ஸ்ரீலஸ்ரீ அழகிரி சுவாமிகள் -புதிய மதுரை மகா சந்நிதானம்…..!! (தேர்தல் வெற்றி ஸ்பெஷலிஸ்ட் ..)

azhagiri and vaiko

40,000 கோடி ரூபாய் சொத்து தமிழகத்தை
ஆட்டிப் படைக்கிறது இன்று.

அந்தக் காலத்தில் இருந்த சொல்வழக்கு,
நீதிமன்றங்களில் அதிகமாகப் புழங்கிய வார்த்தை –
“பிதுரார்ஜிதம்”, “சுயார்ஜிதம்”.

பிதுரார்ஜிதம் என்றால், பாட்டன் முப்பாட்டன்

காலத்திலிருந்தே வந்த பரம்பரை சொத்து.

சுயார்ஜிதம் என்றால், தானே உழைத்து
(அல்லது ஊரை ஏமாற்றி ) சம்பாதித்து,
சேர்த்திருக்கும் சொத்து.

பிதுரார்ஜிதம் என்றால், சட்டப்படி குடும்பத்தில் பிள்ளைகள்
பெண்கள் அனைவருக்கும் சம பங்கு உண்டு.

சுயார்ஜிதம் என்றால், சம்பாதித்து சேர்த்து
வைத்திருப்பவர் தன் விருப்பம்போல் யாருக்கு

வேண்டுமானலும், எவ்வளவு வேண்டுமானாலும்,
கொடுத்து விட்டு போகலாம்…!
யாரும் கேள்வி கேட்க முடியாது…!

இப்போது பிரச்சினை – கழகத்தின் 40,000 கோடி
ரூபாய் சொத்து. இது என் தந்தையின் சுயார்ஜிதம் தான் –
அவர் எனக்கு எழுதி வைத்து விட்டார் என்று

சொல்லிக்கொண்டு, தந்தை இருக்கும்போதே சொத்தை

ஆக்கிரமித்துக் கொண்டு விட்டார் தம்பி.

இல்லையில்லை –இந்த சொத்தில் எனக்கும் பங்கு உண்டு.
தந்தை இன்னும் போய் விடவில்லையே…
தந்தையை பலவந்தமாக தன் கட்டுப்பாட்டில்

வைத்திருக்கிறார் இளையவர். தந்தையையும் மீட்பேன்.
சொத்தையும் மீட்டு எடுத்துக் கொள்வேன் என்கிறார்
அண்ணன்.

தமிழ் நாட்டுக்கும், தமிழ் மக்களுக்கும்,
ஒருபாவமும் அறியாத ஈழத்தமிழர்களுக்கும் சேர்த்தே –
துரோகம் செய்த பாவத்திற்கு –

சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல்

அவதிப்பட்டுக் கொண்டு,
ஆனால் வெட்கம் சிறிதுமின்றி,
வெளியே மட்டும் வீம்பாகத் திரிகிறார் தந்தை.

இந்த குடும்பச் சண்டை இன்றில்லா விட்டாலும்
நாளையோ, மறுநாளோ – அதற்கடுத்தோ முடிவிற்கு
வரத்தான் போகிறது. என்ன- பேச்சு வார்த்தையில்
கொஞ்ச நாட்களாகும்- எல்லாரும் ஒத்துக்
கொள்கிறாப்போல் பாகப்பிரிவினை (settlement)
நடைபெற வேண்டும். பின்னர், தன்னால்
“கண்கள் பனிக்கும் – இதயம் இனிக்கும்”.
(அது வரை எல்லாருக்கும் – பைத்தியம் பிடிக்கும் …!)

அது நடக்கும் வரையில் ஆளுக்கு ஆள் முஷ்டியைத் தூக்கிக்

கொண்டு அலைவார்கள்.
ஹேய் – நான் யார் தெரியுமா ?
என் பலம் தெரியுமா ?
எவ்வளவு மாவட்டங்கள் என் கையில் தெரியுமா ?

மன்மோஹன் சிங் சொன்னாஹ,
ராஜ்நாத் சிங் சொன்னாஹ,
ரஜ்னிகாந்த் சொன்னாஹ – என்று புஜபலமும்,
இதர பலங்களையும் காட்டுவார்கள்.

இது எதுவுமே எனக்கு வியப்பாகத் தெரியவில்லை.
இந்தக் குடும்பம் இப்படித்தான் இருக்கும்…
இது முதல் தடவை இல்லை –
இது தமிழ்நாட்டின் சாபக்கேடு..!

ஆனால் – அரசியல்வாதிகளில் நான் மதிக்கும்
மிகச்சிலரில் ஒருவர்,
ஒரு நல்ல மனிதர், சுயமரியாதை உள்ளவர் –
என்று நினைத்திருந்த வைகோ கூட
இந்த அளவிற்கு தாழ்ந்து விட்டாரே.

வீட்டிற்குப் போய்,
போட்டோவிற்காக கட்டிப்பிடித்துக் கொண்டு,
“ஏர்போர்ட்டில் பார்த்தேன்.
வீட்டிற்கு அழைத்தார்.
அமெரிக்காவிலிருந்து அண்ணனுக்குப் பிடிக்குமே என்று

“செங்கிஸ்கான்” சிடி வாங்கி வந்தேன்.
அதைக்கொடுத்து விட்டுப்போக வந்தேன்” என்றும் –

அண்ணன் தேர்தலில் உங்களுக்கு ஆதரவு தருவதாக
சொன்னாரா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு,

“இல்லையென்று சொல்லவில்லை – அப்படியானால்
ஆம் என்று தானே அர்த்தம்”
-என்று அர்த்த அனர்த்தங்களை
வியாக்கியானம் செய்யும் அளவிற்கும் வைகோ போவார்
என்று சத்தியமாக நான் எதிர்பார்க்கவே இல்லை.

கட்சித் தலைமையிலிருந்து கண்டனம் எழுந்ததும்,
மறு நாளே “வைகோ வை நான் கூப்பிடவில்லை –
அவராகத் தான் வந்தார்” என்று அண்ணன் சொன்னது..

பாஜகவின் ஹெச் ராஜா போனது எனக்கு வியப்பாக

இல்லை. காங்கிரஸ் வேட்பாளர்கள் போய் ஆசி பெற்றதும்
வியப்பாக இல்லை. ” பால்ய நண்பர் என்றால்,
என்னுடன் என்ன கோலி விளையாடினாரா” என்று கேட்ட
விஜய்காந்த் சென்று பார்த்தால் கூட எனக்கு வியப்பு
தோன்றாது. ஆனால் – வைகோ….?

மதுரை ‘தினகரன்’ செய்தியாளர்கள் 3 பேர்
எரித்து துடிதுடிக்க கொல்லப்பட்டது –

இந்தியா முழுவதும் பேசப்பட்ட
“திருமங்கலம் தேர்தல் பார்முலா” –

காலையில் வாக்கிங் சென்ற தா.கி. கொலை
செய்யப்பட்டது –

எதுவுமே வைகோ நினைவிற்கு வரவில்லையா ?

சே – தேர்தல் என்று வந்து விட்டால்
வைகோ உட்பட இங்கு யாருக்கும் வெட்கம்,
மானம், சூடு, சொரணை மட்டுமல்ல –
மனசாட்சியும் காணாமல் போய் விடுகிறதே …

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to ஸ்ரீலஸ்ரீ அழகிரி சுவாமிகள் -புதிய மதுரை மகா சந்நிதானம்…..!! (தேர்தல் வெற்றி ஸ்பெஷலிஸ்ட் ..)

 1. பாலு மகேந்திரன் சொல்கிறார்:

  கட்டு மரத்தைக் கோபப்படுத்த வைகோ இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி இருக்கலாம்!

 2. GOPALASAMY சொல்கிறார்:

  Alagiri was the trump card for karuna. After Alagiri’s expulsion, Karuna lost the game to Stalin.
  Now Alagiri became joker. He allows everybody to meet him to irritate Stalin. But as you told, there will be a settlement. Before you wrote about Alamgir Aurangseb. There is one more example of brother’s rivalary. Sundarapandiyan invited Maalik kafur to fight against his “half” brother veerapandiyan. In this connection i want to say that Maalik kafur was a great human soul and I beg people not to come for argument about maalik.

 3. bandhu சொல்கிறார்:

  வைகோ நல்லவராக இருக்கலாம்.. ஆனால் எது வெற்றி தரும், எது தனது குறிக்கோள் என்று தெரியாமலேயே இருக்கிறார். அவர் கேட்ட காலம்… கருணாநிதிக்குப் பிறகு கட்சி கலகலத்துவிடும்.. அப்போது வரை கட்டுக் கோப்பாக இருக்கலாம் என்றால்… அது வரை கட்சியைக் காப்பாற்றுவது பெரிய காரியம்… அவருக்கு பதவி வரும்போது அதை பிடித்துக் கொள்ளாமல் தன் கட்சியினருக்கு வாங்கித்தருவது ஒரு நல்லவருக்கு அடையாளமாக இருக்கலாம்.. வல்லவருக்கு அல்ல. எப்போது திமுக விடம் கூட்டணி வைத்தாரோ.. அப்போதே அவர் கட்சியின் அர்த்தம் தொலைந்தது.. He missed his chances! It is too late for him to come back..

 4. புது வசந்தம் சொல்கிறார்:

  அரசியல் சுயநலவா(வியா)திகள்,சந்தர்பவா(வியா)திகள். நீங்களும் நாணயத்தின் ஒரு பக்கத்தைத்தான் பார்த்து கொண்டு இருப்பதாக தெரிகிறது.
  http://news.vikatan.com/article.php?module=news&aid=26290
  இதுவும் சுயநலம்தானே ?

 5. எழில் சொல்கிறார்:

  வைகோ ஏற்கனவே திமுக, அதிமுக என இருவருடனும் கூட்டு வைத்து விட்டதோடு ஒப்பிடுகையில் எனக்கு இது ஒன்றும் பெரிதாக படவில்லை.

  ஆனால் தமிழகத்தில் இருந்து பாராளுமன்றந்த்தில் ஒரு குரல் ஒலிக்க வேண்டும் என்றால் எனது முதல் தேர்வு வைகோ தான்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் எழில்,

   -என்னுடைய விருப்பமும் அதுவே ..!
   நான் எழுதியது, வைகோ கூடவா ..
   என்கிற ஒரு ஆதங்கத்தினால் தான்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.