இந்தோனேஷியாவில் ஒரு அற்புதம்…! (பகுதி-2) (கடல்களைக் கடந்து -4)

பொதுவாக நமக்கு கடல் கடந்த நாடுகளில் வசிக்கும்
தமிழர் என்பதைப் பற்றி ஏற்கெனவே ஒரு உருவகம்
இருக்கிறது.

150 ஆண்டுகளுக்கு முன்னர் பிரிட்டிஷ் ஆட்சியின்போது,
கரும்புத் தோட்டங்களிலும், தேயிலைத்தோட்டங்களிலும்
பணி புரிவதற்காக வெவ்வேறு காலனி நாடுகளுக்கு

கொத்தடிமைகளாகச் சென்ற பிழைப்பற்ற தமிழ் மக்கள்
ஒரு பக்கமும்,

பிரிட்டிஷ் காலத்திலேயே சிறுவணிகம் பொருட்டு பர்மா,

மலேசியா போன்ற நாடுகளுக்குச் சென்ற வணிகர்
பெருமக்கள் ஒரு பக்கமும்,

கடந்த 30 ஆண்டுகளில், இலங்கையிலிருந்து
புலம் பெயர்ந்து உலகெங்கும் பல நாடுகளில் குடியேறி
இருக்கும் ஈழத்தமிழர்கள் ஒரு பக்கமும்,

20-30 ஆண்டுகளுக்கு முன்னர் வேலை வேண்டி
(டிரைவர், ஒட்டகம் மேய்ப்பர், கட்டிடத்தொழிலாளிகள் )
அரபு நாடுகளுக்குச் சென்ற தமிழர்கள் ஒரு பக்கமும்,

கடந்த 20 ஆண்டுகளில் உயர்படிப்பு படித்து,
மேற்படிப்பிற்காகவும், நல்ல வேலையின் பொருட்டும்,
வெளிநாடுகளுக்கு (பெரும்பாலும் அமெரிக்காவிற்கு )
சென்ற தமிழர்கள் ஒரு பக்கமும் –

ஆக இவ்வகைத் தமிழர்கள் மட்டுமே நம் உருவகத்தில்
இருக்கிறார்கள்.

ஆனால் இவர்கள் அனைவருக்கும் முன்னர் –

ஐரோப்பியர்கள், வாணிபத்தில் ஈடுபட எண்ணி,
கடல் கடந்து நாடுகளைத் தேடி வரத் துவங்கும் முன்னரே –

சுமார் 1800 ஆண்டுகளுக்கும் முன்னர்,
சிலப்பதிகார காலத்திற்கும் முன்னரே –
மேற்கே – ரோம், கிரேக்கம், எகிப்து
போன்ற மத்தியதரைக்கடல் நாடுகளுக்கும் –

கிழக்கே – ஜாவா, சுமத்ரா, கம்போடியா, தாய்லாந்து
நாடுகளுடனும், அவற்றையும் தாண்டி சீனா வரையில்
சென்றும் –

வர்த்தகத்தில் ஈடுபட்ட பெரும் வணிகர் கூட்டம்
தமிழகத்தில் இருந்தது. ‘திரைகடல் ஓடியும்
திரவியம் தேடு‘ என்பது அவர்களது தாரக மந்திரமாக
இருந்தது. பெரிய பெரிய நாவாய்களில்
கூட்டம் கூட்டமாகச் சென்று தமிழர்கள் இந்நாட்டு
மக்களுடன் பண்டமாற்று முறையில் வியாபாரம் செய்து
வந்தனர். அந்த அந்த காலகட்டத்தில் இருந்த தமிழ்
மன்னர்களின் ஆதரவும், பாதுகாப்பும் அவர்களுக்கு
இருந்தது.

indo-inscriptions-1

துரதிருஷ்டவசமாக, ஐரோப்பியர்களைப் போல்,
நமக்கு ஆண்டுவாரியாக,
தொடர்ச்சியாக தமிழ் மன்னர்களின் சரித்திரம்,

செயல்பாடுகள் – பதிவு செய்யப்படாததால்,
வெள்ளைக்காரர் சொல்லியதைத் தான் நாம் நமது சரித்திரம்
என்று இன்னமும் நம்பி வருகிறோம்.

நம்முடைய உண்மையான சரித்திரம் மறைக்கப்பட்டு விட்டது
அல்லது மறக்கப்பட்டு விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

தொடர்ச்சியாக 400 ஆண்டுகள்  ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திலும். அதற்கு முன்னர் சுமார் 600 ஆண்டுகள் ஆப்கனிலிருந்து வந்த மொகலாய படையெடுப்பாளர்களின் ஆட்சி அதிகாரத்தின் கீழும் வாழ்ந்த நாம் நமதுதிறமைகளையும், பெருமைகளையும் சுத்தமாக மறந்துவிட்டோம். நம் முன்னோடிகளைப் பற்றி யாராவதுஎடுத்துச்சொன்னால் கூட அதை நம்மாலேயே நம்ப முடியவில்லை.

16ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியர்கள் இந்தியாவிற்கு
கடல்வழியே வாணிபம் செய்ய வந்து, பின்னர்
நமது ஒற்றுமையின்மை காரணமாக, நம்மையே
அடிமைப்படுத்தி, ஆண்ட விஷயத்தை வியந்து பார்க்கும்
நாம் –

அதற்கும் 1000 ஆண்டுகள் முன்னதாகவே, மிகப்பெரிய
கடற்படையை உருவாக்கி, நிர்வகித்து, கடல்கடந்த
நாடுகளில் தமது அதிகாரத்தை நிலைநிறுத்திய நம்
தமிழ் மன்னர்களை அறவே மறந்து விட்டோம்.

விஷயத்திற்கு வருவோம் –

மேற்கே மத்திய தரைக்கடல் நாடுகளுடன் நடந்து வந்த வணிகத்திற்கு எந்தவித இடையூறுகளும் இன்றி சிறப்பாகப் போய்க்கொண்டிருந்த வேளையில் –

rajendra-chozan-2

கிழக்கே சீனம் செல்லும் பாதையில் உள்ள நாடுகளான –
காம்போஜம்(கம்போடியா),
ஸ்ரீவிஜயம்(சுமத்ரா),
சாவகம்(ஜாவா),
சீயம்-மாபப்பாளம்(தாய்லாந்து),
கடாரம்(மலேசியா),
நக்காவரம்(அந்தமான்,நிக்கோபார் தீவுகள்),

போன்ற நாடுகளில் – வணிகம் செய்யச் சென்ற
தமிழர்கள், இந்த இடைப்பட்ட நாடுகளில், ஆங்காங்கே சிறு சிறு அளவில் தமிழர் குடியமைப்புகளை ஏற்படுத்திக்கொண்டு அங்கு வர்த்தக மையங்களை நிர்வகித்துக் கொண்டிருந்தனர்.

பல்லவ அரசர்களின் காலத்திலும், பின்னர் சோழ
மன்னர்களின் காலத்திலும் –(கி.பி. 6ஆம் நூற்றாண்டிலிருந்து 12ஆம் நூற்றாண்டு வரையான காலம்),

இத்தகைய வணிகங்களுக்கு –
இடைப்பட்ட நாடுகளில்,
இடையூறு ஏற்பட்டபோதெல்லாம்,
நமது மன்னர்கள் பெரும் கடற்படையுடன் சென்று,
எதிர்ப்பை ஒடுக்கிவிட்டு,
தமது அதிகாரத்தை நிலை நாட்டி வந்தனர்.

இந்த விதங்களில் தான், கிழக்காசிய நாடுகளான –

காம்போஜம்(கம்போடியா), ஸ்ரீவிஜயம்(சுமத்ரா),
சாவகம்(ஜாவா), சீயம்-மாபப்பாளம்(தாய்லாந்து),
கடாரம்(மலேசியா) – ஆகியவற்றில் தமிழ் மன்னர்களின்
ஆட்சி உருவானது. முதலில் பல்லவர்களும், பின்னர்
சோழர்களும் இங்கு ஆட்சிப் பொறுப்பில் இருந்தனர்.

இந்தோனேஷியா என்கிற பெயரே 18ஆம் நூற்றாண்டில்
இந்த இடத்தை ஆண்ட டச்சுக்காரர்களால் வைக்கப்பட்ட பெயர் தான்.

கி.பி.6ஆம் நூற்றாண்டு முதல் 12ஆம் நூற்றாண்டு வரை-
ஸ்ரீவிஜயம், சாவகம் என்று அழைக்கப்பட்ட -ஜாவா,
சுமத்ரா பகுதிகளை ஆண்ட தமிழ் மன்னர்களில் சிலர் –
ஜெயநேசன் –
தர்மசேது –
சமரதுங்கன் –
பாலபுத்திரன் –
பல்லவர் காலத்தில், தமிழோடு சம்ஸ்கிருதமும்
சிறப்பிடம் பெற்றிருந்ததால், இங்கு பல பெயர்கள்
தமிழிலும், சம்ஸ்கிருதத்திலும் அமைந்தன.
எழுத்தும், படிப்பும் அதிகம் பேர் அறியாத அந்த காலத்தில் –
ராமாயணமும், மகாபாரதமும் கதைவடிவிலும்,
பாடல் வடிவத்திலும், நாட்டிய, நாடக வடிவத்திலும்
அமைக்கப்பட்டு -இங்கு வாழ்ந்த மக்களின் வாழ்க்கையில்
ஒன்றாகக் கலந்து விட்டன.

perambanan in night lights

scene from ramayana - lanka thaganam

இந்த காலகட்டத்தில், இங்கு தமிழும், உள்ளூர் மொழிகளும்
நடைமுறையில் இருந்து வந்தது. பெரும்பாலும் இந்து மதமும், ஓரளவு பௌத்தமும் கடைபிடிக்கப்பட்டன.

magishasura marthani and vinayaka

13ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு, அண்டை நாடுகளின் ஆதிக்கம், படையெடுப்பு காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக தமிழர் ஆட்சி பலவீனமடைந்து மறைந்தே விட்டது. அக்கம்பக்கம் இருந்த நாடுகளின்செல்வாக்கினாலும், மத்திய கிழக்கிலிருந்து வந்த வணிகர்களின் மூலமும், கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளத் துவங்கினார்கள்.

சுமார் மூன்று நூற்றாண்டுகளில் அநேகமாக, இஸ்லாம்
பெரும்பாலான மக்களின் மதமாக மாறி விட்டது.
இதில் வியக்கத்தக்க விஷயம் என்னவென்றால் –
இஸ்லாம் எந்தவிதத்திலும் இந்த நாட்டில்  திணிக்கப்படவில்லை. அது மிக இயல்பாகவே நடந்தேறி விட்டது.

16ஆம் நூற்றாண்டில் டச்சுக்காரர்களின் ஆதிக்கத்தில்
வந்த பிறகு இந்தோனேஷியா என்று அழைக்கப்பட்ட
இந்த நாடு, ஆட்சியில் இருந்தவர்களின் செல்வாக்கு
காரணமாக கிறிஸ்தவத்தையும் ஏற்கத்துவங்கியது.
(இன்று கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை சுமார் 12 % )

(இடுகை நீண்டு விட்டது – நாளை மீண்டும் வருகிறேன்.)

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to இந்தோனேஷியாவில் ஒரு அற்புதம்…! (பகுதி-2) (கடல்களைக் கடந்து -4)

 1. N.Rathna Vel சொல்கிறார்:

  அருமையான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
  நன்றி திரு காவிரி மைந்தன்.

 2. rathnavelnatarajan சொல்கிறார்:

  அருமையான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
  நன்றி திரு காவிரி மைந்தன்.

  2014-04-01 15:07 GMT+05:30 “வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்” :

  > vimarisanam – kavirimainthan posted: “பொதுவாக நமக்கு கடல் கடந்த
  > நாடுகளில் வசிக்கும் தமிழர் என்பதைப் பற்றி ஏற்கெனவே ஒரு உருவகம் இருக்கிறது.
  > 150 ஆண்டுகளுக்கு முன்னர் பிரிட்டிஷ் ஆட்சியின்போது, கரும்புத்
  > தோட்டங்களிலும், தேயிலைத்தோட்டங்களிலும் பணி புரிவதற்காக வெவ்வேறு காலனி
  > நாடுகளுக்கு “

 3. Pandian சொல்கிறார்:

  உண்மைதான். கிழக்காசியாவில் வியாபாரம் மூலம் குறிப்பிடத்தக்க இடத்தை நாம் பெற்றிருக்கிறோம். ஆனால் அவை முற்றுமலும் ஆவணப்படுத்தவில்லை.

  பண்பாடு, மதமாற்றம் என்று அனைத்தையும் சொன்ன நீங்கள் ஊழலையும் சொல்லவேண்டும். நம்மூரைப்போல இந்தோனேசியாவிலும் ஊழல் நிறைய! ஊழலில்லாத ஜனநாயகம் ஏது 🙂

 4. Ram சொல்கிறார்:

  Nice Info sir 🙂

 5. vinod சொல்கிறார்:

  Marvellous to know the history.. otherwise also it is the Mughal first then British & Europeans who wanted more wealth came sailing here.. Our history b4 was never recorded and what English said we read as history which is not true..

 6. KulanayagamRajaculeswara சொல்கிறார்:

  Atputham

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.