“ஞாநி”க்கு ஒரு “அஞ்ஞானி”யின் கேள்வி – ” அய்யா – எத்தனை பேர் கிளம்பி இருக்கிறீர்கள்”…?

aam aadmi gnani

போன மாதம் (மார்ச் 5ந்தேதி )
“நண்பர் “ஞாநி”அவர்களுக்கு ஒரு திறந்த மடல் ….”

என்கிற தலைப்பில், தேர்தலில் போட்டியிடுவது என்கிற
அவரது முடிவு குறித்தும், ஆம் ஆத்மி கட்சி பற்றியும்,
இடுகை ஒன்று இதே தளத்தில் வந்திருந்தது.

அதில் ஞாநி அவர்களிடம் –
பல நியாயமான கேள்விகளுக்கு விளக்கம் கேட்டிருந்தேன்.
இன்று வரை, அவரிடமிருந்து எந்தக் கேள்விக்கும் ,
அவரது எந்த தளத்திலும் பதில் ஏதும் கிடைக்கவில்லை.

நான் கத்துக்குட்டி எழுத்தாளன் தான்-
என்னை எல்லாம் மதித்து பதில் எழுதத்தேவை
இல்லை என்று அவர் கருதி இருக்கலாம்.

ஆனால் நான் எழுப்பிய கேள்விகள் எனக்கானவை
அல்ல.பொது நலனுக்கான கேள்விகள்.
எப்போது அவர் ஒரு பொது மனிதனாகி விட்டாரோ –
அப்போது இவற்றிற்கெல்லாம் விளக்கம் அளிக்க வேண்டிய
கடமை அவருக்கு இருக்கிறது.

சரி – நம் வலைத்தளத்தை எல்லாம் பார்க்க
அவருக்கு சவுகரியப்படவில்லையோ என்னவோ என்று –
அவரது முகநூலுக்கே சென்று, அங்கேயே அத்தனை
கேள்விகளையும் பதிவு செய்து,
இப்போது அவர் ஒரு அரசியல்வாதியாகி விட்டதால்,
விளக்கம் கூற வேண்டிய கடமை அவருக்கு இருக்கிறது
என்பதையும் நினைவுபடுத்தி,அவரது விளக்கங்களை
வேண்டியிருந்தேன்.

மனிதர் கண்டுகொள்ளவே இல்லை.
எப்படி கேட்டும்
விளக்கம் அளிக்க மறுப்பதால்,
அவர் ஒரு அரசியல்வாதி என்கிற வகையில் –
இனி அவரைச் சாடுவதில் எனக்கு எந்தவித
தயக்கமும் இருக்க வேண்டியதில்லை என்கிற நியாயமான
முடிவோடு இந்த இடுகையை எழுதுகிறேன்.

இதில் என் சொந்த விருப்பு, வெறுப்புகள் எதுவுமில்லை.
பொது வாழ்வில் -அவர் செய்தது, செய்வது சரி இல்லை
என்று நான் கருதுகிறேன். அதனால் இந்த இடுகை..

————

ஆம் ஆத்மி கட்சியினராலேயே 47 நாட்களில்
அல்பாயுசாக படுகொலை செய்யப்பட்ட டெல்லி அரசின்
முக்கிய அங்கமான கெஜ்ரிவால் குழுவினர்
சம்பந்தப்பட்ட பல விவரங்களை மேற்கண்ட
இடுகையிலேயே எழுதி இருந்தேன்.

எத்தனை பேர் இப்படிக் கிளம்பி இருக்கிறீர்கள் என்பது
தான் இந்த இடுகையின் தலைப்பு ..!

எப்படி கிளம்பி இருக்கிறார்கள் …?

ஆள் ஆளுக்கு தொண்டு நிறுவனங்களை (என்.ஜி.ஓ.)
உருவாக்கி வைத்துக் கொண்டு, வெளிநாடுகளிலிருந்து
(முக்கியமாக அமெரிக்காவிலிருந்து) கோடி கோடியாகப்
பணத்தைப் பெற்று உருப்படியாகக் கணக்கு
காட்டாமல் ஏப்பம் விட்ட மலைவிழுங்கி மகாதேவன்களின்
கூட்டணியாக இருக்கிறது ஆப் கட்சி —

கேஜ்ரிவால் நடத்தும் பல தொண்டு நிறுவனங்களில் ஒன்று,
Public Cause Research Foundation.
அன்னா ஹஜாரேயின் மேற்பார்வையில் தொடங்கிய,
ஊழலுக்கு எதிராக இந்தியா (India Against
Corruption -IAC) என்ற அமைப்பிற்கு
வந்த சுமார் 70 லட்சம் ரூபாயை, அர்விந்த் கேஜ்ரிவால்,
தன் சொந்த தொண்டு நிறுவனத்திற்கு திருப்பி விட்டுள்ளார்.

இன்று வரை அதற்கு சரியான கணக்கு
கொடுக்கப்படவில்லை.

கேஜ்ரிவால் நடத்தும் தொண்டு நிறுவனங்களில்
இன்னொன்று – கபீர். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை
மையப்படுத்தி இயங்கும் இந்த நிறுவனம், அமெரிக்காவைச்
சேர்ந்த போர்டு பவுன்டேஷனிடம் இருந்து இரண்டு முறை
நிதிபெற்றுள்ளது. 2005-ம் ஆண்டு 1,72,000 டாலரும்,
2008-ம் ஆண்டு 1,97,000 டாலரும் ‘கபீர்’
நிறுவனத்திற்காக பெற்றுள்ளார் கெஜ்ரிவால்.
இதை அவரும் ஒப்புக்கொண்டுள்ளார்.

இதை பழைய கதையென்று சமாளிக்க முடியாது –
ஏனென்றால் – நடப்பில் –
2014-ம் ஆண்டுக்கும் நிதியுதவி கோரி கேஜ்ரிவாலின்
‘கபீர்’ என்.ஜி.ஓ. விண்ணப்பித்துள்ளது.
நாங்களும் நிதி தர இசைந்துள்ளோம்’ என்று
போர்டு பவுன்டேஷனின் இந்தியப் பிரிவின் பிரதிநிதி
ஸ்டீவன் சோல்நிக் உறுதிப்படுத்தியுள்ளார்.

கெஜ்ரிவால் எதைச் சொல்லி
இந்த நிதியைப் பெற்றிருக்கிறார் -?

முட்டாள்கள் நிறைந்த நாடு இந்தியா. எனவே இங்கு
“தகவல் பெறும் உரிமை” (Right to Information)
என்கிற ஒன்று இருக்கிற விவகாரத்தை, மக்களிடம்
பரவலாகக் கொண்டு செல்ல வேண்டும். அதற்கு நீங்கள்
நிதி உதவி செய்ய வேண்டுமென்று சொல்லி…!!

இதற்கு பெயர் சமூகத் தொண்டா ?
பணம் வாங்கிக்கொண்டு, அந்த நிறுவனம் சொல்வதை
செய்வது பொதுத் தொண்டா ?

எனக்கு இவர்கள் பின்னணியைப் பற்றிய நம்பகமான
தகவல் ஒன்று டெல்லியிலிருந்து கிடைத்தது.
கெஜ்ரிவால் கும்பலில் உள்ள ஒருவர் தண்ணீர் மயக்கத்தில்,
உள் விவகாரங்களைப்பற்றி பெருமையாகப் பேசும்போது
வெளியான விஷயம்.

கெஜ்ரிவால், மணீஷ் சிசோதியா, கோபால் ராய்,
சோம்நாத் பாரதி, குமார் விஸ்வாஸ் ஆகியோர் அன்னா
ஹஜாரேயின் India Against Corruption சார்பில்
நிகழ்ந்த டெல்லி போராட்டங்களின்போது ஒன்று
சேர்ந்தவர்கள் என்று பொதுவாக எல்லாரும் நினைத்துக்
கொண்டிருக்கிறோம். ஆனால், உண்மையில்,
இவர்கள் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக,
ஆளுக்கு ஒரு என்.ஜி.ஓ.வைத்துக்கொள்ளத் துவங்கிய
போதிலிருந்தே நெருங்கிய பழக்கமாம்.

பலமுறை இவர்கள் ஒன்றுகூடிப் பேசி,
பல திட்டங்களை வகுத்திருக்கிறார்கள்.
ஒரு குழுவாக இயங்கத் துவங்கி, டெல்லியில்,
இந்த நாட்டின் உச்சபட்ச அதிகாரத்தை
கைப்பற்ற திட்டம் போட்டிருக்கிறார்கள். புதிதாக
அரசியல் கட்சி துவங்கினாலோ, இருக்கும் கட்சிகளில்
சேர்ந்தால் இது நடக்காது என்பதால், திட்டம் போட்டு,
அதுவரை மஹாராஷ்டிரா ரலேகான் சித்தியில் இருந்த
அன்னா ஹஜாரேயை அணுகி, அவரை முன்னணியில்
வைத்து, அவரது இமேஜை பயன்படுத்தி,
-இந்தியா முழுவதும் நடுத்தர வர்க்கத்து மக்களுக்கு
மத்திய அரசின் மீது இருந்த கோபத்தை பயன்படுத்திக்
கொண்டு India Against Corruption இயக்கத்தை
துவங்கி இருக்கிறார்கள்.

அந்த இயக்கத்தைத் துவங்கும் போதே,
இறுதி கட்டத்தில், தேர்தல் சமயத்தில்,
அதை அப்படியே அரசியல் கட்சியாக
மாற்றுவது தான் அவர்களது ஒரிஜினல் திட்டம்.
இதில் கெஜ்ரிவால் கொஞ்சம் அவசரப்பட்டு, டெல்லி
மாநில அரசு தேர்தலிலேயே தங்கள் திட்டத்தை
செயல்படுத்திப் பார்க்க விரும்பியதால், அவர்களது
ஒரிஜினல் பாதை மாறி விட்டது. அன்ன ஹஜாரேயும்
அவர்கள் பிடியை விட்டு வெளியேறி விட்டார்.
திட்டம் போட்டு, சூழ்ச்சிகள் செய்து, இந்த நாட்டின்
உச்சபட்ச அதிகாரத்தை கைப்பற்ற நினைக்கும்
ஒரு குழுவினரின் கட்டுப்பாட்டில் உள்ளது தான் ‘ஆப்’.

கேஜ்ரிவால், ‘பரிவர்த்தன்’ என்ற மற்றொரு தொண்டு
நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். அதற்கும் அமெரிக்க
வள்ளல் தான் ஆதரவு.

ஆம் ஆத்மியின் மும்பை தெற்கு தொகுதி வேட்பாளர்
மீரா சன்யால் – அவர் பங்கிற்கு, ‘பிரதான்’ என்கிற
தொண்டு நிறுவனத்தை வளர்க்கிறார். அதற்கும்
அமெரிக்காவின் போர்டு பவுண்டேசன் பெருமளவு
தீனி போடுகிறது.

அடுத்து ஆம் ஆத்மியில் ஐக்கியமாகியுள்ள குஜராத்தின்
மல்லிகா சாராபாய் என்கிற பிரபல நாட்டியக் கலைஞர்
வளர்க்கும் நிறுவனம் ‘தர்பனா’ (Darpana).
இதற்கும் தீனி போடுவது அதே போர்டு பவுண்டேசன்
தான்.

மகா சத்தியசந்தனாகவும், மகாத்மா விதுரர் போலவும்
காட்சியளிக்கும், தாடிவாலா யோகேந்திர யாதவ் –
தன் பங்கிற்கு வளர்க்கும் நிறுவனத்திற்கும் தீனி போடுவது
இதே போர்டு பவுண்டேசன் தான்.

ஞாநி அவர்களின் உடனடித் தலைவரும்,
(அதாவது immediate boss)
ஆம் ஆத்மி கட்சியின் தமிழ்நாட்டு ஒருங்கிணைப்பாளர்
எனப்படுபவருமான திருமதி கிறிஸ்டினா சாமி மற்றும்
அவரது கணவர் திரு ஆரோக்கியசாமி …
ஆகியோர் இணைந்து மிரட்டும் (sorry நடத்தும்)
தொண்டு நிறுவனங்கள் –

அரெட்ஸ் (AREDS -Association of Rural
Education and Development Services),
மற்றும் ஸ்வாதி (SWATE – Society for Women in
Action for Total Empowerment).

பெயர்களைக் கேட்டாலே இந்த தொண்டு நிறுவனங்களின்
லட்சணமும் லட்சியமும் தெரிகிறதல்லவா …?
இந்த நிறுவனங்களுக்கு, பிரான்சிலிருந்தும்,
பெல்ஜியத்திலிருந்தும் “வளர்ப்பு நிதி” கிடைக்கிறது.

India Against Corruption இயக்கம் துவங்கியபோது
சென்னையில் தீவிரமாகச் செயல்பட்ட யாரும் இப்போது
ஆப்’பில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

“ஆப்” நாயகர்களைப் பற்றி,எனக்கே இவ்வளவு
விவரங்கள் தெரிந்திருக்கும்போது, சகலமும் அறிந்த
ஞாநி அவர்களுக்கு இந்த பின்னணி எல்லாம் தெரியாமலா
இருந்திருக்கும் ..? இத்தனையையும் தெரிந்து கொண்டு
தான் அவரும் அங்கே போய்ச்சேர்ந்திருக்கிறார்…

இத்தகையோரின் வரிசையில் தூய்மையான
நம் கதாநாயகர் எப்படி சேர்ந்தார் என்று பார்த்தால் –
அவருக்கும் ‘கூத்துப்பட்டரை’ மூலம் பூர்வஜன்மத்தில்(!)
இதே வாசனை இருப்பது தெரிய வருகிறது..!

இது ஞாநியின் ஆம் ஆத்மி கட்சியின் பின்னணி –
இது ஒருபக்கம் இருக்கட்டும் …

மேலே போகும் முன்னர் –

ஞாநி வெளியிட்டிருக்கும் மேற்கண்ட புகைப்படத்தில்
துடைப்பமும் கையுமாக ஞாநி நிற்பதே
மகா கேவலமாக இருக்கிறது. இதைவிட கேவலமான
முறையில் யாராலும் விளம்பரம் தேட முடியாதென்றே
நினைக்கிறேன்.

டெல்லி மக்கள் வேண்டுமானால், துடைப்பத்தை
தலையில் வைத்து கொண்டாடலாம். ஆனால்,
தமிழ்நாட்டைப் பொருத்த வரை மக்கள் இதை வைக்க
வேண்டிய இடத்தில் தான் வைக்க விரும்புவர் –
இது நம் பண்பாடு.

விரைவில் ஆம் ஆத்மி கட்சியினரின் நிஜ உருவம்
எல்லாருக்கும் தெரியவரும்போது,
மக்கள் அவர் கையில் வைத்திருப்பதையே பிடுங்கி
“பயன்படுத்த”
வாய்ப்பு இருப்பதால், உடனடியாக
துடைப்பத்தை தூர எரிவதே ஞாநிக்கு நல்லது –
என்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்…

—————-

ஞாநி தேர்தலில் நிற்பது பற்றி –

முதல் கேள்வி ஞாநி எதற்காக தேர்தலில் நிற்கிறார்…?
அவருக்கான, வெளியில் சொல்லிக்கொள்ள முடியாத
காரணங்கள் பல இருக்கலாம்.

ஆனால் ஆப் கட்சியால் வெளியில் சொல்லப்பட்ட காரணம் –
ஊழல் வேட்பாளர்கள் எங்கு போட்டி போட்டாலும்,
அவர்களை எதிர்த்து ஆம் ஆத்மி தன் வேட்பாளரை
நிறுத்தும்- என்பது தான்.

தமிழ் நாட்டில் இப்படி புகழ்பெற்ற வேட்பாளர்கள்
யார் யார் ? அவர்கள் எங்கே நிற்கிறார்கள்..?

திருவாளர் ராஜா – ஊட்டியில்.
திருவாளர் தயாநிதி மாறன் – மத்திய சென்னையில்.
(திருமதி கனிமொழி – ராஜ்யசபை உறுப்பினர் என்பதால்
இந்த பட்டியலில் சேர மாட்டார்…!)

எனவே நியாயமாக ஞாநி எங்கே நின்றிருக்க வேண்டும் ?
ஊட்டியில் அல்லது மத்திய சென்னையில்.

ஆனால் ஊட்டி குளிர் ஒத்துக் கொள்ளாது என்பதாலும்
(ஞாநி -ராஜாவைக் கண்டெல்லாம்
அஞ்சுபவர் அல்லவே …?)
ஊட்டி தனி தொகுதி என்பதாலும்,
ஞாநி மத்திய சென்னையில் போட்டி போட்டால்,
அவரது நியாயத்தை ஓரளவு ஏற்றுக் கொள்ளலாம்.

ஆனால் – ஞாநி எங்கே போட்டி போடுகிறார் …?
திருவாளர் தயாநிதி மாறனை எதிர்த்து –
டெல்லி பாராளுமன்றத்திற்கு அல்ல …

“ஆலந்தூர்”-தமிழ் நாடு சட்ட மன்ற தொகுதியில்…!
அதுவும் யாரை எதிர்த்து ..?

 

sasi perumal

Gandhian gets support from actor Sivakumar_0_0

லேடஸ்டாக
பிப்ரவரி-மார்ச்சில் “மதுக்கடைகளை” (டாஸ்மாக்)
மூட வேண்டும் என்று வலியுறுத்தி 32 நாட்கள்
அன்னந்தண்ணி இல்லாமல் உண்ணாவிரதம் இருந்த
காந்தீயவாதி திருவாளர் சசி பெருமாள்
அவர்களை எதிர்த்து ….!!

(இடுகை – தொடர்கிறது.. )

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

11 Responses to “ஞாநி”க்கு ஒரு “அஞ்ஞானி”யின் கேள்வி – ” அய்யா – எத்தனை பேர் கிளம்பி இருக்கிறீர்கள்”…?

 1. GOPALASAMY சொல்கிறார்:

  Kejri vaal is not a honest man.
  Throughout his tenure he worked only in delhi. With whose support?
  He took two years leave with salary. He broke the conditions of the “bond” he undertook with govt. He left out the job. He made drama while repaying the amount after inordinate delay.
  He requested two bungalows as CM. But when Times Now briought out the matter, AAPPU, boycotted Times Now.
  AAPPU is supporting khap panchayat.
  Why he accepted congress support to become CM? There is no satisfactory answer.
  Like a Tv show, by SMS, he took the decision!!
  Eventhough he knows Delhi police under central govt, unnecessarily he went for dharna.
  Eventhough he knows, without Lt Gov approval he can not submiy a bill, he did it.
  How he expected opposition parties will support unconstitutional methods?
  To get support from Hindus, he took bath in ganges and put sandal in his forehead.
  i could not imagine what he would be ready to do, if he wants to get other religions support!!
  During Delhi elections, he met a controversial religious leader for support.
  Ak vaal declared as Ex Cm, he could meet anybody without appointment.
  All these might be tip of iceberg. If somebody ssays Ak vaal is criminal, we can not oppose it.
  thank god, except banglaore, nobody believes him in south.
  regarding Gnani,
  dear kv, you are running one althu falthu blog. Gnani is directly writing letters to big leaders like karuna, jaya .. that too from big magazines. It is inferor for him to reply people like you. He is like sun. we are like !!!

 2. nparamasivam1951 சொல்கிறார்:

  Ford Foundation பற்றி ஒன்றும் தெரியவில்லையே. இது பற்றி ஒரு பதிவு எழுதினால் நன்றாக இருக்கும். ஏன்னெனில், Ford Foundation என்பது, எதிர்காலத்தில் East India Company போல் ஆகி விட வாய்ப்பு உள்ளதோ என அச்சம்.

 3. saamaaniyan சொல்கிறார்:

  ஆம் ஆத்மியின் உண்மை முகத்தை காட்ட முயலும் நல்ல கட்டுரை. ஆனால் ஞானி பதில் சொல்ல மாட்டார் ! அவர் சார்புகளற்ற அரசியல் விமர்சகராய் இருந்த ( அல்லது இருப்பதாய் சொல்லிக்கொண்ட ) காலக்கட்டத்தில் நீங்கள் கேட்டிருக்கும் கேள்விகளையெல்லாம் மற்ற கட்சிகளிடம் வேறுவிதமாய் கேட்டவர்தான் அவர் !!! எப்படி மறைத்தாலும் உண்மை சுடும்தானே ?! நிற்க,

  ஆம் ஆத்மி ஒன்றும் இந்திய அரசியல் சாக்கடையை சுத்தம் செய்ய வந்த மாமணி அல்ல. இதுநாள்வரையிலும் இங்கே ஆட்சிஆசையுடன் ( ஆட்சி தொண்டு அல்ல நண்பர்களே ! ) முளைத்துக்கொண்டிருக்கும் ஆயிரம் கட்சிகளில் ஒன்றுதான் ! ஒரே வித்யாசம் ஆம் ஆத்மியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவுஜீவி என்பதால் அந்த பாணியிலேயே அரசியல் பிரவேசம் செய்துள்ளார். முன்னால் சினிமா தலைவர்களுக்கு சங்கங்கள் என்றால் அறிவுஜீவி கெஜ்ரிவால்களுக்கு தொண்டு நிறுவனங்கள். இந்தியாவில் கடைநிலை தொண்டர்கள், மாவட்ட செயலாளர்கள் மூலம் கட்டமைக்கப்படும் அரசியல் கட்சி மேலைநாடுகளில் சிறுதொண்டு அமைப்புகளின் மூலமே உருப்பெறுகிறது. இதை விளக்க தனி கட்டுரையே எழுத வேண்டும். சுருக்கமாக சொன்னால் இந்திய அரசியல் சூழலை தனக்கு சாதகமாக பயன்படுத்திகொண்ட புத்திசாலி அரசியல்வாதி கெஜ்ரிவால்.

  எனது வலைப்பூ : saamaaniyan.blogspot.fr

 4. கொச்சின் தேவதாஸ் சொல்கிறார்:

  கெஜ்ரிவாலையும்,ஞானியையும் உத்தம புத்திரர்கள் என்றல்லவா நினைத்துக்கொண்டு இருந்தேன்.
  வாழ்க வளமுடன்
  கொச்சின் தேவதாஸ்

 5. ramkiran சொல்கிறார்:

  comments deleted – being vulgar.
  Mr.Ramkiran – you are free to convey your opinion
  in a decent way.

  with best wishes,
  Kavirimainthan

 6. GOPALASAMY சொல்கிறார்:

  Mr. Ramkiran’s abuse of Gnani is not in good taste.

 7. Ganpat சொல்கிறார்:

  Dear Kaa.Mai.ji,
  Please delete the remarks made by ramkiran.In future also such writings need not be published.
  Thanks and regards,

 8. N.Rathna Vel சொல்கிறார்:

  அருமை.

 9. veeramani சொல்கிறார்:

  Gnani is good man

 10. veeramani சொல்கிறார்:

  Gnani is very gently man

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.