சிவகங்கையில் ஒரு “டெம்பரவரி” சந்நியாசம் ..!

elections 2014

“அரசியல் பணியிலிருந்து ஓய்வு: காந்திய வழியில்
மக்களுக்கு தொண்டாற்றப் போகிறேன்”: ப. சிதம்பரம்

(http://www.dinamani.com -செய்தி )

“கடந்த 30 ஆண்டுகளில் 8 தேர்தலைச்
சந்தித்துவிட்டேன்.

(ஆனால் -அத்தனை தேர்தல்களையும் சந்தித்தது
கூட்டணி பலத்துடன் தான் …!)
.
17 ஆண்டுகள் அமைச்சராக இருந்தேன். அதில்
சாதாரண ஜவுளித் துறையோ வேறு துறையோ
கொடுத்திருந்தால் அமைதியாக பணியாற்றி் இருக்க
முடியும், தந்ததோ நிதியும், உள்துறையும்தான்.
இதில் நாளொன்றுக்கு 18 மணி நேரம் பணியாற்ற
வேண்டிய நிலை ஏற்பட்டது.
.
(அதென்ன தந்ததோ …? வேறு துறை வேண்டுமென்று
கேட்டிருக்கலாமே ..வேண்டி, விரும்பி, ஆசைப்பட்டு
பெற்றுக்கொண்டது தானே …?)
.
நான் கந்துவட்டி வாங்கியதில்லை, கட்டப்பஞ்சாயத்து,
சாதிக்கலவரத்தில் ஈடுபட்டதில்லை, எம்மதமும்
சம்மதம்தான் என்ற கொள்கையில் பின்வாங்கியதில்லை,

(உண்மை தான். ஆனால்,இத்தாலியத் தலைமைக்காக,
தமிழினத்தை, தமிழகத்தை காவு கொடுத்ததுண்டு …)
பிறரிடம் சல்லிக்காசு கூட வாங்கியது கிடையாது..

(“Friend, father & philosopher of
black money” என்கிற தலைப்பில் வழக்கறிஞர்
ராம் ஜெத்மலானி sunday-guardian தளத்தில்
எழுதி இருக்கும் ஒரு கட்டுரையில் –
பல பழைய விஷயங்களையும் நினைவுபடுத்துகிறார்.
படிக்க விரும்புபவர்கள் பார்க்க –
http://www.sunday-
guardian.com/analysis/friend-father-a-
philosopher-of-black-money-is-chidambaram)

.
அடுத்த எட்டு பத்து ஆண்டுகள் வாழ்வதற்கு பெரிய பணம்
தேவையில்லை. எனக்கு 68 வயதாகிவிட்டது.எத்தனை
ஆண்டுகள் இனி உடல் வலிமையோடு சுற்றி வர முடியும் ?

மண்ணில் பிறந்தவர்கள் மண்ணுக்குத்தான் செல்ல
வேண்டும். மறு ஜென்மம் என்பதில் எல்லாம் எனக்கு
நம்பிக்கை கிடையாது.

(மனசாட்சி, பாவ, புண்ணியம் போன்றவற்றில்
நம்பிக்கை உண்டா ..? )

எனவே, என் உள்மனம் சொன்னபடி,
காந்திய வழியில் –

(அப்படியானால், இவ்வளவு நாட்களாக பயணம்
செய்தது ..?)
.
சொந்தத் தொகுதியில் தங்கி மக்களுக்கு பணியாற்றப்
போகிறேன்” – என்றார் அமைச்சர் ப. சிதம்பரம்.

(அடுத்து, பலமான கூட்டணியுடன்
மீண்டும் ஒரு தேர்தலை சந்திக்க வாய்ப்பு ஏற்படும்
வரையிலா …? )

—————————–

தமிழ் நாட்டில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி
அமைக்க யாரும் தயாராக இல்லை. குட்டி குட்டி
கட்சிகள் கூட காங்கிரசைக் கண்டவுடன்
தலை தெறிக்க ஓடுகின்றன.

கள நிலவரத்தை உணர்ந்து தான் –
காங்கிரஸின் மூத்த தலைவர்கள் -ஜி.கே.வாசன்,
தங்க்க்கபாலு, ஜெயந்திநடராஜன், ப.சிதம்பரம் –
அனைவரும் தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்து
விட்டார்கள்.

இதில் திரு. ப.சி. மட்டும் தனக்கு பதிலாக தன் வாரிசு
திரு.கார்த்தி சிதம்பரத்திற்கு அதே சிவகங்கை தொகுதிக்கு
‘சீட்’வாங்கிக் கொடுத்து விட்டார்.

தேர்தலில் போட்டியிட்டால் அவமானகரமான அளவிற்கு
தோல்வி நிச்சயம் என்பதால்,
“போர் துவங்குமுன்னரே – தோல்வியை ஒப்புக்கொண்டு
போர்க்களத்தை விட்டு ஓடி விட்டார்”
.
-என்கிற குற்றச்சாட்டிற்கு பதில் தான் மேலே திரு
ப.சி.அவர்கள் கூறி இருப்பது.

.
தேர்தலில் போட்டியிட்டால் தோல்வி நிச்சயம் என்பதை
தவிர வேறு பல கேள்விகளுக்கு பதில் சொல்ல
வேண்டியிருக்கும் என்பதும் ஒரு முக்கியமான
காரணமாக இருக்கும்.
.
நாடு சந்தித்துக் கொண்டிருக்கும்
மிக மோசமான பொருளாதார நிலை,
பண வீக்கம்,
ரூபாய் மதிப்பிழப்பு,
பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன்கள்,
கறுப்புப் பணம், என்கிற பொதுப் பிரச்சினைகளைத் தவிர –
.
2ஜி ஸ்பெக்ட்ரம், காமன்வெல்த் கேம்ஸ்,
மும்பை ஆதர்ஷ் அடுக்குமாடி கட்டிடம், ஹெலிகாப்டர்,
நிலக்கரி வகையறா, வகையறா ஊழல்கள்களைத் தவிர –
.
இலங்கையில் தமிழ் மக்களுக்கு,
இவரது ஒத்துழைப்புடன்,
இவர் முந்நிலையில் இழைக்கப்பட்ட கொடுமைகள் –
.
தமிழ் நாட்டு மக்களுக்கு மத்திய அரசால்
தொடர்ந்து இழைக்கப்படும் வஞ்சனைகள் –

காவிரி, முல்லைப்பெரியாறு,
ரேஷன் மண்ணெண்ணை -அரிசி குறைப்பு,
வரட்சி நிவாரணங்களில் புறக்கணிப்பு,
நிலக்கரி ஒதுக்கீடு -மின் பகிர்வில் வேண்டுமென்றே
இடைஞ்சல்கள்

.
ஒன்றா இரண்டா ..?
தன் கூட்டங்களுக்கு ஏன் 100 பேர் கூட வர மாட்டேன்
என்கிறார்கள் என்று –
மனசாட்சியை தொட்டுப்பார்த்துக் கொண்டால் போதும் –
நாம் பட்டியல் போட வேண்டிய அவசியமே இல்லை.
.
‘தோல்வியைக் கண்டு அஞ்சி தேர்தலில் போட்டியிட
மறுக்கவில்லை. உழைத்தது போதும் – எனக்கு ஓய்வு
தேவைப்படுகிறது’- என்கிறார்.
.
சரி அப்படியானால் வெளிப்படையாக
“அரசியலிலிருந்து ஓய்வு பெறுகிறேன்”
-என்று சொல்ல வேண்டியது தானே ?

.
மீண்டும் வசதிப்படும்போது உள்ளே வருவதற்கு தானே
இந்த “காந்தீய வழி”, “உள்ளூர் மக்களுக்குப் பணி”
என்கிற ‘எஸ்கேப் ரூட்’?
.
சுதர்சன நாச்சியப்பன்
உள்ளே நுழைந்து விட்டால்,தொகுதி மீண்டும் கிடைக்காதே
என்பதற்காகத் தானே – தோல்வி என்று தெரிந்திருந்தும்,
தந்தைக்கு பதில் தனயன்…?

.
ஒரு வேளை தொங்கு பாராளுமன்றம் ஏற்பட்டு,
குழப்பங்கள் காரணமாக, இரண்டு ஆண்டுகளிலேயே
மீண்டும் ஒரு தேர்தல் வந்தால் –
சந்நியாசத்திலிருந்து வெளி வந்து விடலாம் ..

எனவே, இது ‘டெம்பரவரி சந்நியாசம்’ தானே …?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

10 Responses to சிவகங்கையில் ஒரு “டெம்பரவரி” சந்நியாசம் ..!

 1. Rajagopalan Rangarajan சொல்கிறார்:

  சிவகங்கை என்ன இவர்கள் தாத்தா சொத்தா?
  பரம்பரையாக சொந்தம் கொண்டாடுவதற்கு ?
  டெம்பொரரி சந்நியாசியை பெர்மனண்ட் சந்நியாசி
  ஆக்குவது மக்களின் கடமையும் பொறுப்பும் ஆகும்.

 2. bandhu சொல்கிறார்:

  வேதாந்தா டிரஸ்ட்டில் அரசில் பதவி வகிக்காத சில வருடங்கள் சிதம்பரம் டைரக்டர் ஆக இருந்தார். இவர் பதவிக்கு வந்தவுடன் வேதாந்தா டிரஸ்ட் மிகப் பெரிய அளவில் ஒரிஸ்ஸாவில் மினெரல் அள்ளும் காண்ட்ராக்ட் முதல் பல விதத்தில் பலன் அனுபவிக்கிறார்கள். இவரெல்லாம் உத்தமர் போல பேசுகிறார்.

  இவர் பின்பற்றுவதாக சொல்லிக்கொள்ளும் காந்தியின் பொன் மொழியே இவரை நன்கு புரிந்து கொள்ள உதவி செய்கிறது..

  Education without a character is a menace. – Gandhi

 3. bandhu சொல்கிறார்:

  இன்னொன்று.. ‘சேவை’ வரியை பயன்படுத்தி நன்றாக நடந்து கொண்டிருக்கும் எல் ஐ சி யை ஒழித்துக் கட்ட சதி செய்திருக்கிறார் இவர். எட்டு திட்டங்கள் தவிர எல்லா எல் ஐ சி திட்டங்களும் நிறுத்தப் பட்டு விட்டன.. முதலில் டிசம்பர் 31 எல்லா திட்டத்தையும் நிறுத்தி வேறு பெயர்களில் ஜனவரி முதல் வாரத்தில் வெளியிடுவோம் என்று சொல்லிவிட்டு, இன்று வரை வெறும் எட்டு திட்டங்கள் மாத்திரமே வெளியிட்டிருக்கிறார்கள்.. இதனால், 2014 வருட புது வியாபாரம் போன வருட வியாபாரத்தை கணக்கிட்டால் வெறும் 10% கூட இருக்காது! பல வருடங்களாக எல் ஐ சி உடன் போட்டி போட முடியாத தனியார் நிறுவனங்கள் இப்போது கொழிக்கிறார்கள்.. எல் ஐ சி வருமானம் முழுவதும் அரசு திட்டங்களுக்கு கடனாக கொடுக்கப் படுகிறது. இப்போது தனியாருக்கு அந்த வருமானத்தை கொடுக்க வழி செய்திருக்கிறார் சிதம்பரம்..

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   உண்மை. இந்த இழப்புக்களை எல்லாம் யார்,
   எப்போது சரி செய்யப்போகிறார்கள் ?

   “பாவி”களுக்கு அடுத்த பிறவியில் தண்டனை
   என்கிற வழக்கத்தை மாற்றி, இந்தப் பிறவியிலேயே
   தண்டனை என்கிற பழக்கத்தை அந்த “இறைவன்”
   உண்டு பண்ணினாலொழிய இவர்கள் எல்லாம்
   நம் கண்ணெதிரே தண்டனை பெற சாத்தியமே இல்லை..

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 4. GOPALASAMY சொல்கிறார்:

  Nobody could see one good thing with Pasi. Still he did not give any valid reasin for the encroachment in Madras. No retirement. He should be punished for his misdeeds.

 5. Ganpat சொல்கிறார்:

  ப.சி பற்றிய பதிவு என்பதால் டெம்ப்ரரி க்கு கூட வரி போட்டு விட்டீர்களே!
  🙂 🙂

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   “நக்கீரர்” …!

   இந்த வலைத்தளம் ஓரளவாவது சிறப்பாக இருக்கிறது
   என்றால், அது இதைப்போன்ற பின்னூட்டங்களின்
   துணையால் தான்…!

   தமிழில் டெம்பர வரி என்று சொன்னால் தான்
   புரிந்து கொள்கிறார்கள் என்பதால் அதே பழகி விட்டது..!
   நான் தவறாக உச்சரித்ததை நயமாகச் சுட்டிக் காட்டியது
   உங்கள் பெருந்தன்மை. நன்றி கண்பத்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • Ganpat சொல்கிறார்:

    கா.மை.ஜி.
    உண்மையில் நீங்கள் தெரிந்தேதான் வரி சேர்த்துள்ளீர்கள் என்ற எண்ணத்தில்தான் என் பின்னூட்டம் அமைந்தது.ஆனால் அதை கூட நேர்மையாக எதிர்கொண்ட உங்கள் தூய உள்ளத்திற்கு என் மரியாதை கலந்த வணக்கம்.

 6. ravikumar சொல்கிறார்:

  none of congress & dmk nominees to be elected

 7. N.Paramasivam சொல்கிறார்:

  நீங்கள் எழுதிய துரோக வரிசையில் இவைகளையும் சேருங்கள். (1) தபால் துறை ஒழிப்பு. (2) பொது துறை வங்கிகள் ஒழிப்பு. (3) ஒரு நண்பர் இங்கு கூறியது போல், LIC ஒழிப்பு. (4) வேதாந்தா பற்றி கூறி உள்ளார்கள். சஹாரா, சஹாரா என்று ஒரு நிறுவனம். அதை குறிப்பிட வேண்டும் (5) கல்கத்தாவில் அவர் மனைவி ஒரு நிறுவனம் எங்கு பணம் போட வேண்டும் என ஆலோசனை சொல்ல 3 கோடி ரூபாய் ஆலோசனைக் கட்டணம் வசூலித்தது (6) ஆதாருக்கு போட்டியாக NPS ஆரம்பித்து
  290 கோடி வீண்,(7) தேவையே இன்றி, NIA ஆரம்பித்தது (8) ரூபாய் மதிப்பு குறைந்தது மூலம் திருப்பூரில் பல நிறுவனங்கள் மூட வழி வகுத்தது (9)கல்வி கடன்களுக்கு தனது மகன் மூலம் வங்கிகளுக்கு பரிந்துரை செய்வது எனும் பல பல சேர்க்க வேண்டும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.