இலங்கை தீர்மானம் -யாரெடுத்த முடிவு …? தெருவுக்கு வர வேண்டுமே என்கிற அச்சமா..?

 

unhcr-meeting
இலங்கையில் மனித உரிமை மீறல் குறித்து
சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென்று
நேற்று ஐ.நா.சபை கூட்டத்தில் தீர்மானம் கொண்டு
வரப்பட்டபோது,
இந்திய அதை ஆதரிக்காததோடு மட்டுமல்லாமல்,
எதிர்த்து வெளிநடப்பும் செய்திருக்கிறது.

தீர்மானத்தை இந்தியா எதிர்க்கும் என்கிற விஷயத்தை,
ஓட்டெடுப்பு நடக்கும் வரையில் -மத்திய அரசு
அதிபத்திரமாக,    ரகசியமாக,   வைத்திருந்திருக்கிறது.

சென்ற வருடம் இத்தகைய கூட்டம் நிகழ்ந்தபோது,
நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இந்தியாவின்
வாசகங்களை, வெளியுறவுத் துறை சம்பந்தப்பட்ட
பொறுப்பில்  இல்லாத போதும் கூட, தான் தான் விசேஷ
அக்கரை எடுத்துக்கொண்டு தயாரித்துக் கொடுத்ததாக
பெருமையுடன் கூறி  இருந்தார் சிவகங்கை அமைச்சர்.

இப்போது, இந்த தடவை,
ஐ.நா.கூட்டத்தில், ஓட்டெடுப்பின்போது –
எதிர்த்து வெளிநடப்பு செய்வது என்கிற முடிவை, இந்திய
அரசின் சார்பில் யார் எடுத்தது ?
வெளியுறவுத் துறை அமைச்சரா ?
பிரதமரா ?
காங்கிரஸ் கட்சியின் தலைவியா ?

இந்த தடவை மட்டும், தமிழ்நாடும் சம்பந்தப்பட்டுள்ள
இவ்வளவு முக்கியமான விஷயத்தில் சிவகங்கை
அமைச்சரை கலந்தாலோசிக்காமல் அவர்களே முடிவெடுத்து
விட்டார்களா ? நம்புகிற மாதிரி இல்லையே ..!

எல்லாம் முடிந்த பிறகு, இப்போது தொலைக்காட்சி
பேட்டியில் –
“ஐ.நா. சபையில் கொண்டுவரப்பட்ட இலங்கை
எதிர் தீர்மானத்தை இந்தியா ஆதரித்து இருக்க வேண்டும்”
என்று சொல்வதன் பொருள் என்ன ?

இந்திய அரசு முடிவு எதையும் எடுக்கும் முன் –

வெளியுறவுத்துறை அமைச்சரிடமோ,
பிரதமரிடமோ,
காங்கிரஸ் தலைவியிடமோ –
இந்த கருத்தை அவர் தெரிவித்தாரா – இல்லையா ?

அப்படி தெரிவித்தும் –
வேறு மாதிரி அவர்கள் முடிவெடுத்திருந்தால்,
மத்திய அமைச்சர் என்கிற முறையில்,
இவருக்கு கூட்டுப் பொறுப்பு உண்டு.
எனவே “ஆதரித்திருக்க வேண்டும்” என்று
இப்போது கூறுவது மரபுக்கு எதிரானது.

பேச வேண்டிய நேரத்தில்,
பேச வேண்டிய இடத்தில் பேசாமல்,
எல்லாம் முடிந்தபிறகு –இப்போது தொலைக்காட்சியில்
ஆதரித்திருக்க வேண்டும்
என்று கருத்து கூறுவது,

வாரக்கடைசியில் –
தமிழ்நாட்டில் தெருவில் இறங்கி –
ஓட்டுக் கேட்க வர வேண்டுமே

 மக்களை நேரில் சந்திக்க வேண்டுமே – என்கிற 
அச்சத்தில் அல்லாமல் –
வேறென்னவாக இருக்க முடியும் …?

 

 

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

9 Responses to இலங்கை தீர்மானம் -யாரெடுத்த முடிவு …? தெருவுக்கு வர வேண்டுமே என்கிற அச்சமா..?

 1. Ganpat சொல்கிறார்:

  இவர் ஒட்டு கேட்கவந்தால்,ஆப்பு கட்சியின் சின்னத்தால் அடித்து,,தி.மு.க கொடி நிறத்தில் உடல் முழுதும் புள்ளிகள் குத்தி,அமெரிக்க democratic கட்சியின் சின்னத்தில் ஏற்றி ஊர்வலம் விடவேண்டும்.

 2. Rajagopalan Rangarajan சொல்கிறார்:

  வழி மொழிகிறேன்.

 3. Jana Seelan சொல்கிறார்:

  தமிழகத்திலிருந்து மட்டுமல்ல இந்தியாவிலிருந்தும் துடைத்து எறியப்பட வேண்டிய கட்சி காங்கிரஸ். அதை இம் முறையாவது இந்திய மக்கள் செய்வார்களா? குறைந்த பட்சம் தமிழக உறவுகளாவது?

 4. maasianna சொல்கிறார்:

  I am agree with Ganpat

 5. Ganpat சொல்கிறார்:

  நண்பர்களுக்கு நன்றி..
  இந்திய முழுவதும் நமோ நமோ என்ற குரல்கள் ஒலிப்பது போல..
  நம் மாநிலத்தில் “கபோ காபோ” என்ற குரல்கள் ஒலித்து இந்த இந்திய/தமிழ் எதிரிகளை வேரோடு அழிக்கவேண்டும்.
  வணக்கம்.
  பி.கு:”கழுதைக்கு போட்டாலும் காங்கிரசிற்கு போடாதீர்”

 6. GOPALASAMY சொல்கிறார்:

  Pasi told that
  1) Tamilnadu political parties were not having unanimous opinion about voting.
  2) The decision for voting might be taken in officers’ level. (what a contradiction?)
  3) If DMk announced earlier about pardoning congress’ sins, things (electrol alliances/prospects) would have changed.
  A totally shameless person.
  .

  • Ganpat சொல்கிறார்:

   மிக சரியாக சொன்னீர்கள் நண்பர்.கோபாலசாமி!
   நாம் எதாவது அயல் நாட்டில் பயணிக்கும்போது எங்காவது தமிழ் குரல் கேட்டால் உடலும் உள்ளமும் புத்துணர்ச்சி பெற்று மனம் மகிழ்வதை கண்டுள்ளோம்.நம் அண்டை நாடு அதுவும் அழகாக சுத்தமாக தமிழ் பேசும் நம் சகோதர சகோதரிகள்.எந்த காரணமும் இன்றி கொத்து கொத்தாக கொலை கற்பழிப்பு செய்யப்படுவதை பார்த்து மனம் பதைக்காமல் இருந்த பாவிகள் அல்லவா இவர்கள்.வட இந்திய அமைச்சர்களை கூட சகித்துக்கொள்வேன்.ஆனால் சுய லாபத்திற்காக அமைதி காத்த ப.சி.,கருணா,போன்றோர்களை மன்னிக்கவே முடியாது.அதே போல ஹிந்து ராம், சோ ராமசாமி போன்ற நெஞ்சில் ஈரமற்ற மாக்களை என்ன செய்தாலும் தகும்.
   இன்னும் ஒன்று..இந்த தேர்தலில் தப்பித்தவறி நம் மாநிலத்தில் காங்.அல்லது தி.மு.க வெற்றி பெற்றால் நான் தமிழன் என்று சொல்லிக்கொள்ளக்கூட வெட்கப்படுவேன்.
   “க.போ,கா.போ”

   • எழில் சொல்கிறார்:

    வழி மொழிகிறேன் நண்பரே… அதுவும் கட்டுமரம் சில நாட்களுக்கு முன் “காங்கிரஸ்சை மனித்து ஆதரவளிக்க தயார்” என்று கூறிய பின்பும் திமுக ஜெயிச்சால் அதை போல தமிழர்க்கு தலை குனிவு வேறொன்றுமில்லை.

 7. ravikumar சொல்கிறார்:

  Cong & DMK to be abolished this time for the sake of Backstabbing Tamilian

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.