமிழரும் தமிழ்நாடும்’
    என்று சொல்ல முடியாது ” என்று
    எழுதுகிறீர்கள் – உங்களை யார் கேட்டார்கள் ?

    “என்னவோ யேல்தான் அப்பலகலைக்கழகத்தை
    நிறுவியவர் என்று படித்தால், அவர் வெறும்
    நன்கொடைகள் மட்டுமே கொடுத்திருக்கிறார்”

    என்று முதலில் எழுதிவிட்டு, பின்னர் –

    “யேல் கதை எனக்கு முன்பேயே
    தெரியுமென்பது மட்டுமன்று.
    செயின்ட்ஸ் மேரீஸ் சர்ச்சில் சென்றும்
    அவர் பெயரைப்பார்த்தேன்”

    -என்று எழுதுகிறீர்கள்.

    உங்கள் குணத்தை என்னால் மாற்ற முடியாது.
    மீண்டும் மீண்டும்
    விதண்டாவாதம் தான் செய்கிறீர்கள்.

    தயவு செய்து இனிமேல் இந்த வலைத்தளத்தில்
    நீங்கள் எதையும் எழுத வேண்டாம் I repeat-
    இந்த வலைத்தளத்தில்
    நீங்கள் எதையும் எழுத வேண்டாம்.

    என்னை உருப்படியாக வேலை செய்ய விடுங்கள்.
    நான் உங்கள் வருகையை விரும்பவில்லை.

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

 7. Paramasivam சொல்கிறார்:

  தமிழகத்தை கொள்ளை அஅடித்து அதன் பின் தருமம் என்ன வாழ்கிறது. என்ன செய்தாலும், கொள்ளையன் கொள்ளையன் தான். அவனுக்கும் இங்கு ஆதரவு தெரிவிப்பார் பற்றி. என்ன சொல்ல…….

 8. நந்தவனத்தான் சொல்கிறார்:

  //நமது முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு முதல் முதலாக டாக்டர் பட்டம் கொடுத்த “யேல் யுனிவர்சிடி” //

  நம்மூரில் தலைவர்களை பற்றி அடாத பொய்களை சொல்லி புகழ்வது வழக்கம். யேல் கொடுத்த டாக்குடர் பட்டமும் இந்த கதைதான் போலிருக்கிறது.

  1968 அண்ணா யேல்க்கு சென்று உரையாற்றினார் அவ்வளவுதான். இப்படி ஆட்களை வரவழைத்து, state administration & public service பற்றி உரையாற்ற ஒரு பெலோஷிப் வைத்திருக்கிறார்கள் அதுக்கு பேர் Chubb fellowship (வரபோக காசு தரத்தான்!). இந்த நிதிஉதவி திட்டத்தின் கீழ் சென்று அண்ணா உரையாற்றி உள்ளார்.அண்ணாவுக்கு டாக்டர் பட்டம் கொடுத்தது நம்மூர் பல்கலை கழகம் (அண்ணாமலை)மட்டுமே, அதே வருடத்தில்.

  இந்த திட்டத்தில் உரையாற்றிய இன்னொரு வடஇந்திய பேரறிஞர் – ஷாருக்கான்! இந்த Chubb fellowship யை கூகிள் செய்தால் ஷாரூகின் பெயரும் (ஷாருக் மட்டும் அமெரிக்காரன் பெயர் கூட இல்லை)வருகிறது- அவ்வளவு ஃபேமஸ்! இணையதளத்தில் அவருக்கு இணைப்பும் வைத்திருக்கிறார்கள் http://chubbfellowship.org/speakers/current/shah_rukh_khan

  மேலும் தமிழ் விக்கீபீடியாவில் He (அண்ணா) was awarded the Chubb Fellowship at Yale University, being the first non-American to receive this honour என அண்ணாவை பற்றி எழுதி வைத்திருக்கிறார்கள். இதுவும் தவறு. Chubb fellowship வெப்சைட்டில் மேய்ந்த போது 50-களிலேயே ஜப்பான் தூதுவர், நியூஸிலாந்தின் ஐநா தூதுவர், ஒரு பிரிட்டீஷ் அரசியல்வாதி என வேற்றுநாட்டவர் பேசியிருக்கிறார்கள்.

  மேற்கண்ட தகவல்கள் தவறு எனில் சுட்டவும், நன்றி!

 9. R Chandrasekaran சொல்கிறார்:

  அய்யா அப்படிப்பார்த்தால் நம்மவூர் கல்வி வள்ளள்கள் ஒவ்வொருவரையும் ரிஷிமூலம் தோண்டிப் பாருங்களேன்.. (நம்மவர் படத்தில் ஓப்பனாக சொல்வார்கள்).. அவர்கள் அப்படித்தானே.. என்ன செய்வது.. பல செல்வந்தர்கள் உருவாவதும் அப்படித்தானே….

 10. ஜோதிஜி திருப்பூர் சொல்கிறார்:

  உங்கள் பதிவுக்கு நந்தவனம் கொடுத்த விமர்சனம் சரியாக வந்துள்ளது. எழுத்தாளர் எஸ் ரா அவர்கள் விகடன் குழுமம் மூலம் உரையாற்றும் ஒவ்வொரு பேச்சும் பொக்கிஷம்.

  வெள்ளை என்றாலே மண்டியிடுவது நம்மவர்களின் வாடிக்கை தானே? எஸ் ராவின் பேச்சை சமூக வலைதளங்களில் திராவிட கழக பேச்சாளர்களின் பேச்சு போல உள்ளது என்று கிண்டலடித்து இருந்தார்கள்.

  உங்களுக்கு பதில் மொய் வைக்காமல் போனால் நன்றாக இருக்காது அல்லவா? என் பங்குங்கு இங்கே?

  இந்தியாவில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை நிறுவியவர் என்றழைக்கப்படும் இராபர்ட் கிளைவ் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

  குறிப்பாக நமது அரசியல்வாதிகள் அத்தனை பேர்களும் மோசம் என்று கருதிக் கொள்பவர்கள் இராபட் கிளைவ்பற்றி தெரிந்து கொள்வது அவசியமானதாகும்.

  இந்த கோட்டைக்கு சாதாரண எழுத்தராக 1743ம் வருடம் வேலைக்கு வந்தவர் தான் இராபட் கிளைவ். அப்போது இவருடைய வருட சம்பளம் 15 பவுண்ட். ஆனால் இவர் சில வருடங்களிலேயே ஜெனரலாக பிற்காலத்தில் பிரபுவாக (பிலாஸி) தன்னை உயர்த்திக் கொண்டார். இவரைப்பற்றி எழுதிய வரலாற்று ஆசிரியர்கள் மிகச் சிறந்த மதிநுட்பமும், இராணுவ திறமையும் மிக்கவர்.

  இதன் காரணமாகவே வாழ்வில் உயர்ந்து பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் இந்தியாவில் ஆழமாக வேறூன்ற உதவினார் என்றே எழுதியிருக்கிறார்கள். ஆனால் இவரிடம் இருந்த ராணுவ பலம் என்பது வெகு சொற்பமே. மேலும் இவருடன் இருந்த முக்கால்வாசிப் பேர்கள் பொறுக்கிகளும், காலிகள், சமூகக் கழிசடைகள் போன்றவர்களும் தான் இருந்தனர்.

  முகலாயர்களின் வழிவந்த நிலப்பிரபுத்துவ அரசர்கள் தமக்குள் இடைவிடாது சச்சரவு செய்து கொண்டிருந்தார்கள். தன்னிடம் இருந்த விசுவாசமான போக்கிரிகளை துணை கொண்டு, இராபர்ட் கிளைவ் தந்திரத்தாலும், வஞ்சகம், சூதுக்களாலும் முறியடித்து படிப்பயாக இங்கே சாம்ராஜ்யத்தை விரிவாக்கினார்.

  இந்தியாவின் முதல் தலைமுறை பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள், இன்றைய அரசியல்தலைவர்களின் முன்னோடியாக திகழ்ந்தனர். லஞ்சம், ஊழல், பொறாமை, பேராசை, காட்டுமிராண்டித்தனம், எது குறித்தும் அஞ்சாமை போன்றவற்றை குணாதிசியமாக வைத்து இந்தியாவை முடிந்தவரைக்கும் சூறையாடினர்.

  இராபட் கிளைவ் கவர்னராக இருந்த போது மற்றொரு காரியத்திலும் கவனமாக இருந்தார். இந்தியாவின் கல்வி முறை, விவசாய முறையையும் நீண்ட ஆராய்ச்சியாக எடுத்துக் கொண்டு முடிவாக இரண்டு தீர்மானத்திற்கு வந்தார். கல்வியை மெக்காலே என்ற புண்ணியவான் எடுத்துக்கொள்ள இவர் விவசாயத்தில் கை வைத்தார்
  http://deviyar-illam.blogspot.in/2011/12/blog-post_26.html

 11. Kulasekaran சொல்கிறார்:

  கிளைவும் யேலும் கிழக்கிந்திய கம்பெனியை உருவாக்கவில்லை. நடாத்தவுமில்லை. அவர்கள அக்கம்பெனி ஊழியர்கள். இதற்கு கொஞ்சம் அக்கால இங்கிலாந்தைப்பற்றித் தெரிந்திருக்க வேண்டும். கிளைவ் காலத்தில் அவர் நாட்டில் பஞ்சமே நிலவியது. இளைஞர்களுக்கு வேலையில்லை. இதன்காரணமாக காலனிகளைக்கண்டு ‘கொள்ளையடிக்க’ வேண்டியதாகியது. இதை ஐரோப்பிய நாடுகள் பலவும் செய்தன.

  அப்படி வேலைகிடக்காமலைந்தோர் கம்பெனியில் சேர்ந்து பலநாடுகள் சென்றனர். அவர்களெல்லாம் வெகு சாதாரமண மக்களே. சென்ற நாட்டிலுள்ள மக்களை அடிமைப்படுத்த அம்மக்களின் அக்கால ஆட்சியாளரே துணைபுரிந்தனர். கம்பெனி வெகுதூரத்தில் கடல்களுக்கப்பால் இருந்தது இங்கு வந்த வெள்ளைக்கார ஊழியர்களுக்கும் அவர்கள் அதிகாரிகளுக்கும் முழுச்சுதந்திரம் கிடைக்க, தங்கள் ஆட்சியை நிலைநாட்ட அனைத்துவழிகளிலும் கடைபிடித்து வெற்றி கண்டார்கள்; எனப்தை விட வெற்றி அவர்கள் கைகளிலேயே வைக்கப்பட்டது. இதுதான் நடந்த கதை. திருப்பூர் ஜோதிக்கு நான் சொல்வதென்னவென்றால், கிளைவ் செய்தது அவன் கம்பெனிக்காக. அவன் கணிப்பிலும் அவன் கம்பெனி கணிப்பிலும் அது சரி. பாதிக்கப்பட்ட இந்தியர்கள் கணிப்பில் தவறு. நாம் சரியென்றால் எவரும் நம்மை அடிமைப்படுத்த முடியாது என்பது வெள்ளையர்கள் நம்மை ஆண்ட வர்லாறு காட்டும் உண்மை.
  அதே வேளையில், இன்றைய ஆங்கிலேயன் அதையெல்லாம் சரியென்கிறானா? இல்லவே இல்லை. ஆங்கிலேய பிரதமர், பிளேர், 300 ஆண்டு அடிமை வியாபாரத்தை நினைவுகூரும் விழாவில், ஆப்பிரிக்க மக்களிடம் மன்னிப்புக் கேட்டார். நாம் கேட்போமா? எவரேனும் தாம் செய்த கொடிய செயலுக்கு மன்னிப்புக்கேட்ட வரலாறு உண்டா? திருவுடைமன்னரைக்கண்டால் திருமாலைக்கண்டேனே என்பதல்லவா பாடல். தேவதாசிகளைக்கூட்டி கோயில்களின் அடிமையாக்கியவனுக்கு விழாவல்லா கொண்டாடுகிறோம்? அதே செயலை வெள்ளைக்காரன் செய்திருந்தால் இன்று மன்னிப்பல்லவா கேட்டிருப்பான்?
  அவன் போனபின், நம் நாடு என்னவாயிற்று? ராஜகோபாலன் போன்றோர் பதில் சொல்லலாம். எத்தனை எத்தனை பிளவுகள். மதத்தில் பெயரால், குலத்தில் பெயரால் எவ்வளவு கல்வரங்கள் ; கொலைகள். தமிழகம், இதென்ன புண்ணியபூமியாகவா இருக்கிறது. தமிழர் தமிழ்நாடு என்று பெருமைப்பட? இலங்கைத்தமிழர் விடயத்தில் என்ன தமிழ்நாட்டுத் தமிழர்கள் அனைவரும் ஒரே வரிசையிலா நிற்கிறார்கள்? எத்தனை எதிர்ப்புக்கள்?

  கிளைவும் யேலும் கிழக்கிந்திய கம்பெனியை உருவாக்கவில்லை. நடாத்தவுமில்லை. அவர்கள அக்கம்பெனி ஊழியர்கள். இதற்கு கொஞ்சம் அக்கால இங்கிலாந்தைப்பற்றித் தெரிந்திருக்க வேண்டும். கிளைவ் காலத்தில் அவர் நாட்டில் பஞ்சமே நிலவியது. இளைஞர்களுக்கு வேலையில்லை. இதன்காரணமாக காலனிகளைக்கண்டு ‘கொள்ளையடிக்க’ வேண்டியதாகியது. இதை ஐரோப்பிய நாடுகள் பலவும் செய்தன.

  அப்படி வேலைகிடக்காமலைந்தோர் கம்பெனியில் சேர்ந்து பலநாடுகள் சென்றனர். அவர்களெல்லாம் வெகு சாதாரமண மக்களே. சென்ற நாட்டிலுள்ள மக்களை அடிமைப்படுத்த அம்மக்களின் அக்கால ஆட்சியாளரே துணைபுரிந்தனர். கம்பெனி வெகுதூரத்தில் கடல்களுக்கப்பால் இருந்தது இங்கு வந்த வெள்ளைக்கார ஊழியர்களுக்கும் அவர்கள் அதிகாரிகளுக்கும் முழுச்சுதந்திரம் கிடைக்க, தங்கள் ஆட்சியை நிலைநாட்ட அனைத்துவழிகளிலும் கடைபிடித்து வெற்றி கண்டார்கள்; எனப்தை விட வெற்றி அவர்கள் கைகளிலேயே வைக்கப்பட்டது. இதுதான் நடந்த கதை. திருப்பூர் ஜோதிக்கு நான் சொல்வதென்னவென்றால், கிளைவ் செய்தது அவன் கம்பெனிக்காக. அவன் கணிப்பிலும் அவன் கம்பெனி கணிப்பிலும் அது சரி. பாதிக்கப்பட்ட இந்தியர்கள் கணிப்பில் தவறு. நாம் சரியென்றால் எவரும் நம்மை அடிமைப்படுத்த முடியாது என்பது வெள்ளையர்கள் நம்மை ஆண்ட வர்லாறு காட்டும் உண்மை.
  அதே வேளையில், இன்றைய ஆங்கிலேயன் அதையெல்லாம் சரியென்கிறானா? இல்லவே இல்லை. ஆங்கிலேய பிரதமர், பிளேர், 300 ஆண்டு அடிமை வியாபாரத்தை நினைவுகூரும் விழாவில், ஆப்பிரிக்க மக்களிடம் மன்னிப்புக் கேட்டார். நாம் கேட்போமா? எவரேனும் தாம் செய்த கொடிய செயலுக்கு மன்னிப்புக்கேட்ட வரலாறு உண்டா? திருவுடைமன்னரைக்கண்டால் திருமாலைக்கண்டேனே என்பதல்லவா பாடல். தேவதாசிகளைக்கூட்டி கோயில்களின் அடிமையாக்கியவனுக்கு விழாவல்லா கொண்டாடுகிறோம்? அதே செயலை வெள்ளைக்காரன் செய்திருந்தால் இன்று மன்னிப்பல்லவா கேட்டிருப்பான்?

  சரி, அவன் போனபின், நம் நாடு என்னவாயிற்று? ராஜகோபாலன் போன்றோர் பதில் சொல்லலாம். எத்தனை எத்தனை பிளவுகள். மதத்தில் பெயரால், குலத்தில் பெயரால் எவ்வளவு கல்வரங்கள் ; கொலைகள். தமிழகம், இதென்ன புண்ணியபூமியாகவா இருக்கிறது. தமிழர் தமிழ்நாடு என்று பெருமைப்பட? இலங்கைத்தமிழர் விடயத்தில் என்ன தமிழ்நாட்டுத் தமிழர்கள் அனைவரும் ஒரே வரிசையிலா நிற்கிறார்கள்? எத்தனை எதிர்ப்புக்கள்?

  மன்சாட்சியே இல்லாதவர்கள் பெருமைப்படலாம்.

  .கிளைவும் யேலும் கிழக்கிந்திய கம்பெனியை உருவாக்கவில்லை. நடாத்தவுமில்லை. அவர்கள அக்கம்பெனி ஊழியர்கள். இதற்கு கொஞ்சம் அக்கால இங்கிலாந்தைப்பற்றித் தெரிந்திருக்க வேண்டும். கிளைவ் காலத்தில் அவர் நாட்டில் பஞ்சமே நிலவியது. இளைஞர்களுக்கு வேலையில்லை. இதன்காரணமாக காலனிகளைக்கண்டு ‘கொள்ளையடிக்க’ வேண்டியதாகியது. இதை ஐரோப்பிய நாடுகள் பலவும் செய்தன.

  அப்படி வேலைகிடக்காமலைந்தோர் கம்பெனியில் சேர்ந்து பலநாடுகள் சென்றனர். அவர்களெல்லாம் வெகு சாதாரமண மக்களே. சென்ற நாட்டிலுள்ள மக்களை அடிமைப்படுத்த அம்மக்களின் அக்கால ஆட்சியாளரே துணைபுரிந்தனர். கம்பெனி வெகுதூரத்தில் கடல்களுக்கப்பால் இருந்தது இங்கு வந்த வெள்ளைக்கார ஊழியர்களுக்கும் அவர்கள் அதிகாரிகளுக்கும் முழுச்சுதந்திரம் கிடைக்க, தங்கள் ஆட்சியை நிலைநாட்ட அனைத்துவழிகளிலும் கடைபிடித்து வெற்றி கண்டார்கள்; எனப்தை விட வெற்றி அவர்கள் கைகளிலேயே வைக்கப்பட்டது. இதுதான் நடந்த கதை. திருப்பூர் ஜோதிக்கு நான் சொல்வதென்னவென்றால், கிளைவ் செய்தது அவன் கம்பெனிக்காக. அவன் கணிப்பிலும் அவன் கம்பெனி கணிப்பிலும் அது சரி. பாதிக்கப்பட்ட இந்தியர்கள் கணிப்பில் தவறு. நாம் சரியென்றால் எவரும் நம்மை அடிமைப்படுத்த முடியாது என்பது வெள்ளையர்கள் நம்மை ஆண்ட வர்லாறு காட்டும் உண்மை.
  அதே வேளையில், இன்றைய ஆங்கிலேயன் அதையெல்லாம் சரியென்கிறானா? இல்லவே இல்லை. ஆங்கிலேய பிரதமர், பிளேர், 300 ஆண்டு அடிமை வியாபாரத்தை நினைவுகூரும் விழாவில், ஆப்பிரிக்க மக்களிடம் மன்னிப்புக் கேட்டார். நாம் கேட்போமா? எவரேனும் தாம் செய்த கொடிய செயலுக்கு மன்னிப்புக்கேட்ட வரலாறு உண்டா? திருவுடைமன்னரைக்கண்டால் திருமாலைக்கண்டேனே என்பதல்லவா பாடல். தேவதாசிகளைக்கூட்டி கோயில்களின் அடிமையாக்கியவனுக்கு விழாவல்லா கொண்டாடுகிறோம்? அதே செயலை வெள்ளைக்காரன் செய்திருந்தால் இன்று மன்னிப்பல்லவா கேட்டிருப்பான்?

  சரி, அவன் போனபின், நம் நாடு என்னவாயிற்று? ராஜகோபாலன் போன்றோர் பதில் சொல்லலாம். எத்தனை எத்தனை பிளவுகள். மதத்தில் பெயரால், குலத்தில் பெயரால் எவ்வளவு கல்வரங்கள் ; கொலைகள். தமிழகம், இதென்ன புண்ணியபூமியாகவா இருக்கிறது. தமிழர் தமிழ்நாடு என்று பெருமைப்பட? இலங்கைத்தமிழர் விடயத்தில் என்ன தமிழ்நாட்டுத் தமிழர்கள் அனைவரும் ஒரே வரிசையிலா நிற்கிறார்கள்? எத்தனை எதிர்ப்புக
  எப்படி பெருமைப்படமுடியும்? வெள்ளைக்காரன் கொள்ளையடித்தான். ஆனால் அதை அவன் இன்று நியாயப்படுத்தி விழாக்கொண்டாடவில்லை. நீங்கள் கொள்ளையடித்துக்கொண்டிருக்கிறீர்கள். கொள்ளையடிப்பவனுக்கு விழா எடுக்கிறீர்கள். கவிதை மாலை சூடுகிறீர்கள். உண்மையா பொய்யா?”

  .

  .

 12. c.venkatasubramanian சொல்கிறார்:

  excellent information

 13. எழில் சொல்கிறார்:

  இந்த பதிவில் கமலஹாசன் பேர் வருவதாலும், தங்கள் கமல்ஹாசன் பற்றிய முன்னொரு பதிவுக்கான எனது கருத்தில் link இல்லாமல் செய்தி மட்டும் எழுதியிருந்ததாலும், இப்போது இங்கே அதற்கான சுட்டி…

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.