“யாருக்கு ஓட்டு ?”இப்போது துக்ளக் ஆசிரியர்”சோ” ஓரளவு வெளிப்படையாக சொல்கிறார்…!

 

 

நரேந்திர மோடியும் வேண்டியவர்.
‘ஜெ’வும் வேண்டியவர்.
பாராளுமன்ற தேர்தலில் இரண்டு பேரும் தனித்தனியே
போட்டி போடும்போது, இரண்டு பேரையும் ஆதரிப்பவர்கள்,

இருவரில் யாருக்கு ஓட்டுப் போடுவது …?

modi and jj photo

ஜனவரி மாதம் நடந்த துக்ளக் ஆண்டுவிழா

கொண்டாட்டத்தில் பேசும்போது கூட
ஆசிரியர் “சோ” வால், இந்த கேள்விக்கு பதில் சொல்ல
முடியவில்லை; தான் தர்மசங்கடத்தில் இருப்பதாக
ஒப்புக்கொண்டார்.

இப்போது ஒரு தீர்மானத்திற்கு வந்து விட்டதாகத்
தெரிகிறது.பாஜக நிற்கும் தொகுதிகளில், பாஜகவிற்கும்,
பாஜக நிற்காத மீதி தொகுதிகளில் அதிமுக வுக்கும்

ஓட்டுப்போடலாம் ( அதாவது பாஜக வின் கூட்டணி
கட்சிகளை மறந்து விடலாம் ) என்று சொல்கிறார்
“சோ”. (அதாவது 10 தொகுதிகளில் பாஜக விற்கும்,
மீதி 29+1 தொகுதிகளில் அதிமுக வுக்கும் !)

இன்று வெளிவந்திருக்கும் துக்ளக் இதழில், ஒரு கேள்விக்கு
பதில் கூறும்போது இப்படி கூறுகிறார் சோ –

கேள்வி – தெளிவாகச் சொல்லுங்கள்.”உங்கள் வாக்கு
பாஜக கூட்டணிக்கா ? அதிமுக வுக்கா ?”

பதில் – “நான் தெளிவாகத்தானே சொல்லி வருகிறேன் –
குழப்பவில்லையே.மத்தியில் மோடி தலைமையில்
பாஜக ஆட்சி அமைய வேண்டும். ஒரு வேளை
பாஜக வினால், எதாவது ஒரு காரணத்தினால் ஆட்சி
அமைக்க முடியாமல் போனால், அப்போது அக்கட்சி
ஜெயலலிதா பிரதமர் ஆக ஆதரவு தர வேண்டும்.
இது தான் என்னுடைய நிலை”

-இது வரை சோ சொல்லி வந்தது இவ்வளவு வரை தான்.

இப்போது இன்னும் கொஞ்சம் சேர்த்திருக்கிறார் –

“இதற்கேற்ற மாதிரி ஓட்டுப் போட வேண்டும்.
காங்கிரஸ் அணிக்கோ, திமுக அணிக்கோ, இடதுசாரிகள்
அணிக்கோ ஓட்டுப்போடுவது, இதற்கேற்ற மாதிரி
இருக்காது.

மீதி இருப்பது பாஜக அணியும், அதிமுக அணியும் தான்.
இந்த இரண்டில் எதற்கு ஓட்டு அளித்தால், முதலில்
நான் சொன்ன மாதிரி ஆட்சி அமைய உதவியாக இருக்கும்
என்பது அந்தந்த தொகுதியின் நிலவரத்தை

பொறுத்தது…!”

அவர் நிலையில்- இதைவிட வெளிப்படையாக கூற
முடியாது தான்..!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to “யாருக்கு ஓட்டு ?”இப்போது துக்ளக் ஆசிரியர்”சோ” ஓரளவு வெளிப்படையாக சொல்கிறார்…!

 1. N.Paramasivam சொல்கிறார்:

  நல்ல வேளை. சரத் பவார் போல் கூறியது மாதிரி (காலையில் பா.ஜா.கா.விற்கும் பின் மையை அழித்து மாலையில் அ.தி.மு.க.விற்கும்) ஒட்டு போட, கூறவில்லையே. நாம் மகிழ்ச்சி அடைய வேண்டும்..

 2. D. Chandramouli சொல்கிறார்:

  On first reading of Cho’s statement, his argument seems sound enough. However, in case BJP, on its own strength (which is a distinct possibility), cannot form the government, it needs the supports of its allies. If like what Cho says is followed, how would the allies extend support when they, themselves, are not elected by the people. The only remedy could be that AIADMK gives its support to BJP but this cannot be taken for granted.

 3. GOPALASAMY சொல்கிறார்:

  Thukalq reasers are not followers of Cho. I think Cho is not having any influence over the voters of tamilnadu. What he told is his wishful thinking. But what i feel is, BJP alliance in Tamilnadu is not “homogeneous”. only MDMk is the reliable partner. If gets elected, what PMK will do and what DDMk will do, nobody knows. Vijayaganth is not a matured person. Politics is his business.
  There is no commander in BJP alliance. It may not get more than two or three seats.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.