இந்தோனேஷியாவில் ஒரு அற்புதம்..(பகுதி-3) (கடல்களைக் கடந்து -4)

1000 ஆண்டுகளுக்கு முன்னர், இந்தோனேஷியாவில்தமிழர் ஆட்சி நடைபெற்று வந்தது என்பதற்கு ஏகப்பட்ட  சான்றுகள் உள்ளன.


ஐம்பெரும் தமிழ்க் காப்பியங்களுள் ஒன்றான மணிமேகலையில் சாவகம்(ஜாவா) பற்றிய செய்திகள் இடம் பெற்றிருக்கின்றன.

பூமிசந்திரன், புண்ணியராசன் போன்ற அந்நாட்டு அரசர்கள் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழகத்திற்கும்சாவகத்திற்கும் நீர்வழிப் போக்குவரத்துகள் நிகழ்ந்துள்ளதையும் மணிமேகலை கூறுகிறது.


சுமத்திராவில் 11ஆம் நூற்றாண்டில் பொது மக்கள் பயன்படுத்திய பத்திரங்களில் (Public Documents) தமிழ்மொழி பயன்படுத்தப்பட்டது என வரலாற்று ஆய்வாளர்கள் வுல்ட்ஸ் (Hultz) என் சே.,ஏ.நீலகண்ட சாஸ்திரி ஆகியோர் கூறுகின்றனர்.

—-
பதினேழாம் நூற்றாண்டில் இந்தோனேசியாவை ஆண்ட டச்சுக்காரர்கள் தமிழ் ஆவணங்களையும் பதிவேடுகளையும் வைத்திருந்தார்கள் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன.

—-

13ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு தாய்த் தமிழகத்துடனான
நிர்வாகத் தொடர்பு அற்றுப்போய் விட்டதால், அங்கிருந்த
தமிழர்கள் – அடுத்த 6-7 நூற்றாண்டுகளில், உள்ளூர்
மக்களுடன் ஒன்றாக சங்கமித்து விட்டனர்.

பெரும்பாலான இந்தோனேஷிய மக்கள் இஸ்லாம் மதத்தை
தழுவி விட்டாலும், அவர்கள் ரத்தத்தில் ஊறிய
பழைய பண்பாடு இன்றும் தொடர்கிறது.
எனவே தான் ராமாயணம், மகாபாரதம், தமிழ்,
சம்ஸ்கிருதக் கலப்புடைய பெயர்கள் ஆகியவை இன்றும்
தொடர்கின்றன.

மொத்த மக்கள் தொகையில் 1.5 சதவீதமே இந்துக்கள்
இருந்தாலும், அவர்களில் பெரும்பாலானவர்கள்
இந்தோனேஷியாவின் “பாலி”த்தீவில் இருக்கிறார்கள்.

பாலித்தீவின் மக்கள் தொகையான, சுமார் 35 லட்சம்
பேர்களில் 85 சதவீதம் பேர் இந்துக்கள் ..!
அங்கு ஏகப்பட்ட இந்து கோவில்கள் இருக்கின்றன.
பெரும்பாலானவர்கள், பழைய தமிழ்க்குடிமக்களின்
வழித்தோன்றல்களே..! பாலித்தீவில் – பிறப்பு,
இறப்பு, திருமணம் போன்ற சடங்குகள் எல்லாவற்றிலும்
தமிழ்ப் பண்பாடு பிரதிபலிக்கிறது.பாலித்தீவு சென்று வந்த
பயணி ஒருவர் “இன்றைய பாலித்தீவில் 500 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த தமிழ் நாட்டைக் காணலாம்” என்கிறார்.

இன்று உலகில் மிகச்சிறந்த tourist spot -களில்
ஒன்றாக இருக்கிறது -பாலித்தீவு.
35 லட்சம் ஜனத்தொகையுள்ள பாலித்தீவுக்கு ஆண்டுக்கு
சராசரியாக 10 லட்சம் டூரிஸ்டுகள் வருகின்றனராம் ..!
(பாலித்தீவின் சில விசேஷ காட்சிகளை புகைப்பட வடிவில்
கடைசியில் இணைத்திருக்கிறேன்.)

இந்தோனேஷியா இன்றைய மக்களுக்கு ஒரு மிகச்சிறந்த
எடுத்துக்காட்டாக இருக்கிறது… எந்த விதத்தில் ..?

85 சதவீதம் இஸ்லாமியர்களைக் கொண்ட ஒரு நாட்டில்,
ரூபாய் நோட்டில் பிள்ளையார் படம், விமான சர்வீஸ்களுக்கு சம்ஸ்கிருத பெயர்கள், முக்கிய இடங்களில் மகாபாரத கதாபாத்திரங்களுக்கு சிலைகள், ஷாப்பிங் மாலுக்கு “ராமாயண” பெயர்,

தொலைக்காட்சிகளில் ராமாயண நெடுந்தொடர், ராமாயணம், மகாபாரதகதைகளைக் கருவாகக் கொண்டு – இசை, நடனம், நாடகங்கள்,  பொம்மலாட்டங்கள் …

இவற்றை எல்லாம்”மத சகிப்புத்தன்மை” என்கிற
வரையரைக்குள் கட்டுப்படுத்துவது
எனக்கு என்னவோ பொருத்தமாகத் தெரியவில்லை.

அவர்களுக்கு பண்பாடு, கலாச்சாரம், மொழி, மதம் ஆகியவற்றை பிரித்துப் பார்க்கவும், ஒவ்வொன்றையும் மதிக்கவும் தெரிகிறது.

மதம் மாறி விட்டோம் என்பதற்காக
தாங்கள் 1000 ஆண்டுகளாகப் பழகிவந்த பழைய பண்பாட்டையும், மொழியையும், இசை, நாடக, வடிவங்களையும், பெயர்களையும் கைவிட அவர்கள் தயாராக இல்லை.

இந்த இடுகையின் மூலமாக
நான் சொல்ல வந்தது –

இந்தோனேஷியாவில் இருக்கும் இத்தகைய அணுகுமுறை
மற்ற நாடுகளில் இருக்கிறதா ?
இந்தியாவில் இருக்கிறதா…? – என்று கேட்டால்,

நம் அன்றாட வாழ்க்கையில் –
இந்துவாகட்டும், இஸ்லாமியராகட்டும்,
கிறிஸ்தவராகட்டும் -வேறு எந்த மதத்தினராகட்டும் –
மக்களிடையே பொதுவாக எந்த விரோதமும் இல்லை.

நாம் எல்லாரும் ஒன்றாகச் சேர்ந்து தான் வாழ்கிறோம்.
ஒன்றாகத்தான் தொழில் செய்கிறோம்.
சகஜமாகத்தான் பழகுகிறோம்.

நான் இருக்கும் அடுக்குமாடி குடித்தனத்தில்
மாடி வீட்டில் ஒரு கிறிஸ்தவரும், பக்கத்து வீட்டில்
ஒரு இஸ்லாமியரும் இருக்கிறார்கள்.
எங்களுக்குள், எங்கள் குடும்பங்களுக்குள் – அற்புதமான
நட்புறவு இருக்கிறது. எங்கள் மூவரின் வீடுகளிலும் –
தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்மஸ் ஆகிய எல்லா
பண்டிகை நாட்களிலும் அனைவருக்குள்ளும் இனிப்புகளும்,
பணியாரங்களும் பரிமாறிக்கொள்கிறோம்.

எங்கள் வீடு என்றில்லை –அநேகமாக இதே சூழ்நிலை தான்
இந்த நாடு முழுவதும்..!

ஆனால், இந்த சூழ்நிலையைக் கெடுப்பது யார் ?

தரம் தாழ்ந்த சுயநல அரசியல்வாதிகளும்,
சில மதவெறியர்களும்,
எதிலும் காசு பார்க்க எண்ணும் மீடியாக்களும் தான்.

அவர்கள் பிழைப்பு நடக்கவேண்டும்
என்பதற்காக, சிறு சிறு சம்பவங்களைக் கூட ஊதிப் பெரிதாக்குவதிலேயே குறியாக இருக்கின்றனர்.

பிணந்தின்னிக் கழுகுகளாக எங்கே மோதல் நடக்கும் என்று தேடித்தேடி அலைகின்றனர்.

உலகில் எந்த மதமும் தீயதை போதிப்பதில்லை.

அனைத்து மதங்களும் மனித சமுதாயத்திற்கு
தேவையான, நல்ல விஷயங்களை சொல்லத் தான்
உருவாயின.

எத்தனை மதங்கள் இருந்தாலும்,
எத்தனை கடவுள்களின் பெயரைச் சொன்னாலும் –
அவற்றின் லட்சியம் –குறிக்கோள் ஒன்றே தான்.

எத்தனை நதிகள் இருந்தாலும், அவை அனைத்தும்
இறுதியில் சென்று சேரும் இடம் கடல் தானே ?

மதங்கள் எத்தனை இருந்தாலும், அவை
அனைத்தும் படைத்தவன் என்னும் ஒரு சக்தியையே
நோக்கித் தானே செல்கின்றன ?

எந்த பெயரைச் சொல்லி அழைத்தால் என்ன ?
எந்த மொழியில் அழைத்தாலென்ன ?
படைத்தவனுக்கு புரியாமலா போய் விடும் ?

அவரவர் நம்பிக்கை அவரவருக்கு.
மற்றவர்களுக்குத் தொல்லை ஏற்படாத வகையில்,
அவரவர் நம்பிக்கையின்படி வாழ்வதில் என்ன தவறு ?

மத நம்பிக்கைக்கும், மத வெறிக்கும் உள்ள
வித்தியாசம் ஒரு சிலருக்குப் புரியாததும்,
இந்த மோதல்களுக்கு ஒரு முக்கிய காரணம்.

மதவெறியர்களையும்,
மதத்தை வைத்து பயன்பெற முயலும் அரசியல்வாதிகளையும், பரபரப்பு செய்திகளை வைத்து பிழைப்பு நடத்தும் மீடியாக்களையும்-

ஒதுக்கி வைக்க பழகிக்கொண்டு விட்டால் –
இந்தோனேஷியா என்ன – அதைவிட அற்புதமான
ஒரு தேசத்தை இங்கு உருவாக்கலாம்.

பி.கு.
இந்தோனேஷியாவில் முன்பு இருந்த
அல்லது தற்போது இருக்கும் தமிழர்கள் யாராவது பின்னூட்டம் தந்தால் உதவியாக இருக்கும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தேன்.

அதை ஏற்று, சில உபயோகமான தகவல்களுடன் வந்த பின்னூட்டங்கள் சிலவற்றை கீழே தொகுத்து தந்திருக்கிறேன்.

அந்த நண்பர்களுக்கு நம் அனைவரின் சார்பாகவும் நன்றி தெரிவிக்கிறேன்.

Mr.D.Chandramouli –

Names like Santhi, Surya, Purnama, Pujo, Gatot, Prita and the like are very common here. “Dirgahayu” is used to mean long life, used along with the nation’s anniversary. ‘Graha’ for building is another word that we can come across in many places. The influence of Sanskrit, particularly in names, is deep rooted across Indonesia. ‘Pandava Ratha’ structures (small) can still be seen on the mountains of Central Java. Some marriage customs are similar to ours.

Indonesians are very friendly, and they smile even to strangers. I believe that Javanese culture is a good blend of Indian, Islamic and Dutch cultures and practices. We, Indians, celebrate all festivals without any hindrance. Indian movies are very popular. Shah Rukh Khan is a household name here, thanks to the movie, ‘Kuch Kuch Hota Hai’ (The song is even used in aerobic classes for the nice beats!). Previous generations were familiar with Amitabh and Hema Malini.

While Indonesians are amused by our movie scenes (“Why the hero and the heroine should run around the trees?” is a question that I could never satisfactorily answer), they love the story lines with strong family backgrounds, and of course, the melodious songs. Thousands of Indian expats come and just stay for decades here. Perhaps, for them, India would continue to be the mother country while Indonesia becoming the father country! Fyi, I have never come across any taxi/auto (called Bajai here, after Bajaj brand) strike or even a strike by ‘Ojek’ (motor cycle drivers. Unannounced power cuts are almost nil – at times, we are pleasantly surprised that even announced power cuts don’t materialise!

———–

Mr.Kiri –

I worked in Surabaya, Indonesia few years back. One of my colleague’s name is: Andy Karthika. He is a Muslim. I asked him the meaning of “Karthika” in his name. He told me that it means star.

————————————-

இயற்கை கொஞ்சும் “பாலித்தீவின்” சில காட்சிகள் …

 

bali-1

bali-2

Bali 3

bali-4

bali-5

bali-6 bali-7 bali-8

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to இந்தோனேஷியாவில் ஒரு அற்புதம்..(பகுதி-3) (கடல்களைக் கடந்து -4)

 1. rathnavelnatarajan சொல்கிறார்:

  இந்தோனேஷியாவில் ஒரு அற்புதம்..(பகுதி-3) (கடல்களைக் கடந்து -4)
  திரு காவிரி மைந்தன் அவர்களின் அருமையான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
  நன்றி திரு காவிரி மைந்தன்.

  2014-04-02 14:59 GMT+05:30 “வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்” :

  > vimarisanam – kavirimainthan posted: “1000 ஆண்டுகளுக்கு முன்னர்,
  > இந்தோனேஷியாவில்தமிழர் ஆட்சி நடைபெற்று வந்தது என்பதற்கு ஏகப்பட்ட சான்றுகள்
  > உள்ளன. — ஐம்பெரும் தமிழ்க் காப்பியங்களுள் ஒன்றான மணிமேகலையில்
  > சாவகம்(ஜாவா) பற்றிய செய்திகள் இடம் பெற்றிருக்கின்றன. பூமிசந்திரன்,
  > புண்ணியராசன் ப”

 2. Pandian சொல்கிறார்:

  அருமை

 3. புது வசந்தம் சொல்கிறார்:

  நல்ல பதிவு, அருமை.

 4. Rajagopalan Rangarajan சொல்கிறார்:

  Dear Mr.Kavirimainthan,

  What you are doing is really a great service to the society.
  This is another masterpiece in this website.
  I wish these articles get greater attention and wider circulation.
  Why not you please write in widely circulated journals ?
  Very many thanks for this article in particular.

 5. M Nithil சொல்கிறார்:

  I know one Indonesian who work here in Saudi. His name is Sampath. I wonder how the Indonesians have a Sanskrit name. Now I got the answer after reading your post.

  This posit is really a master piece.

  Thanks,

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   Mr.Rajagopalan Rangarajan,
   Mr.M.Nithil and
   puthu vasantham –

   Thanks a lot my dear friends.
   Such recognitions – make me
   work more with renewed energy.

   With all best wishes,
   Kavirimainthan

 6. KulanayagamRajaculeswara சொல்கிறார்:

  Nanru. Thodaravum.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.