கெஜ்ரிவாலின் தாத்தாவுக்கு தாத்தா …!!

கீழே உள்ள மனிதரைப் பாருங்கள்.

அவரை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

தோற்றத்தை வைத்து சுமாராகச் சொல்லுங்களேன் – அவர் யாராக இருப்பார், என்ன செய்து கொண்டிருப்பார் என்பதைப் பற்றி எதாவது யூகிக்க முடிகிறதா ? only security 3 legged dog.4 சரி இந்தப் படத்தைப் பாருங்கள். இப்போது எதாவது தோன்றுகிறதா ?

actual residence of president-3 ஒன்றும் யூகிக்க முடியவில்லை தானே..?

சரி -சில விவரங்கள் கீழே –

அது மிகவும் ஏழ்மையான நாடு. மக்கள் தொடர்ந்து சர்வாதிகாரத்தின், சுயநலவாதிகளின் – பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தார்கள். நாட்டில் வறுமை தாண்டவமாடியது. எங்கும் பஞ்சமும், பட்டினியும். மக்களுக்கு உண்ண உணவு இல்லை.வேலை இல்லை.

சில இளைஞர்கள் ஒன்று சேர்ந்தனர். ஒரு கெரில்லாப் போர்க்குழுவாக உருவாகினர். பணக்காரர்களிடம் கொள்ளை அடித்தனர். வங்கிகளைக் கொள்ளை அடித்தனர். அரசுப் பணத்தைக் கொள்ளை அடித்தனர். அந்தப் பணத்தைக் கொண்டு எழைகளுக்கு உதவினர். உணவு அளித்தனர். பணம் கொடுத்தனர்.

இந்தக்குழு சர்வாதிகாரத்தை எதிர்த்துப் போராடியது. அந்த முக்கியமான போராளிகளில் இவரும் ஒருவர் !

ஒரு நாள், அரசாங்கப் படைகளின் பிடியில் சிக்கினார். கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு கொடிய சிறையில் தள்ளப்பட்டார். 3 முறைகள் சிறையிலிருந்து தப்பினார். மீண்டும் மீண்டும் சிறைப்பட்டார். 6 தடவை துப்பாக்கிச் சூட்டில் சிக்கி குண்டடிக் காயங்கள் பெற்றார்.

இறுதியாக 4வது முறை மாட்டியபோது கொடிய பாதாளச் சிறையில் தள்ளப்பட்டார்.14 ஆண்டுக்கால சிறை வாசம்.

அதில் இரண்டு ஆண்டுகள் ஒரு பாழடைந்த கிணற்றின் அடிப்பகுதியில், தன்னந்தனியே சிறை வைக்கப்பட்டார். தனிமையில் பைத்தியம் பிடிக்காமலிருக்க, அங்கிருக்கும் தவளைகளுடன் பேசிக்கொண்டிருப்பாராம். prisoner mujico.5 இறுதியாக, சர்வாதிகாரம் முறியடிக்கப்பட்டு, ஜனநாயகம் மலர்கிறது. அந்த புரட்சி கெரில்லாக்குழு – ஒரு ஜனநாயக கட்சியாக உருவெடுக்கிறது. தேர்தலில் போட்டியிடுகிறது.

2009ஆம் ஆண்டு, அந்த மனிதர் அந்த நாட்டின் ஜனாதிபதியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

சரி – ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மனிதர் எப்படி இருக்கிறார், எங்கே வசிக்கிறார் ..? இது தான் அவருக்காக ஒதுக்கப்பட்ட ஜனாதிபதி மாளிகை –

presidential palace uruguay-2 இருக்க இடம் இல்லாத ஏழை மக்களுக்காக, அந்த நாட்டு அரசு உருவாக்கி இருக்கும் தங்குமிடங்களுடன் – இந்த மாளிகையையும் சேர்த்து விட்டார். இன்று இந்த ஜனாதிபதி மாளிகையில் – வீடில்லாத ஏழைகள் பலர் வசிக்கிறார்கள்.

சரி. ஜனாதிபதி எங்கே வசிக்கிறார் ..?

அவருக்கும், அவரது மனைவிக்குமாக, தலைநகர் ‘மோன்டேவிடியோ’ வுக்கு வெளியே, ஒரு சிறிய தோட்டமும், அதையொட்டி ஒற்றைப் படுக்கையறை உள்ள ஒரு சிறு தனிமையான வீடும் இருக்கின்றன. இங்கு தான் ஜனாதிபதியும், அவரது மனைவியும் வசிக்கிறார்கள். துணைக்கு மூன்று கால்கள் மட்டுமே செயல்படும் ஒரு வளர்ப்பு நாய்.

ஜனாதிபதிக்கு மாதம் 12,000 அமெரிக்க டாலர்கள் சம்பளம் உண்டு. அதில் 90 சதவீதத்தை ஏழைகளுக்கான உதவி நிதிக்கு கொடுத்து விட்டு, மீதி 10 % மட்டுமே சம்பளம் பெறுகிறார். அவர்களது மீதிச் செலவுக்கு, அவரும் அவரது மனைவியும் தங்களது தோட்டத்தில் விவசாயம் செய்து சம்பாதிக்கிறார்கள்.

(அவருக்கு வயது 78, மனைவிக்கு 75 …!)

தெருக்கோடியில் இரண்டு போலீஸ்காரர்கள் பணி புரிகிறார்கள். அந்த ஜனாதிபதிக்கு அந்த வளர்ப்பு நாயும், இரண்டு போலீஸ்காரர்களும் தான் செக்யூரிடி..!

goes to office driving self.jpg-6 இது தான் அவருக்குச் சொந்தமான குட்டிக் கார். அரசாங்க வாகனங்களை எல்லாம் அவர் பயன்படுத்துவதில்லை. எங்கு போனாலும், இந்த காரை அவரே ஓட்டிக்கொண்டு போய் விடுவார்.

கீழேயுள்ள புகைப்படத்தை பாருங்கள் –

naduvil president-7 நடுவில் இருப்பவர் தான் ஜனாதிபதி.ஒரு பக்கம் துணை ஜனாதிபதி, மறுபக்கம் நிதியமைச்சர். அவருக்கு கீழே பணியாற்றுபவர்கள் கோட்டு, சூட்டுடன் இருக்கும்போது இவர் உடையைப் பாருங்கள்…!

உலகிலேயே, காலில் செருப்பை மாட்டிக்கொண்டு ஜனாதிபதியாகப் பதவியேற்ற ஒரே மனிதர் இவராகத் தான் இருக்க முடியும்..!

தன் எளிமையைப் பற்றி கேட்பவர்களுக்கு- இவர் சொல்வது –

“எனக்கு எந்த அசௌகரியமும் இல்லை. வாழ்க்கைக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் உணவு, உடை, இருப்பிடம் எனக்கு இருக்கிறது. எனக்கு இது போதும். நான் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன்”.

“தங்கள் தேவைகளை குறைத்துக் கொண்டால், சுருக்கிக்கொண்டால் – உலகிலுள்ள 700 கோடி மக்களும் மகிழ்ச்சியாக இருக்கலாம்”

எனக்குப் பிடித்ததும், நான் நீண்ட நாட்களாக என் சொந்தபந்தங்களுக்கும், நண்பர்களுக்கும் கூறி வருவதும் இதையே தான்..!

“மேலும் மேலும் வசதிகளைத் தேடி பணத்தின் பின்னால் அலைபவர்கள் தான் உண்மையில் ஏழைகள்” என்பது இவரது தத்துவம்…!

அவர் போடுவது வேஷமோ ..?- அடுத்த தேர்தலில் மீண்டும் பதவிக்கு வருவதற்காக எளிமையாக காட்சி அளிக்கிறாரோ என்று சந்தேகம் வரலாம்..!

அதற்கு வாய்ப்பு இல்லை. ஏனென்றால் – அந்த நாட்டின் சட்டப்படி ஒரே நபர் தொடர்ந்து இரண்டாவது முறை ஜனாதிபதியாகப் பதவி வகிக்க முடியாது. இவர் 2014-ல் ரிடையராகி விடுவார்.

உன்னதமான இந்த மனிதரின் பெயர் – ஜோஸ் முஜீகா. இவரை ஜனாதிபதியாக அடையக் கொடுத்து வைத்த நாடு – தென்னமெரிக்க நாடுகளில் ஒன்றான உருகுவே …!!

பின்குறிப்பு –

காவிரிமைந்தன், நீங்கள் ‘ஜோஸ் முஜீகா’வைப் பற்றி எழுதுங்களேன் என்று அமெரிக்காவிலிருந்து வந்த மடல் ஒன்று தான் நான் இந்த இடுகையை எழுத அடிப்படையாக அமைந்தது.

டெல்லி ‘அர்விந்த் கெஜ்ரிவால்’ எவ்வளவு எளிமையான மனிதர் என்றெண்ணி வியந்து கொண்டிருக்கும் மக்களுக்கு ‘ஜோஸ் முஜூகா’வை அறிமுகம் செய்து வைக்க வேண்டுமென்று நானும் விரும்பினேன்.

இந்த ‘விமரிசனம்’ வலைத்தளத்தின் மூலம் நான் பெற்ற பல நல்ல நண்பர்களில் ஒருவரான, திரு மணி ராஜேந்திரன்(USA) அவர்களுடனான நட்புக்கு இந்த இடுகை காணிக்கை…

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

17 Responses to கெஜ்ரிவாலின் தாத்தாவுக்கு தாத்தா …!!

 1. rathnavelnatarajan சொல்கிறார்:

  உன்னதமான இந்த மனிதரின் பெயர் – ஜோஸ் முஜீகா. இவரை ஜனாதிபதியாக அடையக்
  கொடுத்து வைத்த நாடு – தென்னமெரிக்க நாடுகளில் ஒன்றான உருகுவே …!!
  மாமனிதர் வாழ்க. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு காவிரி மைந்தன்.

 2. GOPALASAMY சொல்கிறார்:

  thanks for the information, which we never knew. today there is one article in jeyamohan’s blog about the movements for corruption. good article.

 3. k. gopaalan சொல்கிறார்:

  இந்தியாவிற்கும் உருகுவேக்கும் உள்ள வித்தியாசம். அது மிகச்சிறிய நாடு.

  அங்கே எதிரிகளை அடையாளம் காணமுடியும். இந்தியாவில் அவர்கள் கூடவே இருப்பார்கள். இங்கே ஒரு வாதத்தை சுலபாக திசைதிருப்பிவிடலாம்.

  இதுபோன்ற எளிமையான கம்யூனிஸ்ட் தலைவர்கள் நம் நாட்டில் நிறையப் பேர் இருக்கிறார்கள்.

  மன்மோஹன்சிங் சர்வாதிகாரியாக இருந்திருந்தால் இதுபோன்றே சாதித்திருப்பார். என்ன செய்வது இந்தியா ஜனநாயக நாடு.

  கே. கோபாலன்

 4. nparamasivam1951 சொல்கிறார்:

  இன்று தான் பத்திரிக்கைகளில் வந்துள்ளது: கெஞ்சிரவால் தான் தனக்கு 5பெட்ரூம் உள்ள இரு வீடுகள்
  6/7, 7/7 என்று அடுத்தடுத்து உள்ளவற்றை கேட்டுள்ளார் என்று : இன்னும் 1 மாத்த்தில் சாயம் முழுக்க வெளுத்து விடும்.

 5. ASHOK சொல்கிறார்:

  இவரால் ஓட்டுக்கு 500,1000 கொடுக்க முடியுமா ?
  இவரால் மாமன் மச்சானுக்கு கவர்மெண்ட் டெண்டர் வாங்கி தர முடியுமா?
  இவரால் மகன் மற்றும் மகளுக்கு பதவி வாங்கி தரமுடியுமா?
  இவரால் மாநாட்டுக்கு வரும் கூட்டத்துக்கு
  குவாட்டர்,பிரியாணி வாங்கி தர முடியுமா?
  இவரால் கோடிகணக்கில் ஊழல் செய்ய முடியுமா, பங்கை தான் பிரிக்க தெரியுமா???

  என்னது முடியாத. அப்ப இவரு நம்ம ஊரு அரசியலுக்கு சரிபட்டு வர மாட்டார்.

  உருகுவே நாட்டு மக்களே, இவரை நீங்களே வைத்து கொள்ளுங்கள்.

 6. reader சொல்கிறார்:

  // ஜோஸ் முஜீகா//

  சரியான உச்சரிப்பு: ஹொசே முஹிக்கா

 7. reader சொல்கிறார்:

  நம்மூரிலும் CPI தலைவர் ஆர்,நல்லக்கண்ணு போன்றவர்கள் இருக்கிறார்களே!

 8. Thiruvengadam சொல்கிறார்:

  Nripen Chakraborty of Tripura was almost comparable with your personality.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   உண்மை தான்.இதில் ஜோதிபாசுவைக் கூடச் சேர்த்துக்
   கொள்ளலாம். பொதுவாகவே, நம் நாட்டிலும் சில
   கம்யூனிஸ்ட் தலைவர்கள் அப்படித்தான் இருந்திருக்கிறார்கள்/
   இருக்கிறார்கள்.

   காங்கிரசில் கூட – கக்கன், காமராஜ், லால்பகதூர்
   சாஸ்திரி போன்றவர்கள் இருந்தார்களே..!

   ஒரு வித்தியாசமாக, இவரை நம் மக்களுக்கு
   அறிமுகப்படுத்த விரும்பியே இதை எழுதினேன்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 9. Ganpat சொல்கிறார்:

  இந்தியாவின் பிரச்சினை …அதன் ஜனத்தொகை,இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வரும் பொது தேர்தல்கள்,உளுத்துப்போன குற்றவியல் சட்டங்கள்,95%க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள்.சுயநலம்,கயமை,தேசபக்தி அற்ற மீதி பேர்..போதுமா.!!!

 10. Ganpat சொல்கிறார்:

  சுயநலம்,கயமை,மிக்க தேசபக்தி அற்ற மீதி பேர்.

 11. புது வசந்தம் சொல்கிறார்:

  இவர் மக்களுக்காக பதவிக்கு வந்தவர்.
  இங்கே பதவிக்காக மக்களிடம் வருபவர்கள்.

 12. manimaran magizhini சொல்கிறார்:

  உன்மையிலேயே மிகுந்த வியப்பை அளிக்கின்றது புதிய தகவல் நல்ல தகவல் மிக்க நன்றி. அதே நேரம் அமெரிக்க நண்பருக்காக தாத்தாவின் தாத்தாவை குறிப்பிடும் நீங்கள் பேரப்பிள்ளைகளை அங்கிகரிக்க மறுப்பது போல் உள்ளது இக் கட்டுறையின் தலைப்பு. ஒரு வேளை இந்திய அல்லது தமிழக தாத்தாக்களை அடையாள படுத்திடவோ இன்றைய பேரர்கள் நாளைய தாத்தாக்களாய் வளர்ந்திடக்கூடாது என்பதாய் அமெரிக்காவின் திட்டமோ என எண்ணவும் தோன்றுகிறது. என்ன செயவது இக்கறைக்கு அக்கறை பச்சை.

 13. S. Shanmugam சொல்கிறார்:

  Hats off to Jose Mujikka and the Reporter

 14. visujjm சொல்கிறார்:

  He is the POOREST CM in India, but he donates his salary..

  Tripura Chief Minister Manik Sarkar can arguably be dubbed ‘the cleanest and poorest’ chief minister in the country with personal property, movable and immovable, valued at less than Rs 2.5 lakh.

  According to the affidavit submitted by the 64-year-old Sarkar during filing of nomination in Dhanpur constituency for the upcoming assembly elections, he had Rs 1,080 cash in hand and his bank balance stood at Rs 9,720.

  The Communist Party of India-Marxist leader is aiming for a fourth consecutive term in the northeastern state.

  கேரள முன்னாள் முதல்வர் இ.எம்.எஸ். நம்பூதரிபார்ட, மேற்கு வங்களா முன்னாள் முதல்வர் ஜோதிபாசு, இவர்கள் வரிசையில் இந்தியாவின் கடைக்கோடியில் இருக்கும் மிகச்சிறிய மாநிலமான திரிபுரா முதலமைச்சர் மாணிக்சர்க்கார்… அவரை பற்றி சில தகவல்கள்..

  “64 வயதான சர்க்காருக்கு முதல்வர் என்ற முறையில் மாத ஊதியமாக 9,200 ரூபாயும் அலவன்ஸாக 1,200 ரூபாயும் கிடைக்கிறது. அதை அப்ப டியே கட்சிக்குத் தந்துவிடு கிறார். கட்சி தரும் ஐயாயிரம் ரூபாயில் வாழ்க்கையை நடத் துகிறார். இவருக்கென்று சொந்தமாக வீடோ, நிலமோ கிடையாது. இவரது மனைவி பஞ்சலி பட்டாச்சார்ஜி மத் திய சமூக நலத்துறையில் பணியாற்றுகிறார். இவரது வருமானத்தில்தான் முதல மைச்சரின் குடும்பமே ஓடு கிறது. வேலைக்குச்செல்ல பஞ்சலி அரசு காரைக்கூட பயன் படுத்துவதில்லை. ரிக் ஷா வில்தான் போய் வரு கிறார். மாணிக் சர்க்கார் மட் டுமே அரசின் காரைப் பயன் படுத்துவாராம். குடும்பத்து டன் ஏதாவது ஒரு நிகழ்ச் சிக்குப் போவதாக இருந்தா லும் மனைவியை தனது காரில்
  ஏற்றாமல் ஆட்டோ வில் வரச்சொல்லி விடுவா ராம். ஒரு தையல் தொழிலாளி யின் மகனான இவர், தனது துணிகளைக்கூட தானே துவைத்துக்கொள்ளும் அள வுக்கு மிக எளிமையான மனி தர். இந்தத் தேர்தலில் அவ ரது தலைமையில் கட்சி அபார வெற்றிபெற்ற போதி லும் “இதற்கு நான் மட்டும் காரணமில்லை. கட்சியின் ஒட்டுமொத்த தொண்டர் களும்தான்” என்று எளி மையாகக் கூறியுள்ளார் “ஆக இவர் முட்டாள் தானே?.

  மேற்கண்ட மூன்று பேருக்கும் ஒரு ஒற்றுமையிருக்கிறது அவர்கள் எல்லோருமே மார்க்ஸிட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள். நம்ம தமிழ்நாட்டு மக்கள் இந்த எப்ப இப்படி ………………………. முதலைச்சரை தேர்தெடுக்கபாங்ளோ………….?

  • nparamasivam1951 சொல்கிறார்:

   சீத்தாராம் யெச்சூரி, மார்க்சிஸ்ட் தான். ஆனால் M.P. களுக்கு விமான பயணங்களில் சிறப்பு சலுகைகாக வாதாடுகிறார். கேரள விஜயன் அவர்களின் பாமாயில் இறக்குமதியில் அவரது கட்சியின் C.M. குறை காண்கிறார். பட்டாசாரியா, சோம்நாத் சாட்டர்ஜி, காரத் இவர்கள் எல்லாம் எப்படி? மிகவும் எளிமையா? அல்லது, CPMன் அரசியல் வரலாற்றில் “visujjm” குறிப்பிட்ட 3 பேர் மட்டுமே முதல்வர்கள்? பட்டாசாரியா, அச்சுதானந்தன் போல் மற்றவர் பற்றி? தமிழகத்தில் CPM முதல்வர் என்பது பற்றி நான் என்ன, கனவு கூட காண முடியாது. ஜோதிபாசு அவர்கள் PM ஆக வருவதை CPM ஏன் விரும்பவில்லை? பொலிட்பீரோ ஏன் அனுமதி மறுத்தது!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.